என் மலர்
புதுச்சேரி
- 2 வாலிபர்களையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
- வாணரப்பேட்டை எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்த அரி(23) என்பவரை முதலியார்பேட்டை போலீ சார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
தவளக்குப்பம் போலீசார் நேற்று மாலை தவளக்குப்பம் மெயின் ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 2 வாலிபர்கள் நின்று கொண்டு பொதுமக்களுக்கு இடையூறாக தகாத வார்த்தைகளால் பேசி ரகளை செய்து கொண்டிருந்தனர்.அந்த 2 வாலிபர்களையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் கடலூர் அடுத்த கோண்டூர் பகுதியை சேர்ந்த அருள்(21), லொடுக்கு என்ற சஞ்சய்(20) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதுபோல் கன்னி யக்கோவில் பச்சை வாழியம்மன் கோவில் அருகே மது குடித்து விட்டு ரகளை செய்த கடலூர் குண்டு உப்பளவாடி பகுதியை சேர்ந்த கரண் (24) என்பவரை கிருமாம்பாக்கம் போலீசாரும்,
வாணரப்பேட்டை அலேன்வீதியில் பொது இடத்தில் ரகளை செய்த வாணரப்பேட்டை எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்த அரி(23) என்பவரை முதலியார்பேட்டை போலீ சார் கைது செய்தனர்.
- கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ.பரிசு வழங்கினார்
- ராணிகள் மற்றும் பாதுகாப்பு இயக்க தலைவர் டாக்டர் செல்லமுத்து, தினேஷ்குமார் தலைமை தாங்கினர்.
புதுச்சேரி:
புதுவை பிராணிகள் நலன், பாதுகாப்பு இயக்கம் மற்றும் ரோட்டரி கிளப் பாண்டிச்சேரி காஸ்மஸ் இணைந்து நடத்திய உலக விலங்குகள் தினம் வள்ளலார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
புதுவை பிராணிகள் மற்றும் பாதுகாப்பு இயக்க தலைவர் டாக்டர் செல்லமுத்து, தினேஷ்குமார் தலைமை தாங்கினர். பள்ளி துணை முதல்வர் கவுரி ஓவிய போட்டியை தொடங்கி வைத்தார்.
ஒவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. சான்றிதழ், பரிசு மற்றும் கேடயங்களை வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பிராணிகள் நலன் மற்றும் பாதுகாப்பு நிர்வாகிகள் ஆதித்தன், சிரஞ்சீவி ஏற்பாடு செய்தனர். பள்ளி ஆசிரியர் அன்னரத்தினம் நன்றி கூறினார்.
- படகு குழாமிலிருந்து ஆற்றில் படகு மூலம் பேரடைஸ் கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் செல்வார்கள்.
- காந்திஜெயந்தி தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் படகு குழாமில் அலைமோதியது.
புதுச்சேரி:
புதுவை அரியாங்குப்பம் நோணாங்குப்பத்தில் அரசு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் படகு குழாம் உள்ளது.
புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளை அதிகளவில் கவர்ந்த இடமாக படகு குழாம் உள்ளது. இங்கு வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை, தொடர் விடுமுறை காலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். நோணாங்குப்பம் படகு குழாமிலிருந்து ஆற்றில் படகு மூலம் பேரடைஸ் கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் செல்வார்கள். நீண்ட கியூ வரிசையில் நின்ற படகில் செல்வார்கள்.
இந்த பேரடைஸ் கடற்கரையில் மின்சார வசதி செய்யப்பட்டிருந்தது. இங்குள்ள கடைகளில் உணவுப்பொருட்கள், ஐஸ்கிரீம் விற்கப்படுகிறது. சுற்றுலா பயணிகளுக்கு தேவையான குளிர்சாதன பொருட்கள், உணவு தயாரிக்க மின் அடுப்புகள் ஆகியவற்றுக்கு மின்சாரம் தேவை. மாலையில் சுற்றுலா பயணிகள் படகு குழாம் திரும்ப விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக இங்கு மின்விளக்குகள் எரியவில்லை.
