search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வட்டார போக்குவரத்து கிளை அலுவலகம் புதுச்சேரிக்கு மாற்றம்
    X

     வில்லியனூர் வட்டார போக்குவரத்து கிளை அலுவலகம்.

    வட்டார போக்குவரத்து கிளை அலுவலகம் புதுச்சேரிக்கு மாற்றம்

    • பொதுமக்களுக்கு உதவியாக இருந்த நிலையில் இடமாற்றம் செய்யப்படுவது வாகன உரிமையா ளர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • வட்ட போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து பொருட்களை ஏற்றி செல்ல வாகனம் வந்தது.

    புதுச்சேரி:

    திருபுவனையில் இயங்கி வந்த புதுவை போக்குவரத்து துறையின் சார்பில் வில்லியனூர் வட்டார போக்குவரத்து கிளை அலுவலகம் கடந்த 2014-ம் ஆண்டு கிராமப்புற பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கொண்டு வரப்பட்டது.

    தற்போது இந்த அலுவலகம் இட வசதி இல்லாத காரணத்தினால் புதுவை சாரம் பகுதிக்கு மாற்றம் செய்ய அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் வில்லியனூர் வட்டாரத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள், பயனாளிகள், வாகன ஓட்டிகள், வாகன உரிமையாளர்கள் தங்களுடைய வாகனத்தை புதுப்பித்தல், வாகன உரிமங்கள் பெயர் மாற்றம் உள்ளிட்ட ஆர்.டி.ஓ பணிகளை திருபுவனையில் உள்ள அலுவலகத்தில் சிரமம் இல்லாமல் தங்களது அரசு சார்ந்த பணிகளை பெற்று பயன் பெற்றனர்.

    தற்போது இந்த அலுவலகம் புதுவைக்கு வருகின்ற செவ்வாய்க்கிழமை மாற்றம் அடைவதால் கிராமப்பு றத்தில் உள்ள அனைத்து பயனாளிகளும் புதுவையை நோக்கி போக வேண்டிய சூழ்நிலை உருவாக்கப் பட்டுள்ளது.

    வில்லியனூர் வட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் 10-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் 100-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள், ஆயிரக்கணக்கான வாக னங்களை பயன்படுத்தும் வாகன உரிமையாளர்கள் உள்ளனர்.

    வட்டார போக்குவரத்து அலுவலகம் துவங்கும் போது முறையான, சரியான, இடத்தை தேர்வு செய்து திறக்காமல், ஏதோ சில காரணங்களை காட்டி தற்போது புதுவைக்கு இந்த அலுவலகத்தை கொண்டு செல்வது கிராமப்புற மக்களை பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளது.

    பல்வேறு கனரக வாகனங்கள், இலகுரக வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் வைத்திருக்கும் உரிமையாளர்கள் வாகன ஓட்டுனர் உரிமைகளை புதுப்பிக்க இந்த அலுவலகம் மிகவும் பயனுள்ள வகையில் இதுவரை பொதுமக்களுக்கு உதவியாக இருந்த நிலையில் இடமாற்றம் செய்யப்படுவது வாகன உரிமையா ளர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதனை அரசு மறு பரிசீலனை செய்து இதே திருபுவனை பகுதியில் தகுந்த இடத்தை தேர்வு செய்து அலுவலகத்தை நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இல்லையேல் பல்வேறு கட்ட போராட்டங்களை அரசுக்கு எதிர்ப்பாக நடத்தப்படும் என்று கூறியுள்ளனர்.

    வட்ட போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து பொருட்களை ஏற்றி செல்ல வாகனம் வந்தது.

    பொதுமக்கள் அதனை தடுத்து அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×