என் மலர்
புதுச்சேரி
- ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகிறது.
- இவற்றில் சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படாமலும் பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி:
முதலியார் பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகிறது.
இவற்றில் சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படாமலும் பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது.
அதற்கான காரணங்களை அறிந்து களைவதற்காக ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது.
சம்பத் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தலைமை பொறியாளர்கள் ரவிச்சந்திரன், புகழேந்தி, மற்றும் மேலாண் இயக்குனர் திருஞானம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பணிகள் தொடங்குவதில் உள்ள காரணங்களை எம்.எல்.ஏ.விடம் அதிகாரிகள் தரப்பில் விளக்கம் தெரிவித்தனர். அவற்றை எப்படி கையாள்வது என்பது குறித்து ஆலோசனைகளை சம்பத் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
இதனால் தாமதப்பட்டிருந்த மரப்பாலம் சந்திப்பில் தொடங்க உள்ள டோபிகானா உள்ளிட்ட பணிகள் அடுத்த வாரங்களில் தொடங்கி விடுவதாக அதிகாரிகள் தரப்பில் உறுதியாக கூறப்பட்டது.
- புதுவை பிள்ளைத்தோட்டம் கெங்கையம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கணேஷ்.
- இவர் செல்போன் கடை வைத்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை பிள்ளைத்தோட்டம் கெங்கையம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கணேஷ். இவர் செல்போன் கடை வைத்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு இவர் கடையை மூடிவிட்டு தனது 2 சக்கர வாகனத்தில் மறைமலையடிகள் சாலை பாஸ்போர்ட் அலுவலகம் வழியாக வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவரை 17 வயது நிரம்பிய 2 சிறுவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து வழிமறித்து சரமாரியாக தாக்கினர்.
மேலும் அவரை மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.8 ஆயிரம் ரொக்கம் ரூ.17 ஆயிரம் மதிப்பிலான செல்போன் ஆகியவற்றை பறித்து கண் இமைக்கும் நேரத்தில் தப்பியோடினர். இதுகுறித்து கணேஷ் உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் சிறுவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் எண் பதிவாகியிருந்தது.
அதன் மூலம் அவர்களை அடையாளம் கண்டனர். அவர்கள் வெண்ணிலா நகர், மடுவுபேட்டை சேர்ந்த சிறுவர்கள் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் பிடித்து விசாரணை முடிந்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.
- சுந்தர விநாயகர், முத்து மாரியம்மன், பாலமுருகன் ஆகிய கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- முதற்கால யாக பூஜை, மகா பூர்ணாஹுதி, விக்னேஸ்வர பூஜை மற்றும் 4-ம் யாக சாலை பூஜைகள் நடைபெற்றது.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் அருகே உள்ள ஏரிப்பாக்கம்-நத்தமேடு கிராமத்தில் உள்ள சுந்தர விநாயகர், முத்து மாரியம்மன், பாலமுருகன் ஆகிய கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக கணபதி ஹோமம், முதற்கால யாக பூஜை, மகா பூர்ணாஹுதி, விக்னேஸ்வர பூஜை மற்றும் 4-ம் யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கலச புறப்பாடு நடைபெற்று, முத்துமாரியம்மனுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
இவ்விழாவில் துணை சபாநாயகர் ராஜவேலு மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் பொதுமக்கள் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது. இரவு முத்துமாரியம்மன் சாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடைபெறுகிறது.
- புதுவையில் கோடை வெயில் தாக்கத்தின் காரணமாக பள்ளி திறப்பு தள்ளி வைக்கப்பட்டு வருகிற புதன்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
- பாகூர், மதகடிப்பட்டு, கிருஷ்ணா நகர் ஆகிய பகுதியில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதிகளில் இயக்குனர். சாய்.இளங்கோவன் ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி:
புதுவையில் கோடை வெயில் தாக்கத்தின் காரணமாக பள்ளி திறப்பு தள்ளி வைக்கப்பட்டு வருகிற புதன்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
இந்நிலையில் ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பாகூர், மதகடிப்பட்டு, கிருஷ்ணா நகர் ஆகிய பகுதியில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதிகளில் இயக்குனர். சாய்.இளங்கோவன் ஆய்வு மேற்கொண்டார்.
