என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கியாஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் விரைவில் வழங்க ஏற்பாடு
    X

    சாலையோர வியாபாரிகளுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி கடனுதவி வழங்கிய காட்சி. அருகில் அமைச்சர் 

    சாய்.ஜெ.சரவணன்குமார், கென்னடி எம்.எல்.ஏ. உள்ளனர்.

    கியாஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் விரைவில் வழங்க ஏற்பாடு

    • புதிதாக சாலையோர வியாபாரிகளுக்கு கடன் தொகைக்கான ஆணையை வழங்கினார்.
    • ஏழைகள் வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக பிரதமர் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    புதுச்சேரி:

    மாநில வங்கியாளர் குழுமம், புதுவை, உழவர்கரை நகராட்சி இணைந்து சாலையோர வியாபாரிகளின் கடன் முகாமை கம்பன் கலையரங்கில் நடத்தியது. அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார் தலைமை வகித்தார். புதிதாக சாலையோர வியாபாரிகளுக்கு கடன் தொகைக்கான ஆணையை வழங்கி முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    ஏழைகள் வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக பிரதமர் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில் ஒரு திட்டம் தான் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் திட்டம். வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் தான் சாலையோரங்களில் கடைகள் வைத்துள்ளனர்.

    அவர்களுக்கு தினந்தோறும் முதலீடு தேவை. இதற்காக கந்து வட்டிக்கு கடன் பெறுகின்றனர். இந்த கடனை திருப்பி செலுத்த அவர்கள் சம்பாதிப்பதில் லாபத்தில் பாதியை செலுத்துகின்றனர். இதனால் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். தலையில் துணியை சுமந்து விற்பனை செய்தவர்கள் இன்று முதலாளிகளாக உள்ளனர். ஆனால் சாலையோர கடைகளுக்கு சிறு முதலீடு தேவை என்பது உண்மை. இதையறிந்து பிரதமர் இத்திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.

    அடித்தட்டு மக்கள் வளர்ச்சியடைய வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். அவர்கள் வளர்ச்சி யடைந்தால் தான் நாடு வளர்ச்சியடையும். மத்திய அரசின் திட்டங்க ளில் சில நமக்கு தெரிய வில்லை. ஏனெனில் நேரடி பண பரிவர்த்தனை மூலம் மக்களை சென்றடைந்து விடுகிறது. புதுவை அரசு சார்பிலும் இலவச அரிசிக்கு பதிலாக பணம் வழங்குகிறோம். 3 மாதத்திற்கு ஒரு முறை அரிசிக்கு பதிலாக பணம் நேரடியாக சென்றடைகிறது. நேரடியாக பணம் செல்லும்போது பொருளா தார வளர்ச்சி ஏற்படுகிறது.

    சாலையோர கடை வைத்துள்ளவர்களால் சில சிரமங்கள் இருக்கிறது. அவர்கள் போக்கு வரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறு இல்லாமல் கடைகளை நடத்த வேண்டும் என்பது என் வேண்டுகோள். சுற்றுலா நகரமாக புதுவை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இதனால் சிற்றுண்டி கடைகள் அதிகளவில் பெருகியுள்ளது.

    புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளும் இந்த கடைகளில் விரும்பி உணவருந்துகின்றனர். இந்த கடைகளை மேலும் விரிவுபடுத்த அவர்களுக்கு நிதி அவசியம். கீழ்மட்டத்தில் பண புழக்கம் இருந்தால்தான் வளர்ச்சி ஏற்படும்.

    இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே கடன் பெற்ற ஆயிரத்து 567 பேரில் திருப்பி செலுத்தி 608 பேர்தான் 2-ம் தவணை கடன் பெற்றுள்ளனர். இதில் 3-ம் தவணையை 58 பேர்தான் பெற்றுள்ளனர். கடனை திருப்பி செலுத்து வது தான் நல்ல பழக்கம். இதன்மூலம் கடன் பெற்ற வர்கள் வியாபாரத்துக்கு பணத்தை பயன்படுத்த வில்லை என தெரிகிறது. கடனை சரியாக பயன்படுத்தி வியாபாரத்தில் வளர்ச்சி பெற வேண்டும். வங்கியா ளர்களிடம் கடன் பெறுப வர்களை இழுத்தடிக்கா தீர்கள் என கூறுவேன்.

    புதுவை அரசு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000-ம் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த திட்டத்தின் கீழ் 70 ஆயிரம் குடும்ப தலைவிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்த உள்ளோம்.

    அதேபோல பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்பு நிதி வழங்கும் திட்டம், சமையல் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்கும் திட்டம் ஆகியவற்றை விரைவில் தொடங்க உள்ளோம்.

    நடைமுறையில் உள்ள திட்டத்தையும், அறிவித்த திட்டங்களையும் செயல்படுத்துவோம். எம்.எல்.ஏ.க்கள் மேம்பாட்டு நிதிக்கு ரூ.66 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளோம். இதன்மூலம் சாலை பணிகள், சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ, வங்கியாளர் குழும தலைவர் குமார்துரை ஆகியோர் வாழ்த்தி பேசினர். உள்ளாட்சித்துறை இயக்குனர் சக்திவேல் வரவேற்றார். பாரதியார் கிராம வங்கி சேர்மன் ரஞ்சித் நன்றி கூறினார்.

    பிரதமரின் சாலையோர வியாபாரிகள் ஆத்ம நிர்பர் நிதியின் கீழ் இந்த கடனுதவி வழங்கப்படுகிறது. புதுவை சாலையோர வியாபாரிகளுக்கு எளிய கடனாக முதல் தவணையாக ரூ.10 ஆயிரம் வீதம் ஆயிரத்து 567 பேருக்கு கடன் வழங்கப்பட்டது.

    முதல் தவணை கடனை முறையாக திருப்பி செலுத்தி யவர்களுக்கு 2-ம் தவணை யாக ரூ.20 ஆயிரம் வீதம் 508 பேருக்கு கடனுதவி வழங்கப்பட்டது. 3-வது தவணையாக ரூ.50 ஆயிரம் வீதம் 57 பேருக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.3.09 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. கடனை சரியான நேரத்தில் திருப்பி செலுத்திய பயனாளிகளுக்கு 7 சதவீத வட்டி அவர்களின் வங்கி கணக்கில் 6 மாதத்திற்கு ஒரு முறை திருப்பி செலுத்தப்படுகிறது.

    Next Story
    ×