என் மலர்
புதுச்சேரி
- பாண்டிச்சேரி வேளாண் அறிவியல் கல்லூரி தாளாளர் கணேஷ் நிகழ்ச்சியை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார்.
- மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவ தற்கும் ரூ. 6 லட்சம் நன்கொ டையாக வழங்கினர்.
புதுச்சேரி:
காரைக்கால் பண்டிதர் ஜவகர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா மற்றும் கல்லூரி நிறுவன நாள் கொண்டாட்டம் நடந்தது.
பேராசிரியர் நடராஜன் தொடக்க உரையாற்றினார். கல்லூரி முதல்வர் புஷ்பராஜ் தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார். மாணவர்கள் மன்ற ஆலோசகர் நாராயணன் விழா குறித்து முன்னுரை வழங்கினார். பாண்டிச்சேரி வேளாண் அறிவியல் கல்லூரி தாளாளர் கணேஷ் நிகழ்ச்சியை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார்.
இதில் புதுவை சட்டப்பேரவை செயலாளர் தயாளன், வருவாய் அதிகாரி மற்றும் நிர்வாக மேஜிஸ்ட்ரேட் அருள் அய்யாவு, கேரளா தலைமை வன பாதுகாப்பு அதிகாரி ஜஸ்டின் மோகன், சென்னை கல்வித்துறை செயலாளர் ஜெயந்தி, புதுடெல்லி வெளியுறவுத்துறை அமைச்சகத் துணைச் செயலர் சந்துரு, அப்பர் வேளாண் துறை அலுவலர் மற்றும் கல்லூரி பேராசி ரியர் மாவட்ட கலெக்டர்கள், வனத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், வங்கி அதிகாரி கள் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இவர்கள் கல்லூரியின் வளர்ச்சிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவ தற்கும் ரூ. 6 லட்சம் நன்கொ டையாக வழங்கினர்.
இறுதியாக கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
- மத்திய மந்திரிக்கு நமச்சிவாயம் கடிதம்
- குறைந்த கட்டணத்தில் மின் விநியோகம் செய்யும் மின் உற்பத்தி நிலையங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரி:
புதுவையின் மின்சாரம் கொள்முதல் விலை உயர்வால் நுகர்வோருக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கு அரசியல்கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் புதுவை மின்துறை அமைச்சர் நமச்சிவாயம், மத்திய மந்திரி ஆர்.கே.சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசு மின் கொள்முதலுக்கு மத்திய தொகுப்பில் இருந்து வழங்கப்படும்போது விலை அதிகரிப்பால் நுகர்வேர் மின் கட்டணம் உயர்கிறது. மின் கட்டணத்தை குறைக்கும் வகையில் மத்திய தொகுப்பில் இருந்து புதுவைக்கு ஒதுக்கீடு செய்யும் மின் கொள்முதலை குறைக்க, குறைந்த கட்டணத்தில் மின் விநியோகம் செய்யும் மின் உற்பத்தி நிலையங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இதனால் மின் கொள்முதல் விலையை குறைக்கவும், மின் கட்டணத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது.
- மாணவர் அத்தியாயத்திற்கான விருதினை மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் அத்தியாயம் பெற்றது.
- மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வருமான வெங்கடாசலபதி ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.
புதுச்சேரி:
இன்ஸ்டியூஷன் ஆப் என்ஜினீயர்ஸ் புதுச்சேரி மையம் நடத்திய 56-வது பொறியாளர் தின விழாவில் சிறந்த மாணவர் அத்தியாயத்திற்கான விருதினை மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் அத்தியாயம் பெற்றது.
இவ்விருதினை இன்ஸ்டியூஷன் ஆப் என்ஜினீயர்ஸ்- மாணவர் அத்தியாயம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் கருவியல் மற்றும் கட்டுப்பாட்டுத் துறைத் தலைவர் வரலட்சுமி பெற்றுக்கொண்டார்.
