என் மலர்
புதுச்சேரி
- போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.
- இதையடுத்து அவரை போலீசார் கைதுசெய்தனர்.
புதுச்சேரி:
புதுவை வாணரப்பேட்டைதனியார் பள்ளி அருகே நேற்று மாலை ஒரு வாலிபர் நின்று கொண்டு அவ்வழியே செல்லும்பெண்களை பாட்டுப்பாடி கிண்டல் செய்வதாக முதலியார் பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் அரியாங்குப்பம் சுப்பையா நகரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் வயது 22 என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைதுசெய்தனர்.
இது போல் பாகூர்-கன்னியக்கோவில் சந்திப்பு ரோட்டில் கடலூர் சேப்ளாநத்தம் பகுதியை சேர்ந்த பழனிவேல் 27 என்பவர் மது குடித்துவிட்டு ரகளை செய்தார். அவரை கிருமாம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.
- பிரம்மாண்டமான முறையில் வண்ணப் பொடிகள் கொண்டு மாணவர்களால் காந்தியின் உருவப்படம் வரையப்பட்டி ருந்தது.
- முதல்வருமான வெங்கடாஜலபதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
புதுச்சேரி:
மதகடிப்பட்டில் உள்ள மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் எஸ்.எம். வி. பள்ளியில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் தக்ஷஷீலா பல்கலைக்கழகத்தின் வேந்தரும் மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்ட ளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனருமான தனசேகரன், துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வருமான வெங்கடாஜலபதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் எஸ்.எம். வி. பள்ளியின் முதல்வர் அனிதா சாந்தகுமார் வரவேற்றார்.
மேலும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த காந்தியின் உருவப்படத்திற்கு அனைவரும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.விழாவின் சிறப்பு அடையாளமாக காந்தியின் நினைவைப் போற்றும் வகையில் பள்ளியின் இறை வழிபாட்டுக் கூடத்தின் தரைப் பகுதியில் மிகப் பிரம்மாண்டமான முறையில் வண்ணப் பொடிகள் கொண்டு மாணவர்களால் காந்தியின் உருவப்படம் வரையப்பட்டி ருந்தது.
நிகழ்ச்சியில் துணை முதல்வர், நிர்வாக அலுவலர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
- யாரோ மர்ம நபர் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றது தெரியவந்தது.
- மர்ம ஆசாமிகள் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
புதுச்சேரி:
வில்லியனூர் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் வயது 24 இவர் லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுவனத்தின் வாயிலில் நிறுத்திவிட்டு பணியில் ஈடுபட்டார்.
பின்னர் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். யாரோ மர்ம நபர் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து யுவராஜ் லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுவை சண்முகாபுரம் வி.பி.சிங். நகரை சேர்ந்தவர் தமிழ்வேந்தன் வயது 39) இவர் ஜிப்மரில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தினமும் காலை ஜிப்மரில் இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பணிக்கு செல்வது வழக்கம்.
அதுபோல் சம்பவத்தன்று காலை தமிழ்வேந்தன் தனது மோட்டார் சைக்கிளை இரு சக்கரவாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு பணியில் ஈடுபட்டார். பின்னர் பணி முடிந்து வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணாமல் திடுக்கிட்டார். மர்ம ஆசாமிகள் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து தமிழ்வேந்தன் கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பறிமுதல் செய்த பிளாஸ்டிக் பைகளை திரும்பக் கேட்டு நகராட்சி அதிகாரிகள், ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- வியாபாரிகளை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தி அறிவிப்பு செய்யுங்கள்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.
மேலும், இத்தகைய பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், அதனை விற்பனை மற்றும் பயன்படுத்தும் கடைகள் மீதும் நடவ டிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
அதனையடுத்து, உழவர்கரை நகராட்சி அதிகாரிகள் நேற்று திலாசுப்பேட்டை பகுதியில் இத்தகைய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என திடீர் ஆய்வு நடத்தினர். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் கடைகளில் இருப்பதை கண்டு, அவற்றை பறிமுதல் செய்தனர். மேல் நடவடிக்கைக்காக அவற்றை வாகனங்களில் ஏற்றினர். மேலும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த வியாபாரிகளுக்கும் அபராதம் விதித்தனர்.
