என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • ஏழைகளுக்கு நலதிட்ட உதவி
    • மலர் தூவியும் மரியாதை செலுத்தனார்கள். தொடர்ந்து பெண்களுக்கு புடைவை, ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில முன்னாள் முதல்-அமைச்சர்ர் ஆர்.வீ. ஜானகிராமனின் 4-ம் ஆண்டு நினைவு தினம்  அனுசரிக்கப்பட்டது. நெல்லித்தோப்பு லைனின் வீதி –பெருமாள் நகர் சந்திப்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஜெ.வி.எஸ்.ஆறுமுகம் ஏற்பாட்டில் நடந்த நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையிலான தி.மு.க–வினர், முன்னாள் முதல்- அமைச்சர் ஆர்.வீ.ஜானகிராமன் உருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் உணவு வழங்கப்பட்டன.

    இதே போல் நெல்லிதோப்பு தொகுதி தி.மு.க. சார்பில், சாரம் – லெனின் வீதி சந்திப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு தொகுதி கழகச் செயலாளர் செ.நடராஜன் தலைமை தாங்கினார். தலைமைப் பொதுக்குழு உறுப்பினர்கள் கார்த்திகேயன், வேலவன், சிறுபான்மையினர் அணி அமைப்பாளர் அகஸ்டீன் சித்து, தொகுதி நிர்வாகிகள் பானுகணேசன், கிருபாசங்கர், பெல்மோ தமிழ்மணி, சங்கீதா, சந்திரேஷ்குமார், சந்திரசேகரன், முருகன், கலியபெருமாள், ஜெகதீசன், செல்வகுமார், மார்ட்டீன் பாலசிங்கரா ராஜீ, சோமசுந்தரம், அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சிகளில், தி.மு.க. அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவர் சிவா அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஆர்.வீ. ஜானகிராமன் உருவப் படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தனார்கள். தொடர்ந்து பெண்களுக்கு புடைவை, ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிகளில், அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார், துணை அமைப்பாளர்கள் வி.அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தைரியநாதன், சம்பத் எம்.எல்.ஏ, தலைமைச் பொதுக்குழு உறுப்பினர்கள் வெ. ராமசாமி, சோமசுந்தரம், தங்கவேலு, ப.செல்வநாதன், காந்தி, இளம்பரிதி, பெ.பழனி, எஸ்.எஸ். செந்தில்குமார், எஸ்.நர்கீஸ், தொகுதி கழகச் செயலாளர்கள் சக்திவேல், பாண்டு அரிகிருஷ்ணன், கோ. தியாகராஜன், ப.வடிவேல், ர.சிவக்குமார், ரா.ஆறுமுகம், க.ராஜாராமன், பி.சா.இளஞ்செழியப் பாண்டியன், ல.மணிகண்டன், செ. ராதாகிருஷ்ணன், ம.கலைவாணன், வேலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • பொதுமக்களுக்கு உதவியாக இருந்த நிலையில் இடமாற்றம் செய்யப்படுவது வாகன உரிமையா ளர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • வட்ட போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து பொருட்களை ஏற்றி செல்ல வாகனம் வந்தது.

    புதுச்சேரி:

    திருபுவனையில் இயங்கி வந்த புதுவை போக்குவரத்து துறையின் சார்பில் வில்லியனூர் வட்டார போக்குவரத்து கிளை அலுவலகம் கடந்த 2014-ம் ஆண்டு கிராமப்புற பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கொண்டு வரப்பட்டது.

    தற்போது இந்த அலுவலகம் இட வசதி இல்லாத காரணத்தினால் புதுவை சாரம் பகுதிக்கு மாற்றம் செய்ய அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் வில்லியனூர் வட்டாரத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள், பயனாளிகள், வாகன ஓட்டிகள், வாகன உரிமையாளர்கள் தங்களுடைய வாகனத்தை புதுப்பித்தல், வாகன உரிமங்கள் பெயர் மாற்றம் உள்ளிட்ட ஆர்.டி.ஓ பணிகளை திருபுவனையில் உள்ள அலுவலகத்தில் சிரமம் இல்லாமல் தங்களது அரசு சார்ந்த பணிகளை பெற்று பயன் பெற்றனர்.

