என் மலர்

  மற்றவை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச் சென்றவர்களுக்கு ஆட்டுத்தலையை விற்பதில் எந்த சிக்கலும் இல்லை. பதிலுக்கு பண்டமும் கிடைத்தது.
  • புலியின் தலையை ஒரு பணக்காரர் தன் வேட்டை மாளிகையை அலங்கரிக்க அதை நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொண்டார்.

  அசோக சக்கரவர்த்தி குடிமைப் பணிகளைப் பார்வையிட்டு அரண்மனைக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

  போரே வேண்டாம்…

  போரோ மன்னனின் தொழில் என்றிருந்த அவர் புத்தரின் பாதையில் அன்பு வழி போதும் என மனதளவில் மாற்றம் அடைந்திருந்த நேரம் .

  இப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக துறவியும் அவரது சீடர்களும் மன்னருக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றனர்.

  அசோகரின் பார்வை ஒதுங்கி நின்ற துறவி மீது பட்டது. உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்று புத்த பிக்ஷுவின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். அவரது முடி துறவியின் காலில் பட்டது.

  ஒரு புன்னகையுடன் துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசீர்வதித்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சருக்கு ஒரே சங்கடம்.

  'எத்தனை பெரிய ராஜ்ஜியத்தின் அதிபதி… உலகமே வியக்கும் ஒரு பேரரசன் போயும் போயும் இந்த பரதேசியின் காலில் விழுந்து, முடியை வேறு காலில் பட வைத்துவிட்டாரே!' என்ற நினைத்து உள்ளுக்குள் கொஞ்சம் கோபமும் எரிச்சலும் அடைந்தார்.

  அரண்மனை சென்றதுமே அசோகரிடம் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரின் பேச்சைக் கேட்ட மன்னர் சிரித்தார். ஆனால் அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்கவில்லை. அவரிடமிருந்து ஒரு விசித்திர உத்தரவு வந்தது அமைச்சருக்கு.

  "மந்திரியாரே… ஓர் ஆட்டுத் தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை மூன்றும் எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்" என்றார் மன்னர்.

  நாம் சொன்னதென்ன…. இவர் உத்தரவென்ன…. என்ற திகைப்புடன் கட்டளையை சிரமேற்கொண்டு ஏவலாட்களை நாடெங்கும் அனுப்பினார்.

  ஆட்டுத் தலைக்கு அதிகம் கஷ்டப்படவில்லை. கறிக்கடையில் கிடைத்துவிட்டது.

  புலித்தலைக்கு ரொம்பவே அலைய வேண்டி வந்தது. கடைசியில் ஒரு வேட்டைக்காரனிடம் அது கிடைத்தது.

  ஆனால் மனிதத் தலை? உயிரோடிருப்பவனை வெட்டி தலையை எடுத்தால் அது கொலை… என்ன செய்யலாம் என யோசித்தபோது, வழியில் ஒரு சுடுகாடு தென்பட்டது. அங்கே புதைக்கக் கொண்டுவந்த ஒரு பிணத்தில் தலையை எடுத்துக் கொண்டனர்.

  மன்னரிடம் கொண்டு போனார்கள். மூன்று தலைகளையும் பார்த்த அசோக மன்னர் அமைச்சரிடம், "சரி, இம்மூன்றையும் சந்தையில் விற்று பொருளாக்கி வாருங்கள்," என்றார்.

  மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச் சென்றவர்களுக்கு ஆட்டுத்தலையை விற்பதில் எந்த சிக்கலும் இல்லை. பதிலுக்கு பண்டமும் கிடைத்தது.

  புலியின் தலையை ஒரு பணக்காரர் தன் வேட்டை மாளிகையை அலங்கரிக்க அதை நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொண்டார்.

  இப்போது மனிதத் தலைதான் மிச்சமிருந்தது.

  அதைப் பார்க்கவே யாரும் விரும்பவில்லை. அருவருத்து ஓடினர். வேறு வழியின்றி மனிதத் தலையுடன் அரண்மனைக்கே திரும்பினர் ஏவலாட்கள்.

  மன்னரிடம் போய், விவரத்தைச் சொன்னார் அமைச்சர்.

  "அப்படியா… சரி, யாரிடமாவது இலவசமாகக் கொடுத்துவிட்டு வந்துவிடுங்கள்", என்றார் மன்னர்.

  ஒரு நாளெல்லாம் அலைந்தும் இலவசமாகக் கூட அதனை பெற்றுக்கொள்ள யாருமே முன் வரவில்லை.

  விஷயத்தைக் கேட்ட அசோக மன்னர் புன்சிரிப்புடன் இப்படிக் கூறினார்:

  "மந்திரியாரே… நீங்கள் தெரிந்து கொண்டது என்ன?" என்றார்.

  அமைச்சர் மவுனம் காத்தார்.

  "மனிதனின் உயிர் போய்விட்டால் இந்த உடம்புக்கு மரியாதை ஏது? சக மனிதன்தானே… வாங்கி வைத்துக் கொள்ளலாம் அல்லவா…

  ஆனால் நடைமுறையில் இலவசமாகக் கொடுத்தாலும் அருவருத்து ஓடுகிறார்கள்… இதை யாரும் தொடக்கூட மாட்டார்கள்.

  இருந்தும் இந்த உடம்பு உயிரும் துடிப்புமாக உள்ளபோது என்ன ஆட்டம் ஆடுகிறது!

  செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும்.

  ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது. தம்மிடம் எதுவும் இல்லை என்றுணர்ந்தவர்கள்தான் ஞானிகள். அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதே ஞானத்தைப் பெறும் முதல் வழி..!" என்றார்.

  அமைச்சர் தலை கவிழ்ந்து நின்றார்!

  - ஆனந்த்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சிறு வயதில் இருந்தே உடற்பயிற்சி செய்தால், எலும்புக்கு நல்ல வலிமை கிடைக்கும்.
  • எலும்பின் அடர்த்தி அதிகரிக்க, எலும்புகளுக்கு அவ்வப்போது உடற்பயிற்சி, உடல் உழைப்பு என வேலை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

  நமது எலும்புதான் ஆரோக்கியமான உடலின் அஸ்திவாரம். நாம் நிற்க, உட்கார, நடக்க, ஓட என துடிப்பான எந்தச் செயலைச் செய்யவும் எலும்புகள் உறுதியாக இருப்பது அவசியம். வயது அதிகமாகும்போது எலும்புகள் பலம் குறையும். எலும்புகள் தேய்மானம் அடைகின்றன.

  இதனால்…நடப்பதற்கு சிரமம், கூன் விழுவது, மூட்டு வலி உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்படும்.

  எலும்பு ஆரோக்கியமாக, வலிமையாக இருக்க 10 அருமையான வழிகள் பற்றிதான் இங்கே பார்க்கபோகிறோம்.

  1. எலும்புகளுக்கு எந்த அளவுக்கு கால்சியம் அவசியமோ, கால்சியத்தைக் கிரகிக்க வைட்டமின் டி-யும் அவசியம். வைட்டமின் டி, நம் உடலில் உள்ள தசைகள் வலிமை பெறுவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதற்கு தினமும் காலை மற்றும் மாலை வேளையில் அரை மணி நேரம் சூரிய ஒளி நம் சருமத்தில் பட்டாலே, வைட்டமின் டி கிடைத்துவிடும்.