கட்டிடத்தினுடைய தன்மை, வருகிற கல்வியாண்டில் மாணவ-மாணவியர்களுக்கு போதிய தங்கும் வசதி உள்ளதா? விடுதிகளில் ஏற்கனவே உள்ள குறைபாடுகளை சரி செய்வது, மற்றும் மாணவ -மாணவியர் விடுதிகளில் சமையல் கலைஞர்கள் சுத்தமான சுகாதாரமான வகையில் உணவுகளை சமைத்துக் கொடுக்க வேண்டும் என்பது குறித்தும் விடுதி காப்பாளர் மற்றும் சமையலர்கள் மத்தியில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கி கூறினார்.
இந்த ஆய்வின் போது சாய்.இளங்கோவனிடம் அந்தந்த விடுதியில் உள்ள குறைபாடுகள் குறித்து விடுதியின் காப்பாளர் மற்றும் சமையலர்கள் எடுத்து கூறினர்.
அதற்கு விரைவில் தீர்வு காணப்படும் என இயக்குனர் சாய்.இளங்கோவன் உறுதியளித்தார்.
- ரூ.1 3/4 கோடியில் புதிய மேம்படுத்தப்பட்ட தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது
- முதல்-அமைச்சர் ரங்கசாமி மாட வீதிகளில் மேம்படுத்தப்பட்ட தார்ச்சாலை அமைக்கும் பணியினை பூமி, பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள 4 மாட வீதிகளில் புதுவை அரசின் பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் வடக்குப் பிரிவு மூலம் ரூ.1 3/4 கோடியில் புதிய மேம்படுத்தப்பட்ட தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது
இதற்கான பூமி பூஜை விழா வில்லியனூர் அண்ணாசிலை அருகில் நடந்தது. எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அமைச்சர் லட்சுமி நாராயணன், பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர் சுந்தரராஜீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதல்-அமைச்சர் ரங்கசாமி மாட வீதிகளில் மேம்படுத்தப்பட்ட தார்ச்சாலை அமைக்கும் பணியினை பூமி, பூஜை செய்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் வடக்கு பிரிவு உதவிப் பொறியாளர் சீனுவாசராம், இளநிலைப் பொறியாளர் தமிழரசன்,
தி.மு.க தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, சோமசுந்தரம், செல்வநாதன், தர்மராஜ், நிர்வாகிகள் ராஜி, ஜலால் பாய், ரமணன், அக்பர், சபரிநாதன், அருணாசலம், பாஸ்கரன், மணவாளன், சேகர், ராஜேந்திரன், ஏழுமலை, ரபீக், வெங்கடேஷ், கரிகாலன், ராமஜெயம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- புதுவை முதலியார் பேட்டை அம்பேத்கார் நகர் அரசு ஊழியர் குடியிருப்பை சேர்ந்தவர் முத்துக்குமரன்
- புதுவை போக்குவரத்து துறையில் அமலாக்கத்துறை உதவியாளராக வேலை செய்து வருகிறார்.
புதுச்சேரி:
புதுவை முதலியார் பேட்டை அம்பேத்கார் நகர் அரசு ஊழியர் குடியிருப்பை சேர்ந்தவர் முத்துக்குமரன். இவர் புதுவை போக்குவரத்து துறையில் அமலாக்கத்துறை உதவியாளராக வேலை செய்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி அவருக்கு தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் மருத்துவ விடுப்பில் இருந்த முத்துக்குமரன் நேற்று முன்தினம் பணிக்கு திரும்பினார். அன்று மாலை பணி முடிந்து தனது மைத்துனர் முருகன் என்பவரின் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
முதலியார்பேட்டை கடலூர் ரோடு ஆலை ரோடு சந்திப்பில் வந்தபோது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் திடீரென முத்துக்குமரனையும், அவரது மைத்துனரையும் வழிமறித்து இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர்.
மேலும் அந்த கும்பலில் ஒருவன் மறைத்து வைத்தி ருந்த பேனா கத்தியை வைத்து முத்துக்குமரனின் காதில் குத்தினான். பின்னர் அந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த முத்துக்குமரன் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிக்சை பெற்றார்.
பின்னர் இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமரனையும் அவரது மைத்துனரையும் தாக்கிய கும்பல் யார்? அவர்கள் எதற்காக தாக்கினார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அங்கன்வாடி மையத்திற்கு குளியல் அறையுடன் கழிப்பிட வசதி செய்து தரும்படி அப்பகுதி மக்கள் கென்னடி எம்.எல்.ஏ.விடம் முறையிட்டனர்.
