என் மலர்
கதம்பம்
யார் கண்டது, அடுத்த நொடி நமக்கு என்ன நடக்கும் என்று, இந்த உலகமே ஒரு பெரிய விபத்தால் உருவானது தான்.
எல்லோருக்கும் எல்லாமும் அது அதற்கு உண்டான வயதில் கிடைப்பது அரிது.
ஒபாமா தனது 55-வது வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
ஆனால் டொனால்ட் டிரம்ப் தனது 70 வது வயதில் தான் அதிபர் ஆகிறார்.
பில்கேட்ஸ் தனது 30 களிலேயே உலகின் பெரிய செல்வந்தர் ஆனார்.
ஒருவருக்கு அவர் விரும்பிய வேலைவாய்ப்பு தானாகவே தேடி வருகிறது.
இன்னொருவருக்கோ எல்லா திறமைகள் இருந்தும் சரியான வேலையோ அல்லது தொழிலோ அமைவது இல்லை.
22 வயதில் தனது வியாபாரம் தொழிலில் கோடீஸ்வரரான ஒருவர் 45 வயதில் எல்லாம் இழந்து ஏழ்மை ஆகிறார்...
ஒருவர் 40 வயது வரை தன் தொழில் வியாபாரத்தில் சகல கஷ்ட நஷ்டங்களை அனுபவித்து 50-வது வயதில் கோடீஸ்வரர் ஆகிறார். எம்ஜியாருக்கு மொத்தம் 70 வயதுவரை வாழ்க்கை வரலாறு. அதில் முதல் 40 வயது வரை வாழ்க்கையில் பயங்கர கஷ்டம். கடைசி 30 வருடங்கள் சாகும்வரை ராஜயோக வாழ்க்கை.
சர்ச்சில் தனது 82 வது வயதில் History of English Speaking People என்ற புத்தகத்தை எழுதினார்.
பெர்னாட்ஷா தனது 93 வது வயதில் Pertouched Pepler என்ற நாவலை எழுதினார்.
வில்லியம் ஷேக்ஸ்பியர் தனது 50 வது வயதை தாண்டிய பிறகே 37 நாடகங்களை இயற்றினார்.

எனவே உங்களுக்கு ஒன்று கிடைத்து விட்டால் அது கிடைக்காமல் போராடும் மற்றவரை ஏளனம் செய்யாதீர்கள்.
உங்களை மற்றவரோடு சதா ஒப்பிட்டு உங்களிடம் இல்லாததை நினைத்து புலம்பாதீர்கள்.

எனவே எதிர்காலத்தில் நடக்க விருப்பதை எல்லாம் கட்டுப்படுத்த நினைப்பது முட்டாள்தனம்.
இங்கே இப்போது இந்த நொடியில் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்களோ அதை முழுமையாக விழிப்புணர்வுடன் செய்யுங்கள். அடுத்த நொடி நிச்சயம் அழகாய் மலரும்.
தேவைகளை நிச்சயம் பூர்த்தி செய்து கொள்ள முடியும்.
ஆனால் ஆசைகள் ஓட்டை குடம் போல எப்போதும் நிறைவு செய்ய முடியாது.
இது தான் வாழ்க்கை.
இதைப் புரிந்து கொண்டவர்கள் மட்டுமே மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.

தொண்பது முதலில் 90 என்னும் எண்ணைக் குறித்தது. அறுபது, எழுபது, எண்பது என்னும் பிற பத்தாம் இட எண்ணுப் பெயர்களுடன், தொண்பது என்பதை ஒப்புநோக்குக.
எண்ணுப்பெயர் ‘ஒன்பது’ (9) பற்றிய பாவாணரின் கருத்து விளக்கம் :-
தொண்டு : தொள் + து = தொண்டு.
தொள் = தொளை.
உடம்பின் தொளைகள் ஒன்பதாயிருத்தலின், தொண்டு என்னும் பெயர் ஒன்பதாம் எண்ணைக் குறிக்கக் கொள்ளப்பட்டது.
தொண்டு - தொண்டி = தொளை
ஒப்புநோக்குக: தொண்டை = தொளையுள்ளது.