இதையறிந்த திலாசுப்பேட்டை பகுதியில் உள்ள வியாபாரிகள் அங்கு ஒன்று திரண்டு வந்து பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனத்தை சிறை பிடித்தனர். பறிமுதல் செய்த பிளாஸ்டிக் பைகளை திரும்பக் கேட்டு நகராட்சி அதிகாரிகள், ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
'வியாபாரிகளை ஒருங் கிணைத்து கூட்டம் நடத்தி அறிவிப்பு செய்யுங்கள். அதன் பிறகு வியாபாரிகள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் பறி முதல் செய்யுங்கள்'என ஆவேசமாக கூறினர். அதையடுத்து நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்த பிளாஸ்டிக் பைகளை வியாபாரிகளிடம் திரும்ப கொடுத்து விட்டு சென்றனர்.
- முதல்- அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
- புதுவை ஆன்மீக பூமி. இங்குள்ளவர்களுக்கு நல்ல வளர்ச்சி கிடைக்கும்.
புதுச்சேரி:
விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு உட்பட்ட ஆறுபடை வீடு மருத்துவக்கல்லூரி, புதுவை அரசு மருத்துவமனை இணைந்து தொழில் முனைவோர் கருத்தரங்கு, கண்காட்சியை நடத்துகிறது.
புதுவை கிழக்கு கடற்கரை சாலை காமராஜர் மணி மண்டபத்தில் இன்று தொடங்கி 2 நாட்கள் இந்த கருத்தரங்கு நடக்கிறது. இதன் தொடக்கவிழா இன்று காலை நடந்தது.
விநாயகா மிஷன் பல்கலைக்கழக வேந்தர் கணேசன் தலைமை வகித்தார். முதல்-அமைச்சர் ரங்கசாமி கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசிய தாவது:-
புதுவையில் முதன்முதலாக தனியார் மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி கேட்டு தொடங்கி யது விநாயகா மிஷன் நிறுவனம்தான். மாணவர்க ளுக்கு தரமான கல்வியையும், அனைத்து விதமான படிப்புகளும் கிடைக்க வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம்.
நிகர்நிலை பல்கலைக் கழகங்கள் அரசுக்கு
எம்.பி.பி.எஸ். இடங்களை தருவதில்லை. ஆனாலும் நான் அந்த கல்லூரி நிர்வா கங்களோடு பேசி ஆண்டுக்கு 100 முதல் 120 இடங்களை பெற்று வந்தேன். கடந்த 2 ஆண்டாக அரசுக்கான இடங்கள் பெற முடிய வில்லை.
ஆரம்பகாலத்தில் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மட்டும்தான் புதுவையில் இருந்தது. அதிலும் புதுவை மாணவர்களுக்கு 12
எம்.பி.பி.எஸ். இடங்கள்தான் கிடைக்கும். மிகவும் சிரமப்பட்டு இந்த எண்ணிக்கையை உயர்த்தி னோம்.
நர்சிங், லேப்டெக்னீ ஷியன் ஆகிய படிப்புகள்கூட புதுவையில் இல்லாத நிலை இருந்தது. டாக்டர், நர்சுகள் வெளிமாநிலத்திலி ருந்துதான் புதுவைக்கு வருவார்கள். இதனால்தான் அதிக எண்ணிக்கையில் மருத்துவ கல்லூரிகளை தொடங்கி மருத்துவர்களை உருவாக்கினோம்.
அதே நேரத்தில் ஜிப்மருக்கு இணையாக அரசு மருத்துவக்கல்லூரி கொண்டுவர திட்ட மிட்டோம்.
இவ்வளவு செலவு செய்து, அரசு மருத்து வக்கல்லூரி கொண்டு வர முடியுமா? என பலரும் விமர்சித்தனர்.
ஆனால் தற்போது கதிர்காமத்தில் அரசு மருத்துவக்கல்லூரி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அன்று அரசி யல்ரீதியாக விமர்சனம் செய்தவர்கள், கொரோனா காலத்தில் மருத்துவக்கல்லூரி, மருத்து வமனை செயல்பாடை பார்த்து வியந்தனர்.