- ரோட்டரி கிளப் தலைவர் அனிபால் நேருவிடம் கென்னடி எம்.எல்.ஏ. வசதிகளை செய்து தரும்படி கேட்டுக்கொண்டார்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக்குட்பட்ட தமிழ்தாய் நகரில் உள்ள கருமகாரிய கொட்டகை மற்றும் அங்கன்வாடி மையத்திற்கு குளியல் அறையுடன் கழிப்பிட வசதி செய்து தரும்படி அப்பகுதி மக்கள் கென்னடி எம்.எல்.ஏ.விடம் முறையிட்டனர்.
இதையடுத்து தனது சகோதரரான ரோட்டரி கிளப் தலைவர் அனிபால் நேருவிடம் கென்னடி எம்.எல்.ஏ. வசதிகளை செய்து தரும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி ரோட்டரி கிளப் மூலம் கரும காரிய கொட்டகையிலும், அங்கன்வாடி மையத்திலும் குளியல் அறையுடன் நவீன கழிப்பிடம் கட்டப்பட்டது.
இப்பணிகள் முடிவடைந்த நிலையில் இதனை கென்னடி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் தலைவர் அனிபால் நேரு, சீனிவாசன், முருகேசன், பிரேம்ராஜா, தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் அரிகிருஷ்ணன், ஆதி திராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேலு, தொகுதி துணை செயலாளர் ஆரோக்கியராஜ், மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, தி.மு.க. பிரமுகர்கள் நோயல், கண்ணன், கண்ணையன், பியர், செழியன், மனேஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மத்திய அரசின் ரூசா நிதியுதவி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது.
- புதுவை மாநில உயர்கல்வி கவுன்சலின் முதலாவது கவுன்சில் பதவிக்காலம் கவர்னர் ஒப்புதலின்பேரில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
மத்திய அரசின் ரூசா நிதியுதவி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட புதுவை மாநில உயர்கல்வி கவுன்சலின் முதலாவது கவுன்சில் பதவிக்காலம் கவர்னர் ஒப்புதலின்பேரில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 15-ந் தேதி முதல் ஓராண்டு அல்லது மாநில உயர்கல்வி கவுன்சில் கூட்டம் இயற்றப்பட்ட பின் சட்டப்பூர்வ கவுன்சில் அமைக்கும் வரை இந்த குழு பதவியில் இருக்கும்.
இதற்கான உத்தரவை உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி சார்பு செயலர் சவுமியா பிறப்பித்துள்ளார்
- புதுவை அ.ம.மு.க. வடக்கு மற்றும் தெற்கு மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
- வில்லியனூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது
புதுச்சேரி:
புதுவை அ.ம.மு.க. வடக்கு மற்றும் தெற்கு மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வில்லியனூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு தெற்கு மாநில செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான யூ.சி.ஆறுமுகம் வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி. சேகர் ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் தெற்கு மாநில அவைத்தலைவர் அரிகிருஷ்ணன், வடக்கு மாநில இணைச்செயலாளர் லாவண்யா, ஜெ.பேரவை செயலாளர் காண்டீபன், மற்றும் நிர்வாகிகள் ரகுபதி, ராஜா, கலைவாணி, சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்சன், தொழிற்சங்க செயலாளர் சுரேஷ், தொகுதி செயலாளர்கள் செந்தில் என்ற குமாரவேல், தனவேலு, ராமச்சந்திரன், ரத்தினகுமார், சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன் பங்கேற்கும் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் புதுவை மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
- செங்கல்பட்டு என்.ஜி.ஓ.நகரை சேர்ந்தவர் ரமேஷ்.
- ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார்.
புதுச்சேரி:
செங்கல்பட்டு என்.ஜி.ஓ.நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும் புதுவை உருளையன்பேட்டை ஒத்தவாடை வீதியை சேர்ந்த ரேவதி என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரேவதி இதய நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் உருளையன்பேட்டையில் உள்ள தாய் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அவ்வப்போது ரமேஷ் மனைவியை பார்த்து செல்வார்.
இந்த நிலையில் நேற்று திருமண நாளையொட்டி ரமேஷ் மனைவியை பார்க்க தனது மாமியார் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் அறையில் ரேவதி மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ரேவதியை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ரேவதி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது கணவர் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் உருளை யன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமண நாளில் பெண் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே சோகத்ததை ஏற்படுத்தியது.