ஒன்பதிற்கு முதலாவது வழங்கின பெயர் தொண்டு என்பது தான்.
தொண்டு + பத்து = தொண்பது
தொண்பது – தொன்பது – ஒன்பது.
தொண்பது முதலில் 90 என்னும் எண்ணைக் குறித்தது. அறுபது, எழுபது, எண்பது என்னும் பிற பத்தாம் இட எண்ணுப் பெயர்களுடன், தொண்பது என்பதை ஒப்புநோக்குக.
தொண்ணூறு என்னும் பெயர், முதலாவது 900 என்னும் எண்ணைக் குறித்தது.
தொண்டு + நூறு = தொண்ணூறு.
இதை அறுநூறு, எழுநூறு, எண்ணூறு என்னும் பிறமூன்றாம் இட எண்ணுப்பெயர்களுடன் ஒப்புநோக்குக.
தொள்ளாயிரம் அல்லது தொளாயிரம் என்பது, முதலாவது, 9000 என்னும் எண்ணைக் குறித்தது.
தொண்டு + ஆயிரம் = தொள்ளாயிரம் - தொளாயிரம்.
இதை ஆறாயிரம் ஏழாயிரம் எண்ணாயிரம் என்னும் பிற நாலாம் இட எண்ணுப் பெயர்களுடன் ஒப்புநோக்குக.
தொண்டு என்னும் பெயர் எங்ஙனமோ, தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே உலகவழக்கற்றது. ஆயினும், செய்யுள் வழக்கிலிருந்தது. தொல்காப்பியரே தம் நூலில் தொடைத் தொகை கூறுமிடத்து,
மெய்பெறு மரபிற் றொடைவகை தாமே
ஐயீ ராயிரத் தாறைஞ் ஞூற்றொடு
நொண்டு தலையிட்ட பத்துக்குறை எழுநூற்
றொன்பஃ தென்ப உணர்ந்திசி னோரே. (செய்.101)
என்று, தொண்டு என்னும் சொல்லை 9 என்னும் எண்ணைக் குறிக்க வழங்கியுள்ளார்.
“தொண்டுபடு திவ்வின்” (மலைபடு கடாம்.21) என்றார் பெருங்கெளசிகனாரும்.
எண்ணுப் பெயர்களுள் தொண்டு என்னும் ஒன்றாம் இடப்பெயர் வழக்கொழியவே, பத்தாம் இடப்பெயர் ஒன்றாம் இடத்திற்கும், நூறாம் இடப்பெயர் பத்தாம் இடத்திற்கும், ஆயிரத்தாம் இடப்பெயர் நூறாம் இடத்திற்குமாக ஒவ்வோரிடம் முறையே இறக்கப்பட்டன. பின்பு, ஆயிரத்தாம் இடத்திற்குப் பத்தாம் இடத்திலிருந்து ஒன்றாம் இடத்திற்கு இறங்கிவந்த ஒன்பது என்னும் பெயருடன், ஆயிரம் என்னும் பெயரைக் கூட்ட வேண்டியதாயிற்று.

எண் | பண்டைப்பெயர் | இற்றைப்பெயர் |
9 | தொண்டு | ஒன்பது (தொன்பது) |
90 | தொண்பது | தொண்ணூறு |
900 | தொண்ணூறு | தொள்ளாயிரம் |
9000 | தொள்ளாயிரம் | ஒன்பதினாயிரம் |
-தமிழ் நம்பி
சில காலத்திற்கு முன்னால் ஒரு மருத்துவக்கல்லூரி மாணவர், ஒரு நாயை மாடியில் இருந்து தூக்கி கீழே போட்டதைப் பார்த்திருப்பீர்கள். இது ஊடகங்களில் வைரலாக பரவியது.
இன்றைக்கு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களே ஆசிரியரை அவதூறாக பேசி தாக்க முற்படுவது, வகுப்பறையில் பாடம் நடத்தும் போது ஆட்டம் போடுவது, மேஜை நாற்காலிகளை போட்டு உடைப்பது, பள்ளி வளாகத்திலே புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற தகாத சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
இது போன்ற ஒழுக்கக்கேடான செயல்களில் மாணவர்கள் ஏன் ஈடுபடுகிறார்கள்..? இதனை தடுத்து அவர்களை நல்வழிபடுத்துவது எவ்வாறு? என்று பிரபல மனநல மருத்துவர் மா.திருநாவுக்கரசு அவர்களிடம் கேட்டோம். இதோ அவரின் பதில்...
