என் மலர்
கதம்பம்
பெரிய பெரிய முனிவர்கள் ஆற்றங்கரையோரத்தில் தவங்களைச் செய்து தங்களது ஆற்றலை அந்த தண்ணீரில் விட்டனர். அந்த தண்ணீர் அது ஓடும் இடங்களில் எல்லாம் அந்த ஆற்றலைத் தந்தது.
தண்ணீர் தனக்கு தரப்படும், தான் கடந்து செல்லும் பாதையில் தன் மேல் விழும் தகவல்களை அப்படியே தேக்கி தனக்குள் வைத்துக் கொள்ளும். அதை வெளிப்படுத்தவும் செய்யும்.
ஜப்பானைச் சேர்ந்த மிகப்பெரிய ஆராய்ச்சியாளர் டாக்டர் மசாரு இமோட்டோ தண்ணீரைப் பல வகைகளில் ஆராய்ந்து தண்ணீருக்கு இருக்கும் அசாத்திய ஞாபகத்திறன் பற்றி பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை, புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.
ஒரு ஜாடி நிறைய தண்ணீரை நிரப்பி அதற்கு முன் அமர்ந்து கொண்டு தியானம் செய்கையில், அந்த தியானத்தை தண்ணீர் அப்படியே தனக்குள் வாங்கிக் கொண்டது.
அந்த தண்ணீரை எடுத்து அதனை எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் மூலமாக ஆராய்ந்ததில் தண்ணீர் மூலக்கூறுகளின் வடிவங்கள் மிக அழகாக இருந்ததைப் பார்க்க முடிந்தது.
அதே ஜாடி தண்ணீரை எடுத்து ‘எனக்கு நோய்கள் வர நீ தான் காரணம்’ என்று பழித்து, கோபத்தையும், கொடூரத்தையும் வெளிப்படுத்திய போது, அதன் மூலக்கூறுகளின் வடிவங்கள் மிகப் பயங்கரமானதாக இருந்தது.
இப்படி ஒவ்வொரு நிகழ்வையும் தண்ணீர் தனக்குள் தேக்கி வைத்துக் கொண்டு அதை வெளிப்படுத்தியதை டாக்டர் மசாரு இமோடோவின் ஆராய்ச்சிகளில் நிரூபணமாகியுள்ளது.
உலகளவில் எல்லா மதங்களிலும் தண்ணீருக்கு என்று தனி இடம் உள்ளது.
“தாயைப் பழித்தாலும், தண்ணீரைப் பழிக்காதே!?” என்று நம் முன்னோர் சொல்லி வைத்ததும் இதனால் தான்.
தண்ணீருக்கு ஞாபகத்திறன் உள்ளது. அது தனக்குள் தரப்படும் நன்மைகளை அப்படியே மற்றவர்களுக்கு தந்து விடும்.
பெரிய பெரிய முனிவர்கள் ஆற்றங்கரையோரத்தில் தவங்களைச் செய்து தங்களது ஆற்றலை அந்த தண்ணீரில் விட்டனர். அந்த தண்ணீர் அது ஓடும் இடங்களில் எல்லாம் அந்த ஆற்றலைத் தந்தது.
ஆற்றலை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது. ஒரு வகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாக மாற்ற முடியும் என்கிறது விஞ்ஞானம்.
மழையும் கூட ஆற்றலின் வடிவம் தான். அது தனக்குள் இயற்கை தரும் தகவல்களைக் கொண்டு வந்து பூமியில் தெளிக்கிறது. அதனால் தான் பயிர்கள் செழிக்கின்றன. உயிர்கள் செழிக்கின்றன.
அதே மழை அளவுக்கதிகமாக பெய்யும் போது வெள்ளம் வருகிறது. எது அளவு, எது அளவுக்கு அதிகம் என்று தீர்மானிப்பது இயற்கை தான்.
அந்த தீர்மானத்தை ஒரு தகவலாக மழையின் துளிகளில் பதிய வைத்து பூமிக்கு அனுப்பி வைக்கிறது இயற்கை.
“கெடுப்பதூஉம் கெட்டாருக்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை”-- வள்ளுவர்.
கொடுப்பதும் மழை, கெடுப்பதும் மழை என்கிறார்.
இப்பேற்பட்ட சக்திகளைக் கொண்ட தண்ணீரைத் தான் நாம் பல வழிகளில் பாழ்படுத்துகிறோம்.எப்படியெல்லாம் கெடுத்து நாசமாக்குகின்றோம் என்பதை உங்களது முடிவுகளுக்கே விட்டு விடுகிறேன்!
இறுதியாக, உறுதியாக ஒன்று,
மனித உடலும் 75% தண்ணீரால் ஆனது.
மனித மூளை 90% தண்ணீரால் ஆனது.
தண்ணீருக்கு அசாத்திய ஞாபகத்திறன் உள்ளது.
அது தனக்குத் தரப்படும் தகவல்களை வைத்தே தன் குணத்தை அமைத்துக் கொள்ளும். எனில் நமது உடலின் சக்தியை சற்று நினைத்துப் பாருங்கள்....

அவமானம் கற்றுக்கொடுப்பது மாதிரியான பாடத்தை எந்த மகத்தான புத்தகமும் கற்றுக் கொடுக்காது.
செட்டிநாட்டில் இருந்து எழுத்துக் கனவுகளுடன் பதினான்கு வயசுப் பையனாக சென்னை வந்தார் கவியரசு கண்ணதாசன்.
அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா கடற்கரையில் காந்தி சிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்துப் படுத்திருக்கிறார் கவிஞர்.
நள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. நகரத்தார் விடுதிக்குப் போக வேண்டும்.
இரவு மண்ணடி வரை நடந்து போக முடியாது. அதனால் கடற்கரையில் படுத்துக் கொள்ள அனுமதி கேட்ட அந்தப் பதினான்கு வயதுப் பையனின் கோரிக்கையைப் போலீஸ் நிராகரித்தது.
“படு..படுக்கணும்னா நாலணா கொடு” என்று காவல் மிரட்டியது. நாலணாவுக்கு வழியின்றிக் கலங்கிய கண்களுடன் காந்தி சிலையில் இருந்து நடந்து இருக்கிறார் கண்ணதாசன்.
அவர் வளர்ந்து கவியரசாகி “சுமைதாங்கி” என்ற சொந்தப் படம் எடுக்கிறார். கதாநாயகனாக நடித்த ஜெமினி கணேசனை எங்கிருந்து நடக்க விடுவது என்று யோசித்த கவிஞர் அதே காந்தி சிலையைத் தேர்ந்தெடுத்தார்.