    தற்போது இந்த அலுவலகம் புதுவைக்கு வருகின்ற செவ்வாய்க்கிழமை மாற்றம் அடைவதால் கிராமப்பு றத்தில் உள்ள அனைத்து பயனாளிகளும் புதுவையை நோக்கி போக வேண்டிய சூழ்நிலை உருவாக்கப் பட்டுள்ளது.

    வில்லியனூர் வட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் 10-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் 100-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள், ஆயிரக்கணக்கான வாக னங்களை பயன்படுத்தும் வாகன உரிமையாளர்கள் உள்ளனர்.

    வட்டார போக்குவரத்து அலுவலகம் துவங்கும் போது முறையான, சரியான, இடத்தை தேர்வு செய்து திறக்காமல், ஏதோ சில காரணங்களை காட்டி தற்போது புதுவைக்கு இந்த அலுவலகத்தை கொண்டு செல்வது கிராமப்புற மக்களை பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளது.

    பல்வேறு கனரக வாகனங்கள், இலகுரக வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் வைத்திருக்கும் உரிமையாளர்கள் வாகன ஓட்டுனர் உரிமைகளை புதுப்பிக்க இந்த அலுவலகம் மிகவும் பயனுள்ள வகையில் இதுவரை பொதுமக்களுக்கு உதவியாக இருந்த நிலையில் இடமாற்றம் செய்யப்படுவது வாகன உரிமையா ளர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதனை அரசு மறு பரிசீலனை செய்து இதே திருபுவனை பகுதியில் தகுந்த இடத்தை தேர்வு செய்து அலுவலகத்தை நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இல்லையேல் பல்வேறு கட்ட போராட்டங்களை அரசுக்கு எதிர்ப்பாக நடத்தப்படும் என்று கூறியுள்ளனர்.

    வட்ட போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து பொருட்களை ஏற்றி செல்ல வாகனம் வந்தது.

    பொதுமக்கள் அதனை தடுத்து அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • நலத்துறை இயக்குனர் சாய்.இளங்கோவன், பாட்கோ பொது மேலாளர் மற்றும் செயற்பொறியாளர் ஆகியோருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
    • ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பாட்கோவில் மேற்கொள்ளப்படும்.

    புதுச்சேரி:

    போக்குவரத்து மற்றும் ஆதிதிராவிடர் நல அமைச்சர் சந்திரபிரியங்கா தனது சட்டப்பேரவை அலுவலகத்தில், ஆதிதிராவிடர் சிறப்புக்கூறு நிதி செலவீனங்கள் , ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பாட்கோவில் மேற்கொள்ளப்படும்.

    சிவில் பணிகள், கல்விக் கடன், வீடுகட்டும் கடனுதவி மற்றும் இதர திட்ட செயல்பாடுகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் கே.எஸ்.பி. ரமேஷ், தட்சிணாமூர்த்தி என்ற பாஸ்கர், ஏ.கே.டி.ஆறுமுகம், லட்சுமிகாந்தன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் துறையின் அரசுச் செயலர் கேசவன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை இயக்குனர் சாய்.இளங்கோவன், பாட்கோ பொது மேலாளர் மற்றும் செயற்பொறியாளர் ஆகியோருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

    • அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்
    • அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் வாயிலாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணிகள் தொடக்க விழா  நடைபெற்றது.

    விழாவிற்கு உள்துறை அமைச்சரும் தொகுதி எம்.எல்.ஏ.வுமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.

    விழாவில் காட்டேரிக்குப்பம் கிராமத்தில் பெரிய ஏரியின் தென்கிழக்கு பகுதி தூர்வாரும் பணியினை ரூ.46 லட்சம் மதிப்பீட்டிலும், தேத்தம்பாக்கம் கிராமத்தில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் அய்யனார் கோவில் குளம் தூர்வாருதல், திருக்கனூர் பெரிய ஏரி கிழக்கு பகுதியினை ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.