உலகில் உள்ள மனிதர்களில் 10 சதவீதம் பேர் வித்தியாசமானவர்களாக தான் இருப்பார்கள். வேறுபட்டு இருப்பார்கள். இது அத்தனை ஜீவராசிகளுக்கும் பொருந்தும்.
இந்த பத்து சதவீதம்பேர் உலக வழக்கில் இருந்து மாறுபட்டுதான் சிந்தனை செய்வார்கள், மாறுபட்டு தான் செயல்படுவார்கள். இது காலம் காலமாக இருந்து வருகிறது. இதுநாள் வரை அந்த வித்தியாசங்களும் விகாரங்களும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. நாம் கேள்வி பட்டு மட்டுமே வந்தோம். இப்போது அவை பகிரங்கப்படுத்தப்பட்டு வெளிச்சத்துக்கு வந்து கொண்டு இருக்கின்றன.
மாணவர்களின் இது போன்ற ஒழுக்கக்கேடான செயல்கள் அரசுப்பள்ளிகளில் மட்டுமல்ல, தனியார் பள்ளிகளிலும் நடக்கிறது. இதில் என்னவொரு வினோதம் என்றால், இப்படி வித்தியாசமாக வேறுபட்டு நடப்பவர்கள், முதலில் மைனாரிட்டியாக இருந்தார்கள்.
இதனால் அவர்கள் தாங்களை வெளிப்படுத்திக்கொள்ள தயங்கினார்கள்.
இன்றைய சூழ்நிலையில் அதிலும் சமூக வலைதளங்கள் வந்த பிறகு, ஊடகங்கள் வந்த பிறகு எல்லாருமே பிரபலமாக வேண்டும் என்று நினைக்கத் தெடங்கிவிட்டார்கள். அதிலும் உடனே பிரபலமாக வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
பிரபலமாவதற்கு ஒரே வழி உழைத்து எதையாவது சாதிக்கணும். அது இன்றைக்கு மிக மிக கடினமானது. எனவே மிகவும் இலகுவான வழிமுறையில் பிரபலமாக எல்லா மக்களும் நினைக்கிறார்கள்.
சில காலத்திற்கு முன்னால் ஒரு மருத்துவக்கல்லூரி மாணவர், ஒரு நாயை மாடியில் இருந்து தூக்கி கீழே போட்டதைப் பார்த்திருப்பீர்கள். இது ஊடகங்களில் வைரலாக பரவியது.
நாயை மாடியில் இருந்து தூக்கிப்போட்டவர் எவ்வளவு கொடூரமானவர் என்று தான் நாம் நினைப்போம். அதனை படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டவரும் அதைவிட கொடூர மனம் கொண்டவர் தானே? இந்த மாதிரியான வக்கிர செயல்களையும் விகாரங்களையும் பகிரங்கப்படுத்த இப்போது துணிந்து விட்டார்கள்.
உதாரணமாக சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவிய பள்ளி மாணவர்களின் ஒழுக்கக்கேடான செயல்களை எடுத்துக்கொள்வோம். உலகம் முழுவதும் அதனை தெரிந்து கொண்டோமே. இது கோடி கொடுத்தாலும் முடியாத காரியம்.
இந்த மாதிரி தான் இப்போது சினிமா, பாடல், கவிதை, டான்ஸ், விமர்சனம் என அத்தனை விசயங்களையும் கையாளுகிறார்கள். அதற்கு இவ்வளவு லைக்ஸ் வந்தது என்று சாதனையாக சொல்லப்படுகிறது.
இதிலிருந்து ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். இதனை ஒரு வியாபார உத்தியாக பயன்படுத்துகிறார்கள்.