  2. கொள்ளில் சோயாவுக்கு இணையாக கால்சியம் நிறைந்து உள்ளது . எலும்பு உறுதிக்குக் கொள்ளு மிகவும் அவசியம். 70 வயதுக்கு மேற்பட்டவர்கள், சைவம் சாப்பிடுபவர்கள் கொள்ளு ரசம் வைத்துக் குடித்துவந்தால் எலும்பு வலுவாகும்.

  3. மீன் சாப்பிடுவதாலும் எலும்பு ஆரோக்கியமாக இருக்கும். மீனில் வைட்டமின் பி மற்றும் இ, கால்சியம், இரும்பு, மக்னீசியம் அடங்கியுள்ளன... அதேபோன்று பெரும்பாலான தாது சத்துக்கள் முட்டையில் உள்ளது. இயற்கையாக கிடைக்கும் வைட்டமின் டி முட்டையில் கிடைக்கிறது.மேலும் முட்டையில் உள்ள புரதம் மற்றும் வைட்டமின் சத்துக்கள் எலும்பு மற்றும் தசைகளை வலிமை பெறச் செய்கின்றன.

  4. ஆரஞ்சுப் பழத்தில், கால்சியம் மற்றும் வைட்டமின் சி நிறைவாக உள்ளன. இதுவும், எலும்புக்கு வலிமை தரும். வைட்டமின் சத்துக்கள் நிறைந்த பழங்கள் சாப்பிடுவதாலும், எலும்புகளுக்கும் தசைக்கும் வலிமை கிடைக்கும்.

  5. உடலை வலுவாக்கும் உன்னதமான சிறுதானியம் உளுந்து. இதில் புரதம், மாவுச்சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. உளுத்துப்போன உடல் உறுப்புகளை வளர்க்கும் ஆற்றல் உடையதால் தான் உளுந்து எனப்பெயர் பெற்றது எனக் கூறுவார்கள். அதனால் வாரம் ஒரு முறையாவது உளுந்தை கஞ்சியாகவோ களியாகவோ கட்டாயம் சாப்பிட வேண்டும்.

  6. முருங்கை கீரை எலும்புகளுக்கு பலம் தரும் மருந்தாகிறது. இது கால்சியம், இரும்பு, வைட்டமின் ஏ, சி, டி மற்றும் நார்சத்துக்களை உள்ளடக்கியது. எனவே அடிக்கடி முருங்கை கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

  7. கேழ்வரகு 100 கி கேழ்வரகில் 35 மி.கி கால்சியம் உள்ளது. அவ்வப்போது ராகி கஞ்சி, எண்ணெய் அதிகம் சேர்க்கப்படாத ராகி தோசை சாப்பிடலாம்.

  8. கார்பனேட்டட் குளிர் பானங்களில் அளவுக்கு அதிகமான பாஸ்பேட் இருக்கும். இது எலும்புகளை சிதைத்து விடும். இத்தகைய பானங்களைத் தவிர்த்து ஆரோக்கியமான பானங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

  9. பால் சாப்பிட்டால் எலும்பு நல்ல வலிமை பெறும். பாலில் கால்சியம் அதிகம் உள்ளது. இதனால், எலும்புக்குத் தேவையான சக்தி கிடைக்கும். மேலும், பாலில் வைட்டமின்கள், புரதம் மற்றும் பொட்டாசியம் உள்ளன. இவை அனைத்தும் ஆரோக்கியமான எலும்புக்கு உதவிபுரிகின்றன.

  10. சிறு வயதில் இருந்தே உடற்பயிற்சி செய்தால், எலும்புக்கு நல்ல வலிமை கிடைக்கும். எலும்பின் அடர்த்தி அதிகரிக்க, எலும்புகளுக்கு அவ்வப்போது உடற்பயிற்சி, உடல் உழைப்பு என வேலை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

  இந்த 10 வழிகளையும் பின்பற்றினால் எலும்பில் பிரச்சனை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.

  -வைத்தியர் யாஸீன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மகன் ஆளுமை செலுத்துவது எப்படி தந்தைக்கு ஆபத்தாகும் என்றால், ஒருவன் நாட்டிற்கு இராஜா ஆக வேண்டும் என்றால் முதலில் அவன் தந்தைக்கு ஓய்வு தர வேண்டும்.
  • சித்திரையில் பிறக்கும் ஆண் பிள்ளைகள் எந்த அளவிற்கு வளர்ச்சியின் உச்சிக்கு செல்கிறதோ அந்த அளவிற்கு அவனின் தந்தை வீழ்ச்சியின் உச்சிக்கே சென்று விடுவார்.

  சித்திரையில் ஆண் பிள்ளைகள் பிறந்தால் தகப்பனுக்கு ஆகாது. அந்த பிள்ளை தலை எடுக்கும் போது தகப்பனின் தலை சாயகூடும். ஆகையால் தான் ஆடியில் திருமணமும் செய்வதில்லை, தம்பதிகளையும் பிரித்து விடுகின்றனர் என்று கூறுகின்றனர். இந்த கூற்றுக்கு ஏற்றார் போல "சித்திரை அப்பன்தெருவிலே" என்று ஒரு பழமொழியே உள்ளது.

  வான்மண்டலத்தில் சூரியன் தனது முழு சக்தியை வெளிப்படுத்தும் மாதம்(உச்சம்) சித்திரை. அந்த மாதத்தில் பிறக்கும் அனைத்தும் ஆளுமை செலுத்தும் என்பதே மறுக்க முடியாத உண்மை. காரணம் ஆளுமை திறன் என்பது சூரியனின் குணம்.

  அதாவது சித்திரையில் பிறக்கும் ஆண் பிள்ளைகள் இயற்கையாகவே ஆளுமை திறனோடு தான் பிறக்கும். ஆகையால் தான் அது அவனின் தந்தைக்கு ஆபத்தாகிவிடுகிறது.

  மகன் ஆளுமை செலுத்துவது எப்படி தந்தைக்கு ஆபத்தாகும் என்றால், ஒருவன் நாட்டிற்கு இராஜா ஆக வேண்டும் என்றால் முதலில் அவன் தந்தைக்கு ஓய்வு தர வேண்டும். ஒரு உரையில் இரண்டு கத்திகள் இருக்கக்கூடாது என்பதே விதி. ஆகையால் தான் சித்திரையில் பிறக்கும் ஆண் பிள்ளைகள் எந்த அளவிற்கு வளர்ச்சியின் உச்சிக்கு செல்கிறதோ அந்த அளவிற்கு அவனின் தந்தை வீழ்ச்சியின் உச்சிக்கே சென்று விடுவார்.

  ஆனால் அவர்கள் சொல்வது போல உயிர் பலி கேட்பதற்கு எல்லாம் வாய்ப்பு மிக மிக குறைவு. ஒருவேளை அக்குழந்தை ஆயிரத்தில் ஒருவன், லட்சத்தில் ஒருவன், கோடியில் ஒருவன் போன்ற நிலைக்கு உயருமேனில் அப்படி நடக்க வாய்ப்புள்ளது. அதுவும் 100% கிடையாது.