இதற்கு மின்சாரம் இல்லாததுதான் காரணம் என தெரியவந்துள்ளது. ஏனெனில் கேபிள் மூலம் கொடுக்கப்பட்டிருந்த மின் இணைப்பில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சில நாட்களுக்கு முன்பு இது சீரமைக்கப்பட்டது. காந்திஜெயந்தி தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் படகு குழாமில் அலைமோதியது. ரூ.60 லட்சம் வரை வருமானமும் கிடைத்தது.
ஆனால் மீண்டும் நேற்று முதல் மின்சாரம் தடைபட்டது. வார இறுதி விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் மின்சாரம் இல்லாமல் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதை உடனடியாக சீரைமக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. படகு குழாம் நுழைவுவாயிலில் பெயர் பலகையும் இல்லை. இதனால் வெளிமாநில சுற்றுலா பயணிகள் அரசு படகு குழாமை தாண்டி தனியார் படகு குழாமிற்கு செல்லும் நிலையும் உள்ளது.
- எதிர்கட்சித்தலைவர் சிவா ஆவேசம்
- ரூ. 25 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பெற்றுக்கொண்டு பதிவு செய்கின்றனர்.
புதுச்சேரி:
இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா எம்.எல்.ஏ. பேசியதாவது:-
காமாட்சி அம்மன் கோவில் நில அபகரிப்பு பிரச்சனை இவ்வளவு பெரிதாக ஆன பிறகும் முதல்-அமைச்சரும், கவர்னரும் வாய் திறக்காமல் உள்ளனர்.
இதைப்பற்றி கவலைப்படாமல் மீண்டும் நாம் தேர்தலில் வெற்றி பெறுவோம் என மமதையில் சுற்றி வருபவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். இந்தியா கூட்டணி பொதுமக்களின் பிரச்சினையை கையில் எடுத்துள்ளது.
கோவில் சொத்து விவகாரம் நீதிமன்றம் வரை சென்று தீர்வு கிடைத்துள்ளது. கடந்த 10 ஆண்டாக இதே வழக்கில் தொடர்புடைய சார்பதிவாளர்தான் பதவியில் இருந்துள்ளார்.
இவர் காலத்தில் பதியப்பட்ட பத்திரங்களையெல்லாம் மறு ஆய்வு செய்ய வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக விலை நிலங்களை மனைப்பிரிவுகளாக பத்திரம் பதிவு செய்யப்பட்டது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்.
புதுவை நகர குழுமம், பதிவாளர் அலுவலகங்கள் புரோக்கர்கள் பிடியில் சிக்கி உள்ளது. விலை நிலங்கள் அனுமதியின்றி வீட்டுமனைகளாக பதியப்பட்டுள்ளன.
வில்லியனூர் கொம்யூனில் ரூ. 25 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பெற்றுக்கொண்டு பதிவு செய்கின்றனர். இதனால் அரசுக்கு வரவேண்டிய ரூ.பல கோடி கபளீகரம் செய்யப்பட்டுள்ளது.
இது பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான போரட்டம் அல்ல, புதுவை அரசு துறைகளில் சில அதிகாரிகள் முதல் கீழ்நிலை ஊழியர்கள் வரை இந்த செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மோசடிகளில் ஈடுபட்டவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக மோசடியாக பதியப்பட்ட சொத்துக்களின் பட்டியலை ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இவ்வாறு சிவா பேசினார்.
- இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு, பொதுச்செயலாளர் திருமுருகன் முன்னிலை வகித்தனர்.
- விநாயக முதலியார், திருமலை, ஆனந்தபாபு, ஜெரால்டு, ராஜமோகன், கிருஷ்ண ராஜூ பங்கேற்றனர்.
புதுச்சேரி:
புதுவை காங்கிரஸ் வக்கீல்கள் பிரிவு, அனைத்து தொகுதி வட்டார காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. பிறந்தநாள் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தனர். ஒருங்கிணைப்பளர் தேவதாஸ், வக்கீல்கள் பிரிவு தலைவர் மருதுபாண்டியன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு, பொதுச்செயலாளர் திருமுருகன் முன்னிலை வகித்தனர்.
