search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கென்னடி எம்.எல்.ஏ. மனு
    X

    முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கென்னடி எம்.எல்.ஏ. மனு அளித்த காட்சி.  

    முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கென்னடி எம்.எல்.ஏ. மனு

    • படகு ஓட்டுநர் மற்றும் பயனாளிகளுக்கு விபத்து காப்பீட்டு திட்டம் செய்யப்பட்டது.
    • கென்னடி எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை ஏற்று வருகிற 10-ந் தேதி இதற்கான சிறப்பு கூட்டம் நடத் தப்படும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி வம்பாகீரப் பாளையம் பாண்டி மெரினா அருகில் உள்ள உப்பனாற்றில் படகு சவாரி செய்வதற்கு வம்பாகீர ப்பாளையம் மீனவர்கள் சுற்றுலாத்துறை மூலம் விண்ணப்பி த்திருந்தனர்.

    விண்ணப்பத்தில் கேட்டது போல், படகு ஓட்டுநர் மற்றும் பயனாளிகளுக்கு விபத்து காப்பீட்டு திட்டம் செய்யப்பட்டது.

    மேலும் படகு சர்வே ரிப்போர்ட், டிரைவர் லைசென்ஸ், லைப் ஜாக்கெட், லைப் போயா, தீ அணைப்பான் மற்றும் முதலுதவி சிகிச்சை பெட்டி என அனைத்தை சமர்ப்பிக்கப்பட்டது.

    ஆனால் இதுவரை படகு சவாரி செய்வதற்கான சான்றிதழ் வழங்கப்பட வில்லை. இதையடுத்து வம்பாகீரப்பாளையம் படகு உரிமையாளர் சங்கத்தினர் தொகுதி எம்.எல்.ஏ அனிபால் கென்னடியிடம் முறையிட்டனர்.

    இதையடுத்து அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. அவர்களை அழைத்து கொண்டு சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.

    தொடர்ந்து கென்னடி எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை ஏற்று வருகிற 10-ந் தேதி இதற்கான சிறப்பு கூட்டம் நடத் தப்படும்.

    அதில் துறை சார்ந்த அமைச்சர், இயக்குனர் மற்றும் அதிகாரிகள் வைத்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார்.

    Next Story
    ×