தக்ஷஷீலா பல்கலைக்கழத்தின் வேந்தரும், மணக்குள விநாயகா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனருமான தனசேகரன் துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் மற்றும் மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வருமான வெங்கடாசலபதி ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.
மேலும் மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், அகாடமிக் டீன்கள் அன்புமலர் மற்றும் அறிவழகர், ஆராய்ச்சி மற்றும் மேம்பட்டு துறையின் டீன் வேல்முருகன், வேலை வாய்ப்புத் துறை அதிகாரி கைலாசம், அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- ஒம்சக்தி சேகர் வலியுறுத்தல்
- 50 சதவீத குடும்ப அட்டை தாரர்களுக்கு மேல் இது போன்று ஒரே குடும்ப அட்டையில் கணவன், மனைவி பெயரில் 2 இணைப்புகள் வைத்துள்ளளர்.
புதுச்சேரி:
முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவிலேயே முதன் முறையாக சிலிண்டர் மானியம் சிகப்பு அட்டைக்கு ரூ.300 மற்றும் மஞ்சள் அட்டைக்கு ரூ.150 என்று புதுவை முதல்-அமைச்சர் அறிவித்த திட்டம் செயல்வடிவம் பெற்றுள்ளது. மானியம் பெற நுகர்வோரின் கியாஸ் இணைப்பு தொடர்பான தகவல்களை இணையதள வாயிலாகவும் சம்பந்தப்பட்ட கியாஸ் நிறுவனங்கள் மூலமாகவும் பகிர்ந்து கொள்ள புதுவை அரசு அறிவித்து உள்ளது.
புதுவை மாநிலத்தில் ஆரம்ப காலத்தில் கியாஸ் இணைப்பு வழங்கும்போது ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு இணைப்பு என்று குடும்ப தலைவர்களுக்கு வழங்கப்பட்டது.
பின்பு எரிவாயு இணைப்பு வழங்குவது எளிமையாகி அனை வருக்கும் சிலிண்டர் கிடைக்க ஆரம்பித்தவுடன் ஒரு இணைப்பு வைத்துள்ளவர்கள் அவர்களின் மனைவி பெயரில் மற்றொரு இணைப்பை பெற்றனர்.
புதுவை மாநிலத்தில் 50 சதவீத குடும்ப அட்டை தாரர்களுக்கு மேல் இது போன்று ஒரே குடும்ப அட்டையில் கணவன், மனைவி பெயரில் 2 இணைப்புகள் வைத்துள்ளளர்.
இப்போது அரசின் மானியம் பெற பதிய முற்படும் போது ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பெயர் மட்டுமே பதிய முடியும் என்ற நிலை உள்ளது.இதனால் கியாஸ் மானிய திட்டம் முழுமை அடையாமல் போக கூடிய நிலை உள்ளது.
எனவே ஒரே குடும்ப அட்டையில் 2 இணைப்புகள் வெவ்வேறு பெயர்களில் இருந்தால் இருவருக்கும் மானியம் கிடைக்க அரசு ஆவண செய்ய வேண்டும். இது போன்ற சிலிண்டர் மானியம் வழங்குவதில் உள்ள குறைகளை களைந்து திட்டத்தை முதல்-அமைச்சர் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு ஒம்சக்தி சேகர் அறிக்கையில் கூறியுள்ளார்.
- சிலம்பரசன், அவருடைய நண்பர் முகேஷ், நிசாகன் ஆகியோர் ஒரே மோட்டார் சைக்களில் அதி வேகமாக சென்றனர்.
- இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து ஸ்டீபன்ராஜை அடித்து, உதைத்தனர்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த நிரவி மேலஓடுதுறை அந்தோனி யார் கோவில்தெருவைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் (வயது 28). இவர், இரும்பு கம்பிகள் விற்பனை செய்யும் வேலை செய்துவருகிறார். இந்த நிலையில் நிரவி காமராஜர் நகரைச்சேர்ந்த சிலம்பரசன், அவருடைய நண்பர் முகேஷ், நிசாகன் ஆகியோர் ஒரே மோட்டார் சைக்களில் அதி வேகமாக சென்றனர். அவர்களை ஸ்டீபன்ராஜ், ஏன் தெருவில் அதிவேகமாக செல்கிறீர்கள். அங்கு நிறைய குழந்தைகள் உள்ளது. அவர்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டால் யார் பதில் சொல்வது என கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து ஸ்டீபன்ராஜை அடித்து, உதைத்தனர். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தபோது, 3 பேரும் தப்பியோடிவிட்டனர். இதில் காயம் அடைந்த ஸ்டீபன்ராஜை, அங்குள்ளோர், காரைக் கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஸ்டீபன்ராஜ் நிரவி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மாணவர் வகுப்பு தொடக்கவிழா இன்று நடந்தது.
- விழாவுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை வகித்தார்.
புதுச்சேரி;
புதுவை அரசு இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லூரி கருத்தரங்கு அறையில் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மாணவர் வகுப்பு தொடக்கவிழா இன்று நடந்தது. விழாவுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை வகித்தார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம், கே.எஸ்.பி.ரமேஷ் எம்.எல்.ஏ., மருத்துவ கல்லூரி இயக்குனர் டாக்டர் உதயசங்கர், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராஜேஷ், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் முதலாம் ஆண்டு சேர்க்கை ஆணைகளை வழங்கி பேசியதாவது:-
பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு வரும்போது சுதந்திரமாக தோன்றும். அந்த மனப்போக்கு வரும்போதுதான் முதலாம் ஆண்டிலேயே சிலர் படிப்பதை கைவிட்டுவிடு கின்றனர். சுதந்திரமாக இருப்பதில் தவறில்லை, ஆனால் படிப்பதில் கவனத்தை விட்டுவிடக்கூடாது. அரியர்ஸ் இல்லாமல் மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும்.
அப்போதுதான் அரசின் சலுகைகளை பெற முடியும். ஒவ்வொரு மருத்துவரையும் உருவாக்க அரசு செலவு செய்கிறது. இந்த பொறுப்புகளை மாணவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து வருகிறோம். கூடுதல் அறுவை சிகிச்சை கூடங்கள் தேவை என கேட்டுள்ளனர். அதையும் செய்ததர உள்ளோம். உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனை, மருத்துவக்கல்லூரியாக உருவாக்க அரசு தேவையான வசதிகளை செய்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
- அன்சாரி துரைசாமி நாயக்கர் உள் அரங்கத்தில் நடைபெற்றது.
- மாநில அமைப்பாளர் கணபதி தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
வருகிற பாராளுமன்ற தேர்தலையொட்டி புதுச்சேரி மாநில பா.ம.க. அவசர பொது குழு கூட்டம் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் மற்றும் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் அறிவுறுத்தலின் படி புதுவை பா.ம.க. தலைமை அலுவலகமாக கவுண்டன்பாளையம், அன்சாரி துரைசாமி நாயக்கர் உள் அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில அமைப்பாளர் கணபதி தலைமை தாங்கினார்.
