என் மலர்
புதுச்சேரி

கலை-அறிவியல் கண்காட்சியை உழவர்கரை நகராட்சிஆணையர் சுரேஷ் ெதாடங்கி வைத்த காட்சி. அருகில் கராத்தே சுந்தர்ராஜன் உள்ளார்.
முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் கலை-அறிவியல் கண்காட்சி
- உழவர்கரை நகராட்சி ஆணையர் ெதாடங்கி வைத்தார்
- தலைமை விருந்தினராக உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ் ராஜ் கலந்துகொண்டு விழாவினை குத்துவிளக்கு ஏற்றி ரிப்பன் வெட்டி கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் கலை மற்றும் அறிவியல் கண்காட்சி விழா நடந்தத.
விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். தலைமை விருந்தினராக உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ் ராஜ் கலந்துகொண்டு விழாவினை குத்துவிளக்கு ஏற்றி ரிப்பன் வெட்டி கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினராக நோய்கள் கண்டறியும் மையத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் அருண் ராமலிங்கம் மற்றும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை உமா பார்வதி , உழவர் கரை நகராட்சி செயற்பொ றியாளர் மலைவாசன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்கள் செய்த அறிவியல் படைப்புகளை கண்டு களித்து பாராட்டினர்.
டாக்டர் ரத்தினவேல் காமராஜன், டாக்டர் ரங்கநாயகி வளவன் முன்னிலை வகித்தனர். புதுச்சேரி மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநிலச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தி பேசினார். பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் குளங்கள் காப்போம் குழுவின் தலைவர் கார்த்திகேயன் , பள்ளியின் ஆலோசகர் ரத்னப்பிரியா அருண் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் அறிவியல் விரிவுரையாளர்கள் நெடுஞ்செழியன் ,அடைக்கலம் , காயத்ரி பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின் மற்றும் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் செய்திருந்தனர்.