  இன்னும் புரியும் படி சொல்ல வேண்டும் என்றால் உங்கள் பலம் கூட கூட உங்கள் தந்தையின் பலம் குறைந்துவிடும். நீங்கள் ஒரு தலைவனை போல உங்கள் குடும்பத்தை வழிநடத்துவீர்கள். உங்கள் தந்தை ஒரு பிள்ளையை போல உங்கள் நிழலில் வாழ தொடங்கிவிடுவார், அவ்வளவுதான்.

  ஆனால் இவ்விதி பெண்பிள்ளைகள் பிறந்தால் பொருந்தாது. காரணம் சூரியன் என்ற கிரகத்தை குறிக்கும் உறவு காரகத்துவங்கள் யாதெனில் தந்தை மற்றும் மூத்த மகனே. ஆகையால் சித்திரையில் பெண்பிள்ளைகள் பிறந்தால் தகப்பனுக்கு நன்மையே அன்றி தீமை கிடையாது.

  ஆடியில் ஒரு ஆணும் பெண்ணும் சேர்வதும் சித்திரையில் ஆண்குழந்தை பிறப்பதும் ஒரு தந்தைக்கு வேண்டுமானால் பெரிதளவு நன்மையில்லாமல் இருக்கலாம். ஆனால் பிறக்கும் அக்குழந்தைக்கு அது நன்மையே.

  என்னதான் நாம் தவிர்த்தும் பிரித்தும் வந்தாலும் இதை எல்லாம் மீறி சிலர் ஆடியில் சேர தான் போகிறார்கள், சித்திரையிலும் குழந்தை பிறக்க தான் போகிறது. காரணம் இயற்கையின் கட்டமைப்பு அப்படி. அதை மீற இங்கு யாரால் முடியும்?

  -கோகுல மணிகண்டன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கான கார்களைத் தயாரித்து அவர்கள் நாடு உட்பட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன.
  • ஏன்? அவர்களின் நாடுகளில் அவற்றை உற்பத்தி செய்ய முடியாதா? இடம்தான் இல்லையா? உண்டு.

  ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத நீரே மறை நீர். இது ஒரு தத்துவம், பொருளாதாரம்.

  வளைகுடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தண்ணீர் பற்றாக்குறை கொண்டவை. ஐரோப்பிய நாடுகள் மறைநீர் தத்துவத்தைப் பின்பற்றுபவை என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.

  சரி, சராசரியாக 60 கிராம் கொண்ட ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 196 லிட்டர் மறை நீர் தேவை. மூன்று ரூபாய் முட்டை 196 லிட்டர் தண்ணீரின் குறைந்தபட்ச விலைக்குச் சமம் என்பது எந்த ஊர் நியாயம்? முட்டையினுள் இருக்கும் ஒரு கிராம் புரோட்டீனுக்கு 29 லிட்டர் மறை நீர் தேவை. ஒரு கிலோ பிராய்லர் கோழிக் கறி உற்பத்திக்கான மறை நீர் தேவை 4325 லிட்டர்.

  சென்னை கதைக்கு வருவோம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கான கார்களைத் தயாரித்து அவர்கள் நாடு உட்பட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. ஏன்? அவர்களின் நாடுகளில் அவற்றை உற்பத்தி செய்ய முடியாதா? இடம்தான் இல்லையா? உண்டு. இங்கு மனித சக்திக்கு குறைந்த செலவு என்றால், நீர்வளத்துக்கு செலவே இல்லை. 1.1 டன் எடை கொண்ட ஒரு கார் உற்பத்திக்கான மறை நீர் தேவை நான்கு லட்சம் லிட்டர்கள்.

  இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருட்களில் 72 % வேலூர் மாவட்டத்தில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 5,500 கோடி ரூபாய்க்கு தோல் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன. ஒரு எருமை அல்லது மாட்டின் ஆயுள்கால மறை நீர் தேவை 18,90,000 லிட்டர். 250 கிலோ கொண்ட அக்கால்நடையில் இருந்து ஆறு கிலோ தோல் கிடைக்கும்.

  ஒரு கிலோ தோலை பதனிட்டு அதனை செருப்பாகவோ கைப்பையாகவோ தயாரிக்க 17,000 லிட்டர் மறை நீர் தேவை.

  பனியன், ஜட்டி உற்பத்தியில் முதலிடம் திருப்பூருக்கு. ராக்கெட் தயாரிக்கும் வல்லரசுகளுக்கு ஜட்டி தயாரிக்க தெரியாதா? 250 கிராம் பருத்தி உற்பத்திக்கான மறை நீர் தேவை 2495 லிட்டர்கள். ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க 10,000 லிட்டர் மறை நீர் தேவை.

  இப்படி எல்லாம் முட்டையில் தொடங்கி கார் வரைக்கும் கணக்கு பார்த்தால் நாட்டின் வளர்ச்சி என்னவாவது? நாம் என்ன கற்காலத்திலா இருக்கிறோம் என்கிற கேள்விகள் எழாமல் இல்லை. கண்ணை மூடிக்கொண்டு பொத்தாம்பொதுவாய் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய வேண்டாம் என்கிறது மறை நீர் பொருளாதாரம்!

  -அம்ரா பாண்டியன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வனத்தில் புலிகளின் இயற்கையான இரை விலங்குகள் குறையும் போது மேய்ச்சலுக்கு வரும் மாடுகளை வேட்டையாடுவது நடக்கும் வாய்ப்புகள் அதிகம்.
  • இரை விலங்குகள் குறைய மனிதர்கள் வேட்டையாடுவது, வனத்தின் இயல்பான சூழல் மாற்றம், தண்ணீர் பற்றாக்குறை என சில காரணங்கள் உண்டு.

  புலிகள் இருக்கும் காடுகளில் மனிதன் நடமாட்டம் இருக்காது. அதனால் மரங்கள் வெட்டப்படமாட்டாது. மரங்களின் அடர்த்தி அதிகமாக இருக்கும்போது பறவை முதல் அனைத்து விலங்குகளும் அங்கே வாழத்தொடங்கும். இது ஒரு சங்கிலி தொடர்போல் இருக்கும். ஒன்றை ஒன்று சார்ந்தது.

  காடுகளை நம்மை சுற்றியிருக்கும் அரண்போல மனதில் நிறுத்திப் பாருங்கள். இந்தக் காடுகள் இன்றுவரை பிழைத்திருக்க புலிகளே காரணம். இல்லை என்றால் என்றோ அழித்து ஒழித்து இருப்போம். நமக்கு கிடைக்கும் தண்ணீர் முதல், காற்று வரை காடுகளில் இருந்து தான் கிடைக்கிறது.

  ஒரு புலி ஒரு வருடத்தில் சுமார் 45 முதல் 55 வரையிலான இரை விலங்குகளை உணவாகக்கொள்ளும். இரை விலங்குகளின் எண்ணிக்கையை சரியான அளவில் வைத்திருக்க கொன்றுண்ணிகள் பெரும் உதவி செய்கின்றன. இரை விலங்குகள் பெருகி, வேட்டை விலங்குகளின் எண்ணிக்கை குறைந்தால் காடுகளின் தரம் வெகுவாக குறையும். இறுதியில், அனைத்தையும் இழக்க வேண்டி வரும். சமநிலை இருப்பது மிக முக்கியம்.