    பின்னர் திருக்கனூர் பெரிய ஏரியில் பொது மக்களிடையே குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் இலவச அரிசி வழங்க வேண்டும் எனவும், திருக்கனூர் முத்துமாரியம்மன் கோவில் பணிகளை முடித்து விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் எனவும், திருக்கனூர் பள்ளிக்கூடத்தினை உடனடியாக கட்டி முடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார்.

    பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவு முறையாக நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

    இதில் வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. அருள்முருகன், பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் செல்வகுமார், பிரமுகர்கள் போட்டோ ராஜா, முத்தழகன், உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

    • கவர்னர் தமிழிசையிடம் மக்கள் பேரியக்க தலைவர் மனு
    • முறைகேடுகள் மாநில விளையாட்டுக் கவுன்சிலில் நடைபெற காரண மானவர்கள் யார்?

    புதுச்சேரி:

    புதுவை அரசின் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தின் கீழ் இயங்கி வரும் விளையாட்டு கவுன்சில் மற்றும் ராஜீவ் காந்தி விளையாட்டு பயிற்சி பள்ளி ஆகியவற்றை முறைகேடாக உருவாக்கப்பட்ட ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் அத்தாரிட்டி ஆப் புதுச்சேரி என்ற விளையாட்டு ஆணையம் என்ற அமைப்பில் இணைப்ப தற்கான முயற்சிகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.

    43 ஆண்டுகளாக இயங்கி வரும் மாநில விளையாட்டுக கவுன்சில் மற்றும் 36 ஆண்டுகளாக இயங்கி வரும் ராஜீவ் காந்தி விளையாட்டு பயிற்சி பள்ளி ஆகியவற்றை மூட முயற்சிப்பதின் காரணம் என்ன? பல்வேறு குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் மாநில விளையாட்டுக் கவுன்சிலில் நடைபெற காரண மானவர்கள் யார்? பணம் மற்றும் இதர மோசடிகள் 1980-ம் ஆண்டு முதல் இன்று வரை நடைபெற்று உள்ளது என்பதை கண்டறிய கவர்னர் மத்திய புலனாய்வு சி.பி.ஐக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

    அப்போது தான் உண்மை குற்றவாளிகள் யார்? என்பது தெரிய வரும். ஏன் இந்த ஸ்போர்ட்ஸ் டெவெலப் மெண்ட் அத்தாரிட்டி என்ற அமைப்பை பல்வேறு முறைகேடுகள் செய்து சட்டத்திற்கு புறம்பாக ரெஜிஸ்டர் ஆப் சொசைட்டியில் பதிந்துள்ளனர் என்ற உண்மை தெரியவரும். சட்டத்திற்கு புறம்பான இந்த ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் அத்தாரிட்டி ஆப் புதுச்சேரி என்ற அமைப்பிற்கு வரும் 14-ந் தேதி பொதுக்குழு கூட்டம் நடை பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி புதுவை துணைநிலை கவர்னர் தமிழிசைக்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையை துரிதப்படுத்துவதற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி, விளையாட்டு துறை அமைச்சர், தலைமை செயலர் கல்வித்துறை செயலர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ஆகியோரிடம் இன்று புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    அவர்கள் முறையான நடவடிக்கை எடுத்து கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும். முறைகேடாக பதிந்த பதிவையும் ரத்து செய்ய வேண்டும் இல்லையெனில் பல தொடர் போராட்டங்களை புதுவை மாநில விளையாட்டு வீரர்கள் நல சங்கம் மேற்கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 

    • பாடப்பிரிவுக்கான இடஒதுக்கீடு, கல்வி தகுதி விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
    • வருகிற 29-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை பல்கலைக்கழக பதிவாளர் ராஜ்னீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள பி.எச்.டி. படிப்புகளில் உள்ள இடங்கள் நுழைவுத்தேர்வு மூலம் நிரப்ப ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பாடப்பிரிவுக்கான இடஒதுக்கீடு, கல்வி தகுதி விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக பிற மாணவர்களுக்கு ரூ.1000, எஸ்.சி, எஸ்.டி. மாணவர்களுக்கு ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வருகிற 29-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • புதுவை சலூன் கடைக்காரருக்கு குவியும் பாராட்டு
    • புதுவை சாரம் பகுதியை சேர்ந்த விஜய் என்பவர் காமராஜர் சாலையில் சலூன் கடை நடத்தி வருகிறார்.