அந்த மருத்துவ மனை யால்தான் புதுவையில் கொரோனா இறப்பு விகிதம் குறைந்தது. 25 ஏக்கர் நிலம் இருந்தால் மருத்து வக்கல்லூரி தொடங்க அனுமதி தர அரசு இப்போதும் தயாராகத்தான் உள்ளது.
ஏனெனில் வேலை வாய்ப்பையும் வழங்க வேண்டும். ஒவ்வொரு தனியார் மருத்துவ கல்லூரி யிலும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை பார்க்கின்றனர்.
புதுவையில் அனைத்து மருத்துவ வசதிகளும் கிடைக்க வேண்டும். தலையில் காயமடைந்தால் மருத்துவ வசதி கிடைக்காத நிலை புதுவையில் இருந்தது. தற்போது ஜிப்மரில் இந்த வசதி கிடைக்கிறது. இதுபோல அனைத்து சிறப்பு மருத்துவ வசதிகளும் புதுவையில் கிடைக்க வேண்டும். அனைத்து அறுவை சிகிச்சைகளும் புதுவையில் நடக்க வேண்டும்.
வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் புதுவைக்கு சிகிச்சைக்காக வர வேண்டும். மருத்துவ சுற்றுலா புதுவையில் வளர்ந்து வருகிறது.
சுற்றுலா மூலம்தான் அரசு வருவாயை ஈட்ட வேண்டியுள்ளது. இதனால் ஆன்மீகம், கல்வி, மருத்துவ சுற்றுலாவை வளர்த்து வருகிறோம். புதுவை ஆன்மீக பூமி. இங்குள்ளவர்களுக்கு நல்ல வளர்ச்சி கிடைக்கும்.
புதிய வேந்தர் பொறுப்பேற்ற பிறகு கல்லூரியை நன்றாக கவனித்து வருகிறார். தற்போது புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிய இலவச பரிசோதனை தொடங்கியுள்ளனர். இதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் லட்சுமிநாராயணன், ஜான்குமார் எம்எல்ஏ, விநாயக மிஷன் நிர்வாகிகள் அனுராதா, சுரேஷ்சாமு வேல், சுதீர், கோடூர், ராகேஷ்சேகல், நாகப்பன், மணிவண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இம்பெக்ஸோ 2013 என்ற கருத்தரங்கு, கண்காட்சியில் தொழில்முனைவோர் பலர் பங்கேற்றனர். இதில் மருத்துவ சேவை செய்ப வர்கள் புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள், தொடக்க நிலை நிறுவனங்க ளுக்கு தகுந்த ஆலோச னைகள் வழங்கப்பட உள்ளது.
- சி.ஐ.டி.யூ. செயலாளர் சீனுவாசன் தலைமை வகித்தார்.
- போக்குவரத்து சட்ட விதிகளின்படி அநியாய அபராத கட்டண முறையை கைவிட வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை போக்குவரத்து துறையின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து முதலியார் பேட்டை 100 அடி சாலையில் உள்ள
ஆர்.டி.ஓ. அலுவலகத்தின் ஆணையர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.ஐ.டி.யூ. செயலாளர் சீனுவாசன் தலைமை வகித்தார். ஆட்டோ சங்க தலைவர் மணவாளன், தனியார் போக்கு வரத்து சங்க தலைவர் அந்தோணி தாஸ், பொதுச்செயலாளர் மதிவாணன், ஆட்டோ சங்கம் விஜயகுமார் முன்னிலை வகித்தனர்.
இதில் நிர்வாகிகள் துளசிங்கம், ராஜா, ராமு, ராஜா, செல்வம், சங்கர், சகாயராஜ், செந்தில், சத்தியமூர்த்தி, பழனி பாலன், சதீஷ், மனோகர், ரவிக்குமார், குமரவேல், ஆனந்த், மருதப்பன், சீனுவாசன், மணிபாலன், மது, தினேஷ் குமார், ராமசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் குவிந்து கிடக்கும் வாகன ஆவணங்களை முறைப்படுத்தி உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும்.