  வனத்தில் புலிகளின் இயற்கையான இரை விலங்குகள் குறையும் போது மேய்ச்சலுக்கு வரும் மாடுகளை வேட்டையாடுவது நடக்கும் வாய்ப்புகள் அதிகம். இரை விலங்குகள் குறைய மனிதர்கள் வேட்டையாடுவது, வனத்தின் இயல்பான சூழல் மாற்றம், தண்ணீர் பற்றாக்குறை என சில காரணங்கள் உண்டு. இது போன்ற காரணங்களால் உணவில்லாமல், வேறிடம் செல்லவும் வழி இல்லாமல் ஒரு பகுதியில் உள்ள மொத்த புலிகளும் தனிமைப்பட்டு முற்றிலும் அழிந்து போகும் நிலை உருவாகலாம்.

  அழிந்து போனால் என்ன.. நல்லது தானே என்று நீங்கள் நினைத்தால், உங்களை சுற்றியுள்ள வனங்கள் தங்கள் இயல்புகளை இழந்து விட்டன என்பதையும் மனதில் கொள்ளுங்கள். வனத்தின் இயல்புகள் தொலைந்தால் அது நம் வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகளை உண்டாகும் என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

  -ஆற்றல் பிரவீன்குமார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இரும்புச்சத்தின் குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகையே மிக அதிகம்.
  • சிலருக்கு விட்டமின் பி12 எனும் சத்து குறைபாட்டால் ரத்த சோகை ஏற்படும்.

  நமது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவுகள் சரியாக இருக்க வேண்டும் என்பது ஆண்களுக்கு 14 கிராம் முதல் 16 கிராம் வரை

  பெண்களுக்கு 12 கிராம் முதல் 14 கிராம் வரை இருக்க வேண்டும்.

  இரும்பும் புரதமும் கலந்த கலவையே ஹீமோகுளோபின்.

  இந்த ஹீமோகுளோபின் என்பது ரத்த ஆற்றில் ஓடும் படகைப்போன்றது.

  இந்த படகின் மூலம் தான் நுரையீரலில் இருந்து ஆக்சிஜன் எனும் உயிர்வளிக்காற்று உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லையும் சென்று சேர்கிறது.

  நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு கணமும் நமது உடலில் இருக்கும் ட்ரில்லியன் கணக்கான செல்களும் சேர்ந்தே சுவாசிக்கின்றன.

  இப்படித்தான் மூளைக்கும் ஆக்சிஜன் செல்கிறது. மூளை எனும் தலைமைச்செயலகம் சிறப்பாக இயங்குகிறது.

  இத்தனை இன்றியமையாத ஹீமோகுளோபின் ஏன் குறைகிறது?

  நிலத்தடி நீர் மட்டம் ஏன் குறைகிறது? என்று கேட்டால் நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள். மழை பொய்த்து விட்டது என்று தானே. நிலத்தடி நீர் ஊற மழை பொழிய வேண்டும். அதுபோல ஹீமோகுளோபின் ரத்தத்தில் சரியாக இருக்க, நாம் உணவு வழி இரும்புச்சத்தை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

  இரும்புச்சத்தின் குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகையே மிக அதிகம்.

  சிலருக்கு விட்டமின் பி12 எனும் சத்து குறைபாட்டால் ரத்த சோகை ஏற்படும்.

  மூலம் போன்ற நோய்களால் மலத்தில் ரத்தம் வெளியேறுவது, காச நோயில் இருமும் போது சளியுடன் ரத்தம் வெளியேறும்.

  இந்திய துணைக் கண்டத்தில் ரத்த சோகைக்கு முக்கிய காரணமாக குடலில் தங்கி நம் ரத்தத்தை குடித்து வாழும் குடற்புழு நோயால் ரத்த சோகை ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

  ரத்த சோகை யாருக்கு அதிகமாக வரும்?

  வேறு யாருக்கு பெண்களுக்கு அதுவும் வளர் இளம் பெண்களுக்குத் தான்.

  ஏன்?

  பிரதிமாதம் இயற்கையாக நிகழும் மாதவிடாய் உதிரப்போக்கு மற்றும் அதை ஈடு செய்ய சரியான அளவு இரும்புச்சத்தை உண்பதில்லை போன்றவையே முதன்மை காரணங்கள்.

  இந்த ரத்த சோகையின் அறிகுறிகள் தான் என்ன?

  1.சோர்வு

  2.உடல் வலி

  3.எப்போதும் தூங்கி வழிந்தது போல் காணப்படுவது.

  4.எதையோ இழந்ததைப் போல இருப்பது

  5. முகம் வெளிறிப்போய் காணப்படுவது

  (இதை பெண்கள் தாங்கள் வெள்ளையாகி விட்டோம் என்று எண்ணி சந்தோசப்படுவார்கள்)

  6. மாதவிடாய் போக்கு குறைதல்

  ரத்த சோகை வராமல் தடுப்பது எப்படி ?

  இரும்புச்சத்து மற்றும் விட்டமின் பி12 ஆகிய இந்த இரண்டையும் சரி வர எடுப்பது ரத்த சோகையை வராமல் செய்யும்.

  மாமிசம் உண்பவர்களுக்கு சிறந்த இரும்புச்சத்து அடங்கிய உணவு ஈரல்/ சுவரொட்டி ஆகும்.

  உங்களுக்கு பிடித்த எந்த விலங்கின் ஈரலை உண்டாலும் உங்களுக்குத் தேவையான இரும்புச்சத்து கிடைக்கும்.

  வாரம் ஒரு முறை அல்லது இருமுறை நூறு கிராம் ஈரல் எடுக்கலாம்.

  மாமிசத்தில் விட்டமின் பி12 உண்டு. இதை இரண்டையும் சரியாக எடுக்கும் அசைவ உண்ணிகளுக்கு நோ ப்ராப்ளம்.

  முட்டை மட்டும் உண்பவர்களுக்கு முட்டை மஞ்சள் கருவில் இரும்புச்சத்து இருக்கிறது.

  மரக்கறி உண்பவர்களுக்கு தங்களின் உணவில் கீரை வகைகளை அதிகம் எடுக்க வேண்டும்.

  காய்கறிகள் செய்யும் போது இரும்பு வாணலியில் சமைப்பது சிறந்தது.

  பீன்ஸ், ஆப்பிள், வாழைப்பழம், உலர் திராட்ச்சை, பேரீச்சம் பழம், நட்ஸ் வகைகள் போன்றவற்றில் இரும்பு இருக்கிறது.

  இருப்பினும் வருடம் இருமுறை ஹீமோகுளோபின் செக் செய்து குறைந்தால் சப்ளிமெண்ட் எடுப்பது சிறந்தது.

  வளர் இளம்பெண்கள் குடற்புழு நீக்க மாத்திரை வருடம் இருமுறை எடுக்க வேண்டும்.

  ஏன் இத்தனை கவனமாக ரத்த சோகையை சரி செய்ய வேண்டும் தெரியுமா?

  இன்றைய வளர் இளம்பெண்டிர் தான் நாளைய தாய்மார்கள்.

  ஆண்கள் அனைவரும் நமது பொறுப்பிற்குட்பட்ட தாய்/அக்கா/தங்கை/மனைவி/ மகள் போன்றவர்களுக்கு அவ்வப்போது ஹீமோகுளோபின் எடுத்து சோதித்து வருவது நம் கடமை.