- தேசிய தரவரிசை பட்டியலில் புதுவையில் 4 கல்வி நிறுவனத்தை தவிர்த்து சொல்லிக்கொள்ளும்படி ஒன்றுமில்லை.
- ஒட்டுமொத்தமாக புதுவை அரசின் கீழ் உள்ள உயர்கல்வித்துறை சீரழிந்து வருகிறது.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.பி. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேசிய தரவரிசை பட்டியலில் புதுவையில் 4 கல்வி நிறுவனத்தை தவிர்த்து சொல்லிக்கொள்ளும்படி ஒன்றுமில்லை. புதுவையில் உள்ள பல் மருத்துவம், மேலாண்மை, ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட எந்த கல்லூரியில் தரவரிசை பட்டியலில் இல்லை. ஒட்டுமொத்தமாக புதுவை அரசின் கீழ் உள்ள உயர்கல்வித்துறை சீரழிந்து வருகிறது.
பல ஆயிரம் கோடி மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து சமுதாயத்துக்கு உரிய எந்த பலனும் இத்துறையில் ஏற்படவில்லை. இதை உணராமல் தன் இயலாமையை புகழ்பாடி கொண்டிராமல் சரியான நடவடிக்கைகளில் அரசு இறங்க வேண்டும்.
தற்போதுள்ள நிலையில் புதிய நிறுவனங்களை தொடங்குவதை காட்டிலும், இருக்கும் நிறுவனங்களை சீர்செய்வதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். அனைத்து கல்லூரிகளையும் தேசிய தரக்கட்டுப்பாடு வாரியத்தால் மதிப்பீடு செய்யப்பட்டு குறைகள் களையப்பட வேண்டும்.
புதுவையில் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்துக்கு கவர்னர் உடனடியாக ஆட்சிமன்ற குழுவை உருவாக்க வேண்டும். அரசாங்கம் நன்கு திறன் வாய்ந்த ஆசிரியர்களை நியமிக்க வும், கல்லூரிகளின் அக கட்டு மானத்தை வலுப்படுத்தவும், ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கைகளை தீர்த்து வைக்க வேண்டும்.
ஒவ்வொரு கல்லூரிகளிலும் ஒரு தர கட்டுப்பாட்டு மையம் வைப்பதும், ஆசிரியர்களை மாணவர்கள் மதப்பீடு செய்யும் முறையை கொண்டுவர வேண்டும். அவர்களின் கருத்துக்களை கேட்பதும், கற்பித்தலில் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது, தொழிற்சாலை கல்லூரி இணைந்த செயல்பாடு போன்ற நடவடிக்கைகளால் வரும் காலத்தில் மத்திய அரசின் மதிப்பீட்டின் தரவரிசையில் முன்னேற முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம்ரூபலா, கடந்த ஆண்டு மார்ச்சில் குஜராத்தில் சாகர்பரிக்ரமா எனும் திட்டத்தை தொடங்கினார்.
- யூனியன் பிரதேச மீனவர்களை சந்தித்து அவர்களோடு கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்து வருகிறார்
புதுச்சேரி:
மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம்ரூபலா, கடந்த ஆண்டு மார்ச்சில் குஜராத்தில் சாகர்பரிக்ரமா எனும் திட்டத்தை தொடங்கினார்.
இதன்படி ஒவ்வொரு கட்டமாக கடற்கரையுள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேச மீனவர்களை சந்தித்து அவர்களோடு கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்து வருகிறார். 6-ம் கட்டமாக கேரளா, லட்சத்தீவு கடற்கரை மீனவர்களை அவர் சந்தித்து வருகிறார்.
கோழிக்கோடு வழியாக இன்று புதுவை மாநிலம் மாகி பிராந்தியத்துக்கு மத்திய அமைச்சர் வந்தார்.
புதுவை அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாகி மீனவர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
மாகியில் துறைமுகம் கட்ட அடிக்கல் நாட்டி 20 ஆண்டாகிறது. துறைமுக திட்டத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் புதுவை அரசு சார்பில் வைக்கப்பட்டது. இதை நிறைவேற்றித்தருவதாக மத்திய மந்திரி உறுதியளித்தார்.






