என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
செல்போன், பணம் பறித்த 2 சிறுவர்கள்
- புதுவை பிள்ளைத்தோட்டம் கெங்கையம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கணேஷ்.
- இவர் செல்போன் கடை வைத்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை பிள்ளைத்தோட்டம் கெங்கையம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கணேஷ். இவர் செல்போன் கடை வைத்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு இவர் கடையை மூடிவிட்டு தனது 2 சக்கர வாகனத்தில் மறைமலையடிகள் சாலை பாஸ்போர்ட் அலுவலகம் வழியாக வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவரை 17 வயது நிரம்பிய 2 சிறுவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து வழிமறித்து சரமாரியாக தாக்கினர்.
மேலும் அவரை மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.8 ஆயிரம் ரொக்கம் ரூ.17 ஆயிரம் மதிப்பிலான செல்போன் ஆகியவற்றை பறித்து கண் இமைக்கும் நேரத்தில் தப்பியோடினர். இதுகுறித்து கணேஷ் உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் சிறுவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் எண் பதிவாகியிருந்தது.
அதன் மூலம் அவர்களை அடையாளம் கண்டனர். அவர்கள் வெண்ணிலா நகர், மடுவுபேட்டை சேர்ந்த சிறுவர்கள் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் பிடித்து விசாரணை முடிந்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.