அன்றைக்கு குடும்பத்தில் பெரியவர்கள் பேப்பரை குழந்தைகளிடம் கொடுத்து படிக்க சொல்லுவார்கள். இன்றைக்கு அந்த மாதிரி படிக்க சொல்லக்கூடிய வகையில் செய்திகள் இல்லை. இப்போது நெறிமுறை தவறி நடக்கும் செயல்களையே ஊடகங்கள் மீண்டும் மீண்டும் போட்டு காட்டுகின்றன.
இன்றைக்கு எளிய முறையில், பெயர் கெட்டுபோனாலும் பராவாயில்லை. பிரபலமாக வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். இது போன்று நினைப்பதற்கு காரணம் ஒழுக்கக்கேடான செயல்களை ஊடகங்கள் பெரிதுபடுத்துவதுதான். இன்று அசிங்கம் என்பதே இல்லை. இது மாதிரியான செயல்களை செய்வது தங்கள் சுதந்திரம், உரிமை என்று எண்ணுகிறார்கள். ஒழுக்ககேடான செயல்களை தயக்கம் இல்லாமல் செய்வதில் கூச்சம் நாச்சம் இல்லாமல் போய்விட்டது.
இதனை நெறிபடுத்த வேண்டும் என்றால் கல்வி கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அந்த காலத்தில் மொழிப் பாடம் முக்கியமாக கருதப்பட்டது. தமிழ் வாத்தியார் முக்கியமான ஆசிரியராக இருந்தார். மொழிப் பாடத்தில் நற்பண்புகள், ஒழுக்கம், அறங்கள், நியாங்கள், கதை, கவிதை என வாழ்வியல் பாடங்கள் சொல்லி கொடுத்தார்கள்.
ஆனால் கடந்த 20 வருடங்களாக அறிவியல் பாடத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் மொழிப் பாடத்திற்கு கொடுக்கப்படவில்லை. அதனால் அறம் என்பது சுத்தமாக பள்ளிகளில் இல்லாமல் போய்விட்டது.
இதனால் இன்றைய தலைமுறையினரிடையே 'எப்படியாவது..' என்ற எண்ணம் மேலோங்கி விட்டது. எப்படியாவது மார்க் வாங்கிட வேண்டும்.. எப்படியாவது அந்த கல்லூரியில் இடம் வாங்க வேண்டும்.. எப்படியாவது வேலையில் சேரவேண்டும்.. என ஒவ்வொரு விசயத்திலும் இப்படி இருக்கிறார்கள்.
முதலில் 'இப்படிதான் படிக்க வேண்டும்.. இப்படி தான் வேலையில் சேரவேண்டும்.. இப்படி தான் வாழ வேண்டும்.. என்ற நெறிமுறை மக்கள் மனதில் இருந்தது. இன்று 'எப்படியாவது..' என்பது தான் மக்களின் தாரக மந்திரமாக உள்ளது.
இன்று எப்படியாவது பிரபலமாக வேண்டும் என்று நினைப்பதால் தான் அந்தரங்க ரகசியங்கள் கூட பகிரங்கமாகி விட்டது. இதுவெல்லாம் சமூக அவலங்கள்.
சட்டதிட்டங்களால் இதனை மாற்ற முடியாது. மாணவர்களுக்கு இளம் பருவத்திலேயே தகுந்த முறையில் கல்வி கூடங்களில் அறம் கற்றுத்தரப்பட வேண்டும். ஆனால் முதலில் லஞ்சம் கொடுப்பதே அங்கிருந்து தானே தொடங்குகின்றது. பிள்ளையார் சுழியே அங்கே தான். என்ன செய்வது?
பள்ளி இறுதி தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடையும் மாணவர்கள் என்ன சொல்லுகிறார்கள் தெரியுமா?
நான் மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்வேன் என்கிறார்கள். இன்னும் சிலர் நான் வக்கீலாகி ஏழை எளியோருக்கு தொண்டு செய்வேன் என்கிறார்கள். பலர் ஆசிரியராகி இலவச கல்வி அளிப்பேன் என்கிறார்கள்.
பிற்பாடு அவர்கள் அந்த நிலைக்கு வந்த பிறகு அப்படியா நடந்து கொள்ளுகிறார்கள்? அப்படி என்றால் நமது கல்வி முறையில், பயிற்சி முறையில் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று தானே அர்த்தம்.