புரோக்கர்களுக்கு முன்னு ரிமை கொடுக்கும் ஆர்.டி.ஓ. அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய போக்குவரத்து சட்ட விதிகளின்படி அநியாய அபராத கட்டண முறையை கைவிட வேண்டும்.
கட்டண விபர தகவல் பலகை வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பப்பட்டது.
- அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்
- இன்று வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் 200-வது பிறந்ததினம்.
புதுச்சேரி:
புதுவை காமராஜர் மணிமண்டபத்தில் நடந்த மருத்துவ கருத்தரங்கு, கண்காட்சி தொடக்க விழாவில் அமைச்சர் லட்சுமிநாராயணன் பேசியதாவது:-
புதுவை அரசு சார்பில் சென்டாக் மாணவர்களுக்கு மருத்துவம், என்ஜினீயரிங், நர்சு உள்ளிட்ட படிப்புகளுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. இதை தொடங்கும்போது மாணவர்களுக்கு நிதி வழங்க முடியுமா? என்ற கேள்வி இருந்தது. ஆனால் தற்போது 13 ஆயிரம் பேருக்கு எம்.பி.பி.எஸ். படிக்க காமராஜர் கல்வி நிதி வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி 60 ஆயிரம் மாணவர்கள் என்ஜினீயரிங் படிக்க நிதி அளித்துள்ளோம்.
ஒட்டுமொத்தமாக சென்டாக் மூலம் 2003-ம் ஆண்டு முதல் இதுவரை மாணவர்களுக்கு ரூ.450 கோடி கல்விக்கு நிதியாக வழங்கியுள்ளோம். இன்று வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் 200-வது பிறந்ததினம். அதேபோல கல்வி என நினைத்தால் காமராஜர்தான் நினைவுக்கு வருவார்.
ஆனால் புதுவையை பொறுத்தவரை முதல்-அமைச்சர் ரங்கசாமிதான் கல்விக்கு வித்திட்டவர். புதிய கண்டுபிடிப்புகளை 4 சதவீதம்பேர்தான் கண்டறிகின்றனர். 96 சதவீதத்தினர் பயன்படுத்துகின்றனர். 60 மருத்துவ விஞ்ஞானிகள் இந்த கருத்தரங்கில் பங்கேற்கின்றனர்.
உங்களின் கண்டுபிடிப்புகள் பயனுள்ளதாக இருக்கும். ஆரம்பத்தில் நாட்டில் 500 கல்வி நிறுவனங்கள்தான் இயங்கி வந்தது. தற்போது 60 ஆயிரம் கல்வி நிறுவனங்கள் உள்ளது. படிப்பறிவு பெற்றவர்கள் நாடு முழுவதும் 85 சதவீதமாக உயர்ந்துள்ளனர். புதுவையில் 96 சதவீதத்தினர் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர். இதற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி வித்திட்டதுதான் காரணம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தனியார் மருத்துவ மனையில் பகலிலும், கடற்கரை சாலையில் தனியார் நர்சிங் ஹோமில் இரவிலும் நர்சாக வேலை செய்து வருகிறார்.
- போலீசார் வழக்குப் பதிந்து செயின்பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டை சாமிபிள்ளை தோட்டம் லெனின் நகரை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி ராஜேஸ்வரி (35).
கருத்துவேறுபாடு காரண மாக ராஜேஸ்வரி கணவரை பிரிந்து 9 ஆண்டாக தனியாக வசித்து வருகிறார். டிப்ளமோ நர்சிங் முடித்துள்ள ராஜேஸ்வரி, புதுவை சின்னமணிக்கூண்டு அருகில் தனியார் மருத்துவ மனையில் பகலிலும், கடற்கரை சாலையில் தனியார் நர்சிங் ஹோமில் இரவிலும் நர்சாக வேலை செய்து வருகிறார்.
நேற்று இரவு 7.50 மணியளவில் காந்திவீதி வழியாக கடற்கரை சாலையில் உள்ள நர்சிங் ஹோமிற்கு ஸ்கூட்ட ரில் சென்று கொண்டி ருந்தார்.
