என் மலர்
புதுச்சேரி
- வையாபுரி மணிகண்டன் புகார்
- உண்மையில் மாநில மாணவர்களும், பெற்றோர் களும் கல்விக்கட்டணத்தை செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்டாக் மூலம் மருத்துவம், பொறியியல் உள்பட உயர்படிப்புகளில் சேர்ந்த மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணத்தை செலுத்தும்படி நிர்பந்தம் செய்து வருகின்றனர்.
ஆனால், தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகத்திடம் கட்டணம் கேட்டு நெருக்கடி தரக்கூடாது என அறிவுறுத்தி யுள்ளோம் என முதல்-அமைச்சர் பேசி வருகிறார்.
உண்மையில் மாநில மாணவர்களும், பெற்றோர்களும் கல்விக்கட்டணத்தை செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
சென்டாக் நிர்வாகம் மூலம் புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழகம், காரைக்கால் அரசு பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு காமராஜர் கல்வி நிதி உதவி திட்டத்தின் கீழ் கட்டணத்தை அரசே செலுத்துகிறது.
ஆனால் புதிதாக தொடங்கப்பட்ட லாஸ்பேட்டை அரசு பெண்கள் பொறியியல் கல்லூரியை காமராஜர் நிதி உதவி திட்டத்தின் கீழ் அரசு இணைக்கவில்லை. இதனால் மாநிலத்தை சேர்ந்த ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவிகள் சீட் கிடைத்தும் கல்லூரி கட்டணத்தை செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அரசு செயல்படுவது சரியான அணுகுமுறை அல்ல. அரசு பெண்கள் பொறியியல் கல்லூரி மாணவிகளுக்கும் காமராஜர் கல்வி நிதி உதவி திட்டத்தின் கீழ் கட்டணம் செலுத்தப்படும் என முதல்- அமைச்சர் அறிவிக்க வேண்டும். மாணவிகளிடம் கல்லூரி நிர்வாகம் கட்டணம் கேட்டு நிர்பந்தம் செய்யக்கூடாது என அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு வையாபுரி மணிகண்டன் அறிக்கையில் கூறியுள்ளார்.
- விஷ சாராயம் விற்றுக் கொண்டிருந்தது போலீசாருக்கு தெரியவந்தது
- சரவணன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
புதுச்சேரி:
கண்டமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விஷ சாராயம் விற்கப்படுவதாக கண்டமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மதகடிப்பட்டு அருகே தமிழக பகுதியான பள்ளி புதுப்பட்டு கிராமத்தில் சரவணன் ( 45) என்பவர் அவரது வீட்டின் எதிரே விஷ சாராயம் விற்றுக் கொண்டிருந்தது போலீசாருக்கு தெரியவந்தது.இதை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
அப்போது போலீசாரை பார்த்ததும் சரவணன் தப்பி ஓட முயன்றார். ஆனால் போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். அவரிடமிருந்து 10 லிட்டர் எரி சாராயத்தை போலீசார் கைப்பற்றி அதே இடத்தில் கொட்டி அழித்தனர்.
இது குறித்து சரவணன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
- உழவர்கரை நகராட்சி ஆணையர் ெதாடங்கி வைத்தார்
- தலைமை விருந்தினராக உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ் ராஜ் கலந்துகொண்டு விழாவினை குத்துவிளக்கு ஏற்றி ரிப்பன் வெட்டி கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் கலை மற்றும் அறிவியல் கண்காட்சி விழா நடந்தத.
விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். தலைமை விருந்தினராக உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ் ராஜ் கலந்துகொண்டு விழாவினை குத்துவிளக்கு ஏற்றி ரிப்பன் வெட்டி கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினராக நோய்கள் கண்டறியும் மையத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் அருண் ராமலிங்கம் மற்றும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை உமா பார்வதி , உழவர் கரை நகராட்சி செயற்பொ றியாளர் மலைவாசன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்கள் செய்த அறிவியல் படைப்புகளை கண்டு களித்து பாராட்டினர்.
டாக்டர் ரத்தினவேல் காமராஜன், டாக்டர் ரங்கநாயகி வளவன் முன்னிலை வகித்தனர். புதுச்சேரி மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநிலச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தி பேசினார். பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் குளங்கள் காப்போம் குழுவின் தலைவர் கார்த்திகேயன் , பள்ளியின் ஆலோசகர் ரத்னப்பிரியா அருண் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் அறிவியல் விரிவுரையாளர்கள் நெடுஞ்செழியன் ,அடைக்கலம் , காயத்ரி பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின் மற்றும் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் செய்திருந்தனர்.
- முன்னாள் சபாநாயகரும் கம்பன் கழகச் செயலருமான சிவக்கொழுந்து, தமிழ்ச்சங்கத் தலைவர் முத்து முன்னிலை வகித்தனர்.
