என் மலர்

    புதுச்சேரி

    ஜானகிராமன் உருவபடத்திற்கு புதுவை தி.மு.க.வினர் அஞ்சலி
    X

    ஜானகிராமன் உருவபடத்திற்கு புதுவை தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்திய காட்சி.

    ஜானகிராமன் உருவபடத்திற்கு புதுவை தி.மு.க.வினர் அஞ்சலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஏழைகளுக்கு நலதிட்ட உதவி
    • மலர் தூவியும் மரியாதை செலுத்தனார்கள். தொடர்ந்து பெண்களுக்கு புடைவை, ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில முன்னாள் முதல்-அமைச்சர்ர் ஆர்.வீ. ஜானகிராமனின் 4-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நெல்லித்தோப்பு லைனின் வீதி –பெருமாள் நகர் சந்திப்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஜெ.வி.எஸ்.ஆறுமுகம் ஏற்பாட்டில் நடந்த நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையிலான தி.மு.க–வினர், முன்னாள் முதல்- அமைச்சர் ஆர்.வீ.ஜானகிராமன் உருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் உணவு வழங்கப்பட்டன.

    இதே போல் நெல்லிதோப்பு தொகுதி தி.மு.க. சார்பில், சாரம் – லெனின் வீதி சந்திப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு தொகுதி கழகச் செயலாளர் செ.நடராஜன் தலைமை தாங்கினார். தலைமைப் பொதுக்குழு உறுப்பினர்கள் கார்த்திகேயன், வேலவன், சிறுபான்மையினர் அணி அமைப்பாளர் அகஸ்டீன் சித்து, தொகுதி நிர்வாகிகள் பானுகணேசன், கிருபாசங்கர், பெல்மோ தமிழ்மணி, சங்கீதா, சந்திரேஷ்குமார், சந்திரசேகரன், முருகன், கலியபெருமாள், ஜெகதீசன், செல்வகுமார், மார்ட்டீன் பாலசிங்கரா ராஜீ, சோமசுந்தரம், அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சிகளில், தி.மு.க. அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவர் சிவா அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஆர்.வீ. ஜானகிராமன் உருவப் படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தனார்கள். தொடர்ந்து பெண்களுக்கு புடைவை, ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிகளில், அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார், துணை அமைப்பாளர்கள் வி.அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தைரியநாதன், சம்பத் எம்.எல்.ஏ, தலைமைச் பொதுக்குழு உறுப்பினர்கள் வெ. ராமசாமி, சோமசுந்தரம், தங்கவேலு, ப.செல்வநாதன், காந்தி, இளம்பரிதி, பெ.பழனி, எஸ்.எஸ். செந்தில்குமார், எஸ்.நர்கீஸ், தொகுதி கழகச் செயலாளர்கள் சக்திவேல், பாண்டு அரிகிருஷ்ணன், கோ. தியாகராஜன், ப.வடிவேல், ர.சிவக்குமார், ரா.ஆறுமுகம், க.ராஜாராமன், பி.சா.இளஞ்செழியப் பாண்டியன், ல.மணிகண்டன், செ. ராதாகிருஷ்ணன், ம.கலைவாணன், வேலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×