பொதுக்குழுவில் மக்க ளவைத் தேர்தலையொட்டி பா.ம.க. செயல்திட்டங்களை விளக்க மாநிலம் முழுவதும் கூட்டங்கள் நடத்துவது, கொடியேற்றும் நிகழ்ச்சி நடத்துவது, தொகுதி,கிராமக் கூட்டங்கள் நடத்துவது, இருசக்கர வாகன பிரச்சாரம் செய்வது, வாக்குச்சாவடி களப்பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாநில துணை அமைப்பாளர் வடிவேல் , வன்னியர் சங்க தலைவர் துரை என்ற ஜெயக்குமார், வன்னியர் சங்க துணை தலைவர் பாண்டுரங்கன், மாநில அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் தாபா சோம சுந்தரம், சமூக முன்னேற்ற சங்க பொறுப்பாளர்கள் நடேசன் , சம்மந்தம், சிவப்பிரகாசம் , பொன்னு சாமி, வன்னியர் சங்கம் செயலாளர் நாகப்பன், இளைஞர் சங்க செயலாளர் சங்கிலியன்,
மாணவர் சங்கம் மதன் ,ஹரி மகளிர் சங்கம் மாநில செயலாளர் ஏபில் இளவரசன் , உழவர் பேரியக்கம் மாநில செய லாளர் மணிபாலன், ஜெயமூர்த்தி, அன்பு மணி தம்பிகள் படை மாநில தலைவர் பிரபாகரன், மாநில செயலாளர் பாலாஜி, மாநில ஊடகப்பிரிவு செயலாளர் சந்தோஷ், உட்பட மாநில தொகுதி நிர்வாகிகள் தொண்டர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
- மணிவண்ணனுக்கு தனது புகை படத்தை முகநூலில் அனுப்பினார்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் அருகே பண்ட சோழ நல்லூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் அஜித் குமார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
மேலும் இவர் வாத்திய குழுவும் வைத்து நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அஜித் குமார் தனது பிறந்த நாளை யொட்டி கல் மண்டபத்தை சேர்ந்த தனது நண்பர் மணிவண்ணனுக்கு தனது புகை படத்தை முகநூலில் அனுப்பினார்.
அந்த புகை படத்தை பண்ட சோழ நல்லூரை சேர்ந்த ஆதித்தியன் என்பவர் தவறாக சித்தரித்து மணிவண்ணனுக்கு திருப்பி அனுப்பினார்.
இதனையறிந்த அஜித் குமார் செல்போன் மூலம் ஆதித்தியனிடம் கேட்ட போது உன்னையும், உனது தம்பியையும் இன்று இரவுக்குள் கொலை செய்து விடுவேன் என்று ஆதித்தி யன் மிரட்டல் விடுத்தார்.
மேலும் அன்று நள்ளிரவு ஆதித்தியன் தனது தந்தை ஏழுமலை, சகோதரி அம்சவள்ளி ஆகியோருடன் அஜித் குமார் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் அஜித்குமாரையும், அவரது தம்பி பிரதாப்பையும் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர்.
மேலும் தடுக்க முயன்ற அஜித்குமாரின் தாயாரையும் அவர்கள் தாக்கியதோடு 3 பேரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்றனர். இந்த தாக்குதலில் காயமடைந்த அஜித்குமார் அவரது சகோதரர் பிரதாப் மற்றும் இவர்களது தாய் ஆகிய 3 பேரும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
பின்னர் இதுகுறித்து அஜித்குமார் நெட்டப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சுகாதாரத் துறையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
- சித்ரகலா வலியால் அலறி துடித்தார்.
புதுச்சேரி:
புதுவை நெல்லித்தோப்பு மேரி பின்புறம் பகுதியை சேர்ந்தவர் தன்ராஜ். இவர் புதுவை அரசின் சுகாதாரத் துறையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி சித்ரகலா(வயது53). இவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் உதவியாளராக பணி புரிந்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகன் சாம்ராஜ் தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டும், மகள் மெர்சி தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகின்றனர்.
சித்ரகலா வீட்டின் தரையை சுத்தப்படுத்த மருத்துவத்துக்கு பயன்படுத்தப்படும் எரிசாராயம் (ஸ்பிரீட்) பயன் படுத்துவது வழக்கம். அதுபோல் சம்பவத்தன்று சித்ரகலா ஸ்பிரீட்டை பயன்படுத்தி தரையை சுத்தம் செய்து விட்டு மகள் மெர்சியிடம் இனிமேல் ஒழுங்காக நடக்கா விட்டால் ஸ்பிரீட்டை உடலில் ஊற்றி தீ வைத்து கொள்வேன் என்று மிரட்டினார். திடீரென தீக்குச்சியை உரசி சித்ரகலா பயமுறுத்தி னார். உடனே மெர்சி இனிமேல் ஒழுங்காக நடந்து கொள்வேன் என்று கூறவே தீக்குச்சியை கீழே வீசினார்.
