என் மலர்
கதம்பம்
காமராஜர் ஆட்சிக்காலத்தில் பொதுப்பணி துறை, உள்துறை அமைச்சராக இருந்து அத்தனை அரசு மரியாதைகளையும் பார்த்தவர் கக்கன்.
அது 1980. மதுரை அரசு பொது மருத்துவமனை. அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மேயர் மதுரை முத்து, சிகிச்சைக்காக அங்கே அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை பார்த்து நலம் விசாரிப்பதற்காகத்தான் மதுரை அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தார் எம்ஜிஆர்.
பார்த்து முடித்து விட்டார். இனி புறப்பட வேண்டியதுதான்.
நேரம் ஆக ஆக எம்ஜிஆரை பார்க்க பொதுமக்கள் கூட்டம் கூடிக் கொண்டே இருந்தது.
எம்ஜிஆர் தன்னை சுற்றிலும் பார்த்தார். சற்று தள்ளி நின்ற காளிமுத்து எம்ஜிஆருக்கு அருகே ஓடோடி வந்தார்.
“போகலாமா ?” என்றார் எம்ஜிஆர்.
அப்போதுதான் எம்ஜிஆரின் காதில் ஏதோ சொன்னார் காளிமுத்து. ஒரு கணம் திகைத்துப் போனார் எம்ஜிஆர். “நிஜமாகவா ?”
“ஆமாம்.”
“இதை ஏன் என்னிடம் முதலிலேயே சொல்லவில்லை ?”
சட்டென்று மருத்துவமனைக்குள் மீண்டும் நுழைந்தார் எம்ஜிஆர்.
“எங்கே இருக்கிறார் அவர் ?”
விறுவிறுவென்று நடந்து வந்த எம்ஜிஆரை அந்த சாதாரண வார்டுக்குள் அழைத்து சென்றார்கள் மருத்துவ அதிகாரிகள். உள்ளே நுழைந்த எம்ஜிஆர் கண் கலங்கி நின்றார்.
அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத அந்த வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர் கக்கன்.
இடுப்பில் ஒரு சாதாரண துண்டோடு எளிமையான தோற்றத்தில் இருந்தார் அவர்.
காமராஜர் ஆட்சிக்காலத்தில் பொதுப்பணி துறை, உள்துறை அமைச்சராக இருந்து அத்தனை அரசு மரியாதைகளையும் பார்த்தவர்.
“அவருக்கே இந்த கதியா?” குமுறலுடன் அங்கிருந்த மருத்துவ அதிகாரிகளை அழைத்தார் எம்ஜிஆர்.
“இங்கே வாங்க. இவர் யார் எனத் தெரியுமா ? இவர் வகித்த பதவிகள் என்னென்ன தெரியுமா ?
இவர் போன்றவர்கள் பெற்றுத் தந்த சுதந்திரத்தால்தான் நாம் இன்று நிம்மதியாகவும் சுகமாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உடனடியாக இவருக்கு தனி அறை வசதியும் உயர்ந்த மருத்துவ சிகிச்சையும் அளியுங்கள்.”
இப்படி சொல்லி விட்டு கக்கனிடம் பணிவாக கேட்டார் எம்ஜிஆர். “ஐயா, உங்களுக்கு நான் என்ன செய்து தரணும் சொல்லுங்க. உடனே செய்து கொடுக்கிறேன். தயவு செய்து சொல்லுங்க ஐயா.”
கக்கன் புன்னகையுடன் எம்ஜிஆர் முகத்தை பார்த்துக் கொண்டே இருந்தார். பின் கை கூப்பி வணங்கினார். “நீங்க நேர்ல வந்து பார்த்ததே போதும். எனக்கு வேறு எந்த விதமான தேவையும் இல்லை.”
கூப்பிய அவர் கைகளை சிலிர்ப்போடு இறுகப்பற்றிக் கொண்டார் எம்ஜிஆர். இப்படி ஒரு தேவைகள் அற்ற மனிதனை, எம்ஜிஆர் தன் வாழ்நாளில் அதுவரை கண்டது இல்லை.
ஆம். தேவைகள் அற்ற மனிதன் தெய்வத்துக்கு சமமானவன்.
கக்கனை தொட்ட அந்த நொடியில் கடவுளை தொட்டது போல உணர்ந்தார் எம்ஜிஆர்.
-ஜான் துரை ஆசிர் செல்லையா
காபி பழத்தையோ, செடியையோ உண்ணும் பழக்கம் முன்பே ஆரம்பித்திருந்தாலும், காபியைப் பானமாக மாற்றிப் பருகும் பழக்கமானது பதின்மூன்றாம் நூற்றாண்டில்தான் உருவானது.
அன்றைக்கு வழக்கத்தைவிட ஆடுகள் உற்சாகமாக இருந்தன. வீட்டுக்குத் திரும்பும் வேளையிலும் துள்ளிக்குதித்தபடியே வந்தன.
அந்தத் துள்ளல் ஆடுகளின் நடனம் போலவே இருந்தது. இரவில் பல ஆடுகள் தூங்கவே இல்லை. ‘ம்ம்ம்மே..!’ என்று உற்சாகமாகக் கத்தியபடியே இருந்தன.
ஆடுகளின் சொந்தக்காரரான கல்டிக்கு ஒன்றுமே புரியவில்லை. அடுத்த நாள் ஆடுகளை மேய விடும்போது அவை குறிப்பிட்ட ஒரு தாவரத்தில் காணப்பட்ட சிவப்பு நிற பெர்ரி பழங்களை விரும்பி உண்பதைக் கண்டார். அந்தப் பழங்களே ஆடுகளின் அதீத உற்சாகத்துக்குக் காரணம் என்று புரிந்துகொண்டார்.
கல்டி, அந்த பெர்ரி பழங்களைத் தனக்குத் தெரிந்த துறவி ஒருவரிடம் கொடுத்தார். கல்டி கொடுத்த பெர்ரி பழங்களை உண்டு பார்த்த துறவி, அவற்றின் உற்சாகமூட்டும் தன்மை கண்டு பயந்தார். ‘சீச்சீ... இந்த பழங்களை உண்பது பாவம்’ என்று அவற்றை நெருப்பில் எறிந்தார்.
சிறிது நேரத்தில் காபியின் நறுமணம் அந்தக் காற்றில் பரவியது. பழங்கள் நெருப்பின் சூட்டில் காபிக்கொட்டைகளாக மாறியிருந்தன. உலகின் முதல் காபிக்கொட்டை உருவான கதை இதுதான் என்றும் சொல்லப்படுவதுண்டு.