மாநில நிர்வாகிகள் ராஜாகுமார், ராஜசேகரன், தியாகராஜன், பாபுலால், வக்கீல்கள் வேல்முருகன், சுரேஷ், ஸ்ரீதர்பாபு, சண்முகம், புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
வட்டார காங்கிரஸ் சார்பில் ஆறுமுகம், சுந்தரம், மோகன், கோபு, விநாயக முதலியார், திருமலை, ஆனந்தபாபு, ஜெரால்டு, ராஜமோகன், கிருஷ்ண ராஜூ பங்கேற்றனர்.
இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சையது, சத்திய நாராயணன், தமிழ்செல்வம், ஜெனா, சித்தானந்தம், சச்சிதானந்தம், சிலம்பு, ராகுல், காரைக்கால் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரஞ்சித், முத்தியால்பேட்டை வட்டார நிர்வாகிகள் வேலு, பன்னீர்செல்வம், சுரேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.
- போலீஸ்காரரின் தாயை கொன்றவர் பரபரப்பு வாக்குமூலம்
- அவருக்கும், கோவிந்த ம்மாளுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை வில்லியனூர் அருகே உள்ள அரியூர் காலனி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆதிமூலம் இவரதுய மனைவி கோவிந்தம்மாள் (45). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இளையமகன் புதுவை காவல் துறையில் போலீஸ்பணிக்கு தேர்வாகி பயிற்சி பெற்று வருகிறார்.
கோவிந்தம்மாள் ஜிப்மரில் ஒப்பந்த துப்புரவு ஊழியராக வேலை செய்து வந்தார்.
கடந்த 10-ந் தேதி இரவு கோவிந்தம்மாள் பணி முடிந்து அரியூர் பஸ்ஸ்டாப்பில் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம ஆசாமிகள் கோவிந்த ம்மாளின் பின்பக்க தலையில் இரும்பு ராடால் தாக்கி விட்டு தப்பிஓடி விட்டனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தம்மாள் சிறிதுநேரத்தில் இறந்தார்.
இந்த கொலை குறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.
சம்பவத்தன்று கோவிந்த ம்மாள் நடந்து வந்த மைதானம் மற்றும் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 40 பேரிடம் விசா ரணை நடத்தினர். இதில் கோவிந்தம்மாள் வீட்டுக்கு பக்கத்து வீட்டை சேர்ந்த பஞ்சமூர்த்தி(32) என்பவர் மாயமானது தெரியவந்தது. அவருக்கும், கோவிந்த ம்மாளுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. முன்விரோ தத்தில் கோவி ந்தம்மாளை அடித்து கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து பண்ருட்டி யில் பதுங்கி யிருந்த பஞ்சமூர்த்தியை போலீசார் கைது செ ய்தனர். கைது செய்யப்பட்ட பஞ்சமூர்த்தி போலீசில் பரபரப்பு வாக்கு மூலம் அளித்தார். அதில் அவர் கூறியிருப்ப தாவது:-
எனது குடும்பமும், கோவிந்தம்மாள் குடும்பமும் அடுத்தடுத்த வீட்டில் வசித்து வருகிறோம். கால்வாயில் குப்பை கொட்டுவதில் இரு குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்படும். அப்போது, கோவிந்தம்மாள் தரக்குறைவாக பேசுவார்.
சமீபத்தில் இதுபோல பிரச்சினை வந்தபோது, கோவிந்தம்மாள் எங்கள் குடும்பத்தை பற்றி கடுமை யான வார்த்தைகளால் பேசினார். எனக்கு திருமண மாகி 6 மாதம்தான் ஆகிறது. என் மனைவி கர்ப்பமாக உள்ளார். வாரிசு உருவா காது. அழிந்து போய்விடும் என்றெல்லாம் அவர் பேசினார்.
