search icon
என் மலர்tooltip icon

  புதுச்சேரி

  புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்க அரசு அனுமதி வழங்க தயார்
  X

  கருத்தரங்கில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசிய காட்சி.  

  புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்க அரசு அனுமதி வழங்க தயார்

  • முதல்- அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
  • புதுவை ஆன்மீக பூமி. இங்குள்ளவர்களுக்கு நல்ல வளர்ச்சி கிடைக்கும்.

  புதுச்சேரி:

  விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு உட்பட்ட ஆறுபடை வீடு மருத்துவக்கல்லூரி, புதுவை அரசு மருத்துவமனை இணைந்து தொழில் முனைவோர் கருத்தரங்கு, கண்காட்சியை நடத்துகிறது.

  புதுவை கிழக்கு கடற்கரை சாலை காமராஜர் மணி மண்டபத்தில் இன்று தொடங்கி 2 நாட்கள் இந்த கருத்தரங்கு நடக்கிறது. இதன் தொடக்கவிழா இன்று காலை நடந்தது.

  விநாயகா மிஷன் பல்கலைக்கழக வேந்தர் கணேசன் தலைமை வகித்தார். முதல்-அமைச்சர் ரங்கசாமி கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசிய தாவது:-

  புதுவையில் முதன்முதலாக தனியார் மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி கேட்டு தொடங்கி யது விநாயகா மிஷன் நிறுவனம்தான். மாணவர்க ளுக்கு தரமான கல்வியையும், அனைத்து விதமான படிப்புகளும் கிடைக்க வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம்.

  நிகர்நிலை பல்கலைக் கழகங்கள் அரசுக்கு

  எம்.பி.பி.எஸ். இடங்களை தருவதில்லை. ஆனாலும் நான் அந்த கல்லூரி நிர்வா கங்களோடு பேசி ஆண்டுக்கு 100 முதல் 120 இடங்களை பெற்று வந்தேன். கடந்த 2 ஆண்டாக அரசுக்கான இடங்கள் பெற முடிய வில்லை.

  ஆரம்பகாலத்தில் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மட்டும்தான் புதுவையில் இருந்தது. அதிலும் புதுவை மாணவர்களுக்கு 12

  எம்.பி.பி.எஸ். இடங்கள்தான் கிடைக்கும். மிகவும் சிரமப்பட்டு இந்த எண்ணிக்கையை உயர்த்தி னோம்.

  நர்சிங், லேப்டெக்னீ ஷியன் ஆகிய படிப்புகள்கூட புதுவையில் இல்லாத நிலை இருந்தது. டாக்டர், நர்சுகள் வெளிமாநிலத்திலி ருந்துதான் புதுவைக்கு வருவார்கள். இதனால்தான் அதிக எண்ணிக்கையில் மருத்துவ கல்லூரிகளை தொடங்கி மருத்துவர்களை உருவாக்கினோம்.

  அதே நேரத்தில் ஜிப்மருக்கு இணையாக அரசு மருத்துவக்கல்லூரி கொண்டுவர திட்ட மிட்டோம்.

  இவ்வளவு செலவு செய்து, அரசு மருத்து வக்கல்லூரி கொண்டு வர முடியுமா? என பலரும் விமர்சித்தனர்.

  ஆனால் தற்போது கதிர்காமத்தில் அரசு மருத்துவக்கல்லூரி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அன்று அரசி யல்ரீதியாக விமர்சனம் செய்தவர்கள், கொரோனா காலத்தில் மருத்துவக்கல்லூரி, மருத்து வமனை செயல்பாடை பார்த்து வியந்தனர்.

  அந்த மருத்துவ மனை யால்தான் புதுவையில் கொரோனா இறப்பு விகிதம் குறைந்தது. 25 ஏக்கர் நிலம் இருந்தால் மருத்து வக்கல்லூரி தொடங்க அனுமதி தர அரசு இப்போதும் தயாராகத்தான் உள்ளது.

  ஏனெனில் வேலை வாய்ப்பையும் வழங்க வேண்டும். ஒவ்வொரு தனியார் மருத்துவ கல்லூரி யிலும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை பார்க்கின்றனர்.

  புதுவையில் அனைத்து மருத்துவ வசதிகளும் கிடைக்க வேண்டும். தலையில் காயமடைந்தால் மருத்துவ வசதி கிடைக்காத நிலை புதுவையில் இருந்தது. தற்போது ஜிப்மரில் இந்த வசதி கிடைக்கிறது. இதுபோல அனைத்து சிறப்பு மருத்துவ வசதிகளும் புதுவையில் கிடைக்க வேண்டும். அனைத்து அறுவை சிகிச்சைகளும் புதுவையில் நடக்க வேண்டும்.

  வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் புதுவைக்கு சிகிச்சைக்காக வர வேண்டும். மருத்துவ சுற்றுலா புதுவையில் வளர்ந்து வருகிறது.

  சுற்றுலா மூலம்தான் அரசு வருவாயை ஈட்ட வேண்டியுள்ளது. இதனால் ஆன்மீகம், கல்வி, மருத்துவ சுற்றுலாவை வளர்த்து வருகிறோம். புதுவை ஆன்மீக பூமி. இங்குள்ளவர்களுக்கு நல்ல வளர்ச்சி கிடைக்கும்.

  புதிய வேந்தர் பொறுப்பேற்ற பிறகு கல்லூரியை நன்றாக கவனித்து வருகிறார். தற்போது புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிய இலவச பரிசோதனை தொடங்கியுள்ளனர். இதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

  இவ்வாறு அவர் பேசினார்.

  அமைச்சர் லட்சுமிநாராயணன், ஜான்குமார் எம்எல்ஏ, விநாயக மிஷன் நிர்வாகிகள் அனுராதா, சுரேஷ்சாமு வேல், சுதீர், கோடூர், ராகேஷ்சேகல், நாகப்பன், மணிவண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  இம்பெக்ஸோ 2013 என்ற கருத்தரங்கு, கண்காட்சியில் தொழில்முனைவோர் பலர் பங்கேற்றனர். இதில் மருத்துவ சேவை செய்ப வர்கள் புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள், தொடக்க நிலை நிறுவனங்க ளுக்கு தகுந்த ஆலோச னைகள் வழங்கப்பட உள்ளது.

  Next Story
  ×