நள்ளிரவு படப்பிடிப்பு. ஆனால் படத்தில் இரவு ஏழு மணி மாதிரி இருக்க கடற்கரை ரோட்டில் நிறைய கார்கள் வரிசையாக வர வேண்டும். ஏழு கார்களை நிற்க வைத்து மாறிமாறி ஒன்றன்பின் ஒன்றாக வருகிற மாதிரி படம் எடுக்கிறார்கள்.
வீட்டில் இந்த படத்தைப் பார்த்துச் சொல்லி இருக்கிறார். “இந்தக் கார்களை கவனித்தீர்களா? இவை எல்லாமே நம்முடைய கார்கள்.
வாழ முடியும் என்று நம்பிக்கையோடு சென்னை வந்த என்னை இந்த இடத்தில்தான் நாலணா இல்லை என்று போலீஸ் நடக்கவிட்டது..
இதே இடத்தில் என் ஏழு கார்களை ஓடவிட்டுப் படம் எடுத்திருக்கிறேன். நம்பிக்கை என்னை ஜெயிக்க வைத்துவிட்டது” என்றாராம்.
எங்கு அவமதிக்கப்பட்டாரோ அங்கு கவியரசர் தம் வெற்றியை அரங்கேற்றியிருக்கிறார்.
ஆம் நண்பர்களே அவமானங்கள்தான் வாழ்க்கையின் ஆசான். அவமானம் கற்றுக் கொடுப்பது மாதிரியான பாடத்தை எந்த மகத்தான புத்தகமும் கற்றுக் கொடுக்காது.

-ஆர்.எஸ்.மனோகரன்
ஊஞ்சல் ஆடுவது கடவுளுக்குகூட மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்பதால்தான், கோவில்களில் இறைவனை ஊஞ்சல்களில் வைத்து சீராட்டும் பெருமை மிகு கைங்கர்யங்கள் இன்றும் நடந்துக் கொண்டிருக்கிறது.
வீட்டில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக்கூடியது ஊஞ்சல்தான்.
முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள்.
பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.
இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது.
அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள்.
இடவசதி குறைவாக உள்ளவர்களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் ஊஞ்சல்கள் வடிவமைக்கப்பட்டு இப்போது விற்பனைக்கு வருகின்றன.
ஊஞ்சல் ஆடுவது கடவுளுக்குகூட மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்பதால்தான், கோவில்களில் இறைவனை ஊஞ்சல்களில் வைத்து சீராட்டும் பெருமை மிகு கைங்கர்யங்கள் இன்றும் நடந்துக் கொண்டிருக்கிறது.
ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து பாசிடிவ் எண்ணங்கள் தோன்றுகிறது.
மகிழ்ச்சி பெருகி எதிர்காலத்தைப் பற்றிய வளமான எண்ணங்களும் தோன்றுகின்றன.
திருமணங்களில் ‘ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.
ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது.
நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறுசுறுப்பாகிறது.
கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய தலைமுறை இந்த ஊஞ்சல் பயிற்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.
தோட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் ஆடுவது அதிக பலனை தரக்கூடியது.
மரம் செடிகளிலிருந்து வரும் பிராணவாயு வேகமாக உடல் முழுவதும் பரவி ரத்தத்தை சுத்திகரிக்கும்.
இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுபவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.
ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.
சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும்.
கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.
வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.
இல்லத்திற்கு அழகு சேர்க்கும் கலைப்பொருட்களில் ஊஞ்சலும் ஒன்று. இதை ஒரு தெய்வீக ஆசனம் என்றும் கூறுவர்.

-தேன் ராஜன்
“கணியன் பூங்குன்றனார் சொன்ன ‘தீதும், நன்றும் பிறர் தர வாரா’ என்கிற வரி நம் உடலுக்கும் உள்ளத்துக்கும் ஒருசேர வழிகாட்டக்கூடியது.
எத்தனையோ வருஷங்களுக்கு முன்னாலேயே, ‘உணவே மருந்து; மருந்தே உணவு’ன்னு திருமூலர் சொல்லிட்டுப் போயிட்டார்.
இந்த அற்புதமான வாக்கை ஆராதிக்கத் தவறியவர்கள் தான் எண் சாண் உடம்பில் எண்ண முடியாத வியாதிகளோடு அலையறாங்க.
வாழ்க்கையில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று நோயே வராமல் வாழ்வது. இரண்டாவது, நோய் வந்த பின் வருந்தியபடியே வாழ்வது. முதல் வகையில் இணைந்துவிட்டால், நமக்கு இன்னல்கள் இருக்காது.
‘மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்’ என்ற குறளிலேயே நோய் அண்டாமல் வாழ்வதற்கான வழி சொல்லப்பட்டு இருக்கிறது.
உண்ட உணவு சீரணமாகிவிட்டதை அறிந்து, அதன் பிறகு உண்டால் அந்த உடம்புக்கு மருந்து என்ற ஒன்றே தேவை இல்லை எனச் சொல்லி இருக்கிறார் வள்ளுவர்.
எதை, எப்போது, எப்படி உண்ண வேண்டும் என்பதே நம்மில் பலருக்கும் தெரிவதில்லை.
நாம் உண்ணும் போது முதலில் உணவை விழுங்குறோம். ஆனால், அப்படி விழுங்கக்கூடாது. பற்களால் நன்றாக அரைத்து, கூழாக்கி உமிழ் நீரோடு சேர்த்து உள்ளே தள்ள வேண்டும்.
இதைத்தான், ‘நொறுங்கத் தின்றால் நோய் தீரும்!’ என பழமொழியாகச் சொன்னார்கள்.
அளவு கடந்து உணவு உண்பவர்கள் நோய்களை எதிர்கொள்ளவேண்டி இருக்கும்.
நாம் உண்ணும் உணவுக் கழிவுகள் உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் கொஞ்சம் கொஞ்சமாகத் தேங்குகிறது. இதன் அளவு அதிகரிக்கும் போது நோய் உண்டாகிறது.
சரி, அதை எப்படிக் களைவது?
இதற்கான சுலபமான வழி, உண்ணாநோன்பு.
இதைத்தான் ‘விரதம்’ என்ற பெயரில் கடைபிடித்தார்கள் நமது முன்னோர்கள்.
இறக்கும் தருவாயில் இருப்பவனைக் கூட உயிர்த்தெழுச் செய்யும் சக்தி உண்ணா நோன்புக்கு இருக்கிறது.