இது எனக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். இதற்காக இரும்பு ராடை எடுத்துச்சென்று மறைத்து வைத்திருந்து காத்திருந்தேன். அவர் பஸ்சில் இருந்து இறங்கி வந்தபோது, தலையில் இரும்புராடால் அடித்து கொலை செய்தேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் கொலைக்கு பயன்படுத்திய இரும்பு ராடை கைப்பற்றினர்.
- 26-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
- பணிக்கான கல்வி தகுதி, வயது வரம்பு நிபந்தனைகள் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையில் மத்திய அரசின் மிஷன் சக்தி சம்பல் மகளிர் ஹெல்ப்லை ன் திட்டத்தின் கீழ் 16 பணியிடங்கள் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
புதுவையை சேர்ந்த தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கான கல்வி தகுதி, வயது வரம்பு நிபந்தனைகள் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் வருகிற 25-ந் தேதி மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என் துறை இயக்குனர் முத்துமீனா தெரிவித்துள்ளார்.
- 10 மற்றும் 12 வகுப்பு முடித்தவர்கள், டிப்ளமோ ஐ.டி. மற்றும் பட்டப் படிப்பு முடித்தவர்கள், முதுகலை படித்தவர்கள் வந்திருந்தனர்.
- இளைஞர்களை ஏமாற்றக்கூடாது என்பதற்காக நேர்காணல் நடத்துவர்கள் செல்போன் வெளிச்சம், சிறிய எமர்ஜென்சி விளக்கை வைத்து நேர்காணலை நடத்தினர்.
புதுச்சேரி:
புதுவை அரசின் தொழிலாளர் நலத்துறை சார்பில் காந்திநகர் வேலைவாய்ப்பு மையத்தில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி வேலைவாய்ப்பு முகாம் தொடங்கியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு புதிதாக பட்டம் படித்தவர்கள்,10 மற்றும் 12 வகுப்பு முடித்தவர்கள், டிப்ளமோ ஐ.டி. மற்றும் பட்டப் படிப்பு முடித்தவர்கள், முதுகலை படித்தவர்கள் வந்திருந்தனர். புதுவை, தமிழகத்தை சேர்ந்த நிறுவனங்கள் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்றன. இன்று காலை 9 மணி முதல் காந்தி நகர் வேலைவாய்ப்பு முகாமில் இளைஞர்கள் கூடியிருந்தனர்.
அப்போது காலை 10 மணிக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் இருட்டில் இளைஞர்கள் முகாமில் பங்கேற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இளைஞர்களை ஏமாற்றக்கூடாது என்பதற்காக நேர்காணல் நடத்துவர்கள் செல்போன் வெளிச்சம், சிறிய எமர்ஜென்சி விளக்கை வைத்து நேர்காணலை நடத்தினர்.
அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என அறிக்கப்பட்டும், மின் துணைப்பு துண்டிக்க ப்பட்டது இளைஞர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியது.
- புதுவை மாநில பா.ம.க. அமைப்பாளர் கணபதி தொடங்கி வைத்தார்.
- மகளிர் சங்க நிர்வாகி ஏபில் இளவரசன் மற்றும் 300- க்கும் மேற்பட்ட பா.ம.க. இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவுரையின் படி வருகிற பாராளு மன்ற தேர்தல் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக புதுவை பா.ம.க. சார்பில் இருசக்கர வாகன பேரணி மற்றும் மக்கள் சந்திப்பு பேரணியை நடத்தியது.
மணவெளி சட்டமன்ற தொகுதி இடையார் பாளையம் கிராமத்தில் இருந்து தொடங்கிய பேரணியை புதுவை மாநில பா.ம.க. அமைப்பாளர் கணபதி தொடங்கி வைத்தார்.
பேரணி பூரணாங்குப்பம், புது குப்பம், நல்லவாடு, ஆண்டியார் பாளையம், வழியாக சென்று தவளகுப்பம் 4 முனை சந்திப்பில் பிரச்சாரம் நடைபெற்றது.