    புதுச்சேரி:

    கால மாற்றத்திற்கேற்ப தொழில்களிலும் நவீன மாற்றங்கள் உருவாகி வருகிறது.

    இதில் சலூன் கடைகளும் தப்பவில்லை. கிராமங்களில் மரத்தடியிலும், புறநகர் பகுதிகளில் சிறிய கடைகளிலும் இருந்த முடி திருத்தகங்கள் இன்று நவீனமயமாகியுள்ளது. நாடு முழுவதும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த கடைகளை நடத்தி வருகின்றன.

    இந்த கடைகளில் ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரை முடி திருத்தம், முகம் அழகுபடுத்துதல், தாடியை அழகுபடுத்துதல் போன்றவை செய்யப்படுகிறது.

    தற்போதைய இளைஞர்கள் விதவிதமான சிகை அலங்காரத்தோடு உலா வருகின்றனர். இந்த நிலையில் புதுவை சாரம் பகுதியை சேர்ந்த விஜய் என்பவர் காமராஜர் சாலையில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவர் கடையில் முடி திருத்தம் செய்ய ரூ.100 முதல் ரூ.150 வரை கட்டணமாக வசூலிக்கிறார். ஆனால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் ரூ.10 கட்டணத்தில் முடி திருத்தம் செய்கிறார்.

    தினமும் காலையில் 7 மணி முதல் 10 மணி வரை மட்டும் இந்த சலுகை கட்டணத்தில் மாணவர்களுக்கு முடி திருத்தம் செய்கிறார். அதன்பிறகு வழக்கமான வாடிக்கையாளர்களுக்கான பணியை தொடங்குகிறார். புதுவையில் ஒரு சில தினங்களில் பள்ளி திறக்க உள்ள நிலையில் இந்த கடையை பற்றி தெரிந்த பெற்றோர், மாணவர்களோடு காலையிலேயே இங்கு வந்து விடுகின்றனர்.

    ரூ.10-க்கு டீ குடிக்கக்கூட முடியாத நிலையில் ஏழை அரசு பள்ளி மாணவர்களுக்காக முடிதிருத்தம் செய்யும் விஜய்க்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இதுகுறித்து விஜய்யிடம் கேட்டபோது, ஏழை மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவை செய்வது தனக்கு திருப்தியளிக்கிறது. தானும் அரசு பள்ளியில் படித்தவன் என்ற முறையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த சலுகையை அளித்துள்ளேன் என தெரிவித்தார்.

    • அ.தி.மு.க. வலியுறுத்தல்
    • காய்கறி மார்க்கெட், பூக்கடை, மளிகை கடைக்கு தனிதனி இடங்களை தற்காலிகமாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மக்களின் நலனுக்காக சுமார் ரூ.36 கோடியில் மார்க்கெட்டை புதுப்பிக்கும் பணியை அரசு முன்னெடுக்கும் போது வியாபாரிகள், வியாபாரிகள் போர்வையில் உள்ள குத்தகை தாரர்களும் மார்க்கெட்டை கட்ட விடாமல் தடுப்பது தவறானது.

    மாறிவரும் கால சூழலுக்கு ஏற்ப மார்க்கெட்டை முழுமையாக இடித்து நவீன முறையுடன் கீழ் பகுதி முழுவதும் பார்க்கிங் வசதியும், சிறுகடைகளும் உள்ளடக்கி 2 அடுக்கு மார்க்கெட் கட்ட வேண்டும்.

