search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மங்கலம் தொகுதி உறுவையாறில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆய்வு
    X

    மங்கலம் தொகுதி உறுவையாறில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆய்வு மேற்கொண்ட காட்சி.

    மங்கலம் தொகுதி உறுவையாறில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆய்வு

    • பழுதான கட்டிடங்களை இடித்து கட்டுவது குறித்து அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
    • கால்நடைத்துறை இயக்குனர் லதாமங்கேஷ்கர் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

    புதுச்சேரி:

    மங்கலம் தொகுதி உறுவையாறு கிராமத்தில் கால்நடை மருத்துவமனை, அரசு பொது மருத்துவமனை, வி.ஏ.ஓ. அலுவலகம், அங்கன்வாடி கட்டிடம் ஆகிய அரசு அலுவலகங்கள் உள்ளது. இதன் கட்டிடங்கள் பழுதடைந்துள்ளது.

    இவற்றை சீரமைப்பது குறித்து அமைச்சர் தேனீஜெயக்குமார் இன்று அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். கால்நடை மருத்துவமனை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் வேறு இடத்துக்கு மாற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் மற்ற பழுதான கட்டிடங்களை இடித்து கட்டுவது குறித்து அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோ சனையில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் முரளி, கால்நடைத்துறை இயக்குனர் லதாமங்கேஷ்கர் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×