பின்னர் நோணாங்குப்பம் வழியாக மணவெளி கிராமத்தில் பிரச்சாரம் நிறைவு பெற்றது. இதில்வன்னியர் சங்கத் தலைவர் துரைஜெயக்குமார் , மாநில வன்னியர் சங்க பொருளாளர் நரசிம்மன், மாநில தலைமை நிலைய செயலாளர் சுப்பிரமணி, மாநில ஊடக பிரிவு செயலாளர் புதுவை செல்வம், உழவர் பேரியக்கம் மாநில செயலாளர் மணிபாலன், ஜெயமூர்த்தி, மணவெளி தொகுதி தலைவர் முனியன், மனவெளி தொகுதி தேர்தல் பணி குழு தலைவர் சேதுபதி, மணவெளி தொகுதி செயலாளர் முருகன், வன்னியர் சங்க செயலாளர் ஆனந்தராஜ், இளைஞர் அணி தலைவர் பூரணாங்குப்பம் அருள் அரசன், மாணவர் சங்க செயலாளர் மகேந்திரன், தொழிற்சங்க தலைவர் ஜீவா , அஜித் ,புதுச்சேரி நகர தலைவர் தமிழ்ச்செல்வன், மகளிர் சங்க நிர்வாகி ஏபில் இளவரசன் மற்றும் 300- க்கும் மேற்பட்ட பா.ம.க. இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
- அமைச்சர் நமச்சிவாயத்திடம் மனு
- இளைஞர் சமுதாயத்தை போதை பழக்கத்தில் இருந்து திசைதிருப்பி விளை யாட்டின் மீது ஆர்வத்தை கொண்டுவர வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை பாகூர் தொகுதியில் பள்ளி கல்வித்துறைக்கு சொந்த மான விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த விளையாட்டு மைதானம் தனியார் வசம் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மைதானத்தை மீட்க பாகூர் இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் சார்பில் சுமார் 300 பேர் அடங்கிய மீட்பு போராட்டக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் தலைமையில், விளையாட்டு துறை அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:-
அரசுக்கு சொந்தமான விளையாட்டு திடலை மீட்டு விளையாட்டு வீரர்கள், பொதுமக்களுக்கு அர்ப் பணிக்க வேண்டும். இளைஞர் சமுதாயத்தை போதை பழக்கத்தில் இருந்து திசைதிருப்பி விளை யாட்டின் மீது ஆர்வத்தை கொண்டுவர வேண்டும்.
மாநில, தேசிய போட்டிகளில் பங்கேற்க வழி செய்ய வேண்டும். விளையாட்டுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விளையாட்டு த்துறை மூலம் பயிற்சியா ளர்களிடம் சிறப்பு பயிற்சி பெற ஏற்பாடுகள் செய்ய வேண்டும். கிராமப்புற விளையாட்டு திடலில் சிறந்த போட்டிகளை நடத்த வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
- படகு ஓட்டுநர் மற்றும் பயனாளிகளுக்கு விபத்து காப்பீட்டு திட்டம் செய்யப்பட்டது.
- கென்னடி எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை ஏற்று வருகிற 10-ந் தேதி இதற்கான சிறப்பு கூட்டம் நடத் தப்படும்.
புதுச்சேரி:
புதுச்சேரி வம்பாகீரப் பாளையம் பாண்டி மெரினா அருகில் உள்ள உப்பனாற்றில் படகு சவாரி செய்வதற்கு வம்பாகீர ப்பாளையம் மீனவர்கள் சுற்றுலாத்துறை மூலம் விண்ணப்பி த்திருந்தனர்.
விண்ணப்பத்தில் கேட்டது போல், படகு ஓட்டுநர் மற்றும் பயனாளிகளுக்கு விபத்து காப்பீட்டு திட்டம் செய்யப்பட்டது.
மேலும் படகு சர்வே ரிப்போர்ட், டிரைவர் லைசென்ஸ், லைப் ஜாக்கெட், லைப் போயா, தீ அணைப்பான் மற்றும் முதலுதவி சிகிச்சை பெட்டி என அனைத்தை சமர்ப்பிக்கப்பட்டது.