அப்பகுதியில் உள்ள டிபார்ட்மென்ட் ஸ்டோர் அருகே வலதுபக்கம் ஒரே பைக்கில் 2 பேர் பின் தொடர்ந்து வந்தனர். பின்னால் வந்த நபர் திடீரென ராஜேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்தார்.
திடுக்கிட்ட ராஜேஸ்வரி, செயினை கையால் கெட்டியாக பிடித்துக் கொண்டார். ஆனாலும்
பைக்கில் வந்த வர்கள் வேகமாக இழுத்த தில் செயின் இரண்டாக அறுந்தது. 6 தங்க காசுடன் ஒரு பகுதி செயினை திருடர்கள் பறித்து சென்று விட்டனர். பறிபோன 3½ பவுன் செயினின் மதிப்பு ரூ.1.½ லட்சமாகும்.
இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசில் ராஜேஸ்வரி புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து செயின்பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை தேடி வருகின்றனர்.
- பழுதான கட்டிடங்களை இடித்து கட்டுவது குறித்து அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
- கால்நடைத்துறை இயக்குனர் லதாமங்கேஷ்கர் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி:
மங்கலம் தொகுதி உறுவையாறு கிராமத்தில் கால்நடை மருத்துவமனை, அரசு பொது மருத்துவமனை, வி.ஏ.ஓ. அலுவலகம், அங்கன்வாடி கட்டிடம் ஆகிய அரசு அலுவலகங்கள் உள்ளது. இதன் கட்டிடங்கள் பழுதடைந்துள்ளது.
இவற்றை சீரமைப்பது குறித்து அமைச்சர் தேனீஜெயக்குமார் இன்று அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். கால்நடை மருத்துவமனை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் வேறு இடத்துக்கு மாற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் மற்ற பழுதான கட்டிடங்களை இடித்து கட்டுவது குறித்து அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோ சனையில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் முரளி, கால்நடைத்துறை இயக்குனர் லதாமங்கேஷ்கர் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
- கடந்த 2 நாட்களாக ஜெயபிரகாஷ் மீண்டும் மது குடிக்க தொடங்கினார். இதனை அவரது மனைவி பிரியா கண்டித்தார்.
- வேலை முடிந்து வீட்டுக்கு வந்த போது கணவரை காணாமல் பிரியா அதிர்ச்சியடைந்தார்.
புதுச்சேரி:
புதுவை முத்தியால் பேட்டை பாரதிதாசன் வீதியை சேர்ந்தவர் ஜெய பிரகாஷ் (வயது41). இவருக்கு பிரியா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். ஜெயபிரகாஷ் ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை வேலைக்கு அமர்த்தும் ெதாழில் செய்து வந்தார்.
கடந்த 2 ஆண்டுகளாக மது பழக்கத்துக்கு ெஜயபிர காஷ் ஆளானார். இதனால் அவர் தொழிலை சரியாக கவனிக்கவில்லை. இதை யடுத்து குடும்பத்தை நடத்த பிரியா தனது கணவரின் அண்ணன் நடத்தும் ஓட்டலில் கேஷியராக வேலை வருகிறார்.
இதற்கிடையே மதுவை மறப்பதற்காக ஜெயபிரகா சுக்கு கடந்த 3 மாதங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக ஜெயபிரகாஷ் மீண்டும் மது குடிக்க தொடங்கினார். இதனை அவரது மனைவி பிரியா கண்டித்தார்.
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் வீட்டில் சமையில் வேலை களை முடித்து விட்டு பிரியா ஓட்டலுக்கு வேலைக்கு சென்று விட்டார். வேலை முடிந்து வீட்டுக்கு வந்த போது கணவரை காணாமல் பிரியா அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் வீட்டு மாடிக்கு சென்று பார்த்தார். அங்குள்ள அறையில் ஜெய பிரகாஷ் மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு பிணமாக தொங்குவதை கண்டு பிரியா அதிர்ச்சியடைந்தார்.