பள்ளிகளில் அறிவியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து அறம் புறந்தள்ளப்பட்டுவிட்டது தான் இது போன்ற ஒழுக்கக்கேடான செயல்களுக்கு காரணம். அதனை களைய வேண்டும். அது ஒன்றே நல்ல சமுதாயத்தை உருவாக்கும்.

டாக்டர் மா.திருநாவுக்கரசு
மனநல மருத்துவர்
மனநல மருத்துவர்
வானொலி வீட்டுக்கு வீடு குடிகொண்டு உச்சத்தில் இருந்த அக்காலகட்டத்தில் தென்கச்சி சுவாமிநாதன் தொகுத்து வழங்கிய ஐந்து நிமிட நிகழ்ச்சி பட்டிதொட்டி எங்கும் ஒருசேர ஒலித்தது.
பெரும் நிலகிழாரான தென்கச்சி சுவாமிநாதனின் தந்தை மகன் படித்தால் விவசாயம் பார்க்க மாட்டான் என்றெண்ணி படிப்பை பள்ளியோடு நிறுத்த, மகனின் பிடிவாதம் காரணமாக படித்தாலும் விவசாய படிப்பாக படியென கூறி கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் சேர்த்துவிட்டார். பட்ட படிப்பை முடித்துவிட்டு திருநெல்வேலியில் விவசாய துறையில் வேலை செய்தார். பிறகு குடும்பத்தாரின் வேண்டுகோளுக்கிணங்க அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஊருக்கு திரும்பியவர் அங்கே பஞ்சாயத்து தலைவராகி 1977 வரை பணியாற்றினார்.
அந்த தருணத்தில் அகில இந்திய வானொலியில் விவசாய துறை சார்ந்த நிகழ்ச்சி நடத்த ஆட்கள் தேவை என்ற செய்தியை கேட்டு விண்ணப்பித்த அவருக்கு மீண்டும் அரசு வேலை கிடைத்தது. ஏழாண்டுகள் திருநெல்வேலி வானொலி நிலையத்தில் “வயலும் வீடும்” நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய அவர் 1984-ல் சென்னை வானொலி நிலையத்துக்கு பணிமாறுதலானார். 1988-ம் ஆண்டில் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
வானொலி வீட்டுக்கு வீடு குடிகொண்டு உச்சத்தில் இருந்த அக்காலகட்டத்தில் இவர் தொகுத்து வழங்கிய இந்த ஐந்து நிமிட நிகழ்ச்சி பட்டிதொட்டி எங்கும் ஒருசேர ஒலித்தது. நிகழ்ச்சி பிரபலமானது. தொடர்ந்து பதினான்கு ஆண்டுகளாக தினம் ஒரு தகவல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இவர் தனது பெயரையோ அடையாளத்தையோ ஒருமுறை கூட வெளிபடுத்திக் கொண்டதில்லை. கடிதம் எழுதும் பலரும் நிகழ்ச்சி நடத்துபவருக்கு எழுபது எண்பது வயதானவரோ என்ற அடிப்படையிலேயே கேள்வி கேட்டு எழுதுவார்களாம்.
தென்கச்சியாருக்கு பாடமெடுத்த எழுபது வயதை கடந்த ஆசிரியர் ஒருவரே “ஐயா உங்களது ஆசிர்வாதம் கிடைக்குமா?” என கேட்டு கடிதமெழுத... முகவரியை பார்த்துவிட்டு “ஐயா நான் உங்களிடம் பாடம் படித்த மாணவன், உங்களை விட சிறியவன்” என இவர் பதில் கடிதம் எழுத...
அதற்கு ஆசிரியரிடமிருந்து இப்படியானதொரு கடிதம் பதிலாக வந்ததாம். “படிக்கும் வயதில் உன் காது என் கைபிடியில் மாட்டிக் கொண்டு தவிக்கும். ஆனால் இன்றோ வானொலி மூலமாக என் போன்ற லட்சக்கணக்கானோரின் காதுகள் உன் குரல் வசம் சிக்கிக் கொண்டுள்ளன” என்று குறிப்பிட்டிருந்தாராம்!