அப்போது தரையில் படர்ந்திருந்த ஸ்பிரீட்டில் தீக்குச்சி விழுந்ததால் குபீர் என்று தீப்பற்றி சித்ரகலா ஆடையில் தீ பிடித்தது. தீமளமளவென உடல் முழுவதும் பரவியதால் சித்ரகலா வலியால் அலறி துடித்தார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சித்ரகலாவை குடும்பத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை சித்ரகலா பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து சித்ரகலாவின் கணவர் தன்ராஜ் உருளையன் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- மூவேந்தன் ஊரைச்சேர்ந்த தமிழ்பாண்டியன் சாலை நடுவே ஆடி சென்றதாக கூறப்படுகிறது.
- மூவேந்தன் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி தென்கரை பேட்டையைச்சேர்ந்தவர் மூவேந்தன்(வயது30). கொத்தனார் வேலை செய்து வரும் இவரது ஊரைச்சேர்ந்த ராமமூர்த்தி இறந்துவிட்டார். இவரது இறுதி ஊர்வலம் கடந்த 1-ந் தேதி நடைபெற்றது. கோட்டுச்சேரி வடமட்டம் சாலையில் ஊர்வலம் சென்றபோது, அவ்வழியே மூவேந்தன் சென்றுள்ளார். அப்போது மூவேந்தன் ஊரைச்சேர்ந்த தமிழ்பாண்டியன்(21) , சாலை நடுவே ஆடி சென்றதாக கூறப்படுகிறது.
இதை பார்த்த மூவேந்தன் ஏன் சாலை நடுவே ஆடுகிறாய் ஓரமாக சென்று ஆடு என கூறியதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த தமிழ்பாண்டியன், நீ யார் என்னை கேள்வி கேட்பதற்கு என, கீழே தள்ளிவிட்டு, சாலையில் கிடந்த செங்கல்லால் தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த மூவேந்தன் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து நேற்று கோட்டுச்சேரி போலீசில் மூவேந்தன் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புதுவை சாரம் ஜீவானந்தம் சிலை எதிரே மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- மதிவாணன் உட்பட பலர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
டெல்லியில் உள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடந்தது. இதனை கண்டித்து புதுவை சாரம் ஜீவானந்தம் சிலை எதிரே மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுவை மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கொளஞ்சியப்பன், தமிழ்ச்செல்வன், நகர கமிட்டி செயலாளர் மதிவாணன் உட்பட பலர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
முன்னதாக பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
- புதுவை மாநில செயலாளர் சலீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
- வர்த்தக நிறுவனங்கள் மின் கட்டண உயர்வால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
புதுச்சேரி:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை மாநில செயலாளர் சலீம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
புதுவை மின்துறை மின் கொள்முதல் விலை உயர்வை ஈடு செய்ய நுகர்வோரிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு செய்துள்ளது. ஏற்கனவே பொதுமக்கள் மற்றும் சிறுகுறு, குடிசைத்தொழில் முனைவோர், வர்த்தக நிறுவனங்கள் மின் கட்டண உயர்வால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தது முதல் 4 முறை மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. மின் கட்டணம் உயர்வால் பொதுமக்கள் மீள முடியாத சூழலில் மீண்டும் மின் கட்டண உயர்வு என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது கண்டிக்கதக்கது.
எனவே விலைவாசி உயர்வால் வறுமையில் வாழும் மக்கள் மீது உயர்த்தி உள்ள மின் கட்டண உயர்வை முதல் அமைச்சர் ரங்கசாமி- ப.ஜனதா அரசு திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






