என் மலர்
புதுச்சேரி
- ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் உடையார் தோட்டத்தில் சமுதாய நல கூடம் புனரமைக்கும் பணி நடைபெறுகிறது.
- தி.மு.க. நிர்வாகிகள் சக்திவேல், நோயல், சதிஷ், குணா, ராகேஷ், ரகுமான் ஆகியோர் உடன் இருந்தனர்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட திப்பு ராயப்பேட்டையில் வீடு இல்லாத 80-க்கு மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு ஸ்மார்ட் சிட்டி மூலம் அடுக்கு மாடி குடியிருப்பு திட்டம் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. முயற்சியால் கொண்டு வரப்பட்டது. அப்பணி அரசு மூலம் நடந்து வருகிறது.
அதுபோல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் உடையார் தோட்டத்தில் சமுதாய நல கூடம் புனரமைக்கும் பணி நடைபெறுகிறது.
இப்பணிகளை கென்னடி எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அங்கிருந்த ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகளிடம் பணியை விரைந்து முடிக்குமாறு கேட்டு கொண்டார்.
அப்போது அவருடன் தி.மு.க. நிர்வாகிகள் சக்திவேல், நோயல், சதிஷ், குணா, ராகேஷ், ரகுமான் ஆகியோர் உடன் இருந்தனர்.
- மறைந்த ப.கண்ணன் உடல் நேற்று இரவு புதுவை வைசியாள் வீதியில் உள்ள அவரின் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது.
- ப.கண்ணன் உடலுக்கு இன்று மாலை 4 மணிக்கு இறுதி சடங்கு நடக்கிறது.
புதுச்சேரி:
புதுவை அரசியலில் அசைக்க முடியாத தலைவராக திகழ்ந்தவர் ப.கண்ணன். சபாநாயகர், அமைச்சர், ராஜ்யசபா எம்.பி. என அரசின் பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.
2021 சட்டமன்ற தேர்தலின்போது பா.ஜனதாவிலிருந்த அவர் அதன் பிறகு அரசியலில் இருந்து முற்றிலுமாக விலகியிருந்தார். மணிப்பூர் கலவரத்தின்போது பா.ஜனதாவிலிருந்து விலகுவதாகவும் அறிவித்தார்.
கடந்த 1-ந்தேதி உடல்நலக்குறைவு காரணமாக ப.கண்ணன் மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டு சுவாச கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 9.51 மணியளவில் அவர் மரணமடைந்தார். மறைந்த ப.கண்ணனுக்கு வயது 74.
மறைந்த ப.கண்ணன் உடல் நேற்று இரவு புதுவை வைசியாள் வீதியில் உள்ள அவரின் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. ப.கண்ணன் இறந்த தகவல் கிடைத்தவுடன் புதுவை மாநிலம் முழுவதும் உள்ள அவரின் ஆதரவாளர்கள் ப.கண்ணன் வீட்டில் குவிந்தனர்.
இன்று காலை முதல் ப.கண்ணன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது.
அவரது உடலுக்கு முதலமைச்சர் ரங்கசாமி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சாய்.ஜெ.சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எதிர்கட்சித்தலைவர் சிவா, மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள், புதுவை மாநிலத்தின் 4 பிராந்தியங்களிலும் இருந்து வந்த தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.
ப.கண்ணன் உடலுக்கு இன்று மாலை 4 மணிக்கு இறுதி சடங்கு நடக்கிறது. பின்னர் ப.கண்ணன் உடல் அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கருவடிக்குப்பத்தில் உள்ள இடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.
- மக்கள் பாதுகாப்பு பேரியக்கம் வலியுறுத்தல்
- எந்தெந்த காலக்கட்டங்களில் ஆய்வு செய்தனர் என்பது குறித்த விவரத்தையும் வெளியிட வேண்டும்.
புதுச்சேரி:
புதுச்சேரி மக்கள் பாதுகாப்பு பேரியக்க தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை காலாப்பட்டில் இயங்கி வரும் தனியார் மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில் 14 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே இந்த விபத்திற்கான காரணம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தி வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும். மக்கள் உயிருடன் விளையாடி கொண்டிருக்கும் அந்த தொழிற்சாலையை மூட வேண்டும்.