- ஆனந்த் வாண்டையார்
அந்த காலத்தில் பெண்கள் தலையில் ஒரு படி அளவு கொண்ட பூவை சூடுவது வழக்கமான ஒன்றாக இருந்தது. இப்போது போல அந்த காலத்தில் கேஸ் ஸ்டவ் எல்லாம் கிடையாது.
தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட பழமொழிகளில்
“அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?” என்ற பழமொழியும் ஒன்று.
இந்த பழமொழிக்கு அர்த்தம் “அடுப்படியில் வேலை செய்யும் பெண்களுக்கு படிப்பு தேவையில்லை” என்றுதானே நீங்கள் நினைத்து இருப்பீங்க?
உண்மையில் இது தவறாக அர்த்தம்கொள்ளப்பட்டது.
பழமொழியின் உண்மையான அர்த்தம் இதோ:-
அந்த காலத்தில் பெண்கள் தலையில் ஒரு படி அளவு கொண்ட பூவை சூடுவது வழக்கமான ஒன்றாக இருந்தது. இப்போது போல அந்த காலத்தில் கேஸ் ஸ்டவ் எல்லாம் கிடையாது.
அனைவருமே விறகு அடுப்பில் தான் சமையல் செய்தாக வேண்டும்.
அடுப்பு நன்கு எரிய அவ்வப்போது ஊதுகுழல் கொண்டு ஊத வேண்டும்.
அந்த காலகட்டத்தில் வீட்டில் உள்ள பெரிய வயதான பாட்டிகள், வீட்டில் உள்ள இளம்பெண்களைப் பார்த்து, “நீ அடுப்பு ஊதுற அந்த நேரத்தில் ஒரு படி பூவை தலையில் வைத்துக்கொண்டு அடுப்பை ஊதினால், அடுப்பின் அனலுக்கு தலையில் வைத்த ஒரு படி பூவும் கருகி போகும். ஆகவே சமையல் முடித்து குளித்து பூவை சூடுங்கள் என்று அறிவுரை சொல்லுவார்கள்”
அப்படி கூறும் அறிவுரை தான்,
“அடுப்பூதும் பெண்ணுக்கு படி பூ எதற்கு?” என்பது.
அடுப்பை ஊதுர பெண்ணுக்கு படி பூ எதற்கு என்பதுதான் மருவி படிப்பு எதற்கு என்றானது.
இப்படி எத்தனையோ பழமொழிகள் தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டு, இன்றும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்!

உணவு மற்றும் பழக்கவழக்கங்களால் உடலின் வெப்பம் செயற்கையாக அதிகமாகும்போது நுரையீரல் சூடாகி, ஒட்டுமொத்த உடலின் பருவநிலையையும் மாற்றிவிடுகிறது.
வெளியே குளிர் இருந்தால், உடலின் உள்ளே வெப்பம் உருவாகும். வெளியே வெப்பம் இருந்தால், உள்ளே குளிர் உருவாகும். இவ்வாறான செயல்பாட்டினைத்தான் ‘எதிர்ச்சுழலியக்கம்’ என்று அழைக்கிறோம். இந்த இயக்கம் இல்லையென்றால், வெப்பம் மிகுந்த சூழலில் உடலும் வெப்பமடைந்து வெந்துபோகும். குளிர் சூழலில் உடலும் குளிர்ந்து உறைந்துபோகும். எதிர்ச்சுழலியக்கம் என்பது நிலத்தை அடிப்படையாகக் கொண்டது. மனிதர்களும் பிற உயிரினங்களும் தாம் வாழும் நிலத்திற்கேற்ற வகையில் உணவு மற்றும் வாழ்க்கைமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.
நிலத்தில் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் காற்று, வெப்பம், நீர் ஆகியவை நிலத்தின் அடிப்படையில்தான் தேவைப்படுகின்றன. நிலத்திற்கும் உடலுக்குமான உறவை உறுதி செய்வதில் உணவுகளுக்கு முதன்மைப் பங்கு உண்டு. கோடையில் பனை மரங்கள் நுங்கு மற்றும் பதநீர் தருவது இவ்வாறான உறவினால்தான்.