உண்ணாநோன்பு இருக்கும் போது நம் உடலுக்குள் இருக்கும் தேவையில்லாத கழிவுகள் தன்னாலே வெளியேறி விடுகின்றன. உடல் தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ள நாம் அனுமதிக்க வேண்டும்.
அடுத்ததாக, எதைச் சாப்பிட வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.
நம் உணவில் காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
‘வெந்ததைக் குறைத்தால் வேதனையை குறைக்கலாம்’ என்பார்கள்.
அதாவது வேகவைத்த உணவைக் குறைத்துக்கொண்டு பச்சைக் காய்கறிகள், பழங்களை உண்ண வேண்டும்.
நான் 35 வயதில் கண்ணாடி அணிந்தேன். 60 வயதில் அதை அகற்றிவிட்டேன். இப்போது கண்ணாடியைப் பயன்படுத்துவதே இல்லை. பொடி எழுத்துக்களைக்கூட என்னால் துல்லியமாக வாசிக்க முடியும். இதற்குக் காரணம் எனது உணவுப் பழக்கங்கள் தான்!”- நம்மாழ்வார்.
“இயற்கை நமக்குக் கொடுத்த அருட்கொடை மூலிகைகள். நாம் பயிர் செய்யாமலேயே நமக்கான உணவாக சில மூலிகைகளை இயற்கை உற்பத்தி செய்கிறது.
உதாரணமாக, பிரண்டை. இதைத் துவையல் செய்து சாதத்தில் குழம்புக்குப் பதிலாக பிசைந்து உண்ணலாம்.
தூதுவளை, மொசுமொசுக்கை இலைகளைச் சேர்த்து ரசம் வைத்து உண்டால் நாள்பட்ட சளி தீரும்.
வாய்ப்புண்ணை ஆற்ற மணத்தக்காளி, வெட்டுப் புண்களை ஆற்ற வெட்டுக்காயப் பச்சிலை, அனைத்துக்கும் சிறந்த ஆவாரை, துளசி என மூலிகைகளின் அதிசய ஆற்றல் கொஞ்சநஞ்சம் அல்ல.
நம்மைச் சுற்றி வளர்ந்துகிடக்கும் எண்ணில்லா மூலிகைகளை நாம் சரியாகப் பயன்படுத்தினாலே பாதி நோய்கள் காணாமல் போய்விடும்!” எனச் சொல்லும் நம்மாழ்வார், உடலின் மகத்துவத்தையும், யோகாவின் சிறப்பையும் சொல்லத் தொடங்கினார்.
“இயற்கை ஒருபோதும் தவறு செய்வதில்லை. உடல் ஒருபோதும் தன் கடமையை நிறுத்துவதில்லை. பசி வந்தால் உணவு, தாகம் எடுத்தால் தண்ணீர், சோர்வு வந்தால் உறக்கம் என உடல் சரியான சமிக்ஞைகளை நமக்கு கொடுத்தவண்ணம் இருக்கிறது.
அதன்படி உணவு, உறக்கத்தை நாம் கடைப்பிடித்தாலே உடலுக்கு எந்தவிதமான சிக்கலும் வராது.
மொத்தத்தில், சரியான பழக்க வழக்கங்களும், உடலைப் பேணும் உணவு முறையும், ஆரோக்கியமான சுற்றுச்சூழலும் இருந்தாலே நோய்க்கு ‘நோ என்ட்ரி’ போட்டுவிடலாம்!” எனச் சொல்லும் நம்மாழ்வார் இறுதியாக இப்படிச் சொல்கிறார் வாழ்வியல் மந்திரத்தை.
“கணியன் பூங்குன்றனார் சொன்ன ‘தீதும், நன்றும் பிறர் தர வாரா’ என்கிற வரி நம் உடலுக்கும் உள்ளத்துக்கும் ஒருசேர வழிகாட்டக்கூடியது.
அந்த வரிகளை மனதில் ஏற்று இயற்கையை வணங்கி, உடலை ஆராதிக்கக் கற்றுக் கொண்டால் வாழ்வின் சிறப்புக்குக் குறைவே இருக்காது.

-வேதை அன்பரசு—
“மாணவன் என்பவன் தனக்குள் எழக்கூடிய சந்தேகங்களை, எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் ஆசிரியரிடம் கேட்டுத்தெளிவு பெற வேண்டும். அதற்காகத்தான் உன்னைப்போல இருக்க வேண்டும் என சொன்னேன்’’ என்று புன்னகைத்தார் சாக்ரடீஸ்.
சாக்ரடீஸிடம் ஒரு மாணவன் வந்தான்.
“ஐயா, மாணவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்?’’ என்று கேட்டான்.
அதற்கு சாக்ரடீஸ், “மாணவன் என்பவன், கொக்கைப்போல இருக்க வேண்டும். கோழியைப் போல இருக்க வேண்டும். உப்பைப் போல இருக்க வேண்டும். உன்னைப்போல இருக்க வேண்டும்” என்றார்.
மாணவனுக்கு ஒன்றும் புரியவில்லை. “கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்’’ என்றான்.
“கொக்கு, ஒற்றைக் காலில் நீண்டநேரம் பொறுமையாக நிற்கும். மீன்கள் வந்தவுடன் விரைந்து செயல்பட்டுப் பிடித்துவிடும். அதுபோல, ஒரு மாணவன் சரியான வாய்ப்புக் கிடைக்கும்போது அதைப் பயன்படுத்தி, அரிய செயல்களைச் செய்ய வேண்டும்” என்றார்.
“கோழியைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே அதற்கு என்ன அர்த்தம்?’’ என்று கேட்டான் மாணவன்.
“கோழி என்ன செய்யும்? குப்பையைக் கிளறும். ஆனால், அந்தக் குப்பைகளை விட்டுவிட்டு தனக்குத் தேவையான உணவை மட்டும் எடுத்துக்கொள்ளும். அதுபோல, மாணவர்கள் தாம் சந்திக்கும் தீமைகளைத் தூரம் தள்ளி, நன்மைகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார் சாக்ரடீஸ்.
“அடுத்தது, உப்பைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே...’’
“ஆமாம். உப்பை எந்த உணவோடு கலக்கினாலும், அது இருக்கிறது என்று கூற முடியும். ஆனால், கலக்கிய உணவில் உப்பு கண்ணுக்குத் தெரியாது. அதன் சுவையை மட்டுமே உணர முடியும். அதுபோல, மாணவர்கள் எந்தத் துறையில் இறங்கினாலும் அதில் சிறப்பான தனித்தன்மையை வெளிப்படுத்தி, தனது மறைவுக்குப் பின்னும் அதை இவர்தான் செய்தார் என்று கூறும்படி விளங்க வேண்டும்” என்றார்.
