search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பிரபல நகைக்கடையை வாடிக்கையாளர்கள் முற்றுகை
    X

    நகைக்கடையை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்திய காட்சி.

    பிரபல நகைக்கடையை வாடிக்கையாளர்கள் முற்றுகை

    • நகை சீட்டு கட்டியவர்களுக்கு நகை-பணம் தராததால் ஆத்திரம்
    • தகவல் அறிந்த பெரிய கடை சப்-இன்ஸ்பெ க்டர் வீர புத்திரன் தலைமையி லான போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காமராஜர் சாலை ராஜா தியேட்டர் அருகே பிரபல பிரணாவ் நகைக்கடை செயல்பட்டு வருகிறது.

    திருச்சி, மதுரை, சென்னை, கும்பகோணம் உள்ளிட்ட பல இடங்களில் இந்த கடை இயங்கி வருகிறது. புதுச்சேரியில் இந்த நகைக்கடை திறக்கப்பட்டு ஒரு ஆண்டுதான் ஆகிறது. இக்கடையில் நகை சீட்டு போட்டால் 12 மாதத்திற்கு 9 சதவீத போனஸ், 9 முதல் 12 மாதங்களுக்கு செய்கூலி சேதாரம் இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அறிவிக்க ப்பட்டது.

    இதை நம்பி வாடிக்கையா ளர்கள் பலரும் நகை சீட்டில் சேர்ந்தனர். இந்த நிலையில் நகை சீட்டில் சேர்ந்த சிலர் அதற்குரிய காலம் முடிவடைந்ததால் நகையை வாங்க கடைக்கு வந்துள்ளனர். இன்னும் சிலர் 12 மாதத்திற்கு முன்பாகவே சீட்டை முடித்துவிட்டு நகையை வாங்க வந்தனர். ஆனால் அவர்களுக்கு நகையை வழங்காமல் கடந்த சில நாட்களாகவே கடை ஊழியர்கள் அலைக்கழித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை 50-க்கும் மேற்பட்ட வாடிக்கை யாளர்கள் நகை கடைக்கு வந்தனர்.

    ஆனால் கடையில் தங்க நகைகள் எதுவும் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஒரு சில வெள்ளி நகைகள், வெள்ளி பொருட்கள் மட்டுமே இருந்தன. இதனால் சீட்டு பணம் செலுத்திய வாடிக்கை யாளர்கள் நகையை உடனே தரக் கூறினர்.

    நகை இல்லாவிட்டால் அதற்குரிய பணத்தை தரவேண்டும் என கேட்டனர். அதற்கு கடை ஊழியர்கள் சரிவர பதில ளிக்கவில்லை என தெரிகிறது. இதனால் வாடிக்கை யாளர்கள் கடை மேலாளருடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டத்துடன் கடை எதிரே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த பெரிய கடை சப்-இன்ஸ்பெ க்டர் வீர புத்திரன் தலைமையி லான போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

    மரியலை கைவிட்டு போலீஸ் நிலையைத்தில் எழுத்துப்பூர்வமான புகார் அளிக்குமாறு கூறினர்.அதன் படி வாடிக்கையாளர்கள் சிலர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பின்னர் வாடிக்கை யாளர்கள் சிலர் நகை கடையில் இருந்த வெள்ளி பொருட்களை நகை சீட்டு செலுத்திய பணத்திற்கு வாங்கி சென்றனர்.

    Next Story
    ×