மது பழக்கத்தை மறக்க முடியாத வேதனையில் ஜெயபிரகாஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
இதுகுறித்து அவரது மனைவி பிரியா கொடுத்த புகாரின் பேரில் முத்தி யால்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- நகை சீட்டு கட்டியவர்களுக்கு நகை-பணம் தராததால் ஆத்திரம்
- தகவல் அறிந்த பெரிய கடை சப்-இன்ஸ்பெ க்டர் வீர புத்திரன் தலைமையி லான போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
புதுச்சேரி:
புதுச்சேரி காமராஜர் சாலை ராஜா தியேட்டர் அருகே பிரபல பிரணாவ் நகைக்கடை செயல்பட்டு வருகிறது.
திருச்சி, மதுரை, சென்னை, கும்பகோணம் உள்ளிட்ட பல இடங்களில் இந்த கடை இயங்கி வருகிறது. புதுச்சேரியில் இந்த நகைக்கடை திறக்கப்பட்டு ஒரு ஆண்டுதான் ஆகிறது. இக்கடையில் நகை சீட்டு போட்டால் 12 மாதத்திற்கு 9 சதவீத போனஸ், 9 முதல் 12 மாதங்களுக்கு செய்கூலி சேதாரம் இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அறிவிக்க ப்பட்டது.
இதை நம்பி வாடிக்கையா ளர்கள் பலரும் நகை சீட்டில் சேர்ந்தனர். இந்த நிலையில் நகை சீட்டில் சேர்ந்த சிலர் அதற்குரிய காலம் முடிவடைந்ததால் நகையை வாங்க கடைக்கு வந்துள்ளனர். இன்னும் சிலர் 12 மாதத்திற்கு முன்பாகவே சீட்டை முடித்துவிட்டு நகையை வாங்க வந்தனர். ஆனால் அவர்களுக்கு நகையை வழங்காமல் கடந்த சில நாட்களாகவே கடை ஊழியர்கள் அலைக்கழித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை 50-க்கும் மேற்பட்ட வாடிக்கை யாளர்கள் நகை கடைக்கு வந்தனர்.
ஆனால் கடையில் தங்க நகைகள் எதுவும் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஒரு சில வெள்ளி நகைகள், வெள்ளி பொருட்கள் மட்டுமே இருந்தன. இதனால் சீட்டு பணம் செலுத்திய வாடிக்கை யாளர்கள் நகையை உடனே தரக் கூறினர்.
நகை இல்லாவிட்டால் அதற்குரிய பணத்தை தரவேண்டும் என கேட்டனர். அதற்கு கடை ஊழியர்கள் சரிவர பதில ளிக்கவில்லை என தெரிகிறது. இதனால் வாடிக்கை யாளர்கள் கடை மேலாளருடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டத்துடன் கடை எதிரே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த பெரிய கடை சப்-இன்ஸ்பெ க்டர் வீர புத்திரன் தலைமையி லான போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
மரியலை கைவிட்டு போலீஸ் நிலையைத்தில் எழுத்துப்பூர்வமான புகார் அளிக்குமாறு கூறினர்.அதன் படி வாடிக்கையாளர்கள் சிலர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பின்னர் வாடிக்கை யாளர்கள் சிலர் நகை கடையில் இருந்த வெள்ளி பொருட்களை நகை சீட்டு செலுத்திய பணத்திற்கு வாங்கி சென்றனர்.
- சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர்.
- போராட்டத்தையொட்டி அப்பகுதியில் திருபுவனை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி:
கலித்தீர்த்தால் குப்பம் பகுதியில் பெருந்தலைவர் காமராஜர் அரசு கலைக் கல்லூரி இயங்கி வருகிறது.
இக் கல்லூரியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் இளங்கலை பட்டப் படிப்பில் 3 ஆண்டுகளுக்கு பதிலாக 4 ஆண்டுகள் நீட்டிப்பு செய்தும் தமிழ் மொழியை முற்றிலுமாக நீக்கிவிட்டு இந்தியை திணிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருவதை கண்டித்து கல்லூரி மாணவ - மாணவிகள் வகுப்பை புறக்கணித்து கல்லூரியின் வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து மாணவர்கள் கல்லூரி முதல்வரிடம் இதுகுறித்து கோரிக்கை மனு அளித்தனர்.
மாணவர்களின் திடீர் போராட்டத்தையொட்டி அப்பகுதியில் திருபுவனை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.