“எல்லாம் சரி, உன்னைப் போல இருக்க வேண்டும் என்றீர்களே... அதற்கு என்ன அர்த்தம்?’’ என்று கேட்டான்.
“மாணவன் என்பவன் தனக்குள் எழக்கூடிய சந்தேகங்களை, எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் ஆசிரியரிடம் கேட்டுத்தெளிவு பெற வேண்டும். அதற்காகத்தான் உன்னைப்போல இருக்க வேண்டும் என சொன்னேன்’’ என்று புன்னகைத்தார் சாக்ரடீஸ்.
அந்த மாணவன் மகிழ்ச்சியுடன் அவரை வணங்கினான்.

நேர்த்தியாக பெண் குருவி விரும்பும் வகையில் கூடு கட்ட தெரியாத ஆண் குருவிகளுக்கு சம்சாரி வாழ்க்கை அமையாது. சன்னியாசியாக இருக்க வேண்டியதுதான்.
உலகிலேயே ஒரு அற்புதமான கூட்டைக் கட்டுகிற பறவை தூக்கணாங்குருவி. அது கூடு கட்டுகிற அழகும் அது வாழுகிற அழகும் மெச்சத்தக்கவை.
தூக்கணாங்குருவியை போல் நேர்த்தியாக கூடு கட்டுகிறப் பறவை வேற எதுவும் இல்லை. மனிதனால் கூட அப்படி கட்டி விட முடியாது.
தூக்கணாங்குருவி முதலில் கூடு கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்கிறது. அந்த இடம் எப்படி இருக்க வேண்டும் என்றால், நீர் நிலைகள் அருகாமையில் இருக்க வேண்டும். அதற்கு தண்ணீர் ரொம்ப முக்கியம்.
இரண்டாவது உணவு கிடைக்கிற இடமாக இருக்கணும். தினையோ, கம்போ, சோளமோ ஏதாவது தானியம் விளைகிற இடமாக இருக்க வேண்டும்.
மூன்றாவதாக தாம் கட்டுகிற கூடு எதிரிகளின் கைகளில் சிக்கிவிடாத வகையில் இருக்கவேண்டும். கூடு கட்டுவதற்கு இந்த மூன்றையும் யோசிக்கிறது தூக்கணாங்குருவி.
இப்படிப்பட்ட இடத்தை தேர்வு செய்து ஆண் குருவி தான் கூடு கட்ட தொடங்குகிறது. பெண் குருவி கூடு கட்டாது.
எந்தவித வாஸ்தும் பார்க்காமல் வாழ்வதற்கான சௌகரியங்களை மட்டுமே பார்த்து கூடு கட்டுகிறது தூக்கணாங்குருவி.
தாம் குடும்பத்துடன் வசிக்கபோகும் அந்த கூட்டை தாங்கும் அளவு சக்தி கொண்ட தோகை நார்களை கிழித்து வந்து கூடு கட்டுவதற்கான முதல் முடிச்சைப் போடுகிறது.
கூடு கட்டும் சமயத்தில் ஆண் குருவி எதை பற்றியும் யோசிக்காது. தொடர்ந்து 18 நாட்களில் கூட்டின் 90 சதவீத பணிகளை முடித்து விடும். இப்போது வாசல் மட்டும் வைக்கணும்.
இந்நிலையில் ஆண் குருவி, பெண் குருவியை கூப்பிட்டு வந்து காட்டும். 2 மாடி கட்டியாச்சு, ரொம்ப நெருக்கமாக பிண்ணியாச்சு, உள்ளே காற்று புகுந்து வெளியே வருவதற்கான உள்கட்டமைப்பையும் கட்டியாச்சு. வாசல் வைத்தால் வேலை முடிந்து விடும். கூட்டுக்குள்ளே இன்னும் ஏதேனும் உள் அறைகளில் வேலை செய்ய வேண்டுமா என்பதை பெண் குருவி பார்வையிட்டு தீர்மானிக்கும். அது சொல்கிற படி கூட்டை கட்டி முடிக்க வேண்டும் ஆண் குருவி.
கூடு கட்டி முடித்த பின் ஆண் குருவி அதன் மேல் உட்கார்ந்து கொண்டு சிறகடித்து மறுபடியும் பெண் குருவியை கூப்பிடும். வந்து பார்.. நான் கட்டி வைத்திக்கிற காதல் மாளிகையை பார் என்று அழைப்பு விடுக்கும்.
பெண் குருவியும் ஓடி வந்து கூட்டுக்குள் நுழையும். பார்த்து விட்டு, நன்றாக இருக்கிறது.. இன்னும் சில வேலைகள் இருக்கின்றன. அதனையும் முடித்து வையுங்கள், அதன் பின் சேரலாம் என்று சொல்லி விட்டு காதலோடு பறந்து போய் விடும்.
பெண் குருவியின் இசைவு கிடைத்து பிறகு ஆண் குருவி செய்யும் அடுத்த வேலை வாயில் அமைப்பது தான். கூட்டின் முதல் முடிச்சை வைக்கும் போது எவ்வளவு முக்கியத்தும் கொடுக்குமோ அது போல் வாசல் வைப்பதற்கும் மெனக்கெடும்.
அந்த பருவத்தில் தென்மேற்கு பருவமழை எவ்வளவு பெய்யும் என்பதை கணித்து அதற்கேற்ப வாசல் அமைக்கும். தென்மேற்கு பருவமழை காற்றோடு அதிகமாக பெய்யும் என்று அறிந்தால் கூட்டின் வாசலை வடக்கு நோக்கி அமைக்கும்.
வாசல் அமைத்து முடித்ததும் பெண் குருவி தான் சொல்லிய படி வந்து அந்த ஆண் குருவியுடன் இணைசேர்ந்து முட்டையிடும். அது காற்றில் அசைந்து ஒன்றோடு ஒன்று உரசி உடைந்து விடாமல் இருக்க ஆண்குருவி ஈர மண்ணை எடுத்து வந்து கூட்டில் ஆங்காங்கே பதித்து வைத்து சமநிலைப்படுத்தும். அடுத்து நிறைய பூச்சிகளை பிடித்து வரும். குஞ்சுகளுக்கு அதுவே தின்னும் வகையில் ஆண் குருவியும் பெண் குருவியும் தாம் பிடித்து வந்த பூச்சிகளை அந்த மண்ணில் பதித்து வைக்கும்.