மேலும் அந்த தொழிற்சாலையை சுற்றுச்சூழல் துறையில் என்தெந்த அதிகாரிகள், எந்தெந்த காலக்கட்டங்களில் ஆய்வு செய்தனர் என்பது குறித்த விவரத்தையும் வெளியிட வேண்டும். அதன்படி அவர்கள் கடமையை செய்ய மறுத்திருந்தால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் கடமை செய்ய தவறிய அதிகாரிகளின் சம்பளத்திலும் , தொழிற்சாலை நிதியில் இருந்தும் பாதிக்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் தலா ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- காட்டுநாயக்கன் சமூக மக்கள் சங்கம் வலியுறுத்தல்
- வேலை வாய்ப்பிலும் ஒரு சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் பயன் பெற்று வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை காட்டுநாயக்கன் சமூக சீர்திருத்த சங்க ஆலோசனை கூட்டம் முத்தி ரையர் பாளையம் கல்கி கோவில் அருகில் உள்ள மதுரை வீரன் ஆலயத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் சங்க தலைவர் சுரேஷ், துணைத் தலைவர் முத்தையன், கவுரவ தலைவர் சுப்பு ராயலு, செயலாளர் செல்வம் மற்றும் நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.
கடந்த 2010-ம் ஆண்டு புதுவை ஆணை பிறப்பித்த தின் அடிப்படையில் பழங்குடி மக்கள் கல்வியி லும், வேலை வாய்ப்பிலும் ஒரு சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் பயன் பெற்று வருகிறார்கள்.
ஆனால் தற்போது புதுவை அரசு காவல் துறையில் ஊர் காவல் படைக்கு 500 நபர்களை பணியில் அமர்த்து ஆணை வெளியிட்டுள்ளது. இதில் பிற்படுத்தப்பட்ட பழங்குடி யினருக்கு இடஒதுக்கீடு அளிக்கப் படவில்லை.
எனவே தற்போது நடைபெற உள்ள ஊர்காவல் படை பணி தேர்வில் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு அளித்து ஆணையை திருத்தம் செய்து வெளியிட வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப் பட்டது.
- காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
- இடையன்சாவடி ரோடு, லாஸ்பேட்டை கல்வி நிறுவனங்கள், உயர்மின் அழுத்த பகுதிகள் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும்.
புதுச்சேரி:
புதுச்சேரி கணுவாப்பே ட் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை தண்டுகரை, பாலாஜி நகர், காமராஜர் நகர், அன்னை தெ ரசா நகர், மணிமே கலை நகர், வி.மணவெளி, ஒதியம்பட்டு, கே.வி.நகர், பெரியபேட், தில்லை நகர், வீரவாஞ்சி நகர், வில்லியனூர், பத்மினி நகர், வசந்தம் நகர், ஆத்தவாய்க்கால்பே ட், திருக்காமீஸ்வரர் நகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
இதே போல் லாஸ்பேட்டை மின்பாதை பராமரிப்பு பணிகள் நாளை நடப்பதால் காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை மே ட்டுப்பாளையம் வாகன முனையம், ஹரி நமோநகர், பிரியதர்ஷினி நகர், ராஜா அண்ணாமலை நகர், சிவாஜி நகர், காமராஜ் நகர், குரு நகர், ராஜீவ் நகர், ஆதிகேசவர் நகர், கோரிமேடு, காவலர் குடியிருப்பு, இந்திரா நகர், இஸ்ரவேல் நகர், பல் மருத்துவ கல்லூரி, மதர் தெரசா நர்சிங் கல்லூரி, தொலைக்காட்சி நிலையம், புதுபேட், ராஜாஜி நகர், லாஸ்பேட், நெருப்புகுழி, நாவற்குளம், அன்னிபெ சன்ட நகர், கணபதி நகர், சின்ன
கண்ணு நகர், அன்னை நகர், மோதிலால் நகர், அகத்தியர், வாசன் நகர், பொதிகை நகர், அசோக் நகர், லாஸ்பேட்டை அரசு ஊழியர் குடியிருப்பு, நேரு நகர், அவ்வை நகர், சாந்தி நகர், லட்சுமி நகர், வரதராஜபிள்ளை நகர், வள்ளலார் நகர், கலைவாணி நகர், ஆனந்தா நகர், நெ சவாளர் நகர், சப்தகிரி நகர், இடையன்சாவடி ரோடு, லாஸ்பேட்டை கல்வி நிறுவனங்கள், உயர்மின் அழுத்த பகுதிகள் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும்.