காபிப் பழத்தையோ, செடியையோ உண்ணும் பழக்கம் முன்பே ஆரம்பித்திருந்தாலும், காபியைப் பானமாக மாற்றிப் பருகும் பழக்கமானது பதின்மூன்றாம் நூற்றாண்டில்தான் உருவானது.
காபியை ஒரு பயிராக இந்தியாவுக்குக் கொண்டு வந்தவர் சூஃபி ஞானியான பாபா புடன். பதினாறாம் நூற்றாண்டில் மெக்காவுக்கு புனிதப் பயணம் மேற்கொண்ட பாபா, அங்கே காபியின் சுவையில் கிறங்கினார். திரும்பும் போது, காபிக்கொட்டைகளை அள்ளிக் கொண்டு வர ஆசை. ஆனால், அரேபியர்கள் தங்கள் வணிகத்தில் கறாரானவர்கள். வறுத்த காபி கொட்டைகளை மட்டுமே வணிகத்துக்காக வெளியே அனுப்பிக் கொண்டிருந்தார்கள். வேறெங்கும் காபி விளைய ஆரம்பித்துவிட்டால் ஏமனின் வணிகம் படுத்துவிடுமல்லவா.
பாபா, ஏழு காபி பழங்களை தனது நீண்ட, அடர்ந்த தாடிக்குள் மறைத்து வைத்துக் கொண்டார். பத்திரமாக இந்தியா வந்தடைந்தார். அதுவும் 6000 கிலோ மீட்டருக்கும் மேல் பயணம். தன் சொந்தப் பிரதேசமான சிக்மகளூரின் சந்திரகிரி மலைப்பகுதியில் அந்த காபிப் பழங்களை விதைத்தார். அவை முளைத்தன, காய்த்தன. பரவின. இந்தியாவின் முதல்காபித் தோட்டம் கர்நாடகாவில் உருவானது. இன்றைக்கும் அந்த மலைப்பகுதி பாபா புடன்கிரி என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இப்படியாக இந்தியாவுக்குள் காபி பயிர் வேரெடுத்து வைத்தது.
முகில் எழுதிய உணவு சரித்திரம் என்ற நூலிலிருந்து... கோடி.

திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது.
திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விதிகள்:-
1. முதல் விதி
திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. மல மாதம் என்பது இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.
2. இரண்டாவது விதி
சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
3. மூன்றாவது விதி
இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.
4. நான்காவது விதி
புதன், வியாழன், வெள்ளி போன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல.
ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும்.
5. ஐந்தாவது விதி
துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது.
6. ஆறாவது விதி
முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம் முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.
7. ஏழாவது விதி
அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.
8. எட்டாவது விதி
திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது.
9. ஒன்பதாவது விதி
திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.
10. பத்தாம் விதி.
மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.
11. பதினொன்றாம் விதி
கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.
- இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டபின் நீங்களே அனைத்து சுபகாரியங்களுக்கும் நல்ல நாள் பார்த்துவிடுவீர்கள் தானே. அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளைக் குறியுங்கள்.

-சிவபாலா
உடல் முழுவதும் வியர்வை அதிகமாக இருந்தால் தக்காளி சாறை நீரில் கலந்து குளித்து வந்தால் வியர்வை குறையும். இது மிகவும் இலகுவான மருத்துவ முறையாகும்.
உடம்பில் வெப்பம் அதிகரிக்கும்போது வியர்வை சுரப்பிகளும் அதிகம் தூண்டப்பட்டு வியர்வை பெருகும். உடம்பை குளிர்ச்சியாக வைப்பதற்கு இயற்கையாக பார்த்து வைத்திருக்கும் வழி இது. வியர்வையின் போது சிலருக்கு உடலில் நாற்றமடிக்கும். இதனை போக்கும் வழிமுறையை பார்ப்போம்...
தேவையான பொருட்கள்:
ரோஜாப்பூ - 1 கைப்பிடி
ஆவாரம்பூ - 1 கைப்பிடி
சந்தனத்தூள் - 1 ஸ்பூன்
சிறுபயிறு - 1 ஸ்பூன்
இவற்றை விழுதாய் அரைத்து உடம்பில் பூசிக்குளிக்க, உடம்பில் காணும் வியர்வை நாற்றம் நீக்கி, வாசனையோடு வலம் வருவீர்கள்.
வியர்வையைத் தூண்டும் உணவுகளை தவிர்க்கவும். அதாவது ஆல்கஹால், பூண்டு மற்றும் வெங்காயம், அதிக கொழுப்பு உணவுகள், சூடான மற்றும் காரமான உணவுகள் போன்றவற்றை தவிர்த்து விடுங்கள்.
தினமும் இரண்டு முறை குளியுங்கள்.
நிறைய மோர் குடிக்கவும். உடல் குளிர்ச்சியடையும்.
இளநீர் வெறும் வயிற்றில் குடித்தால் நல்லது.
திராட்சைப்பழம், அதன் பழச்சாறும் 200 மி.லி. அளவில் தினமும் உட்கொள்ளவும்.
தனியா கஷாயத்தை குளிர்வித்து 50 மி.லி. அளவில் தினம் இருவேளை குடிக்கவும்.
சந்தனாதி தைலத்தை தடவலாம்.
ரோஜா (அ) ஆரஞ்சு தைலத்தை குளிக்கும் தண்ணீரில் சில சொட்டுக்கள் இட்டு குளித்தால் வியர்வை நாற்றம் போகும்.
உடல் முழுவதும் வியர்வை அதிகமாக இருந்தால் தக்காளி சாறை நீரில் கலந்து குளித்து வந்தால் வியர்வை குறையும். இது மிகவும் இலகுவான மருத்துவ முறையாகும்.
வாசனை சோப்புகளைப் பயன்படுத்தாமல் கிருமிகளை நீக்கும் சோப்புகளை மருத்துவரின் ஆலோசனையுடன் பயன்படுத்துங்கள். மாதம் இருமுறை அல்லது கட்டாயம் ஒரு முறை அக்குளில் இருக்கும் முடிகளை நீக்குங்கள். முடிகளை ட்ரிம் செய்யாமல் முற்றிலும் நீக்குவது நல்லது.
அக்குளை இறுக்கிப் பிடிக்கும் ஆடைகளை அணியாமல் தளர்வான காற்று உள்ளே போகும் வகையில் பருத்தி ஆடைகளை அணியுங்கள்.
அக்குளில் கடலை மாவு, பாசிப்பருப்பு மாவை தேய்த்து குளித்துவரவும். வாரம் இரண்டு முறை இதனை செய்து வந்தால் விரைவில் வாடை மறையும்.