அப்படி பதிக்கப்பட்ட பூச்சிகளில் மின்மினி பூச்சிகளும் அகப்பட்டிருக்கும். அவை பறக்க முடியாமல் தப்பிப்பதற்காக தன்னை மினுக்கிகொள்கிறது. இந்த வெளிச்சம் பெட்ரூம்மில் விளக்கு போட்டது போல் இருக்கும்.
அந்த வெளிச்சத்தை பார்த்து கிளைகளில் ஊர்ந்து வரும் பாம்பு, ஓணான் போன்றவை கூட்டுக்குள் ஏதோ இருக்கிறது என்ற அச்சத்தில் அவ்விடத்தை விட்டு அகன்று விடும். மின்மினி பூச்சியால் தூக்கணாங்குருவி கூட்டுக்கு எவ்வளவு பாதுகாப்பு பாருங்கள். அதே வேளையில் அதன் ஒளி விளக்காகவும் பயன்படுகிறது. இது குஞ்சுகளுக்கு இதமான தூக்கத்தை தரும். கீழே நீர் நிலைகள் இருப்பதால் ஏசி மாதிரி இருக்கும்.
இப்போ ஆண் குருவி சும்மா இருக்காது. அது போல் இன்னொரு கூட்டைக்கட்டும். அங்கே மற்றொரு பெண் குருவி வந்து நான்கு, ஜந்து முட்டைகள் இட்டு குஞ்சிபொறிக்க வைக்கும். மறுபடியும் ஒரு அழகான கூட்டைகட்டும். இப்படி ஒரு பருவத்தில் ஆண் தூக்கணாங்குருவி நான்கு அல்லது ஜந்து கூடுகளை கட்டும். அதன் மூலம் அது ஐந்து பெண் குருவிகளை தாய்மை அடைய வைக்கிறது.
நேர்த்தியாக பெண் குருவி விரும்பும் வகையில் கூடு கட்ட தெரியாத ஆண் குருவிகளுக்கு சம்சாரி வாழ்க்கை அமையாது. சன்னியாசியாக இருக்க வேண்டியதுதான்.
சரியாக கூடு கட்ட தெரிந்த, உழைக்க தெரிந்த ஆண் தூக்கணாங்குருவியை தான் பெண் குருவி தேர்ந்தெடுத்து இணைசேர்ந்து சந்ததிகளை உருவாக்கும்.

சிறுவனாக இருந்த போது பசி போக்கிய தாயுள்ளத்திற்கு - ஒரு குவளை பால் தந்தவர்க்கு உயிர் காத்து உதவினார் மருத்துவர்.
வீடு வீடாக பொருட்களை கொடுக்கும் அந்த சிறுவனுக்கு ரொம்ப பசித்தது. எதையாவது வாங்கிச் சாப்பிடலாம் என்றால் கையில் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிட கேட்கலாம் என்று நினைத்தான்.
அந்த வீட்டின் கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் திறந்தாள். ஏதாவது கேட்கலாம் என்று நினைத்தான். ஆனால் கூச்சம்.. கேட்க மனம் வரவில்லை.
“கொஞ்சம் தண்ணி கிடைக்குமா குடிக்க?” தயக்கத்துடன் கேட்கிறான்.
அவள் சிறுவனின் கண்களில் இருந்த பசியை கவனிக்கிறாள். உள்ளே சென்றவள், ஒரு கப் பாலை கொண்டு வந்து கொடுத்தாள்.
பாலைக் குடித்து பசியாறிய சிறுவன் சொன்னான், “நான் எவ்வளவு கடன்பட்டிருக்கிறேன்..?”
“கடனா, அப்படி ஒன்றும் இல்லை. அன்பான செயலுக்கு விலை எதுவும் இல்லை என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்.” அவள் சிரித்துக்கொண்டே சொன்னாள்.
“ரொம்ப நன்றி” சிறுவன் புன்னகையுடன் கடந்து சென்றான்.
ஆண்டுகள் கழிந்தன. அந்த பெண்ணுக்கோ ஒரு கொடிய நோய் வந்தது.
ஓர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள். டாக்டரிடம் அவளுடைய பரிசோதனையும் வந்தது. மெடிக்கல் ரிப்போர்ட்டில் அந்த பெண்ணின் ஊர் பெயரை பார்த்ததும் அவருக்குள் ஒரு சின்ன மின்னல். விரைவாக வார்டுக்கு போய் அந்த பெண்ணை பார்த்தார்.
அன்று முதல் தனது அத்துனை உழைப்பையும் கவனத்தையும் செலுத்தி அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்தார். நீண்ட சிகிச்சைக்கு பின்னர் அவள் குணமானாள்.
பல லட்சங்கள் செலவானது. மருத்துவமனை அந்த பெண்ணுக்கு ஒரு நீண்ட பில்லை அனுப்பியது. இதை எப்படி கட்டப்போகிறோமோ என்று பதட்டத்துடன் அதை பிரித்தவள் திகைத்துப் போனாள்.
அந்த பில்லின் கடைசியில் கையால் எழுதப்பட்டிருந்தது.
“இந்த பில்லை நீங்கள் செலுத்தவேண்டியதில்லை. ஒரு கப் பாலில் உங்கள் கடன் முழுதும் தீர்க்கப்பட்டு விட்டது. இது நன்றி சொல்லும் நேரம்!”
அவளுக்கு கண்கள் பனித்தன.
ஆம். சிறுவனாக இருந்த போது பசி போக்கிய தாயுள்ளத்திற்கு - ஒரு குவளை பால் தந்தவர்க்கு உயிர் காத்து உதவினார் மருத்துவர்.
அந்த மருத்துவர் வேறு யாருமல்ல, அமெரிக்காவின் மிகப்பிரபல மருத்துவராக விளங்கிய மருத்துவர் ஓவர்டு கெல்லி .
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. (குறள் 226)
பொருள் : வறியவர்களின் பசியைப் போக்குங்கள். அது தான் செல்வம் பெற்ற ஒருவன் பிற்காலத்துக்கு தனக்கு உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.

நாம் சாப்பிட்டு மீதம் உள்ள சாதத்தில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மூடிவைத்துவிட வேண்டும். மறுநாள் காலை அமிர்தபானம் தயார்! சோத்துப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக்கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்.
“ஆற்றுநீர் வாதம் போக்கும்;
அருவி நீர் பித்தம் போக்கும்;
சோற்று நீர் இரண்டையும் போக்கும்”
மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய அனைத்து நோய்களுக்கும் அடிப்படையாக விளங்குவது வாதம், பித்தம், கபம் என்ற மூன்றுமே ஆகும். இவற்றுள் வாதம், பித்தம் தொடர்பாக ஏற்படும் நோய்களைப் போக்கும் வழிமுறைகளை இப்பழமொழி விளக்குகின்றது.