எந்தப் பருவத்திற்கு எது தேவை என்பதை அந்தந்த நிலத்தில் வாழும் உயிரினங்கள் நன்கு அறிந்துவைத்துள்ளன. இந்த மரபினை மீறி, உணவுப் பொருட்களை உட்கொள்ளும்போது, நிலத்திற்கும் புறச் சூழலுக்குமான உறவு மீறப்படுகிறது. விளைவாக, உடலின் எதிர்ச்சுழலியக்கம் கெட்டுப்போகிறது. குளிர்ப் பகுதிகளில் வாழ்வோருக்கான உணவுகளை, வெப்பப் பகுதிகளில் வாழ்வோர் உண்டால், அதற்கான விளைவுகள் உடலின் உள்ளே உருவாகும்.
வாழும் நிலத்தில் விளையும் உணவுகளை மட்டும் உட்கொண்டால், உடல் தனக்குத் தேவையான காற்று, வெப்பம், நீர் ஆகியவற்றைச் சேகரிக்கிறது. பருவநிலைகளுக்கேற்ப இந்த ஆற்றல்களைப் பயன்படுத்துகிறது.
சத்துகளின் அடிப்படையில் உணவைப் பகுப்பது, முழுக்க முழுக்க வணிக நோக்கங்களுக்கானது. ஒருபக்கம் உணவுப் பொருட்கள் விற்பனை, மறுபக்கம் இந்த உணவுகளால் உருவாகும் நோய்களுக்கான மருத்துவ விற்பனை என சமகாலச் சூழல் சதிவலைகளால் பின்னப்பட்டுள்ளது.
கோதுமையைச் செரிப்பது அது விளையும் நிலத்தில் வாழும் உடல்களுக்கு எளிதானது. தமிழகம் போன்ற நிலங்களில் வாழ்வோருக்கு அதே கோதுமையைச் செரிமானம் செய்ய, உடல்கள் கடினப் பணி செய்ய வேண்டும். குறிப்பாக, அதிகமான வெப்ப ஆற்றலைச் செலவழித்துத்தான் கோதுமையைத் தமிழகத்து உடல்கள் செரிக்க வேண்டியுள்ளது. இதேபோல ஒவ்வொரு உணவு வகையையும் பட்டியலிடுங்கள்.
சாக்லெட், ஐஸ்க்ரீம் ஆகிய இரண்டை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டால் இவ்விரு உணவுகளுக்காகவும் உடல் வெளிப்படுத்தும் வெப்ப ஆற்றல் மிக அதிகமானது. ஒவ்வொரு முறை ஐஸ்க்ரீம் உண்ணும்போதும் அதன் மிகைக் குளிர்ச்சியைச் சமாளித்து சீரான வெப்பநிலையை உருவாக்குவதற்காக உடல் தன்னை வெப்பமாக்கிக் கொள்கிறது. இந்த வெப்பம், உடலுக்குத் தேவையற்ற கூடுதலானது மட்டுமல்ல உடலின் உள்ளுறுப்புகளின் பருவநிலையைச் சிதைப்பதுமாகும்.
இவ்வாறான திடீர் வெப்ப உருவாக்கங்களின்போது நுரையீரல் மிக அதிகமாக வெப்பமடைகிறது. ஏனெனில், உடலின் குளிர்ச்சியைப் பராமரிக்கும் பணியில் நுரையீரலுக்குத்தான் முதன்மைப் பங்கு உள்ளது. நுரையீரல்தான் உடலின் மரம். புறத்தில் உள்ள மரங்களின் மூச்சுக் காற்றை உள்வாங்கும் நுரையீரல், உடலின் அகத்தில் மரங்களின் பணியைத்தான் முதன்மையாகச் செய்கிறது.