தினமும் குளிக்கும் போது ஒரு எலுமிச்சம்பழத்தின் சாறை தண்ணீரில் கலந்து கால்மணி நேரம் கழித்து குளித்துவாருங்கள். எலுமிச்சை கிருமிகளை அழிக்கும் என்பதோடு சிறந்த மண்மூட்டியாகவும் இருக்கும்.
நாட்டு மருந்துகடைகளில் சந்தனக் கட்டை சிறிய அளவில் கிடைக்கும். அதை வாங்கி தினமும் இரவு நேரங்களில் படுக்கும் போது சந்தனத்தை நீர் விட்டு குழைத்து அக்குளில் தடவி விடுங்கள். தினமும் இப்படி செய்துவந்தால் வியர்வை நாற்றம் மறைந்து சந்தனம் மணம் கமழும். தரமான ஒரிஜினல் சந்தனம் நல்லது அப்படி கிடைக்காதவர்கள் சந்தனப் பொடி வாங்கி ரோஸ் வாட்டரில் குழைத்து அக்குளில் பூசி வரலாம்.
மஞ்சள் சிறந்த கிருமி நாசினி என்பதால் குளித்து முடித்த பிறகு கிழங்கு மஞ்சளை குழைத்து பூசி வாருங்கள். இவை வியர்வை சுரப்பியில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்களை அழித்து வாடையைக் குறைக்கும்.
தினமும் குளிப்பதற்கு முன்பு கெட்டித்தயிருடன் ரோஸ் வாட்டர் கலந்து நன்றாக குழைத்து அக்குளில் பூசி அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். அக்குளில் சோப்பை தவிர்த்து பாசிப்பருப்பு மாவை தேய்த்து குளித்துவரவும். தொடர்ந்து ஒரு மாத காலத்துக்குப் பிறகு வாரம் இருமுறை, ஒரு முறையாக மாற்றிக்கொள்ளலாம். இவை வியர்வை வாடையை நிரந்தரமாக நீக்கும்.
கற்றாழை வாடை என்று கூட வியர்வையை சொல்வார்கள். ஆனால் கற்றாழையை அக்குளில் தேய்த்து மசாஜ் செய்து குளித்து வந்தால் வாடை நீங்கும். அக்குளில் மட்டும் தனித்துவமாக இருக்கும் கருமையும் நீங்கும். வெளியில் செல்லும் போது அக்குளில் கற்றாழையை மசாஜ் செய்தும் செல்லலாம். நீண்ட நேரம் வியர்வை வாடையை வெளியேற்றாது.
நன்றாக பழுத்த நாட்டுத்தக்காளியை மிக்ஸியில் அடித்து அக்குளில் தடவி அரை மணிநேரம் கழித்து குளித்தால் நாள் முழுக்க வியர்வை வாடை இல்லாமல் மகிழ்ச்சியாக உலாவரலாம். ஓய்வுநேரம் கிடைக்கும் போதெல்லாம் இதைச் செய்து வாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.
சந்தனப் பொடி, வெட்டிவேர் பொடி, பாசிப்பருப்பு மாவு, ரோஸ் வாட்டர் அனைத்தையும் குழைத்து அக்குளில் தடவி நன்றாக காய்ந்த பிறகு குளியுங்கள். பிறகு ஈரம் போக துடைத்து அதிக கெமிக்கல் இல்லாத டியோரன்டை தடவுங்கள். கடுமையான கோடை காலங்களிலும் வியர்வை வந்தாலும் வியர்வை நாற்றத்தை உண்டாக்காது.
புதினா இலையுடன் தயிர் சேர்த்து அரைத்து அக்குளில் பூசி காயவிட்டு குளிர்ந்த நீரில் கழுவினாலும் வியர்வை நாற்றம் நறு மணமாக இருக்கும். இதை அக்குளுக்கு மட்டுமல்லாமல் கழுத்துப் பகுதியைச் சுற்றியும் பூசி வரலாம். புதினாவை நீரில் ஊறவைத்தும் குளிக்கலாம்.
வேப்பிலையுடன் மஞ்சளை சேர்த்து அரைத்து அக்குளில் தடவி சோப்பு பயன்படுத்தாமல் குளித்து வரவும். இது நறுமணம் கொடுக்காது என்றாலும் கிருமிகளை ஒழித்து நாற்றத்தையும் கொடுக்காது. தேவையெனில் இதில் ரோஸ் வாட்டரை கலக்கலாம்.

- வைத்தியர்முகம்மது யாஸீன்
பசுவின் பால் உட்கொள்ளும் போது உங்கள் உடலை சூடாக்காது. எருமைப்பால் அடர்த்தியானது, உட்கொள்ளும் போது உடல் சூடாகிறது.
பசுவும் எருமையும் மாடுகள் என்றாலும் அவை இரண்டுக்கும் இடையில் மலையளவு வித்தியாசம் உள்ளது.
எருமை சேற்றை விரும்புகிறது. பசு தன் சாணத்தில் கூட படுப்பதில்லை. பசு தூய்மையை விரும்புகிறது.
பத்து எருமை மாடுகளை கட்டி வைத்து விட்டு அதன் கன்றுகளை விட்டு சென்றால் ஒரு கன்று கூட தன் தாயை அடையாளம் கண்டு கொள்ளாது. ஆனால் பசுவின் கன்று பல மாடுகளுக்கு மத்தியிலும் தாயை அடையாளம் காணும்.
பாலை கறக்கும் போது எருமை தன் பால் முழுவதையும் கொடுக்கிறது. தன் கன்றுக்காக அதனால் தேக்கி வைக்க முடியாது. ஆனால் பசு தன் கன்றுக்காக சிறிது பாலை தக்க வைக்கிறது. கன்றுகுட்டி குடிக்கும் போது தான் சேமித்து வைத்த பாலை சுரக்கிறது.
பசுவின் முதுகில் இருக்கும் “சூரியன் கேது நரம்பு” வெயில் இருக்கும் போது விழித்துக் கொள்ளும். இந்த நரம்பு பிரபஞ்சத்திலிருந்து “காஸ்மிக் சக்தியை” உறிஞ்சுகிறது. அதனால் நோய்களை நீக்கும் சக்தி பசும்பாலுக்கு உண்டு. எந்த உயிரினத்திற்கும் அத்தகைய சக்தி இல்லை.
உண்மையில், பசுவின் பால் உட்கொள்ளும் போது உங்கள் உடலை சூடாக்காது. எருமைப்பால் அடர்த்தியானது, உட்கொள்ளும் போது உடல் சூடாகிறது, மேலும் நமது உடலிலும் சர்க்கரை அதிகரிக்கிறது சர்க்கரை நோயாளிகளுக்கு இது நல்லதல்ல.