ஆற்று நீரிலும், அருவி நீரிலும் உயர்ந்த தாதுப் பொருட்களும், மூலிகைச் சத்துக்களும், நிறைந்து காணப்படும். ஏனெனில், ஆற்றுப் படுகையிலும், அருவிக்கு நீர் வரும் மலைப்பகுதியிலும் மூலிகைச் செடிகள் நிறைந்து காணப்படும். மூலிகைகளின் மீது பட்டு இந்நீர் வருவதால் இத்தகைய குணமுடையதாக உள்ளது.
வாதநோய் தொடர்பாக நரம்புக்கோளாறுகளும், பித்தநோய் தொடர்பாக கண் மற்றும் மூளைக் கோளாறும் ஏற்படுகின்றன. இவற்றைக் குணப்படுத்த ஆற்று நீரும், அருவிநீரும் பயன்படுகின்றன.
ஆனால் வாதம், பித்தம் இரண்டையும் சோற்று நீர் குணமாக்குகின்றது. அதாவது கஞ்சிதண்ணிக்கு அந்த மருத்துவ குணம் உள்ளது. இத்தகைய மருத்துவ குணம் கருதியே நாட்டுப்புற மக்கள் காலையில் எழுந்ததும் பழைய சோற்று நீரை அருந்துகின்றனர்.
கஞ்சி குடிப்பதால்..
1. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
2 .ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் அதிகரிக்கிறது.
3. உடல் சோர்வை போக்குகிறது.
4. உடலில் உள்ள செல் சிதைவுகளை தடுக்கிறது.
5 .உடல் சூட்டை தணிக்கிறது.
6. வயிற்றிலுள்ள பழைய கழிவுகளை விரைந்து வெளியேற்றுகிறது.
7. உற்சாகமான மனநிலையைத் தருகிறது.
8. வெயில் காலங்களில் மட்டுமல்ல அனைத்து நாட்களிலும் சாப்பிடுவதற்கேற்ற அருமையான உணவு பழைய சோற்று கஞ்சி.
ஆனால் நாம் தான் இதை தின்றால் சளி பிடிக்கும், உடல் குண்டாகி விடும் என்றெல்லாம் சொல்லி இன்றைக்கு “பழையதை” பழித்து வருகிறோம். அது பெரிய தவறு!

முதுமையை அடித்துவிரட்ட வியப்பூட்டும் மருந்து வழிமுறைகள் நமக்குக் கிடைக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை எனத் தெரிகிறது.
ஒரு 80 வயதான ஒருவரை 40 வயதானவராக மாற்றமுடிந்தால் எப்படி இருக்கும்?
சமீபத்திய ஆராய்ச்சி இளமையை மீட்டெடுப்பது சாத்தியம் எனக் கண்டறிந்துள்ளது.
சால்க் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் வயதாவதைத் தடுக்க மற்றும் வயதை வெற்றிகரமாகக் குறைக்க வழி ஒன்றைக் கண்டறிந்துள்ளனர். சால்க் நிறுவனம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான் டியகோ என்ற நகரத்தில் உள்ளது.
இது எப்படிச் சாத்தியமானது என புரிந்துக்கொள்ள ஸ்டெம் செல்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
நம் உடலில் ஸ்டெம் செல் என்ற ஒரு வகை செல்கள் உள்ளன. உதாரணமாக, நம் இரத்தத்தில் சுமார் 16 வகையான செல்கள் உள்ளன. அவை அனைத்தையும் உருவாக்குவது கெமட்டோபாயடிக் ஸ்டெம் செல் ஆகும். அதாவது இந்த ஸ்டெம் செல்கள் உருமாற்றம் அடைந்து பல வகையான செல்களை உருவாக்கவல்லது. ஆனால் இந்த ஸ்டெம் செல்களை உடலிலிருந்து அல்லது வளரும் கருவிலிருந்து பிரித்தெடுப்பது அவ்வளவு எளிதல்ல.
ஜப்பானில் சின்யா யமனாகா என்ற ஒரு விஞ்ஞானி இருந்தார். இவர் ஒரு செல்லை Oct 4, Sox2, KIf4, c-Myc என்ற நான்கு புரதங்களை உற்பத்தி செய்யவைத்தால் அந்த செல் ஸ்டெம் செல்லாக மாறிவிடும் எனக்கண்டறிந்தார். அதாவது இந்த முறையில் செயற்கையாக எந்த ஒரு செல்லையும் ஸ்டெம் செல்லாக மாற்றமுடியும். இந்த கண்டுபிடிப்பால் ஸ்டெம் செல்கள் துறை புத்துயிர் பெற்றது மற்றும் வேகமாக வளர்ந்தது. இந்த கண்டுபிடிப்பு பல நோய்களைக் குணமாக்கப் பயன்படும். இந்த கண்டுபிடிப்பு யமனாகாவிற்கு 2012ல் நோபல் பரிசை பெற்றுத்தந்தது.
Oct 4, Sox2, KIf4, Myc என்ற நான்கு புரதங்களை யமனாகா கலவை என அழைக்கப்படுகிறது. சால்க் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் இந்த யமனாகா கலவையை நம் எண்பது வயதை ஒத்த சுண்டெலியின் உடலில் ஏற்றினார்கள். பல வாரங்கள் இவ்வாறு யமனாகா கலவையைச் சுண்டெலிக்கு ஏற்றினார்கள். இதன் விளைவாக அந்த சுண்டெலிகள் சுமார் நம் 40 வயதை ஒத்த உடல்நிலையை அடைந்திருக்கிறது.
ஆமாங்க... வயதான சுண்டெலியை நடுத்தர வயதானதாக மாற்றியுள்ளார். அதாவது யமனாகா கலவையைச் சுண்டெலிக்கு ஏற்றும்போது அதன் உடலில் ஸ்டெம் செல்கள் அதிகரிக்கின்றது. அதனால்தான் சுண்டெலியின் வயது குறைகிறது.
ஆக, யமனாகா கலவையை உடலில் செலுத்திக் கொண்டால் வயது குறைகிறது என அறியப்பட்டுள்ளது. மேலும் யமனாகா கலவையை உடலில் செலுத்திக் கொண்டால் புற்றுநோய்க்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என நம்பப்பட்டது. ஆனால் அப்படி புற்றுநோய் எதுவும் இந்தக் கலவை செலுத்தப்படச் சுண்டெலிக்கு வரவில்லை. இதனால் இந்த மருத்துவத்துறை பாதுகாப்பானது எனத் தெரிகிறது.