  காரணம் - ஒரு குடும்பத்தில் மிகவும் குறைவான மருத்துவ கவனிப்பு கிடைக்கும் பாலினம் - பெண்கள்.

  -டாக்டர். ஃபரூக் அப்துல்லா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பூமியிலிருந்து பார்த்தால் பிரகாசமாகத் தெரிகிற வெள்ளி கிரகத்திலும் கடும் வெப்பம். அத்துடன் அங்கு காற்று மண்டல அடர்த்தி மிக அதிகம். விண்கலம் போய் இறங்கினால் அப்பளம்போல நொறுங்கிவிடும்.
  • சூரிய மண்டலத்தில் உள்ள வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்கள் கடும் குளிர் நிலவும் வாயு உருண்டைகள். நிலம் என்பதே கிடையாது.

  பூமியின் அருமை பலருக்கும் தெரியாது. பூமியை விட்டுக் கிளம்பி வேறு கிரகங்களுக்குப் போய் பார்த்திருந்தால் ஆகா, நம் பூமி சொர்க்கம் போன்றது என்று கூறுவோம். ஆனால், மனிதன் இதுவரை பூமியை விட்டு வேறு எந்த கிரகத்துக்கும் சென்றது கிடையாது. சந்திரனுக்கு மனிதன் போயிருக்கிறான். ஆனால், சந்திரன் ஒரு கிரகம் அல்ல. சந்திரன் நமது பூமியின் அவுட் ஹவுஸ் மாதிரி.

  இது ஒரு புறம் இருக்க, அமெரிக்காவும் ரஷ்யாவும் அனுப்பியுள்ள ஆளில்லா விண்கலங்கள் சூரிய மண்டலத்தில் உள்ள எல்லா கிரகங்களையும் ஆராய்ந்து தகவல்களை அளித்துள்ளன.

  மனிதன் என்றாவது ஒருநாள் போய், தங்கி வாழக்கூடிய ஒரு கிரகம் உண்டு என்றால் அது செவ்வாய் கிரகம்தான். ஆனால் நீங்கள் செவ்வாய் கிரகத்தில் போய் இறங்கினால் இயல்பாக சுவாசிக்க முடியாது.

  செவ்வாயில் காற்று மண்டலம் உண்டு. ஆனால் அந்தக் காற்று மண்டலத்தில் கார்பன் டையாக்சைடு வாயுதான் அதிகம். மனிதனுக்குத் தேவையான ஆக்சிஜன் வாயு மிகக் குறைந்த அளவில்தான் உள்ளது. எனவே, ஆக்சிஜன் அடங்கிய குப்பியை முதுகில் கட்டிக்கொண்டு, மூக்கில் குழாயை மாட்டிக்கொண்டுதான் நடமாட வேண்டும்.

  செவ்வாயில் தண்ணீர் கிடையாது. அங்குமிங்கும் கிடைக்கும் ஐஸ் கட்டியை உருக்கிப் பயன்படுத்தியாக வேண்டும். விருப்பம்போல நடமாட முடியாது. விண்வெளியிலிருந்து பயங்கர வேகத்தில் வரும் விண்கற்கள் எந்த நேரத்திலும் தலை மீது வந்து விழலாம். தவிர, விசேஷ காப்பு உடைகளை அணிந்திருக்க வேண்டும். சூரியனிலிருந்தும் விண்வெளியிலிருந்தும் வரும் ஆபத்தான கதிர்கள் தாக்கலாம்.

  இப்படியெல்லாம் இருந்தும் செவ்வாய்க்கு விண்வெளி வீரர்களை அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. செவ்வாயின் கதை இப்படி என்றால் சூரியனுக்கு மிக அருகே உள்ள புதன் கிரகத்துக்குப் போவது பற்றிச் சிந்திக்கவே முடியாது. பகலில் 427 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் கடும் வெயில். இரவில் மைனஸ் 173 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் கடும் குளிர்.

  பூமியிலிருந்து பார்த்தால் பிரகாசமாகத் தெரிகிற வெள்ளி கிரகத்திலும் கடும் வெப்பம். அத்துடன் அங்கு காற்று மண்டல அடர்த்தி மிக அதிகம். விண்கலம் போய் இறங்கினால் அப்பளம்போல நொறுங்கிவிடும். சூரிய மண்டலத்தில் உள்ள வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்கள் கடும் குளிர் நிலவும் வாயு உருண்டைகள். நிலம் என்பதே கிடையாது.

  பூமியானது சூரியனிலிருந்து தகுந்த தூரத்தில் (15 கோடி கிலோ மீட்டர்) உள்ளது. எனவே, புதன் கிரகத்தில் உள்ளது போல கடும் வெயில் இல்லை. பூமியில் போதுமான ஆக்சிஜன் அடங்கிய காற்று மண்டலம் உள்ளது. தண்ணீரும் உள்ளது. எனவே, பூமியில் உயிரினம் சாத்தியமானது. செவ்வாய் போல இல்லாமல் பூமியானது தகுந்த பருமன் கொண்டது. எனவே, அது காற்று மண்டலத்தைக் கெட்டியாகப் பிடித்து வைத்துக் கொண்டுள்ளது. வடிவில் சிறியது என்பதால் செவ்வாய் தனது காற்று மண்டலத்தை இழந்து வருகிறது.

  பூமியின் காற்று மண்டலமானது சூரியனிலிருந்தும் விண்வெளியிலிருந்தும் வரும் ஆபத்தான கதிர்களைத் தடுத்து விடுகிறது. பூமிக்கு காந்த மண்டலம் உள்ளது. அதுவும் இதுபோன்ற கதிர்களைத் தடுக்கிறது. விண்வெளியிலிருந்து வரும் விண்கற்கள் பூமியின் காற்று மண்டலம் வழியே வரும்போது தீப்பிடித்து அழிந்துவிடுகின்றன. செவ்வாய் கிரகத்தில் அப்படி இல்லை.

  பூமி தனது அச்சில் தகுந்த வேகத்தில் சுழல்கிறது. அதனால் கடும் குளிரோ கடும் வெப்பமோ இல்லை. புதன் கிரகத்தில் பகல் என்பது மிக நீண்டது. இரவும் அப்படித்தான். செவ்வாயிலும் பூமியைப் போல ஒரு நாள் என்பது சுமார் 24 மணி நேரம். ஆனால், பூமியுடன் ஒப்பிட்டால் செவ்வாய் கிரகம் சூரியனிலிருந்து தள்ளி அமைந்துள்ளது. எனவே, குளிர் அதிகம்.

  பூமியின் காற்று மண்டலம் தகுந்த அடர்த்தி கொண்டது என்பதால் பூமியில் தண்ணீர் இருக்கிறது. உயிரின வாழ்க்கைக்குத் தண்ணீர் மிக அவசியம். செவ்வாய் கிரகத்தில் என்றோ தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதற்கான தடயங்கள் உள்ளன. ஆனால், இன்று செவ்வாயில் தண்ணீர் இல்லை.

