search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    10 ஆண்டு பதியப்பட்ட சொத்துகள் குறித்துவெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்
    X

    கோப்பு படம்.

    10 ஆண்டு பதியப்பட்ட சொத்துகள் குறித்துவெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

    • எதிர்கட்சித்தலைவர் சிவா ஆவேசம்
    • ரூ. 25 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பெற்றுக்கொண்டு பதிவு செய்கின்றனர்.

    புதுச்சேரி:

    இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    காமாட்சி அம்மன் கோவில் நில அபகரிப்பு பிரச்சனை இவ்வளவு பெரிதாக ஆன பிறகும் முதல்-அமைச்சரும், கவர்னரும் வாய் திறக்காமல் உள்ளனர்.

    இதைப்பற்றி கவலைப்படாமல் மீண்டும் நாம் தேர்தலில் வெற்றி பெறுவோம் என மமதையில் சுற்றி வருபவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். இந்தியா கூட்டணி பொதுமக்களின் பிரச்சினையை கையில் எடுத்துள்ளது.

    கோவில் சொத்து விவகாரம் நீதிமன்றம் வரை சென்று தீர்வு கிடைத்துள்ளது. கடந்த 10 ஆண்டாக இதே வழக்கில் தொடர்புடைய சார்பதிவாளர்தான் பதவியில் இருந்துள்ளார்.

    இவர் காலத்தில் பதியப்பட்ட பத்திரங்களையெல்லாம் மறு ஆய்வு செய்ய வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக விலை நிலங்களை மனைப்பிரிவுகளாக பத்திரம் பதிவு செய்யப்பட்டது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்.

    புதுவை நகர குழுமம், பதிவாளர் அலுவலகங்கள் புரோக்கர்கள் பிடியில் சிக்கி உள்ளது. விலை நிலங்கள் அனுமதியின்றி வீட்டுமனைகளாக பதியப்பட்டுள்ளன.

    வில்லியனூர் கொம்யூனில் ரூ. 25 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பெற்றுக்கொண்டு பதிவு செய்கின்றனர். இதனால் அரசுக்கு வரவேண்டிய ரூ.பல கோடி கபளீகரம் செய்யப்பட்டுள்ளது.

    இது பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான போரட்டம் அல்ல, புதுவை அரசு துறைகளில் சில அதிகாரிகள் முதல் கீழ்நிலை ஊழியர்கள் வரை இந்த செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த மோசடிகளில் ஈடுபட்டவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக மோசடியாக பதியப்பட்ட சொத்துக்களின் பட்டியலை ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    இவ்வாறு சிவா பேசினார்.

    Next Story
    ×