சுண்டெலியில் செய்து காட்டப்பட்டுள்ள இந்த சாதனை மருத்துவ வழிமுறை மனிதனுக்குத் தகுந்தாற்போல மாற்றி அமைக்கப்பட வேண்டியதுதான் பாக்கி. ஆக... எமனிடம் இருந்து தப்பிக்க எமனாகா கலவைப் பயன்பட போகிறது.

-பேராசிரியர் சி. சுதாகர்
கண்களில் தொடர்ச்சியாக சுரப்பிகள் வேலை செய்துகொண்டு, ஈரப்பதத்துடன் இருந்தால் தான், கண்களும் பாதுகாப்பாக இருப்பதுடன், பார்வைக்குறைபாடுகளும் ஏற்படாது.
கண்களில் ஈரப்பதம் இல்லாமல் வறட்சி ஏற்படுவதற்கு அதிக நேரம் வேலை கொடுத்துக் கொண்டிருப்பதும், முதுமையும், சில நோய்களும் தான் என்பது மாறிப்போய், தொடர்ச்சியாக கம்ப்யூட்டரும், செல்போனும் பார்த்துக் கொண்டிருப்பது என்பதில் வந்து நிற்கிறது.
புத்தகங்களைப் படித்து, கையால் எழுதிப் பழகியவர்களும், தற்போதைய உலகத்தில் அதிக..மிக அதிகமாவே ஒரு நாளில் ஆறு, ஏழு மணி நேரங்கள் கூட கம்ப்யூட்டர் மற்றும் செல்போனில் படித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கும் நிலை வந்துவிட்டது.
இதனால், வயது வித்தியாசம் இல்லாமல், அனைவருக்கும் இந்த கண் வறட்சி, தலைவலி, மங்கலான பார்வை ஏற்படுகிறது. இவற்றை ஓரளவிற்கு தவிர்ப்பதற்கு 20-20-20 கட்டளையைப் பின்பற்றலாம். தொடர்ச்சியாக 20 நிமிடங்கள் படித்து அல்லது ஒளித்திரையைப் பார்த்துவிட்டு, 20 அடி தூரத்திற்கு கண்களின் பார்வையைத் திருப்பி, 20 நொடிகள் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். அந்த காட்சிகள் இயற்கைக் காட்சிகளாக, பசுமையான மரங்கள், செடி, கொடிகள், அல்லது பச்சை வண்ணம் என்றிருக்கலாம்.
இவற்றுடன் சேர்த்து இன்னொரு 20 நொடிகளை நான் பரிந்துரைக்கிறேன். அந்த 20 நொடிகள் சாதாரணமாக கண்களை மூடி வையுங்கள். ஈரப்பதத்தை தக்கவைக்க உதவிடும். மேலும், தொடர்ச்சியாக படிப்பதால், கண்களை மூடித் திறந்து, கண் சிமிட்டுவதையே மறந்து விடுகிறோம். இதனாலும் ஈரப்பதம் குறைகிறது.
ஈரப்பதம் ஏன் அவசியம் என்றால் நீர் சுரப்பிகளில் இருந்து வெளிப்படும் கண்ணீர், கரு விழி, வெண்விழி இரண்டையும் கழுவி சுத்தமாக வைத்திருப்பதுடன், கிருமித் தொற்றுகளில் இருந்தும் காக்கிறது. ஆறு விதமான தசைகளால் தான் கண்கள் அனைத்துப் பக்கமும் சுற்றி வருகிறது என்பதாலும், கண்களுக்கான ஆக்சிஜனை இந்த நீரே கொடுக்கிறது என்பதாலும், ஈரப்பதம் மிக அவசியம்.
ஆகையால், கண்களில் தொடர்ச்சியாக சுரப்பிகள் வேலை செய்துகொண்டு, ஈரப்பதத்துடன் இருந்தால் தான், கண்களும் பாதுகாப்பாக இருப்பதுடன், பார்வைக் குறைபாடுகளும் ஏற்படாது. இவற்றால் ஏற்படும் தலைவலி, கண்வலி, கழுத்துவலி, மன அழுத்தம் போன்றவற்றையும் தவிர்க்கலாம்.

- வண்டார் குழலி
சில சமயம் தடுக்கி விழுவதும் , காயம் படுவதும் மறுபடியும் எழுவதும், வழி தவறிப் போவதும் கூட நல்லதுதான். அதில் கெடுதல் ஒன்றும் இல்லை.
ஒரு முறை என் தாத்தாவுடன் நடந்து செல்லும்போது, நான் விழுந்துவிடுவேன் என்று என் கைகளை பிடிக்க முயன்றார்.
நான் அவரிடம் கூறினேன், “எப்போதும் நீங்கள் என்னுடன் இருப்பதற்கு உத்தரவாதம் அளித்தால் நான், நீங்கள் செய்வதற்கு ஒப்புக்கொள்கிறேன்” என்றேன்.
அவர் மிகவும் உண்மையான மனிதர். “என்னால் அதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. நாளைய தினத்தைப் பற்றிக் கூட என்னால் உறுதியாக சொல்ல முடியாது. ஒன்று மட்டும் உறுதி. நீ நீண்ட காலம் வாழ்வாய். நான் சீக்கிரம் செத்துப் போவேன். உன் கையைப் பிடிக்க நான் என்றென்றும் இங்கே இருந்து கொண்டிருக்க முடியாது” என்றார்.
“அப்படியானால் என்னைக் கற்றுக் கொள்ள அனுமதியுங்கள். ஒரு நாள் நீங்கள் நட்ட நடுவில் என்னை விட்டுப் போய்விடுவீர்கள். அதனால் தடுமாறி விழ, என்னை விட்டு விடுங்கள். நானே முயன்று மேலெழுகிறேன். காத்திருங்கள்... கவனியுங்கள். என் கையைப் பிடிப்பதை விட அதுதான் நீங்கள் என் மீது அதிகம் பரிவு காட்டுவதாக அமையும்” என்று சொன்னேன் .
அவர் என்னைப் புரிந்து கொண்டார். “நீ சொன்னது சரிதான். ஒருநாள் நான் இங்கு இல்லாமல் போய்விடுவேன்” என்றார்.
சில சமயம் தடுக்கி விழுவதும் , காயம் படுவதும் மறுபடியும் எழுவதும், வழி தவறிப் போவதும் கூட நல்லதுதான். அதில் கெடுதல் ஒன்றும் இல்லை.