- உசேன், அசோகா சுப்பிரமணியன், நெய்தல் நாடன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மன்னர்மன்னன் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
புதுச்சேரி, நவ.5-
பாரதிதாசனின் மகனும் முதுபெரும் தமிழறிஞருமான மறைந்த மன்னர் மன்னன் 96-வது பிறந்த நாளையொட்டி புரட்சிக் கவிஞர் போற்றிய மன்னர்மன்னன் என்ற தலைப்பில் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாரதிதாசன் அறக்கட்டளை தலைவர் ேகா.பாரதி தலைமை தாங்கினார்.
முன்னாள் சபாநாயகரும் கம்பன் கழகச் செயலருமான சிவக்கொழுந்து, தமிழ்ச்சங்கத் தலைவர் முத்து முன்னிலை வகித்தனர். அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மன்னர்மன்னன் உருவப் படத்திற்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மலர்தூவி மரியாதை செய்தார். வரைத் தொடர்ந்து அமைச்சர்கள் லட்சுமிநாராயணன்,அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் ,எதிர்க்கட்சித் தலைவர் சிவா , எம்.எல்.ஏ.க்கள் வி.பி. ராமலிங்கம், அனிபால்கென்னடி, நேரு, கே.எஸ்.பி. ரமேஷ், முன்னாள் சபாநாயகர் சபாபதி, முன்னாள்
எம்.எல்.ஏ.க்கள் இளங்கோ , சோமசுந்தரம், கலை பண்பாட்டுத் துறை இயக்குனர் கலியபெருமாள், கலால் துறை உதவி ஆணையர் சண்முகசுந்தரம், உசேன், அசோகா சுப்பிரமணியன், நெய்தல் நாடன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மன்னர்மன்னன் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து நடைபெற்ற "கலைகள் வளர்த்திடுவோம் என்ற மன்னர் மன்னன் கவிதை வரியைத் தலைப்பாகக் கொண்ட ஓவியப்போட்டியில் 120 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பங்கேற்ற அனைத்து மாணவருக்கும் பாராட்டிதழ் வழங்கப்பட்டது.
- பொறியியல் துறையை சார்ந்த ‘வெப் 3.0’ சிறப்பு நிபுணர்கள் முகமது அசர்ருதீன், ஷேக் ஆசாத் சிறப்புரையாற்றினர்.
- தகவல் தொழி நுட்பத் துறை ஒருங்கி ணைப்பாளர் சுரேஷ் ஆகி யோர் செய்திருந்தனர்.
புதுச்சேரி:
மதகடிப்பட்டு மணக் குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர் களுக்கன 'வெப் 3.0 மாணவர் பதிப்பு' தொடக்க விழா நடந்தது.
விழாவிற்கு மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தன சேகரன் தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குனர் வெங்கடாசலபதி வரவேற்றார்.
துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் முன்னிலை வகித்தனர்.
பொறியியல் துறையை சார்ந்த 'வெப் 3.0' சிறப்பு நிபுணர்கள் முகமது அசர்ருதீன், ஷேக் ஆசாத் சிறப்புரையாற்றினர்.
கனக்ட் வெப் 3.0' மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நன்கொடை வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் ராஜா, வேலை வாய்ப்புத் துறை அதிகாரி கைலாசம், தகவல் தொழி நுட்பத் துறை ஒருங்கி ணைப்பாளர் சுரேஷ் ஆகி யோர் செய்திருந்தனர்.
- பா.ஜனதா மாநில பட்டியல் அணி தலைவர் தமிழ்மாறன் ஆகியோர் உடனடியாக ஜிப்மர் மருத்துவமனக்கு விரைந்து வந்தனர்.
- அனைவரையும் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் அப்போலோ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
புதுச்சேரி:
காலாப்பட்டு தனியார் மருந்து மாத்திரை மூலப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட பாய்லர் வெடிவிபத்தில் 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
இவர்களில் 11 பேர் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் செல்வகணபதி எம்.பி. , காலாப்பட்டு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம், பா.ஜனதா மாநில பட்டியல் அணி தலைவர் தமிழ்மாறன் ஆகியோர் உடனடியாக ஜிப்மர் மருத்துவமனக்கு விரைந்து வந்தனர்.
அங்கு 15 படுக்கைகளை தயார் செய்து படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவியாக இருந்தனர்.
மேலும் நள்ளிரவு வரை அங்கு இருந்த செல்வகணபதி எம்.பி. பல்வேறு பகுதியில் இருந்து 11 ஆம்புலன்ஸ்களை போன் செய்து வரவழைத்தார். அடுத்த சில நிமிடங்களில் ஆம்புலன்ஸ்கள் அங்கு வந்தன.