எருமைப்பாலில் அதிக கொழுப்பு உள்ளது, இது கொலஸ்ட்ராலுக்கும் காரணமாகும். எருமைப் பாலை அடுப்பில் வைத்து சிறிது சூடாக்கும் போது அதில் உள்ள மூன்றாவது மற்றும் நான்காவது சத்து ஆவியாகிவிடும். பசும்பாலை எத்தனை முறை காய்ச்சி குடித்தாலும் அதில் உள்ள ஊட்டச்சத்து குணங்கள் அழியாது.
பாடங்களைக் குருட்டு மனப்பாடம் செய்தால் மட்டும் போதாது. அதனால் நிலைத்த பயன் விளையாது. எதையும் மனம் கலந்து, பொருள் உணர்ந்து, கருத்தறிந்து படிக்க வேண்டும். அப்போது தான் படித்தது மனதில் தங்கும்.
வர இருக்கும் தேர்வை எதிர்கொள்ளுவது எப்படி? அதில் அதிக மதிப்பெண்களைப் பெற்று சிறந்த முறையில் வெற்றி வாகை சூடுவது எப்படி? கல்வி பயின்று கொண்டிருக்கும் இன்றைய இளைய தலைமுறையினரின் முன்னே நின்று கொண்டிருக்கும் இரு முக்கியமான வினாக்கள் இவை! எனது நீண்ட ஆசிரிய அனுபவத்தில் இருந்து இன்றைய மாணவ-மாணவியர்க்கு நான் கூற விரும்பும் வழிகாட்டுதல்கள் இவை தான்:
1. ‘வைகறைத் துயில் எழு’ என்பது நமது ஆன்றோர் அமுத மொழி. எனவே விடியற்காலையில் எழுந்து படிக்கும் வழக்கத்தை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும். புலர்காலைப் பொழுதில் படிப்பது மனத்தில் பசுமரத்து ஆணி போல் பதியும்.
2. வாழ்வில் எதையும் திட்டமிடக் கற்றுக்கொள்ள வேண்டும். ‘எட்டு மணி நேரம் தூங்க வேண்டும், எட்டு மணி நேரம் வேலை பார்க்க வேண்டும், சரி, எத்தனை மணி நேரம் வாழ வேண்டும்?’ என்று கேட்பார் ஒரு புதுக்கவிஞர்.
ஒரு நாளின் 24 மணி நேரத்தை மூன்று 8 மணி நேரமாகப் பகுத்துக் கொண்டு, அதில் கல்விக் கூடத்திற்குச் செல்லும் நேரம், தூங்கும் நேரம் தவிர மீதி நேரத்தில் என்ன என்ன பணிகளை, எப்படி செய்து முடிப்பது என்று இளைஞர்கள் திட்டமிடக் கற்றுக்கொள்ள வேண்டும். திட்டமிடுவதோடு நின்று விடாமல், அவற்றை நடைமுறைப்படுத்தவும் வேண்டும்.
3. எதையும் நாளைக்கு என்று ஒத்திப் போடக் கூடாது; தள்ளி வைக்கக் கூடாது. அன்றன்றைய பாடங்களை அன்றன்றே படித்து முடித்து விட வேண்டும். ‘ஒன்றே செய்க, ஒன்றும் நன்றே செய்க, நன்றும் இன்றே செய்க, இன்றும் இன்னே (இப்பொழுதே) செய்க!’ என்னும் முன்னோர் வாக்கு இவ்வகையில் மனங்கொளத்தக்கது.
4. படிக்கும் பாடங்களைச் சிறுசிறு குறிப்புகள் வடிவில் தனித்தாளில் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஓய்வு நேரங்களில், அந்தக் குறிப்புகளைப் பார்த்தாலே போதும், படித்தவை எல்லாம் நினைவுக்கு ஓடி வந்து விடும்.
5. பாடங்களைக் குருட்டு மனப்பாடம் செய்தால் மட்டும் போதாது. அதனால் நிலைத்த பயன் விளையாது. எதையும் மனம் கலந்து, பொருள் உணர்ந்து, கருத்தறிந்து படிக்க வேண்டும். அப்போது தான் படித்தது மனதில் தங்கும்.
6. விடை எழுதும் போது இயன்ற வரை தெளிவான கையெழுத்தில் எழுத வேண்டும். விடையைப் பத்தி பத்தியாக, பொருத்தமான உட்தலைப்புக்கள் இட்டு, சிறுசிறு வாக்கியங்களில் தர வேண்டும். தேவைப்படும் இடங்களில் அடிக்கோடு இடுவது விடைத்தாளைத் திருத்துகின்ற ஆசிரியர்களின் கவனத்தை ஈர்க்கும்.
7. மூன்று, நான்கு பேர் என மாணவ மாணவியர் ஓர் இடத்தில் ஒன்று சேர்ந்து படிப்பது பல வகைகளிலும் நன்மை விளைவிக்கும். ஒருவருக்கு ஒருவர் பாடங்கள் தொடர்பான கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கும், பாடங்களில் எழும் ஐயங்கள் நீங்கித் தெளிவு பெறுவதற்கும் இக்கூட்டுக் கல்வி முறை வழிவகுக்கும்.
8. வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்த, மாணவர்கள் கேட்பது ஒரு முறை. இதற்கு மாறாக, இன்னும் ஒரு படி மேலாக, மாணவர்களே சுழற்சி முறையில் ஆசிரியராக இருந்து, பிற மாணவர்களுக்குக் கற்றுத் தரும் வழக்கத்தினை அவ்வப்போது மேற்கொண்டு வந்தால், மாணவர்களின் அறிவாற்றலும் புரிதல் திறனும் மேம்படும்.
9. மாணவர்கள் முயற்சி செய்வதோடு மட்டும் நின்று விடாமல், நாள்தோறும் இடைவிடாமல் பயிற்சி செய்வோராகவும் விளங்க வேண்டும். முயற்சியும் பயிற்சியும் ஒன்று சேரும் போது தான் முழுப்பயன் கிட்டும். படிக்கும் போது மட்டுமின்றி, கிடைக்கின்ற சிறுசிறு ஓய்வு நேரங்களில் எல்லாம் படித்தவற்றை மனத்தில் அசை போட்டுப் பார்த்தல் நன்று.
10. நிறைவாக, நறுக்குத் தறித்தாற் போல் நான் வலியுறுத்த விரும்பும் நான்கே நான்கு சொற்கள் இவை தாம்: ‘விழி எழு உணர் ஒளிர்!’
‘உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்’ என்ற வள்ளுவர் வாக்கினைக் குறிக்கோளாகக் கொண்டு, அதை நிறைவேற்றும் முயற்சியில் திட்டமிட்டு உழைத்தால், மாணவச் செல்வங்களே, வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும்; அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உங்கள் கடுமையான உழைப்பையே சாரும்.

கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்
• சோறு வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு தேக்கரண்டியளவு நெய், கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.
• அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
• விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
• கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்
• நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.
• வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்
• நூறு மில்லி பசும்பாலில் நூறு மில்லி தண்ணீர் விட்டு, வெண்தாமரை இதழ்களைப் போட்டுக் காய்ச்சி அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.
• குழந்தைகளுக்கு புடலை இலைச்சாற்றை, காலை வேளையில் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும்.
• புடலங்காயை சமைத்து உண்பதால் உடல் பருமன் குறையும்.
• பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
• கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பிணி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.
• சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.
•பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.
•பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.
-பி. சுந்தர்
1000 வருடங்களுக்கு முன் தென்னிந்தியாவை ஆண்ட மிகப்பெரிய சாம்ராஜ்யத்தின் அரசன் ஏன் வடஇந்தியாவை நோக்கி படையெடுக்காமல், சிவனுக்கு மிகப்பெரிய ஆலயம் கட்டினான்? என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.
ராஜராஜ சோழனின் ஆட்சி காலம் (985-1014) தான் தமிழ் வரலாற்றின் பொற்காலம். பொருளாதாரம், கட்டிடக்கலை, சிற்பக்கலை, வணிகம், நாகரிகம், விவசாயம், கலாச்சாரம், உணவு முறை, போர்ப்படை என்று அனைத்திலும் சோழ தேசம் மற்ற தேசத்தை காட்டிலும் பல மடங்கு முன்னேறி இருந்தது.
தென்னிந்தியா முழுவதையும் தன் குடைக்கீழ் கொண்டு வந்த சோழனுக்கு தன் நாட்டின் வளர்ச்சியையும் நாகரிகத்தையும் காலத்தால் அசைக்க முடியாதபடி வரலாற்றில் பதிவு செய்ய வேண்டும் என்று ஒரு ஆசை.
அந்த ஆசையின் முழு வடிவமே இன்று உலகம் வியக்கும் க்ரானைட் கற்களால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில். இந்த பதிவு கோவில் கட்டப்பட்ட தொழில்நுட்பத்தை பற்றியது அல்ல அதை விட மிக கடினமான மற்ற துறைகளைப் பற்றியது.
தஞ்சை பெரிய கோவில் தன் காலத்தில் இருந்த மற்ற கோவில்களை விட 40 மடங்கு பெரிய கோவில். கோவில் கட்டுமானத்தில் மரம் இல்லை. சுடு செங்கல் இல்லை பூராங்கல் இல்லை மொத்தமும் நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த உயர்ந்த கிரானைட் கற்கள் மட்டுமே.
1000 வருடங்களுக்கு முன் தஞ்சை கோவில் கட்டும்போது அது தான் இந்தியாவின் மிகப்பெரிய விமானம் கொண்ட கோவில். விமானம் முழுக்க க்ரானைட் கற்களை சிற்பமாக செதுக்க வேண்டும்.
80 டன் கலசத்தை வேறு ஏற்ற வேண்டும் என்றால் மிகப்பெரிய சாரத்தை கோவில் விமானம் சுற்றி கட்ட கட்டிடக்கலை நிபுணர்கள் எவ்வளவு துல்லியமாக ஆராய்ந்து இருப்பார்கள், இது போக எவ்வளவு கயிறு, மரக்கட்டை வேண்டும் என்றும் தீர்மானிக்க வேண்டும். இவை அனைத்திற்கும் சிறந்த கணித அறிவு நிச்சயம் தேவைப்பட்டு இருக்கும். தஞ்சை பெரிய கோவிலை கட்ட 7 வருடம் ஆனது என்று வரலாறு சொல்கிறது.
கோவிலை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கைதிகளின் உதவியுடன் தான் கட்டியுள்ளனர். கைதிகள் மட்டும் இல்லை மக்களின் உதவியும் கூட. கைதிகளை வைத்து தானே கட்டினார்கள் என்று ஏளனமாக நினைக்க வேண்டாம். சற்று யோசித்து பாருங்கள், எந்த அளவுக்கு சோழ காவல் படை செயல்பட்டு இருந்தால் 7 வருடமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பரம எதிரி நாட்டு கைதிகளை வைத்து தஞ்சை தலைநகரில் வேலை வாங்கி இருப்பார்கள்.
மக்களிடம் இருந்தும் எதிர்ப்பு வராமல் பார்த்து கொள்ளவேண்டும் என்றால் மனித வள மேலாண்மையை மிக நேர்த்தியாக நடைமுறைபடுத்தியிருக்கிறார்கள் என்பதற்கு ஓங்கி உயர்த்து நிற்கும் கோவில் தான் சாட்சி.
சரி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கைதிகள், ஆயிரம் ஆயிரம் யானைகள், குதிரைகள்,1000க்கும் மேற்பட்ட சிற்பிகள், ஓவியர்கள், ஆசாரிகள், கொல்லர்கள், நடன கலைஞர்கள், சமையல் வேலையாட்கள், கற்களை பிளக்கும் வீரர்கள் என ஒரு மாபெரும் படைக்கும் 7 வருடம் உணவு வழங்க வேண்டும் என்றால் தொடர்ச்சியாக 7 வருடம் சோழதேசத்தில் விவசாயம் மற்றும் பொருளாதாரம் தங்குதடை இல்லாமல் இருந்திருக்க வேண்டும். ஒரு முழு படைக்கும் தேவையான மருத்துவ வசதியும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும்.
இது மட்டுமா 7 வருடம் கோவில் கட்ட தேவையான பொருட்செலவை ஈடுகெட்ட தொடர்ச்சியாக போர்களும் நடந்து இருக்கவேண்டும், வெற்றியும் அடைந்து இருக்கவேண்டும். அதே நேரத்தில் எதிரிநாட்டு படையெடுப்பையும் தடுத்து இருக்க வேண்டும்.
தஞ்சையை சுற்றி 50 கிலோமீட்டருக்கு க்ரானைட் கற்கள் கிடையாது. கோவில் கட்ட தேவையான கற்களை திருச்சிக்கு சற்று தெற்கே 50 கி மீ தூரத்தில் உள்ள நார்த்தாமலையில் இருந்து கொண்டு வரவேண்டும் என்றால் சோழதேசத்தின் சாலைகள் மற்றும் போக்குவரத்தும் மிக மிக தரமாகவும் சீராகவும் இருந்திருக்க வேண்டும்.