    கலெக்டர் 8 மாதத்திற்குள் கடையை கட்டி முடிக்கப்படும் என உறுதி அளித்த பிறகும், நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என கூறுவது அரசை வியாபாரிகள் மிரட்டுவதாக தெரிகிறது. இதே நிலை நீடித்தால் எந்த திட்டத்தையும் எந்த அரசாலும் செயல்படுத்த முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும். அங்கு தற்போது வியாபாரம் செய்யும் கடைகளின் விபரங்களை யும், மார்க்கெட்டில் சில்லரை வியாபாரம் செய்யும் கடைகள், நடைபாதை வியாபாரிகள் விபரங்களை யும் அரசு உடனடியாக கணக் கெடுக்க வேண்டும். ஒரு தேதியை நிர்ணயம் செய்து கடைகளில் இருக்கிற பொரு ட்களை அப்புறப்ப டுத்தி மார்க்கெட் கட்டும் பணி அரசு தொடங்க வேண்டும்.

    மாற்றுஇடமாக ரோடியர் மைதானம் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் அறிவித்துள்ளார். அவர் அறிவித்துள்ள இடம் ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடமாக உள்ளது. எதிரில் உள்ள நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழ்நிலை ஏற்படும். எனவே காய்கறி மார்க்கெட், பூக்கடை, மளிகை கடைக்கு தனிதனி இடங்களை தற்காலிகமாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    அம்பேத்கர் சாலையில் 50 ஏக்கர் பரப்பளவில காலியாக உள்ள துறைமுகம் மைதானத்தில் அங்குள்ள கடைக்கு மாற்று இடமும் அமைக்கலாம். காலம் மாற்றத்திற்கு ஏற்ப மக்களுடைய நலனுக்காக செயல்படுத்த கூடிய திட்டங்களுக்கு வியாபாரிகள் தடங்கள் ஏற்படுத்தாமல் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

    புதிதாக மார்க்கெட் கட்டும் பணியில் எவ்வித சமர சத்துக்கும் இடமளிக்காமல் புதிய மார்க்கெட் கட்டுமானப் பணியை உடனடியாக தொடங்க வேண்டும்.

    இவ்வாறு அன்பழகன் கூறியுள்ளார்.

    • வெற்றிப்பெற்றுத் தமிழ்ச்சங்கத் தலைவராக வி.முத்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    • சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்சிவா, கம்பன் கழக செயலாளர் வி.பி.சிவக்கொழுந்து, முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசு ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவைத் தமிழ்ச் சங்கத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தலில் புதிய பொறுப்பாளர்கள் 11 பேர் வெற்றி பெற்றனர்.

    இத்தேர்தலில் வெற்றிப்பெற்றுத் தமிழ்ச்சங்கத் தலைவராக வி.முத்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    துணை தலைவர்களாக ந.ஆதி கேசவன், ப.திருநாவுக்கரசு, செயலாளராக சீனு.மோகன்தாசு, பொருளா ளராக மு.அருள்செல்வம், துணைச் செயலாளராக தெ.தினகரன், ஆட்சிக்குழு உறுப்பி னர்களாக அ.உசேன், எம்.எஸ்.ராஜா, பொறிஞர் சுரேசு குமார், சிவேந்திரன், ஆனந்தராசன் ஆகியோர் தேர்ந்தெடுக்க ப்பட்டு ள்ளனர். புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா புதுவைத் தமிழ்ச் சங்கத்தில்  6 மணி அளவில் மேனாள் நீதியரசர் சேது.முருக பூபதி தலைமையில் நடைபெற உள்ளது.

    முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் ஜான்குமார், வக்கீல் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், தொண்டை மண்டல ஆதீனம் ஞானப்பிரகாச தேசிய சுவாமிகள் ஆசியுரை வழங்குகிறார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

    பொதுப்ப ணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், கலை பண்பாட்டு துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்சிவா, கம்பன் கழக செயலாளர் வி.பி.சிவக்கொழுந்து, முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசு ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

    • காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு மாநிலங்களுக்கு தலைவர்களை நியமனம் செய்துள்ளது.
    • புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக மக்களவை எம்பி வி.வைத்திலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு மாநிலங்களுக்கு தலைவர்களை நியமனம் செய்து அறிவிப்பு வெளியானது.

