என் மலர்
நீங்கள் தேடியது "Removal of banners"
- பேனர் வைக்கப்படுவதை தடுக்க புதுவை அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
- கடலூர்- பாண்டி மெயின் ரோடு பகுதியில் உள்ள பேனர்களை அதிரடியாக அகற்றி வருகின்றனர்.
புதுச்சேரி:
அரியாங்குப்பம், தவளக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திருமணம், கோவில் திருவிழா, அரசியல் தலைவர்கள் பிறந்தநாள், வரவேற்பு என பல இடங்களிலும் பேனர்கள் வைக்கப்பட்டு இருப்பதால் போக்குவரத்து இடையூறும் மற்றும் விபத்துக்கள் அவ்வப்போது நடந்து வருகிறது. இதனை தடுக்க நீதிமன்றம் உத்தரவை மீறி பேனர் வைக்கப்படுவதை தடுக்க புதுவை அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் உத்தரவின் பெயரில் வருவாய் ஆய்வாளர் பாலமுருகன், கந்தவேல், இளநிலை எழுத்தர் சி செழியன் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அரியாங்குப்பம், தவளக்குப்பம் கடலூர்- பாண்டி மெயின் ரோடு பகுதியில் உள்ள பேனர்களை அதிரடியாக அகற்றி வருகின்றனர். மேலும் பிரச்சினை ஏதும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பணியில் அறியாங்குப்பம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.






