என் மலர்

  புதுச்சேரி

  புதுவைத் தமிழ் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு
  X

  கோப்பு படம்.

  புதுவைத் தமிழ் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வெற்றிப்பெற்றுத் தமிழ்ச்சங்கத் தலைவராக வி.முத்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்சிவா, கம்பன் கழக செயலாளர் வி.பி.சிவக்கொழுந்து, முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசு ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

  புதுச்சேரி:

  புதுவைத் தமிழ்ச் சங்கத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தலில் புதிய பொறுப்பாளர்கள் 11 பேர் வெற்றி பெற்றனர்.

  இத்தேர்தலில் வெற்றிப்பெற்றுத் தமிழ்ச்சங்கத் தலைவராக வி.முத்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  துணை தலைவர்களாக ந.ஆதி கேசவன், ப.திருநாவுக்கரசு, செயலாளராக சீனு.மோகன்தாசு, பொருளா ளராக மு.அருள்செல்வம், துணைச் செயலாளராக தெ.தினகரன், ஆட்சிக்குழு உறுப்பி னர்களாக அ.உசேன், எம்.எஸ்.ராஜா, பொறிஞர் சுரேசு குமார், சிவேந்திரன், ஆனந்தராசன் ஆகியோர் தேர்ந்தெடுக்க ப்பட்டு ள்ளனர். புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் 6 மணி அளவில் மேனாள் நீதியரசர் சேது.முருக பூபதி தலைமையில் நடைபெற உள்ளது.

  முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் ஜான்குமார், வக்கீல் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

  மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், தொண்டை மண்டல ஆதீனம் ஞானப்பிரகாச தேசிய சுவாமிகள் ஆசியுரை வழங்குகிறார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

  பொதுப்ப ணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், கலை பண்பாட்டு துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்சிவா, கம்பன் கழக செயலாளர் வி.பி.சிவக்கொழுந்து, முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசு ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

  Next Story
  ×