இது எல்லாவற்றையும் சமாளித்தலும் மிகப்பெரிய பூதம் ஒன்று உள்ளதே, அது தான் அரசியல். எந்த ஒரு சாம்ராஜ்யமாக இருந்தாலும் அரசியல் குழப்பம் இருக்காமல் இருக்காது. 7 வருடம் அரசியல் குழப்பம் எதுவும் நடக்காமல் மிக நேர்த்தியாக ஆட்சி செய்திருக்க வேண்டும்.
சோழ அரசியலில் பெண்களின் பங்கு கவனிக்கத்தக்கது. ஆண்மகன்கள் கோவில் வேலையில் மும்முரமாக இருக்க பெண்கள் அரசு இயந்திரத்தை திறன்பட இயக்கியுள்ளனர் என்று வரலாறு சொல்கிறது.
1000 வருடம் 6 நிலநடுக்கத்தை கண்டும் அசராமல் நிற்கும் தஞ்சை பெரிய கோவில் வெறும் ஆலயம் இல்லை.
மருத்துவம்,பொருளாதாரம், கட்டிடக்கலை, சிற்பக்கலை,வணிகம், நாகரிகம், விவசாயம், கலாச்சாரம், உணவு முறை, போர்ப்படை என்று அனைத்திலும் மிக மிக சிறந்து விளங்கிய நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் எடுத்துக்காட்டு.

-சி.பி. சரவணன்
திருநெல்வேலி மாவட்டம் மன்னார்கோயில் எனும் ஊரில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் ராமானுஜ ஆச்சாரியார் எனும் ஜோதிடர். அப்போது அந்தப்பகுதியில் அவர் ஒரு பெரிய ஜோதிடராக போற்றப்பட்டார்.
அவரின் ஜோதிட அறிவை சோதிப்பதற்காக ஊர்க்காடு ஜமீன்தார் அவரை அழைத்து, “உங்களை ஜோதிட வல்லவர் என்று மக்கள் புகழ்கிறார்கள். அதை நான் சோதிக்க விரும்புகிறேன். நமது ஜமீனில் வளரும் இந்த நாய் எத்தனை குட்டிகள் போடும் என்று சரியாகக் கணித்துக் கூறிவிட்டால் நான் உங்களுக்கு ஆண்டிற்கு 12 கோட்டை நெல் அளிக்கிறேன். அதை நான் செப்புபட்டயத்தில் எழுதித்தருகிறேன். நீங்களும் இந்த நாய் எத்தனைக் குட்டிகள் போடும் என்று செப்புப்பட்டயத்தில் பதிவு செய்து தாருங்கள்! உங்கள் ஜோதிட அறிவு எத்தனை வலிமையானது என்று பார்த்துவிடுவோம்” என்று கூறினார்.
ராமானுஜ ஆச்சாரியார் இந்த சவாலை ஒப்புக்கொண்டார். இரண்டு செப்புப்பட்டயங்களும் எழுதி பரிமாறப்பட்டுவிட்டது. ராமானுஜ ஆச்சாரியார் தனது செப்பேட்டில், “ஜமீன் நாய் 6 குட்டிகள் போடும். அதில் ஒரு குட்டியை நாயே சாப்பிட்டுவிடும். மீதி 5 குட்டிகளில் 2 பெண், 3ஆண். அவைகளில் ஆண் குட்டிகள் கருப்பு வெள்ளை நிறத்திலும், பெண் குட்டிகள் மாநிறத்திலும் இருக்கும்” என்று எழுதிக்கொடுத்தார்.
இது மக்கள் பலர் முன்னிலையில் நடந்தது. சில மாதங்கள் கழித்து ஜமீன் நாயும் கருவுற்று குட்டிகள் ஈன்றது. அதிசயமாக ராமானுஜ ஆச்சாரி ஜோதிடர் கூறியபடியே அனைத்தும் நடந்தது. 6 குட்டிகளில் 5 மட்டும் பிழைத்தது. நிறமும் ஜோதிடர் கூறியபடியே அமைந்தது. மக்கள் அனைவரும் அதிசயமடைந்தனர்.
ஆனால் ஜமீன்தார் எரிச்சலானார். அவரே தோற்று விட்டதுபோல் வேதனை அடைந்தார். எனவே செப்பேட்டில் கூறியபடி வருடத்திற்கு 12 கோட்டை நெல்லைத்தர மறுத்துவிட்டார். விடாத ஜோதிடர் ராமானுஜ ஆச்சாரியார் இந்த வழக்கை அப்போதைய திருநெல்வேலி ஆங்கில கலெக்டரிடம் கொண்டு போனார். சாட்சியாக இரு செப்பேடுகளும் இருந்தது.
கலெக்டர் இருதரப்பையும் கூப்பிட்டு விசாரித்து பின்பு ராமானுஜ ஆச்சாரியாருக்கு ஆண்டிற்கு 12 கோட்டை நெல் ஜமீன்தார் தரவேண்டும் என்று ஆணையிட்டார். வேறு வழி இல்லாது ஜமீன்தாரும் கொடுக்க ஒப்புக்கொண்டார். இந்த ஆணைப்படி ராமானுஜ ஆச்சாரியார் மட்டும் இன்றி அவர் வழி வந்த ஸ்ரீ மணவாள முனிவரின் பாலூராள் கோமடத்தை சேர்ந்த திருவேணிசம்மத்தார் 12 கோட்டை நெல் பெற்று வந்ததாகத் தெரிகிறது.

-கோதனம் உத்திராடம்
அன்பான வார்த்தைகள் உறவின் இடைவெளியைக் குறைக்கின்றன. உறவுகளிடையே நெருக்கத்தை ஏற்படுத்துகின்றன.
நம்முடைய வார்த்தைகள் பிறரை வாழ்த்துவதாக அமைய வேண்டும். பேச்சுக்கள் மற்றவர்களின் துயரைப் போக்க வேண்டும். பதறிய உள்ளங்களை சாந்தப்படுத்த வேண்டும்.
அன்பான வார்த்தைகள் தன்னம்பிக்கை தரும்.
கனிவான வார்த்தைகள் உயிரைக் காக்கும்.
கருணையான வார்த்தைகள்.. காலம் அறிந்து சொன்ன வார்த்தைகள் துன்பத்தைத் தவிர்க்கும்.
தன்னம்பிக்கை வார்த்தைகள் மனச்சோர்வை விரட்டும்.
நகைச்சுவை வார்த்தைகள் மனஇறுக்கத்தைத் தளர்த்தும்.
பண்பான வார்த்தைகள் இதயத்தைத் தொடும்.
பணிவான வார்த்தைகள் மரியாதையைக் கூட்டும்.
பொறுமையான வார்த்தைகள் கோபத்தை விரட்டும். மன அழுத்தத்தைக் குறைக்கும்.
வாழ்த்துகின்ற வார்த்தைகள் வசந்தத்தைக் கொடுக்கும்.