இதையடுத்து அனைவரையும் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் அப்போலோ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
- இதய அடைப்பை சரிசெய்ய ரத்த குழாயில் ஸ்டன்ட் பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது.
- மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் புதுவை சின்ன மணிக்கூண்டு அருகே உள்ள வீட்டுக்கு திரும்பினார்.
புதுச்சேரி:
அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளரும், புதுவை முன்னாள் எம்.எல்.ஏ.வுமான புஸ்சி ஆனந்த் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இதய அடைப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு இதய அடைப்பை சரிசெய்ய ரத்த குழாயில் ஸ்டன்ட் பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் புதுவை சின்ன மணிக்கூண்டு அருகே உள்ள வீட்டுக்கு திரும்பினார்.
புஸ்சி ஆனந்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்து திருநீறு பூசி ஆசி வழங்கினார். இதேபோல் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
- சுமார் 100 மீட்டர் உயரத்திற்கு தீ பிழம்பு எழுந்ததால் காலாப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
- ஆத்திரமடைந்த பொதுமக்கள் தொழிற்சாலையின் வரவேற்பு அறை கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.
சேதராப்பட்டு:
புதுவை காலாப்பட்டு பகுதி சிறைச்சாலை செல்லும் சாலையில் தனியார் மருந்து கம்பெனி உள்ளது.
இங்கு மருந்து மாத்திரைகள் தயாரிக்கும் மூலப்பொருள் பவுடராக தயாரிக்கப்படுகிறது.
இந்த நிறுவனத்தில் வட மாநில மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த சுமார் 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
நேற்று இரவு சுமார் 9.30மணி அளவில் இரவு ஷிப்டுக்கு வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள் பதிவேட்டில் கையெழுத்து போட்டுக் கொண்டிருந்தனர். அதுபோல் ஏற்கனவே முதல் ஷிப்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் வெளியே வர தயாராகிக்கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் திடீரென பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் தொழிற்சாலையில் இருந்த ஊழியர்கள் சிதறி ஓடினர்.
சுனாமி குடியிருப்பு மற்றும் அருகில் உள்ள தமிழகப் பகுதியான மாத்தூர், கொழுவாரி கிராமம் வரை லேசான நில அதிர்வு ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் தொழிற்சாலையில் மற்றொரு பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
சுமார் 100 மீட்டர் உயரத்திற்கு தீ பிழம்பு எழுந்ததால் காலாப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பயங்கர விபத்து ஏற்பட்டு பலர் தொழிற்சாலைக்குள் சிக்கி தவிப்பதாக தகவல் வந்ததும் 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் தொழிற்சாலைக்குள் நுழைந்து மீட்பு பணியில் ஈடுபட்டது.
அப்போது தொழிற்சாலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
பாய்லர் வெடித்ததில் 5 வட மாநில தொழிலாளர்கள் உட்பட 14 பேர் தீக்காயம் அடைந்தனர். அவர்களை ஆம்புலன்சில் மீட்டு காலாப்பட்டு பிம்ஸ் தனியார் மருத்துவமனை, லாஸ்பேட்டை ஈ.சி.ஆர். சாலையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தை அறிந்த காலாப்பட்டு பொதுமக்கள் அங்கு குவிந்து தொழிற் சாலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தொழிற்சாலையின் வரவேற்பு அறை கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். அங்கிருந்த பொருட்களையும் அடித்து உடைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு மேலும் பரபரப்பு மற்றும் பதட்டம் ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு காலாப்பட்டு மற்றும் புதுவையின் பல்வேறு பகுதியிலிருந்து 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். தொழிற்சாலையை சூறையாடிய பொதுமக்களை போலீசார் விரட்டினர்.
இதற்கிடையே தீக்காயமடைந்து புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 4 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் நிலவி வருவதால் அங்கு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- முதல்-அமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார்
- சிறப்பங்காடி வரும் 11-ந் தேதி வரை காலை 10 முதல் இரவு 9 மணி வரை செயல்படும்.
புதுச்சேரி:
அமுதசுரபி, கான்பெட் மூலம் தீபாவளி சிறப்பு அங்காடி விற்பனை மையம், தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனைக்கூட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் தொடக்கவிழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
விழாவில் அரசு கொறடா ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், கூட்டுறவுத்துறை செயலர் நெடுஞ்செழியன், கூட்டுறவு சங்க பதிவாளர் யஷ்வந்தையா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த சிறப்பங்காடி வரும் 11-ந் தேதி வரை காலை 10 முதல் இரவு 9 மணி வரை செயல்படும்.