ஆனால் இதுவரை படகு சவாரி செய்வதற்கான சான்றிதழ் வழங்கப்பட வில்லை. இதையடுத்து வம்பாகீரப்பாளையம் படகு உரிமையாளர் சங்கத்தினர் தொகுதி எம்.எல்.ஏ அனிபால் கென்னடியிடம் முறையிட்டனர்.
இதையடுத்து அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. அவர்களை அழைத்து கொண்டு சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.
தொடர்ந்து கென்னடி எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை ஏற்று வருகிற 10-ந் தேதி இதற்கான சிறப்பு கூட்டம் நடத் தப்படும்.
அதில் துறை சார்ந்த அமைச்சர், இயக்குனர் மற்றும் அதிகாரிகள் வைத்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார்.
- தலித் விடுதலை பேரவை வலியுறுத்தல்
- காண்ட்ராக்ட் மூலம் வழங்கப்படும் காய்கறி, மளிகைபொருட்கள் தரமற்று வழங்கப்படுவதை தடுக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுச்சேரி தலித் விடுதலை பேரவையின் மாநில தலைவர் ரோக.அருள்தாஸ், பேரவை தலைவர் முருகையன், பொதுச் செயலாளர் பொன்னிவேல், நகர தலைவர் ஆதிகேசவன், மாநில செயலாளர் கண்ணன், தலைமை நிலைய செயலாளர் இளவ யதன், ஒருங்கிணைப்பாளர் மகேந்திரவேலன், கொள்கை பரப்பு செயலர் பரமசிவம் ஆகியோர் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2ஆண்டு நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்த எந்த திட்டமும் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. குறிப்பாக மகளிர்களுக்கு இலவச பஸ் பயணம் என்ற திட்டம். ஆதி திராவிட மக்களுக்கு கறவை மாடு வாங்க 100 சதவீத மானிய திட்டம், ஆதி திராவிட மக்களுக்கு கல்வீடு கட்டும் திட்டத்தில் 5 லட்சத்திலிருந்து கூடுதலாக 50 ஆயிரம் உயர்த்தும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தாத நிலையில் மீண்டும் சட்டசபை கூடி மக்களுக்கு என்ன பயன்? அரசு பணம் தான் விரயமாகிறது.
எந்த திட்டமும் செயல்படுத்தாத நிலையில் பல துறைகளில் ரூ.28 கோடி ஊழல் நடந்து இருப்பதாக
தனிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கு அரசு எந்த பதிலும் கூறாமல் இருப்பது, ஊழலுக்கு துணை போவதாக அர்த்தமாகிறது.
ஆதி திராவிடர் மாணவர்கள் நிதியில் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்துபவர்கள் மீது சாதி வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீண்டும் விடுதி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் இன்பச் சுற்றுலா, பண்டிகை கால துணிக்கு பதில் பணம் வழங்க வேண்டும். காண்ட்ராக்ட் மூலம் வழங்கப்படும் காய்கறி, மளிகைபொருட்கள் தரமற்று வழங்கப்படுவதை தடுக்க வேண்டும்.
லாஸ்பேட்டை பகுதியில் பல கல்லூரிகள் இருக்கிறது. அங்கு உள்ள மாணவர் விடுதி மூடப்படட்டு விட்டது.
இதனால் சுமார் 6கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள விடுதியில் தங்கி செல்கின்றனர். இதனால் மாணவர்கள் அவதிபடுகின்றனர்.
இதேபோல் வில்லியனூர் மாணவியர் விடுதியும் 3ஆண்டுகாளமாக மூடி கிடக்கிறது. அரசு உடனடியாக ஆதிதிராவிடர் மாணவர்கள் மீது கவனம் செலுத்தி மூடப்பட்ட விடுதிகளை திறக்கவும், கூடுதலாக மாணவர் - மாணவியர் விடுதிகள் நவீன வசதிகளுடன் திறக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.