வழி தவறிப் போய் விட்டதாக நினைக்கும் தருணம் வரும்போது , உடனே பழைய பாதைக்குத் திரும்பி விடப் போகிறோம். தவறுகள் செய்து திருந்தக் கற்றுக்கொள்ள வேண்டியது வாழ்க்கை.
நான் என் தந்தையிடம் இப்படிச் சொல்வதுண்டு. “எனக்கு உபதேசம் செய்யாதீர்கள்; நான் கேட்டாலும் கூட. நீங்கள் இதில் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும், உன் சொந்த வழியை நீயே கண்டுகொள் என்று நீங்கள் சொல்லிவிட வேண்டும், உபதேசம் வேண்டாம்.”
ஏனென்றால் மலிவாக அறிவுரைகள் கிடைத்து விட்டால் யார் சொந்த வழி காண முயற்சி செய்வார்கள்? என் ஆசிரியர்களிடமும் இதைத்தான் தொடர்ந்து சொல்லி வந்தேன்.
“ஒன்றை மட்டும் மறந்து விடாதீர்கள். உங்களது ஞானம் எனக்குத் தேவையில்லை, பாடத்தை மட்டும் நடத்துங்கள். நீங்கள் நிலநூல் ஆசிரியர், ஏன் எனக்கு ஒழுக்கம் பற்றிப் போதிக்கிறீர்கள். நிலநூலுக்கும், ஒழுக்கத்திற்கும் என்ன தொடர்பு?” என்பேன்.
மேலும் “என் வாழ்வை என் சொந்த வழியில் ஆராய்ந்து கொள்கிறேன். என் தவறுகளை நான் ஒப்புக்கொள்கிறேன். தப்புத்தவறுகளை நான் செய்யவே விரும்புகிறேன். கற்று கொள்வதற்கு அது ஒன்றுதான் வழி” என்று சொல்லிவிடுவேன்.
ஓஷோவின் ஒரு மறைஞானியின் சுயசரிதை என்ற நூலில் இருந்து....

நாட்டில் பணக்காரர்கள் பல பேர் இருக்கிறார்கள். அவர்கள் பப்ளிசிடிக்காக சில சமயம் கோவில்களுக்குப் பணம் தான் நன்கொடையாகக் கொடுப்பார்கள். ஆனால்,யானை கொடுப்பதற்குப் பெரிய மனசு வேண்டும்.
‘திருவருட் செல்வர்’ படத்தில் அப்பராக வேடம் போடுவதற்கு தனக்கு இன்ஸ்பிரேஷன் காஞ்சி சங்கராச்சாரியார் தான் என்று நடிகர் திலகம் சிவாஜி ஒரு முறை குறிப்பிட்டிருந்தார். அதுபற்றி அவர் தனது “எனது சுயசரிதை” புத்தகத்தில் மேலும் இப்படி கூறுகிறார்...
‘எனக்கு ‘ காஞ்சி பரமாச்சாரியார் மீது மதிப்பும், பக்தியும் உண்டு. அதற்கு ஒரு காரணம் உண்டு. அது ஒரு முக்கியமான சம்பவம்.
ஒரு நாள், காஞ்சி பரமாச்சாரியார் அவர்கள் என்னை கூப்பிட்டு அனுப்பியதாக, சங்கமடத்திலிருந்து செய்தி வந்தது. அவர் மயிலாப்பூரில் உள்ள ஒரு மடத்தில் தங்கியிருந்தார்.
நான், எனது தாயார், எனது தந்தையார், எனது மனைவி நான்கு பேரும் சென்றோம். எங்களை உள்ளே ஒரு அறையில் உட்கார வைத்தார்கள். நாங்கள் ஒரு அரை மணி நேரம் உட்கார்ந்திருந்தோம்.
காஞ்சி முனிவர் அங்கே மக்களுக்கு உபன்யாசம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென லைட்டெல்லாம் அணைந்துவிட்டது. அவர் கையில் ஒரு சிறிய குத்து விளக்கை எடுத்துக் கொண்டு, மெதுவாகப் பார்த்துக் கொண்டே வந்தார். மெல்ல கீழே உட்கார்ந்து, கையைப் புருவத்தின் மேல் வைத்து எங்களைப் பார்த்தார்.
‘நீ தானே சிவாஜி கணேசன்?’என்றார்.
ஆமாங்கய்யா! நான்தான் என்று காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினேன். என் மனைவியும், பெற்றோர்களும் அவரை வணங்கினார்கள்.
அப்போது அவர், “உங்களைப் பார்த்ததில் மிகவும் சந்தோஷம். திருப்பதி சென்றிருந்தேன். அங்கு ஒரு யானை எனக்கு மாலை போட்டது. யானை நன்றாக இருக்கிறதே யாருடையது? என்றேன்.
‘சிவாஜி கொடுத்தது’ என்றார்கள்.
திருச்சி சென்றிருந்தேன். அங்கு திருவானைக் கோவிலுக்குப் போனேன். அங்கும் யானை மாலை போட்டது. யானை அழகாக இருக்கிறது. யானை யாருடையது? என்றேன்.
‘சிவாஜி கணேசன் கொடுத்தது’ என்றார்கள்.
தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் சென்றிருந்தேன். அங்கேயும் யானையை விட்டு மாலை போட்டார்கள். ‘இது யாருடையது?’ என்றேன்.
‘சிவாஜி கணேசன் கொடுத்தது’ என்றார்கள்.
நாட்டில் பணக்காரர்கள் பல பேர் இருக்கிறார்கள். அவர்கள் பப்ளிசிடிக்காக சில சமயம் கோவில்களுக்குப் பணம் தான் நன்கொடையாகக் கொடுப்பார்கள். ஆனால்,யானை கொடுப்பதற்குப் பெரிய மனசு வேண்டும். அந்த மனசு உனக்கிருக்கிறது. ஆகையால் உன்னைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். அவர்களுக்காக நான் பகவானைப் பிரார்த்தனை செய்கிறேன் என்று கூறி விட்டு எழுந்து சென்று விட்டார்.
அப்போது என் மனம் எப்படியிருந்திருக்கும்? எத்தனை அனுக்கிரஹம்! எண்ணிப் பாருங்கள். ஒரு வேளை, இந்தச் சம்பவம் என் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கலாம். பரமாச்சாரியாளை நான் கூர்ந்து கவனித்திருக்கிறேன். எனவே, அது ‘அப்பராக’ பிரதிபலித்திருக்கலாம்.

-மோகன்ராஜ்