ஒரு யுத்தத்தை வார்த்தைகளால் தொடங்க முடியும். முடித்து வைக்கவும் முடியும்.
சில வார்த்தைகள் கசக்கும்.
சில வார்த்தைகள் இனிக்கும்.
சில வார்த்தைகள் இருட்டைப் போக்கும்.
சில வார்த்தைகள் மயில் இறகு போல் இதமாக இருக்கும்.
இலக்கிய மேதை லியோடால்ஸ்டாய் ஒரு நாள் மாஸ்கோ நகர வீதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அவருக்கு எதிரே வந்தார் ஒரு பிச்சைக்காரர்.
அவர் அய்யா,“எதாவது உதவி செய்யுங்கள், உணவு சாப்பிட்டு இரண்டு நாட்களாகி விட்டது’’ என்று கூறினார்.
ஆனால் அப்போது அவரிடமோ சோதனையாக ஒரு காசு கூட இல்லை. உடனே அவரைப் பார்த்து மிகவும் கனிவான குரலில் அன்புச் சகோதரனே, உனக்கு உதவி செய்வதற்கு என்னிடம் பணம் எதுவும் இப்போது இல்லையே என்றார்.
அவரது வார்த்தையைக் கேட்ட பிச்சைக்காரர் முகமலர்ச்சியோடு நன்றி ஐயா, தாங்கள் போய் வாருங்கள் என்றான்.
அவரது முகப்பூரிப்பைப் பார்த்த டால்ஸ்டாய், நான் உங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. ஆனால், நீங்கள் மகிழ்ச்சியோடு எனக்கு நன்றி செலுத்துகிறீர்களே? எதற்காக என்று அவரிடம் வியப்பாகக் கேட்டார்.
“ஐயா, இது நாள் வரையில் என்னை எல்லோரும் வெறும் பிச்சைக்காரனாக நினைத்து விரட்டி இருக்கிறார்கள். நீங்கள் ஒருவர் தான் என்னைப் பாசத்தோடு சகோதரனே என்று சொல்லி அன்போடு அழைத்துப் பரிவாகப் பேசி இருக்கிறீர்கள். அந்த அன்பு ஒன்றே போதும். நீங்கள் என் மீது காட்டிய இரக்கம் ஒன்றே போதும், வேறு எந்த உதவிகளும் எனக்குத் தேவை இல்லை அய்யா” என்று மனம் உருகிச் சொன்னான்.
வார்த்தைகளை உபயோகிக்கும் போது யோசித்துப் பேசுவது நல்லது.
அன்பான வார்த்தைகள் உறவின் இடைவெளியைக் குறைக்கின்றன. உறவுகளிடையே நெருக்கத்தை ஏற்படுத்துகின்றன.
முயற்சிப்போமா?

- ஆர்.எஸ்.மனோகரன்
திரிபலா என வடமொழி பெயர் கொண்டு விளங்கும் இந்த காய கற்ப மருந்து, மூன்று அதிசய மூலிகைகளின் கலவையாகும். நெல்லிக்கனி, தான்றிக்காய், கடுக்காய் இவை மூன்றும் சேர்ந்து உண்டான அற்புத கலவையே, திரிபலா எனும் கூட்டு மருந்தாகும்.
பல வியாதிகளை உண்டு பண்ணும் தற்கால வாழ்க்கை முறையில், ஒரே மருந்தை எடுத்துக் கொள்வதன் மூலம், அனைத்து பாதிப்புகளையும் சரி செய்து, உடல் வளம் திரும்பப் பெற்று, மீண்டும் இளமைப் பொலிவுடன் வாழ முடியுமா? ஒரே மருந்தில், நீங்கள் கேட்கும் அனைத்தையும் பெற முடியும்!
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சித்தர்கள் மனிதர்களின் நல்வாழ்வுக்கு வழங்கிய அரும்பெரும் மருந்து, மூப்பு வியாதிகள் அணுகாமல், உடல் வளத்தை காத்து சீராக்கும், இராஜ மருந்து! அதுவே, திரிபலா எனும் முக்கூட்டு மருந்து!
“மூர்த்தி சிறிதானாலும், கீர்த்தி பெரிது” என்பார்கள், பெயர் சிறிதாக இருந்தாலும், திரிபலாவின் பலன்கள் சொல்லில் அடங்காதது!
திரிபலா என வடமொழி பெயர் கொண்டு விளங்கும் இந்த காய கற்ப மருந்து, மூன்று அதிசய மூலிகைகளின் கலவையாகும். நெல்லிக்கனி, தான்றிக்காய், கடுக்காய் இவை மூன்றும் சேர்ந்து உண்டான அற்புத கலவையே, திரிபலா எனும் கூட்டு மருந்தாகும்.
திரிபலா மனிதனுக்கு என்ன நன்மைகள் செய்யும்?
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடல் வியாதிகளின் பாதிப்புகளை விலக்கும் தன்மை மிக்கது. உடலின் வளர்சிதை மாற்றத்தில், முக்கிய பங்கு வகித்து, செல்களின் இயக்கத்தை, சீராக்குகிறது.
சீரண கோளாறுகள் :
செரிமான பாதிப்புகள், குடல் இயக்கத்தை சீராக்கி, இரத்த கொழுப்புகளை கரைக்கும் கல்லீரல் சுரப்பை அதிகரித்து, உடலின் கார அமில நிலையை சீராக பராமரிப்பதில் பேருதவி புரிகிறது.
வயிற்றுப் பூச்சிகளை விரட்டும் :
வயிற்றின் விஷ பாதிப்புகளை நீக்கி, மலச்சிக்கல் கோளாறுகளை போக்கும் சிறந்த மலமிளக்கியாக செயலாற்றும், வயிற்றில் உண்டாகும் புழுக்கள் மற்றும் பூச்சிகளை வெளியேற்றி, மீண்டும் அந்த பாதிப்புகள் வயிற்றில் ஏற்படாதவாறு, குடலில் நச்சு தடுப்பு அமைப்பை உண்டாக்கி, உடல் நலம் காக்கிறது, திரிபலா.
ரத்த சோகையை குணப்படுத்தும் :
ஹீமோகுளோபின் எனும் இரத்த சிவப்பு அணுக்களை அதிகரித்து, இரத்த சோகை பாதிப்புகளை களையும் ஆற்றல் மிக்கது, கணைய இயக்கத்தை சரியாக்கி இன்சுலின் சுரப்பு மூலம் உடலில் சர்க்கரை சம நிலையை உண்டாக்கி, சர்க்கரை பாதிப்புகளை நீக்கக் கூடியது திரிபலா.