- புதுச்சேரி வைசியாள் வீதியில் ப.கண்ணன் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
- காங்கிரஸ் கட்சியில் விலகி அடுத்தடுத்து அ.தி.மு.க., பா.ஜனதாவில் இணைந்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சர் ப.கண்ணன். அவருக்கு வயது 74. இவர் ரத்த அழுத்த குறைவு, நுரையீரல் தொற்று மற்றும் சுவாச கோளாறு காரணமாக புதுச்சேரி மூலக்குளத்தில் உள்ள ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.இந்தநிலையில் நேற்று இரவு ப.கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் நிமோனியா காய்சல் மற்றும் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் நேற்று இரவு 9.51 மணிக்கு அவர் காலமானார். ஏற்கனவே அவர் 5 ஆண்டுகளாக நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி வைசியாள் வீதியில் ப.கண்ணன் குடும்பத்துடன் வசித்து வந்தார். பெற்றோர் பழனிசாமி- காமாட்சியம்மாள். ப.கண்ணனுக்கு சாந்தி என்ற மனைவியும், பிரியதர்ஷினி என்ற மகளும், விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர்.
பள்ளி படிப்பை அவர் புதுச்சேரி பெத்தி செமினார் பள்ளியிலும், பட்ட படிப்பை தாகூர் கலைக்கல்லூரியிலும் முடித்தார். பெருந்தலைவர் காமராஜரின் கொள்கை மற்றும் அவரது அரசியல் நேர்மை ஆகியவற்றின் மீது கொண்ட தீராத பற்றால் 1970-ம் ஆண்டு மாணவர் காங்கிரசில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடர்ந்தார். மேடை பேச்சு மூலம் மக்களை கவர்வதில் வல்லவர். மாணவர் காங்கிரசின் பணியாற்றிய அனுபவமும், கட்சி தலைவர்களின் ஒத்துழைப்பும் ஒரு கட்டத்தில் கண்ணனை இளைஞர் காங்கிரஸ் தலைவராக்கியது.
1985-ல் காசுக்கடை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கண்ணன், அப்போது பரூக் மரைக்காயர் தலைமையில் அமைந்த காங்கிரஸ் ஆட்சியில் சுகாதாரம் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரானார். பின்னர் 1991-ல் நடந்த சட்டசபை தேர்தலில் லாஸ்பேட்டை தொகுதியில் வெற்றி பெற்று, வைத்திலிங்கம் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் சபாநாயகராக பதவி வகித்தார்.
1996-ல் ஜி.கே. மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கியபோது, கண்ணன் புதுச்சேரியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கி போட்டியிட்டு வெற்றி பெற்று, 6 சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஜானகிராமன் தலைமையிலான கூட்டணி அரசில் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
பின்னர் புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். 2001-ல் நடந்த சட்டசபைக்கான தேர்தலில் தான் போட்டியிடாமல் புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் சார்பாக 4 சட்டமன்ற உறுப்பினர்களை வெற்றி பெற வைத்தார். அதையடுத்து காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை புதுச்சேரிக்கு அழைத்து, ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் காங்கிரசில் தன்னை மீண்டும் இணைத்து கொண்டார்.
2006-ல் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் என்ற பெயரில் மீண்டும் தனிக்கட்சி தொடங்கி 3 சட்டமன்ற உறுப்பினர்களை வெற்றி பெற வைத்தார். பின்னர் 29.8.2009 அன்று புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் முழு விருப்பத்திற்கேற்ப காங்கிரஸ் கட்சியில் கண்ணன் 3-வது முறையாக இணைந்தார். அவர் 2009 செப்டம்பர் 26-ந்தேதி போட்டியின்றி மேல்சபை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன்பின் காங்கிரஸ் கட்சியில் விலகி அடுத்தடுத்து அ.தி.மு.க., பா.ஜனதாவில் இணைந்தார். தொடர்ந்து கட்சி மாறியதால் அரசியலில் அவர் வீழ்ச்சியை சந்திக்க நேர்ந்தது. கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அவர் தீவிர அரசியலில் இருந்து விலகினார்.
கண்ணனின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைசியாள் வீதியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) இறுதி சடங்கிற்கு பின், கருவடிக்குப்பம் மயானத்தில் மாலை 4 மணியளவில் உடல் தகனம் செய்யப்படுகிறது.
- நாராயணசாமி தாக்கு
- விவசாயிகள் அனைத்து சலுகைகளையும் மோடி அரசு பறித்துள்ளது அத்தியாசிய பொருட்களின் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:
திருபுவனை வட்டார காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் மதகடிப்பட்டில் நடந்தது.