- எஸ்.எஸ்.எல்.சி. தனி தேர்வருக்கு கல்விதுறை அறிவுறுத்தல்
- அனைத்து தனித் தேர்வர்களும் வருகிற 6-ந் தேதி முதல் 10-ந் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வருகிற கல்வியாண்டுக் கான 10-ம் வகுப்பு பொது தேர்வுக்கு விண்ணப்பிக்க நேரடி தனி தேர்வர்கள், அறிவியல் பாடத்தில் தோல்வியடை ந்தவர்கள், அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர பெயர்களை பதிவு செய்யலாம்.
அனைத்து தனித் தேர்வர்களும் வருகிற 6-ந் தேதி முதல் 10-ந் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். ஆண்கள் வில்லியனூர் ஐடியல் மேல்நிலைப்பள்ளி யிலும், பெண்கள் புதுவை இமாகுலேட் பள்ளியிலும் பதிவு செய்யலாம். இதற்கான படிவத்தை இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சேவை மையங்களில் ஒப்படை த்து அங்கு தரப்படும் ஒப்புகை சீட்டின் எண் மூலம் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
இதன்பின் மையங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். அந்த மையங்களில் நடத்தப்ப டும் பயிற்சி வகுப்பில் 80 சதவீத வருகை பதிவு உள்ளவர்கள் மட்டுமே பொது தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.
செய்முறை பயிற்சி பெற்றவர்கள் செய்முறை தேர்வு எழுத வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- பென்ஷன்தாரர்களுக்கும் உயர் பென்ஷன் வழங்க வேண்டும் என சுப்ரீம்கோர்ட் அளித்த தீர்ப்பை அமல்படுத்த வேண்டும்.
- கருப்பு பேட்ஜ் அணிந்து, கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை இ.பி.எப். பென்ஷனர்கள் நலச் சங்கம் சார்பில் முதலியார்பேட்டை தபால்நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராமலிங்கம், வேலாயுதம், செல்வராஜ், அவணியப்பன், நடராஜன், பரசுராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இ.பி.எப். பென்ஷன்தாரர்களுக்கும் உயர் பென்ஷன் வழங்க வேண்டும் என சுப்ரீம்கோர்ட் அளித்த தீர்ப்பை அமல்படுத்த வேண்டும்.
பென்சனர்களின் கோரி க்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து, கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
- அன்பழகன் குற்றச்சாட்டு
- நம்மால் ஆட்சிக்கு வந்தவர்கள் தேர்தல் முடிந்தவுடன் நம்மை பற்றி சிந்திப்பதையே நிறுத்திவிட்டனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் மண்ணாடிப்பட்டு தொகுதி செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் திருக்கனூர் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
முன்னாள் கவுன்சிலர் மகாதேவி தலைமை வகித்தார். மாநில ஜெ. பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன், மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் நாசர், பொதுக்குழு உறுப்பினர் மகாதேவன், பாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-
பா.ஜனதா கூட்டணி அரசில் அ.தி.மு.க.வுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. ஆட்சி அமைந்தவுடன் தேசிய ஜனநயாக கூட்டணி இருந்ததற்கான அடிச்சுவடு இல்லாமல் செய்துவிட்டனர்.
கூட்டணி கட்சிக்கு உழைத்த நாம் ஓய்ந்துவிட்டோம். நம்மால் ஆட்சிக்கு வந்தவர்கள் தேர்தல் முடிந்தவுடன் நம்மை பற்றி சிந்திப்பதையே நிறுத்திவிட்டனர்.
புதுவை அரசின் அமைச்சரவையில் 2-ம் இடத்தில் உள்ள அமைச்சர் இந்த தொகுதியின் வளர்ச்சிக்கு எதுவும் செய்யவில்லை. கரும்பு சர்க்கரை ஆலை உட்பட மூடப்பட்ட எந்த ஒரு தொழிற்சாலையும் இதுவரை திறக்கவில்லை. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்க வில்லை. ஆட்சி சுகமே என்னவென்று தெரியாமல் 40 ஆண்டுக்கும் மேலாக காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா என கூட்டணி கட்சிகளுக்காக அதிமுகவினர் உழைத்து, அவர்களை ஆட்சி கட்டிலில் அமர வைத்தோம்.
இதற்கு மேலும் நாம் ஏமாற வேண்டிய அவசியம் இல்லை. அ.தி.மு.க. தனியாக போட்டியிட வலியுறுத்துவோம். புதுவையில் அ.தி.மு.க. ஆட்சி மலர நாம் பாடுபடுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநில அவை தலைவர் அன்பானந்தம், மாநில இணைச் செயலாளர்கள் முன்னாள் கவுன்சிலர் கணேசன், திருநாவுக்கரசு, மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில துணைச் செயலாளர்கள் எம்.ஏ.கே. கருணாநிதி குணசேகரன், நாகமணி, காந்தி, நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பாப்புசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர். மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன் நன்றி கூறினார்.