  பூமியானது இயற்கையாக இதுபோன்ற பல சாதக நிலைகளைப் பெற்றுள்ளதால்தான் பூமியில் மனிதனும் பலவகையான விலங்குகளும், பறவைகளும், பூச்சிகளும், தாவரங்களும் வாழ முடிகிறது. அந்த அளவில் சூரிய மண்டலத்தில் பூமி ஒன்றுதான் உயிரினங்களின் சொர்க்கமாகத் திகழ்கிறது.

  -அருண் நாகலிங்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஐம்புலன்களுக்கும் உடலில் ஐந்து இடங்கள் இருப்பது போலவே, மனதுக்கும் உடலில் ஒரு குறிப்பிட்ட இடம் உண்டு.
  • புருவ மத்தியாகும். அதற்கு லலாடம், திருநாடு, சிற்றம்பலம், சிற்சபை எனப் பல பெயர்கள் உண்டு.

  மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகள் ஞானேந்திரியங்கள் ஆகும். இந்த ஐந்து புலன்களுக்கும் உடலில் ஐந்து இடங்கள், உண்டு.

  பரிணாமத்தில் கடைசிப் புலனாக, ஆறாவது புலனாக வந்தது மனமாகும். மற்ற ஐந்து புலன்களின் வேலைகளையும் தானே தனித்து ஒருங்கே செய்ய ஏற்பட்ட முழுமையான புலன் மனமே ஆகும்.

  ஐம்புலன்களுக்கும் உடலில் ஐந்து இடங்கள் இருப்பது போலவே, மனதுக்கும் உடலில் ஒரு குறிப்பிட்ட இடம் உண்டு. அது புருவ மத்தியாகும். அதற்கு லலாடம், திருநாடு, சிற்றம்பலம், சிற்சபை எனப் பல பெயர்கள் உண்டு.

  மனமானது தனக்கான இருப்பிடத்தை விட்டு எப்போதும் ஐம்புலன்களைப் பற்றி வெளியே ஓடிய வண்ணம் இருக்கிறது. ஆம். ஒவ்வொரு வினாடியும் மனம் வெளியே ஓடி ஏதாவது ஒன்றைப் பற்றிய வண்ணமே இருக்கிறது. இதுவே மனதின் இயல்பு.

  -தென்னம்பட்டு ஏகாம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர் இருப்பார். அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள் வழங்குவார்...
  • முக்கியமாக பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடமே கிடையாது. அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின் வசம்...

  உலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது. அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில்?

  பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது...

  ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல்.., இரண்டரை வயதில் ப்ரீ-கே.ஜி.., மூன்று வயதில் எல்.கே.ஜி., நான்கு வயதில் யு.கே.ஜி என்ற சித்ரவதை அங்கே இல்லை...

  ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை...

  ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவு தான். அந்த நேரத்திலும்கூட, படிப்புக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இசை, ஓவியம், விளையாட்டு மற்றும் பிற கலைகளுக்கும் முக்கியத்துவம் உண்டு...

  ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் ஓய்வறை இருக்கும். படிக்கப் பிடிக்கவில்லை அல்லது சோர்வாக இருக்கிறது என்றால், மாணவர்கள் அங்கு சென்று ஓய்வு எடுக்கலாம்...

  முக்கியமாக, பிராக்ரசு ரிப்போர்ட் தந்து பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லும் வன்முறை கிடையாது...

  கற்றலில் போட்டி கிடையாது என்பதால், தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மன உளைச்சல்கள் மாணவர்களுக்கு இல்லை...

  இவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப்படுவது இல்லை...

  மாணவர்களுக்கு எந்தப் பாடம் பிடிக்கிறதோ அதில் இருந்து அவர்களே வீட்டுப்பாடம் செய்து வரலாம்...

  ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர் இருப்பார். அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள் வழங்குவார்...

  முக்கியமாக பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடமே கிடையாது. அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின் வசம்...

  அனைவருக்கும் சம தரமுள்ள கல்வி என்ற உத்தரவாதம் உள்ளது...

  அதனால்தான் பின்லாந்தில் 99 சதவிகிதம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர்...

  அதில் 94 சதவிகிதம் பேர் உயர்கல்விக்குச் செல்கின்றனர்... 'டியூஷன்'என்ற அருவருப்பான கலாச்சாரம், அந்த நாட்டுக்கு அறிமுகமே இல்லை...

  தேர்வுகளை அடிப்படை முறைகளாக இல்லாத இந்தக் கல்வி முறையில் பயின்றுவரும் மாணவர்கள்தான், உலகளாவிய அளவில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றனர்...

  "இது எப்படி?" என்பது கல்வியாளர்களுக்கே புரியாத புதிர்...அந்தப் புதிருக்கான விடையை, ஐ.நா சபையின் ஆய்வு முடிவு அவிழ்த்தது...

  உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய தரவரிசை ஆய்வு ஒன்றை, ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடுகிறது. இதில் பின்லாந்து எப்போதும் முன்னணியில் இருக்கிறது...

  மகிழ்ச்சியின் நறுமணத்தில் திளைக்கும் குழந்தைகள், அறிவை ஆர்வத்துடன் சுவைப்பதில் புதிர் எதுவும் இல்லை...

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆண்டவன் என்றால் விரிந்தவன், எல்லையில்லாதவன் என்று பொருள்.
  • இந்த உலகம் முழுவதும் விரிந்து பரந்து ஒவ்வொரு பொருளிலும் நீக்கமற நிறைந்து இருப்பவன்.

  பிரபஞ்ச ரகசியங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டு இருக்கும் கடவுளின் பல்வேறு பெயர்களுக்கு உள்ளே எவ்வளவோ அதி சூட்சும ரகசியங்கள் மறைந்து இருக்கின்றன.

  கடவுளை நாம் 1. ஆதி 2. பகவன் 3. ஆண்டவன் 4. கடவுள் 5. இறைவன் 6. தெய்வம் 7. அநாதி 8. பிரம்மம் 9. பரம் 10. பூரணம் என பலவாறு அழைக்கிறோம். இந்த பெயர்களுக்குள் மறைந்திருக்கும் சூட்சுமமான ரகசியங்கள் அர்த்தங்கள் என்ன என்பதையும் பார்ப்போம்....

  ஆதி : ஆதி என்றால் முதல் நிலை, மூல நிலை, இருப்பு நிலை என்று பொருள். இந்த உலகம் அனைத்தும் தோன்றுவதற்கு முன்பு இருந்த நிலை. ஆதலால் முதல்நிலை என்றும், இந்த உலகம் அனைத்தும் தோன்றுவதற்கு மூல காரணமாக இருப்பதால் மூலநிலை என்றும், இந்த உலகம் அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்து ஆண்டு கொண்டு இருப்பதால் இருப்புநிலை என்றும், இந்த மூன்று அர்த்தங்களையும் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டு, இந்த உலகம் அனைத்தும் தோன்றுவதற்கு முன்பு இருந்த காரணத்தினால் ஆதி என்றும் அழைக்கப்படுகிறது.

  பகவன்: இலகு, பகு என்று இரண்டு வடமொழிச் சொற்கள் உள்ளன.

  இலகு - என்றால், சிறிய ,எளிய என்று பொருள்.

  பகு - என்றால், பெரிய, மதிப்புமிக்க என்று பொருள்.