கூட்டத்துக்கு வட்டார காங்கிரஸ் தலைவர்கள் ஜெயக்குமார், துளசிங்க பெருமாள் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில பொதுசெயலாளர் தனுசு முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. பேசியதாவது:-
மத்தியில் மோடி ஆட்சி மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி வந்தால் மோதல் இருக்காது. நல்லது நடக்கும் என மக்கள் வாக்களித்தனர் ஆனால் தற்போது அண்ணன், தங்கை சண்டை நடந்து வருகிறது. இது பற்றி யாராவது கேட்டால் அண்ணனுடன் எந்த சண்டையும் இல்லை என கவர்னர் தமிழிசை கூறுகிறார்
அதே நேரத்தில் ரங்கசாமி கோப்பு காலதாமதமாகிறது, கவர்னர் மாளிகைக்கு அனுப்பப்படும் கோப்பு திரும்புவதில்லை, அதிகாரிகள் வேலை செய்வதில்லை என்று கூறுகிறார்.மோடி வந்தால் எல்லாம் கிடைத்து விடும் என்று சொன்னார்கள்
ஆனால் இதுவரை எதுவும் கிடைக்கவில்லை அமைச்சர்கள், எம்.எல்.ஏ. க்கள் ஊரை சுற்றி வருகிறார்கள். தவறு செய்த அதிகாரியை மாற்றி விட்டார்கள் ஆனால் அவர்கள் குற்றவாளி என அரசாங்கம் அறிவித்ததா.?
தமிழகத்தின் மகளிர் இலவச பேருந்து, குடும்பத் தலைவருக்கு ஆயிரம் வழங்கும் திட்டம் புதுவையில் அறிவிக்கப்பட்டது. ஆனால் செயல்படுத்தப்படவில்லை. கியாஸ் மானிய திட்டமும் அது போல் தான் இருக்கிறது. இதற்கு ரங்கசாமியும் மோடியும் தான் காரணம்
பா.ஜனதா வுக்கு ரங்கசாமி துணை ரங்கசாமிக்கு அன்பழகன் துணை என்று இருக்கிறார்கள். என்ஆர். காங்கிரஸ்-அதிமுக கூட்டணி இதுவரை உடையவில்லை. நீங்கள் இவர்களில் யாருக்கு வாக்களித்தாலும் அது மோடிக்கு தான் கிடைக்கும்
இவ்வாறு வைத்திலிங்கம் எம்.பி. பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமி பேசியதாவது:-
மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இரட்டிப்பு மானியம் தருவதாக விவசாயிகளிடம் வாக்கு கேட்டார். ஆனால் தற்போது உரத்திற்கான மானியத்தை நிறுத்தி விட்டார்கள். விவசாயிகள் அனைத்து சலுகைகளையும் மோடி அரசு பறித்துள்ளது அத்தியாசிய பொருட்களின் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் அதானி போன்றவர்களுக்கு கடன் என்ற பெயரில் மக்கள் வரிப்பணம் வாரி கொடுக்கப்படுகிறது.
அமலாக்கத்துறை சி.பி.ஐ. உள்ளிட்ட அமைப்புகளை வைத்து எதிர்க்கட்சிகளை பலவீனமாக பிரதமர் மோடி நினைக்கிறார். ஆனால் மோடியை வீட்டுக்கு அனுப்புவதற்கு மக்கள் கங்கணம் கட்டிக்கொண்டு காத்திருக்கிறார்கள்.
முதல்-அமைச்சர் ரங்கசாமி எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்து விட்டார். புதுவை அமைச்சர்கள் வெளிநாடுகளில் லஞ்சப் பணத்தை பதுக்குகிறார்கள். மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் இந்த அரசுக்கு அக்கறை இல்லை. நாம் உருவாக்கியவர்கள் நம்மை முதுகில் குத்தி விட்டு செல்கிறார்கள்.
அதில் முதலாமவர் ரங்கசாமி, 2-வது நமச்சிவாயம் 3-வது அங்காளன். ரங்கசாமி கோரிமேட்டை தாண்ட மாட்டார். ரங்கசாமியின் ஆட்சி குறை பிரசவம் சீக்கிரம் முடிந்துவிடும்.
இவ்வாறு நாராயணசாமி பேசினார்.
கூட்டத்தில் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன், பி.சி.சி. உறுப்பினர் நடராஜன்,நிர்வாகிகள் கோதண்டபாணி, வேணு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி பல்கலைக்கழக குடியிருப்பை சேர்ந்தவர் ஜீவன் தம்பி வயது (67). இவர் புதுவை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவரிடம் டெல்லியில் உள்ள தனியார் நிறுவனம் ஜீவன் தம்பிக்கு வெளிநாடு செல்வதற்கான ஒரு சுற்றுலா திட்டத்தை கூறியுள்ளது.