    அதன்படி, புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக மக்களவை எம்பி வி.வைத்திலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

    குஜராத் மாநில காங்கிரஸ் தலைவராக மாநிலங்களவை எம்பி ஷக்திசின் கோஹிலும், அரியானா மற்றும் டெல்லி காங்கிரஸ் தலைவராக தீபக் பபாரியாவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    மும்பை காங்கிரஸ் தலைவராக வர்ஷா கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    • புதிதாக சாலையோர வியாபாரிகளுக்கு கடன் தொகைக்கான ஆணையை வழங்கினார்.
    • ஏழைகள் வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக பிரதமர் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    புதுச்சேரி:

    மாநில வங்கியாளர் குழுமம், புதுவை, உழவர்கரை நகராட்சி இணைந்து சாலையோர வியாபாரிகளின் கடன் முகாமை கம்பன் கலையரங்கில்  நடத்தியது. அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார் தலைமை வகித்தார். புதிதாக சாலையோர வியாபாரிகளுக்கு கடன் தொகைக்கான ஆணையை வழங்கி முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    ஏழைகள் வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக பிரதமர் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில் ஒரு திட்டம் தான் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் திட்டம். வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் தான் சாலையோரங்களில் கடைகள் வைத்துள்ளனர்.

    அவர்களுக்கு தினந்தோறும் முதலீடு தேவை. இதற்காக கந்து வட்டிக்கு கடன் பெறுகின்றனர். இந்த கடனை திருப்பி செலுத்த அவர்கள் சம்பாதிப்பதில் லாபத்தில் பாதியை செலுத்துகின்றனர். இதனால் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். தலையில் துணியை சுமந்து விற்பனை செய்தவர்கள் இன்று முதலாளிகளாக உள்ளனர். ஆனால் சாலையோர கடைகளுக்கு சிறு முதலீடு தேவை என்பது உண்மை. இதையறிந்து பிரதமர் இத்திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.

    அடித்தட்டு மக்கள் வளர்ச்சியடைய வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். அவர்கள் வளர்ச்சி யடைந்தால் தான் நாடு வளர்ச்சியடையும். மத்திய அரசின் திட்டங்க ளில் சில நமக்கு தெரிய வில்லை. ஏனெனில் நேரடி பண பரிவர்த்தனை மூலம் மக்களை சென்றடைந்து விடுகிறது. புதுவை அரசு சார்பிலும் இலவச அரிசிக்கு பதிலாக பணம் வழங்குகிறோம். 3 மாதத்திற்கு ஒரு முறை அரிசிக்கு பதிலாக பணம் நேரடியாக சென்றடைகிறது. நேரடியாக பணம் செல்லும்போது பொருளா தார வளர்ச்சி ஏற்படுகிறது.

    சாலையோர கடை வைத்துள்ளவர்களால் சில சிரமங்கள் இருக்கிறது. அவர்கள் போக்கு வரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறு இல்லாமல் கடைகளை நடத்த வேண்டும் என்பது என் வேண்டுகோள். சுற்றுலா நகரமாக புதுவை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இதனால் சிற்றுண்டி கடைகள் அதிகளவில் பெருகியுள்ளது.

    புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளும் இந்த கடைகளில் விரும்பி உணவருந்துகின்றனர். இந்த கடைகளை மேலும் விரிவுபடுத்த அவர்களுக்கு நிதி அவசியம். கீழ்மட்டத்தில் பண புழக்கம் இருந்தால்தான் வளர்ச்சி ஏற்படும்.

    இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே கடன் பெற்ற ஆயிரத்து 567 பேரில் திருப்பி செலுத்தி 608 பேர்தான் 2-ம் தவணை கடன் பெற்றுள்ளனர். இதில் 3-ம் தவணையை 58 பேர்தான் பெற்றுள்ளனர். கடனை திருப்பி செலுத்து வது தான் நல்ல பழக்கம். இதன்மூலம் கடன் பெற்ற வர்கள் வியாபாரத்துக்கு பணத்தை பயன்படுத்த வில்லை என தெரிகிறது. கடனை சரியாக பயன்படுத்தி வியாபாரத்தில் வளர்ச்சி பெற வேண்டும். வங்கியா ளர்களிடம் கடன் பெறுப வர்களை இழுத்தடிக்கா தீர்கள் என கூறுவேன்.