உடல் பருமனை குறைக்கும் :
கொழுப்பை உண்டாக்கும் செல்களை அழித்து, உடல் எடைக் குறைப்பில் முக்கிய பங்காற்றுகிறது, திரிபலா. சுவாச பாதிப்புகளை சரியாக்கி, இரத்த நாள அடைப்புகளைப் போக்கி, இரத்தத்தை சுத்தம் செய்து சரும பாதிப்புகளை நீக்கும். சைனஸ் கோளாறுகளை சரி செய்து உடலில் சளித் தொல்லைகளை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் ஆற்றல் மிக்கது.
ஒற்றைத் தலைவலி :
மைக்ரேன் உள்ளிட்ட தலைவலிகளுக்கு சிறந்த தீர்வாகி, வலிகளை போக்குகிறது. சமீபத்திய ஆய்வுகள் புற்று வியாதியை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியை தடுக்கும் வல்லமை, திரிபலாவுக்கு இருப்பதாகக் கூறுகின்றன.
வயிற்றுப் புண்கள் :
மேலை மருந்துகள் அதிகம் எடுத்து பசியின்மை மற்றும் வயிற்றுப் புண்களால் சிரமப்படுவோர், தினமும் உணவு சாப்பிட்டபின் இருவேளை, திரிபலாவை தேனில் கலந்தோ அல்லது வெறுமனோ, சாப்பிட்டு தண்ணீர் பருகி வர விரைவில் பாதிப்புகள் நீங்கும்.
சரும வியாதிகள் :
அனைத்து பாதிப்புகளுக்கும் திரிபலாவை சூரணம் எனும் பொடியாகவே, தினமும் சாப்பிட்டு வரலாம். இரவில் திரிபலா பொடியை தண்ணீரில் ஊற வைத்து, காலையில் பருகி வர, மலச்சிக்கல் நீங்கும், நரையை போக்கும், சரும வியாதிகளை விலக்கும்.
சொட்டை தடுக்க :
தலைமுடி உதிர்வு மற்றும் சொட்டை எனப்படும் முடி அடர்த்தியாக கொட்டுதல் போன்ற பாதிப்புகளுக்கு, திரிபலா பொடியை சோற்றுக் கற்றாழை சதையுடன் கலந்து தலையில் தடவி ஊறவைத்து, தலையை அலசி வர, முடி உதிர்தல் நின்று, விரைவில் முடி அடர்த்தியாக வளரும். மேலும், திரிபலாவை ஊறவைத்த தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்து முழுகி வந்தாலும், தலை முடி உதிர்தல் நிற்கும் என்கிறது, சித்த மருத்துவம்.
பல்வலி:
திரிபலாவை வெந்நீரில் கலந்து தினமும் வாய் கொப்புளித்து வர, பற்களில் ஏற்படும் பல் வலி, பல் சொத்தை போன்ற பாதிப்புகள், வாய் துர்நாற்றம் முதலியவை நீங்கும். திரிபலா நீரில் கழுவி வர, உடலில் உள்ள ஆறாத புண்களும் விரைவில் ஆறிவிடும்.

-சிரகிரி வேலவன்
1971-ல் மொத்த குடும்பங்களில் கணவன்-மனைவி குழந்தைகளுடன் இருந்த அமெரிக்க குடும்பங்கள் 71 சதவிகிதம். 2020-ல் அது 20 சதவிகிதமாக நலிந்து விட்டது.
1960-70 ஆண்டுகளில் “சமையல் அறையை தனியார் கம்பெனிகளுக்கு கொடுத்தாகிவிட்டது; குடும்பப் பொறுப்பும், பாங்கும் அழிந்துவிடும்” என்று தீர்க்கதரிசனமாகக் கூறினார்கள் அமெரிக்க பொருளாதார நிபுணர்கள்.
அதாவது அந்த காலகட்டத்தில் வீட்டில் சமைப்பதை நிறுத்தி விட்டு கடைகளில் வாங்கி உண்ணும் பழக்கம் வந்தது. இதனால், அவர்கள் எச்சரித்தபடியே அமெரிக்க குடும்பங்கள் ஏறக்குறைய அழிந்துவிட்டன.
வீட்டில் சமைப்பது என்பது பாசத்துடன் குடும்பத்தை இணைப்பது. சமையல் அறை இல்லாது, வெறும் படுக்கை அறை மட்டும் இருந்தால் அது குடும்பம் அல்ல, தங்கும் விடுதி தான். சமையல் அறையை மூடிவிட்டு, படுக்கை அறை மட்டும் போதும் என்று நினைத்த அமெரிக்க குடும்பங்களின் நிலை என்ன?
1971-ல் மொத்த குடும்பங்களில் கணவன்-மனைவி குழந்தைகளுடன் இருந்த அமெரிக்க குடும்பங்கள் 71 சதவிகிதம். 2020-ல் அது 20 சதவிகிதமாக நலிந்து விட்டது.
அன்று வீடு என்பது குடும்பங்களாக இருந்தன, இன்று தங்கும் வீடுகளாகிவிட்டன. அமெரிக்காவில் இப்போது பெண்கள் தனித்திருக்கும் வீடுகள் 15 %. ஆண்கள் தனித்திருக்கும் வீடுகள் 12%.
19% வீடுகள் அப்பாவோ, அம்மாவோ மட்டுமே இருக்கும் வீடுகள். 6% வீடுகள் ஆண்-பெண் சேர்ந்து தங்குமிடங்கள்.
இன்று பிறக்கும் மொத்த குழந்தைகளில் 41% திருமணமாகாத பெண்களுக்கு பிறக்கின்றன. அதில் பாதி குழந்தைகள் பள்ளிக்கூடம் போகும் சிறுமிகளுக்கு.
இந்த அலங்கோலத்தால் அமெரிக்காவில் 50% முதல் திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. 67 % இரண்டாவது திருமணங்களும், 74% மூன்றாவது திருமணங்களும் விவகாரத்தாகின்றன.
வெறும் படுக்கை அறை மட்டும் குடும்பம் அல்ல. சமையல் அறை இல்லாது, படுக்கை அறை மட்டும் இருந்தால் குடும்பம் நிலைகுலைந்துவிடும் என்பதற்கு அமெரிக்கா சிறந்த உதாரணம்.
குடும்பங்கள் அழிந்தால் மனநலமும் உடல் நலமும் சீரழியும். வெளியில் சாப்பிடுவதால் உடல் ஊதிப்போகிறது. ஏராள தொற்று வியாதிகள் வருகின்றன. சேமிப்பும் குறைகிறது. எனவே சமையல் அறை என்பது குடும்ப நலனுக்கு மட்டும் அல்ல, உடல் நலம், மன நலம், பொருளாதார நலனுக்குக்கூட அவசியம்.

-பி.சுந்தர்