இதுதொடர்பாக அவரிடம் அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களான கபில் சிங், ஹீனா சவுத்ரி, ராகுல் ஹரோரா ஆகியோர் பேசி வெளிநாடிற்கு சுற்றுலா அழைத்து செல்வதற்கு ஒப்பந்தம் போட்டு ரூ.2. லட்சத்து 35 ஆயிரத்தை பெற்றனர். அதன்பிறகு, அவர்கள் குறித்த காலத்தில் சுற்றுலா அழைத்து செல்லாமல் காலம் கடத்தி வந்தனர். இதனால் பணத்தை திருப்பி அளிக்கு மாறு ஜீவன் தம்பி வற்புறுத்தினார். ஆனால் ஒப்பந்தம் போட்டுள்ளதால் பணத்தை திருப்பி அளிக்க முடியாது என மறுத்துவிட்டனர்.
இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த ஜீவன் தம்பி கோரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் கபில் சிங், ஹீனா சவுத்ரி, ராகுல் ஹரோரா ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அ.தி.மு.க. வலியுறுத்தல்
- அடிக்கடி இது போன்று விபத்துகள் ஏற்படும் போதும் சிலர் மரணம் அடைந்து வருவதும் வாடிக்கையாக உள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
காலாப்பட்டு தொழிற்சாலையில் நேற்றைய தினம் ஏற்பட்ட பயங்கர விபத்தினால் 3 பிளான்டுகள் முழுமையாக எரிந்தது. அதில் 12-க்கும் மேற்பட்டவர்கள் தீ விபத்தால் பாதிக்கப்பட்டனர்.நேற்று இரவு சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டவுடன் 5 பேர் மரணமடைந்ததாக தகவல் பரவியது. அடிக்கடி இது போன்று விபத்துகள் ஏற்படும் போதும் சிலர் மரணம் அடைந்து வருவதும் வாடிக்கையாக உள்ளது.
அந்த கம்பெனியில் விபத்து ஏற்பட்டால் அப்பகுதியில் வசிக்கும் பலர் பாதிக்கப்படுகின்றனர். அங்கு நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவு நீர் முறையாக சுத்திகரிக்காமல் கடலில் கலக்கப்படு வதால் மீன்கள் செத்து மிதக்கின்றன.
நடைபெற்ற விபத்து குறித்தும், விபத்துக்கு பிறகு நடைபெற்ற சம்பவம் குறித்து ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.
ரசாயனம் சம்பந்தப்பட்ட நிறுவனம் செயல்படலாமா என தேசிய அளவிலான வல்லுனர்கள் அடங்கிய குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். அதுவரை தற்காலிகமாக அந்த நிறுவ னத்தை மாவட்ட கலெக்டர் மூட உத்தர விட வேண்டும்.
முதல்-அமைச்சர் ரங்கசாமி கெமிக்கல் சம்பந்த ப்பட்ட ஒரு வல்லுனர் குழுவை அமைத்து ஆய்வு செய்து உண்மை நிலையை தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அன்பழகன் கூறினார்.
- எதிர்க்கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தல்
- பெரிய விபத்து நடந்தும் அரசும், அதிகாரிகளும் அலட்சியமாக இருப்பது வேதனை அளிக்கிறது. இது கண்டனத்திற்குரியது.
புதுச்சேரி:
காலாப்பட்டு தொழிற்சாலையில் நேற்றிரவு பாய்லர் வெடித்த விபத்தில் காயமடைந்து தொழிலாளர்கள் 14 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் தொழிற்சாலை வாயில் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டம் நடந்த இடத்திற்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில்
எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் ஆகியோர் இன்று காலை நேரில் சென்று அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்கள்.
பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சிவா நிருப ர்களிடம் கூறியதாவது:-
காலாப்பட்டில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. 40 பாய்லர்கள் செயல்படும் அந்த தொழிற்சாலையில் 2 பாய்லர்கள் வெடித்ததற்கே இவ்வளவு சேதாரம் ஏற்பட்டு இருக்கிறதை பார்த்தால் மனம் பதறுகிறது.
ஆனால் இவ்வளவு பெரிய விபத்து நடந்தும் அரசும், அதிகாரிகளும் அலட்சியமாக இருப்பது வேதனை அளிக்கிறது. இது கண்டனத்திற்குரியது.