    புதுவை அரசு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000-ம் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த திட்டத்தின் கீழ் 70 ஆயிரம் குடும்ப தலைவிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்த உள்ளோம். 

    அதேபோல பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்பு நிதி வழங்கும் திட்டம், சமையல் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்கும் திட்டம் ஆகியவற்றை விரைவில் தொடங்க உள்ளோம்.

    நடைமுறையில் உள்ள திட்டத்தையும், அறிவித்த திட்டங்களையும் செயல்படுத்துவோம். எம்.எல்.ஏ.க்கள் மேம்பாட்டு நிதிக்கு ரூ.66 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளோம். இதன்மூலம் சாலை பணிகள், சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ, வங்கியாளர் குழும தலைவர் குமார்துரை ஆகியோர் வாழ்த்தி பேசினர். உள்ளாட்சித்துறை இயக்குனர் சக்திவேல் வரவேற்றார். பாரதியார் கிராம வங்கி சேர்மன் ரஞ்சித் நன்றி கூறினார்.

    பிரதமரின் சாலையோர வியாபாரிகள் ஆத்ம நிர்பர் நிதியின் கீழ் இந்த கடனுதவி வழங்கப்படுகிறது. புதுவை சாலையோர வியாபாரிகளுக்கு எளிய கடனாக முதல் தவணையாக ரூ.10 ஆயிரம் வீதம் ஆயிரத்து 567 பேருக்கு கடன் வழங்கப்பட்டது.

    முதல் தவணை கடனை முறையாக திருப்பி செலுத்தி யவர்களுக்கு 2-ம் தவணை யாக ரூ.20 ஆயிரம் வீதம் 508 பேருக்கு கடனுதவி வழங்கப்பட்டது. 3-வது தவணையாக ரூ.50 ஆயிரம் வீதம் 57 பேருக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.3.09 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. கடனை சரியான நேரத்தில் திருப்பி செலுத்திய பயனாளிகளுக்கு 7 சதவீத வட்டி அவர்களின் வங்கி கணக்கில் 6 மாதத்திற்கு ஒரு முறை திருப்பி செலுத்தப்படுகிறது.

    • கிருமாம்பாக்கம் விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் உலக சுற்றுச்சூழல் வார விழா கொண்டாடப்பட்டது.
    • இயற்கை வளங்கள் பாதுகாப்பு, கடல்நீர் மாசு குறித்த விழிப்புணர்வு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

    புதுச்சேரி:-

    கிருமாம்பாக்கம் விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் உலக சுற்றுச்சூழல் வார விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி டீன் செந்தில்குமார் தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் இயற்கை வளங்கள் பாதுகாப்பு, கடல்நீர் மாசு குறித்த விழிப்புணர்வு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

    மேலும் புதுவையில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரிகளுக்கு இடையேயான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. விழாவின் நிறைவாக கல்லூரி விளையாட்டு மைதானத்தில் 500 மாணவ-மாணவிகள் ஒன்று சேர்ந்து பிளாஸ்டிக் தடை சின்னம் உருவாக்கி சர்வதேச சாதனை படைத்தனர்.

    இதற்கான பாராட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக புதுவை மாசுக்கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் டாக்டர் ரமேஷ், கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட துணை செயல் அலுவலர் ஹெலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பிளாஸ்டிக் தடை சின்னம் உருவாக்கியதிற்கு, சர்வதேச ஸ்டார் புக் ஆப்ரெக்கார்ட் நிறுவனத்தின் இந்திய கலாசாரத்திற்கான தூதர் அரவிந்த்குமார், தீர்ப்பாளர் சதீஷ்குமார் ஆகியோர் சர்வதேச சாதனைக்கான சான்றிதழ் மற்றும் விருதினை கல்லூரி இயக்குனர் ஆன்ட்ரூ ஜானிடம் வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சந்துரு, சுற்றுச்சூழல் அமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் குளோரிமெர்லின், சிவசங்கரி மற்றும் மாண வர்கள் செய்திருந்தனர். முடிவில் சுற்றுச்சூழல் அமைப்பு ஒருங்கிணைப்பா ளர் சந்தோஷ் நன்றி கூறினார்.

    ×