  பகு + அவன் = பகவன். அதாவது பகவன் என்றால் பெரியவன், மதிப்பு மிக்கவன் என்று பொருள். பகவன் என்பது இறைவன் மிகப்பெரியவன் என்பதைக் குறிக்கிறது.

  குடும்ப அளவில் பெரியவன் என்றால் எல்லோரையும் விட மூத்தவன் என்று பொருள். உலக அளவில் பெரியவன் என்றால் உலகில் உள்ள அனைத்திற்கும் மூத்தவன், மூலநிலை என்று பொருள். அந்த மூலநிலையைத் தான் பகவன் என்ற சொல்லால் குறிப்பிடுகிறோம்.

  ஆண்டவன் : ஆண்டு + அவன் = ஆண்டவன்.

  ஈண்டு என்றால் இங்கே குறிப்பிட்ட எல்லைக்குள் என்று பொருள்.

  ஆண்டு என்றால் விரிந்த எல்லையில்லாத என்று பொருள்.

  ஆண்டவன் என்றால் விரிந்தவன், எல்லையில்லாதவன் என்று பொருள். அதாவது இந்த உலகம் முழுவதும் விரிந்து பரந்து ஒவ்வொரு பொருளிலும் நீக்கமற நிறைந்து இருப்பவன்.

  ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அடக்க முடியாதவன்.. ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் குறிப்பிட்டுக் காட்ட முடியாதவன்.. ஒரு குறிப்பிட்ட உருவத்திற்குள் அடக்கி வார்த்தைகளில் சொல்ல முடியாதவன் என்று பொருள்.

  கடவுள்: உயிரின் படர்க்கை நிலையான மனம், உயிராக ஒடுங்கி, உயிரே பரமாக, கடவுளாக மாறுவதைத் தான் கடவுள் என்ற சொல் குறிப்பிடுகிறது.

  கட+வுள் = கடவுள் அதாவது கடந்து கொண்டே உள்ளே செல்.

  மனதை அடக்கிக் கொண்டே உள்ளே சென்றால் மனதின் அடித்தளமாக இருப்பு நிலையாக உள்ள இறைவனைக் கண்டு கொள்ளலாம் என்பதே கட + வுள் = #கடவுள் என்பதாகும்.

  இறைவன்: இறைவன் என்றால் அரசன், தலைவன், அனைத்தையும் தன்னுள் அடக்கி ஆள்பவன் என்று பொருள். அதாவது உலகில் உள்ள அனைத்தையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்து இயக்க நிலை மாறாமல், இயக்க விதிப்படி ஆண்டு கொண்டிருப்பவன் என்று பொருள்.

  தெய்வம் : உலகில் இரண்டு நிலைகள் தான் உள்ளது. அ) நிகழ்ச்சி நிலை... ஆ)பொருள் நிலை.

  எது அசைந்து கொண்டிருக்கிறதோ எது தன்னுடைய நிலையில் மாற்றம் பெற்றுக் கொண்டிருக்கிறதோ அது நிகழ்ச்சி நிலை எனப்படும்.

  அசைவையும் மாற்றத்தையும் கழித்து விட்டால் எது எஞ்சி இருப்பாக இருக்கிறதோ அது தான் பொருள் நிலை.

  உடலை நெருப்பில் போட்டால் சாம்பலாகிப் போகிறது... சாம்பல் அணுவாகிப் போகிறது. அதைப் போல எல்லாப் பொருட்களும் ஆராய்ச்சிக்கு அகப்படாமல் அணு அணுவாகத் தேய்ந்து சுத்த வெளியில் கலந்து ஒன்றுடன் ஒன்றாகி நின்று விடுகிறது. தெய்வம் என்ற சொல்லே மருவி தெய்வம் என்று ஆயிற்று.

  அநாதி: அநாதி என்றால் ஆதாரம் இல்லாதது என்று பொருள்.

  புத்தகம் மேசை மீது இருக்கிறது.. மேசை பூமி மீது இருக்கிறது...பூமி வெட்ட வெளியில் இருக்கிறது.

  புத்தகத்திற்கு மேசை ஆதாரம்... மேசைக்கு பூமி ஆதாரம்... பூமிக்கு வெட்ட வெளி ஆதாரம்...வெட்ட வெளிக்கு ஆதாரம் என்ற ஒன்றும் இல்லாததால் அது அநாதி ஆயிற்று.

  அநாதை என்ற சொல்லில் இருந்து தான் அநாதி என்ற சொல்லே வந்தது. அநாதை என்றால் ஒரு பொருள் உருவாக காரணமானவர் யார் ? என்று தெரியவில்லை என்று பொருள்.

  கடவுளை யார் உருவாக்கினார்கள்? என்று தெரியாத காரணத்தினால் அதாவது தாய், தந்தை இல்லாத காரணத்தினால் கடவுளை அநாதி என்ற சொல்லால் குறிப்பிடுகின்றனர்....

  பிரம்மம்: பிரம்மம் என்றால் நித்தியமாயிருக்கின்ற என்று பொருள். அதாவது அழிவில்லாதது என்று அர்த்தம்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வீட்டில் வெள்ளி, செவ்வாய் மற்றும் முக்கிய நாட்களில் கலப்படமில்லாத சாம்பிராணியால் புகை போட வேண்டும்.
  • சாம்பிராணியில் வெட்டிவேரை போட்டு தூபமிட காரியசித்தி உண்டாகும்.

  உங்கள் வீட்டில் செல்வம் நிலைத்திருக்க வேண்டுமா? தினந்தோறும் இரவு 7 மணிக்கு இப்படி செய்யுங்கள்!

  வீட்டில் வெள்ளி, செவ்வாய் மற்றும் முக்கிய நாட்களில் கலப்படமில்லாத சாம்பிராணியால் புகை போட்டு வாருங்கள்.

  இது நாள் வரை உங்களை தொடர்ந்த துரதிர்ஷ்டம் விலகி விரய செலவுகள் கட்டுக்குள் வந்து வீட்டில் செல்வம் மென்மேலும் வளர வழிவகுக்கும்.

  அந்த சாம்பிராணியை எதனுடன் கலந்து போட்டால் என்னென்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.

  சாம்பிராணியில் தூபம் போட்டால் கண் திருஷ்டி, பொறாமை ஆகியவை நீங்கி முன்னேற்றம் கிடைக்கும்.

  சாம்பிராணியில் அகில் போட்டு தூபமிட குழந்தைபேறு உண்டாகும்.

  சாம்பிராணியில் தூதுவளையை போட்டு தூபமிட வீட்டில் தெய்வம் நிலைக்கும்.

  சாம்பிராணியில் சந்தனத்தை போட்டு தூபம் போட லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

  சாம்பிராணியில் அருகம்புல் பொடியை போட்டு தூபமிட சகல தோஷங்களும் நிவாரணம் ஆகும்.

  சாம்பிராணியில் வெட்டிவேரை போட்டு தூபமிட காரியசித்தி உண்டாகும்.

  சாம்பிராணியில் வேப்பிலையை போட்டு தூபமிட சகல நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

  சாம்பிராணியில் வெண்கடுகை போட்டு தூபமிட பகைமை விலகும்.

  சாம்பிராணியில் வெண்குங்கிலிய பொடியை போட்டு தூபமிட துஷ்ட சக்திகள் விலகும்.

