என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஆடையில் தீபிடித்து பெண் உடல் கருகி சாவு
    X

    கோப்பு படம்.

    ஆடையில் தீபிடித்து பெண் உடல் கருகி சாவு

    • சுகாதாரத் துறையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
    • சித்ரகலா வலியால் அலறி துடித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை நெல்லித்தோப்பு மேரி பின்புறம் பகுதியை சேர்ந்தவர் தன்ராஜ். இவர் புதுவை அரசின் சுகாதாரத் துறையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது மனைவி சித்ரகலா(வயது53). இவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் உதவியாளராக பணி புரிந்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகன் சாம்ராஜ் தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டும், மகள் மெர்சி தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகின்றனர்.

    சித்ரகலா வீட்டின் தரையை சுத்தப்படுத்த மருத்துவத்துக்கு பயன்படுத்தப்படும் எரிசாராயம் (ஸ்பிரீட்) பயன் படுத்துவது வழக்கம். அதுபோல் சம்பவத்தன்று சித்ரகலா ஸ்பிரீட்டை பயன்படுத்தி தரையை சுத்தம் செய்து விட்டு மகள் மெர்சியிடம் இனிமேல் ஒழுங்காக நடக்கா விட்டால் ஸ்பிரீட்டை உடலில் ஊற்றி தீ வைத்து கொள்வேன் என்று மிரட்டினார். திடீரென தீக்குச்சியை உரசி சித்ரகலா பயமுறுத்தி னார். உடனே மெர்சி இனிமேல் ஒழுங்காக நடந்து கொள்வேன் என்று கூறவே தீக்குச்சியை கீழே வீசினார்.

    அப்போது தரையில் படர்ந்திருந்த ஸ்பிரீட்டில் தீக்குச்சி விழுந்ததால் குபீர் என்று தீப்பற்றி சித்ரகலா ஆடையில் தீ பிடித்தது. தீமளமளவென உடல் முழுவதும் பரவியதால் சித்ரகலா வலியால் அலறி துடித்தார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சித்ரகலாவை குடும்பத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை சித்ரகலா பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து சித்ரகலாவின் கணவர் தன்ராஜ் உருளையன் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×