இதுகுறித்து கலெக்டர் என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதை தெரிவிக்க வேண்டும். இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கெமிக்கல் கழிவுகள் எல்லாம் கடலில் கலந்து நீர் ஆதாரம் பாதிப்பதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. தொடர்ந்து விபத்துக்கள் நடப்பதாலும், ரசாயன கழிவு வெளியேறுவதாக தகவல் வருவதாலும் மக்கள் அங்கு அச்சத்துடன் வசிக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. அரசு கண்காணிப்பில் இருந்தும் இதுபோன்ற தவறுகள் நடப்பதை இனியும் அனுமதிக்க கூடாது.
தொழிற்சாலையை சுற்றி 10 மீனவ கிராம மக்கள் வசிக்கின்றனர். பல்கலைக் கழகம், நவோதயா பள்ளி, சிறைச்சாலை, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்குகின்றன. இதை யெல்லாம் அரசு கவனத்தில் கொண்டு, தொழி ற்சாலையை முழு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த அரசு உத்தரவிட வேண்டும். இந்த கோர விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலா ளர்களுக்கு அவர்கள் வேலை செய்த மற்றும் செய்ய வேண்டிய நாட்களை கணக்கிட்டு நிவாரணம் வழங்க வேண்டும்.
மேலும் அத்தொழிற்சா லையை திறப்பதாக இருந்தால் அப்பகுதி மக்களின் எண்ணங்களை அறிந்து அதற்கு தகுந்தா ர்போல் அரசு முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு சிவா கூறினார்.
- வையாபுரி மணிகண்டன் புகார்
- உண்மையில் மாநில மாணவர்களும், பெற்றோர் களும் கல்விக்கட்டணத்தை செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்டாக் மூலம் மருத்துவம், பொறியியல் உள்பட உயர்படிப்புகளில் சேர்ந்த மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணத்தை செலுத்தும்படி நிர்பந்தம் செய்து வருகின்றனர்.
ஆனால், தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகத்திடம் கட்டணம் கேட்டு நெருக்கடி தரக்கூடாது என அறிவுறுத்தி யுள்ளோம் என முதல்-அமைச்சர் பேசி வருகிறார்.
உண்மையில் மாநில மாணவர்களும், பெற்றோர்களும் கல்விக்கட்டணத்தை செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
சென்டாக் நிர்வாகம் மூலம் புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழகம், காரைக்கால் அரசு பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு காமராஜர் கல்வி நிதி உதவி திட்டத்தின் கீழ் கட்டணத்தை அரசே செலுத்துகிறது.
ஆனால் புதிதாக தொடங்கப்பட்ட லாஸ்பேட்டை அரசு பெண்கள் பொறியியல் கல்லூரியை காமராஜர் நிதி உதவி திட்டத்தின் கீழ் அரசு இணைக்கவில்லை. இதனால் மாநிலத்தை சேர்ந்த ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவிகள் சீட் கிடைத்தும் கல்லூரி கட்டணத்தை செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அரசு செயல்படுவது சரியான அணுகுமுறை அல்ல. அரசு பெண்கள் பொறியியல் கல்லூரி மாணவிகளுக்கும் காமராஜர் கல்வி நிதி உதவி திட்டத்தின் கீழ் கட்டணம் செலுத்தப்படும் என முதல்- அமைச்சர் அறிவிக்க வேண்டும். மாணவிகளிடம் கல்லூரி நிர்வாகம் கட்டணம் கேட்டு நிர்பந்தம் செய்யக்கூடாது என அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு வையாபுரி மணிகண்டன் அறிக்கையில் கூறியுள்ளார்.
- விஷ சாராயம் விற்றுக் கொண்டிருந்தது போலீசாருக்கு தெரியவந்தது
- சரவணன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
புதுச்சேரி:
கண்டமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விஷ சாராயம் விற்கப்படுவதாக கண்டமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மதகடிப்பட்டு அருகே தமிழக பகுதியான பள்ளி புதுப்பட்டு கிராமத்தில் சரவணன் ( 45) என்பவர் அவரது வீட்டின் எதிரே விஷ சாராயம் விற்றுக் கொண்டிருந்தது போலீசாருக்கு தெரியவந்தது.இதை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
அப்போது போலீசாரை பார்த்ததும் சரவணன் தப்பி ஓட முயன்றார். ஆனால் போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். அவரிடமிருந்து 10 லிட்டர் எரி சாராயத்தை போலீசார் கைப்பற்றி அதே இடத்தில் கொட்டி அழித்தனர்.
இது குறித்து சரவணன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.