  சாம்பிராணியில் ஜவ்வாதி போட்டு தூபமிட திடீர் அதிர்ஷ்டம் உருவாகும்.

  சாம்பிராணியில் வேப்பம்பட்டையை போட்டு தூபமிட ஏவல் பில்லி சூன்யம் ஆகியவை விலகும்.

  சாம்பிராணியில் நாய் கடுகை போட்டு தூபமிட துரோகிகள் நம்மை விட்டு விலக ஆரம்பிப்பார்கள்.

  சாம்பிராணியில் காய்ந்த துளசியை போட்டு தூபமிட்டால் காரியத்தடை மற்றும் திருமணத்தடை ஆகியவை விலகும்.

  சாம்பிராணியில் கரிசலாங்கண்ணி பொடியை போட்டு தூபமிட மகான்களின் ஆசிகள் கிடைக்கும்.

  சாம்பிராணியில் நன்னாரி வேரின் பொடியை போட்டு தூபமிட ஐஸ்வர்யம் கிடைக்கும்.

  சாம்பிராணியில் மருதாணி இலை பொடியை போட்டு தூபமிட மகாலட்சுமி வாசம் நிலைக்கும்.

  - வள்ளல் ராமமூர்த்தி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இருவரும் காதல் மணம் புரிந்தவர்கள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்லக்கூடியவர்கள்.
  • கண்களில் நீர் பொங்கியது. மனைவிக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்திருக்குமோ என்ற பீதியுடன் அவளைத் தேடினார்.

  கணவனுக்கும் மனைவிக்கும் இடையே கடுமையான சண்டை, வாக்குவாதம் முற்றிவிட்டது.

  "நீயெல்லாம் இருந்து என்ன ஆகப்போகிறது.. ஒரு வேலைக்கும் லாயக்கில்லாமல் இருப்பதைவிட ஒழிந்து தொலை!" என்று ஆவேசமாகத் திட்டிவிட்டு, அலுவலகத்துக்குச் சென்று விட்டார்.

  இத்தனைக்கும் இருவரும் காதல் மணம் புரிந்தவர்கள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்லக்கூடியவர்கள்தான்,

  கணவனின் மனக்குழப்பம் அப்படிப் பேசவைத்துவிட்டது. வீட்டில் நடக்க இருக்கும் விபரீதம் புரியாமல் அவர் பணியில் ஆழ்ந்து விட்டார்.

  மாலையில் வீடு திரும்பியபோது தெருவில் இருக்கும் சிறுவர்கள் வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டு மண்ணைக் கொட்டி விளையாடிக் கொண்டிருந்தனர்.

  வீட்டுக் கதவு 'ஆ'வென திறந்து கிடந்தது.

  திகைப்போடு வீட்டுக்குள் நுழைந்தால், களேபரம் நிகழ்ந்ததற்கான அறிகுறிகள் தென்பட்டன.

  தொலைக்காட்சியில் கார்ட்டூன் நிகழ்ச்சி சத்தமாக அலறிக் கொண்டிருந்தது.

  விளக்கு ஒன்று கீழே தள்ளி விடப்பட்டிருந்தது.

  தரை விரிப்பு ஒரு சுவரின் அருகே ஒழுங்கின்றி கிடந்தது.

  அறை முழுவதிலும் விளையாட்டு பொம்மைகளும் பல்வேறுபட்ட துணிகளும் இறைந்து கிடந்தன.

  சமையலறைக்குள் மெதுவாக எட்டிப் பார்த்தார்.

  சாமான் கழுவும் தொட்டியில் பாத்திரங்கள் நிறைந்திருந்தன. மேடையில் காலைச் சிற்றுண்டி சிந்திக் கிடந்தது.

  குளிரூட்டும் பெட்டியின் கதவு அகலமாக திறந்திருந்தது. அதில் இருந்த உணவு தரையில் சிந்தியிருந்தது.

  மேஜையின் அடியில் ஓர் உடைந்த கண்ணாடி தம்ளர் இருந்தது.

  பின் கதவின் அருகில் ஒரு மணல்மேடு காணப்பட்டது. ஏதோ நடத்திருக்கிறது.

  மதிய உணவு வேளைக்கு முன்பே தன் மனைவிக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்று உள்மனம் சொன்னது. கணவருக்குப் படபடப்பு அதிகமானது.

  ஹாலை ஒட்டி இருந்த குளியலறையை நோக்கித் திரும்ப அங்கும் அதிர்ச்சிக் காட்சிகள்.

  உள்ளே தண்ணீர் சொட்டும் சப்தம்... நிசப்தத்தை மேலும் திகிலாக்கியது.

  கதவைத் தாண்டி வெளியே வந்து தண்ணீர் குட்டை போல தேங்கிக் கிடந்தது.

  ஈரத்துண்டுகளும் தண்ணீரில் ஊறிப்போயிருந்த சோப்புக்கட்டியும், மேலும் பல விளையாட்டு பொம்மைகளும் குளியலறை தரை முழுவதும் சிதறிக் கிடந்ததைக் கண்டார்.

  கண்ணாடியின் மீதும் சுவர்கள் மீதும் பற்பசை பூசப்பட்டிருந்தது.

  'டாடி' என்ற குரல் கேட்டு, திடுக்கிட்ட அவர் தனது ஒன்றரை வயது மகன் பேஸ்ட்டைப் பிதுக்கி விளையாடிக்கொண்டிருப்பதை பார்த்ததும் அவனை அவசரமாகத் தூக்கி ஆழ்ந்த முத்தம் கொடுத்து அணைத்துக் கொண்டார்.

  கண்களில் நீர் பொங்கியது. மனைவிக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்திருக்குமோ என்ற பீதியுடன் அவளைத் தேடினார்.

  படுக்கையறையை நோக்கிப் பார்வை திரும்ப, அவசரமாக அதன் கதவைத் திறந்தார்.

  உள்ளே... முதுகுக்கு தலையணை கொடுத்து, ஒய்யாரமாக சாய்ந்திருந்த அவரது மனைவி, ஏதோ ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார்.

  'ஸ்வீட்டி' என்றார், உலர்ந்த நாக்குடன் அவரைப் பார்த்து புன்னகை புரிந்த மனைவி,

  "எப்போ வந்தீங்க" என்று கேட்டாள்.

  அதிர்ச்சியிலிருந்து மீளாத கணவர்,

  "இன்று வீட்டில் என்னதான் நடந்தது?" என்று கேட்டார்.

  மறுபடியும் சிரித்த மனைவி,

  "வீட்டிலே என்னதான் வெட்டி முறிச்சியோ.. என்று அலுவலகம் முடிந்து வந்தவுடன் நீங்கள் கேட்பது வழக்கம். இன்று ஒன்றும் வெட்டி முறிக்கவில்லை! அதுதான் நடந்திருக்கிறது" என்று கூறினாள்...

  செல்லாத காசிலும் செப்பு இருக்கும் என்பார்கள். யாரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது.

  இயல்பாக சில விஷயங்கள் நடந்து கொண்டிருப்பதாலேயே அவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ளாத குணத்தை மாற்றி கொள்ளுங்கள்.

  – (இராம்குமார் சிங்காரம் எழுதிய 'ஒரு கதை, ஒரு விதை' நூலிலிருந்து…)