உணவு மற்றும் பழக்கவழக்கங்களால் உடலின் வெப்பம் செயற்கையாக அதிகமாகும்போது நுரையீரல் சூடாகி, ஒட்டுமொத்த உடலின் பருவநிலையையும் மாற்றிவிடுகிறது. இதனால், கல்லீரல், கருப்பை, விந்துப் பை, சிறுநீரகம் ஆகிய உறுப்புகள் தமது இயல்பான பருவநிலையை இழக்கின்றன. இந்த நிலை நீடித்தால் உடலின் செயல்பாடுகள் முடங்கிப் போகும். மூளை நரம்புகளின் திடீர் செயலிழப்பிற்கும் கூட இவ்வாறான மிகை வெப்பம் ஒரு காரணம்.
இந்த நிலையைச் சமாளிப்பதற்காக, உடலின் செல்களில் இருக்கும் நீர்மம் உடனடியாக வெளியேற்றப்படுகிறது. இந்த நீர்மம், உடலின் கோடானு கோடி செல்களிலும் உறைந்திருப்பதுதான். வியர்வை, கோழையாக வெளியேறும் எச்சில், அதிகமான சிறுநீர் ஆகிய மூன்றும் இந்த நீர்ம வெளியேற்றத்தில் முதன்மையானவை.
சளி வெளியேற்றம், தும்மல், மூச்சிரைப்பு, மாதவிலக்குச் சீரின்மை (அடிக்கடி உதிரம் தேங்கிவிடுதல்), உடலுறவு உறுப்புகளில் சோர்வு ஆகியவை இந்த நிலையின் வெளிப்பாடுகளில் முதன்மையானவை.
மூச்சிரைப்பு, தோல் தொல்லைகள், விந்தணுக்களின் உயிர்த்தன்மைக் குறைபாடு, உடலின் உள்ளும் புறமும் உருவாகும் கட்டிகள் ஆகியவை இச்சிக்கலின் நீண்டகால விளைவுகளில் முதன்மையானவை.
இப்போதுள்ள உணவுப் பழக்கங்களின் பெரும்பாலானவை இவ்வாறான உடல் வெப்பத்தைத் தூண்டக் கூடியவைதான். பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட எல்லா உணவுகளும் உடல் வெப்பத்தைத் தூண்டுபவைதான். இதன் விளைவுகளைத்தான் இப்போதைய சமூகம் பல்வேறு நோய்களாக அனுபவிக்கிறது.
அதாவது ஒவ்வொரு நாளும் உடலுக்குள் செலுத்தப்படும் முறையற்ற உணவுகள், மருந்துகள் ஆகியவை சேர்ந்து உடலின் இயல்பான பருவநிலையை மாற்றிக்கொண்டுள்ளன.
இப்போது தேவை வாழ்வியல் கொள்கைதானே தவிர, விதவிதமான மருத்துவமுறைகள் அல்ல. ஏனெனில், வாழ்வியல் கொள்கையை இழந்ததால் உருவாகும் உடல் தொல்லை அது. உடலின் பருவநிலை இயல்பாக இருந்தால் எந்த உடல் தொல்லையும் எளிதில் விலகும்.
நிலத்தில் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் காற்று, வெப்பம், நீர் ஆகியவை நிலத்தின் அடிப்படையில்தான் தேவைப்படுகின்றன. நிலத்திற்கும் உடலுக்குமான உறவை உறுதி செய்வதில் உணவுகளுக்கு முதன்மைப் பங்கு உண்டு. கோடையில் பனை மரங்கள் நுங்கு மற்றும் பதநீர் தருவது இவ்வாறான உறவினால்தான்.
எந்தப் பருவத்திற்கு எது தேவை என்பதை அந்தந்த நிலத்தில் வாழும் உயிரினங்கள் நன்கு அறிந்துவைத்துள்ளன. இந்த மரபினை மீறி, உணவுப் பொருட்களை உட்கொள்ளும்போது, நிலத்திற்கும் புறச் சூழலுக்குமான உறவு மீறப்படுகிறது. விளைவாக, உடலின் எதிர்ச்சுழலியக்கம் கெட்டுப்போகிறது. குளிர்ப் பகுதிகளில் வாழ்வோருக்கான உணவுகளை, வெப்பப் பகுதிகளில் வாழ்வோர் உண்டால், அதற்கான விளைவுகள் உடலின் உள்ளே உருவாகும்.
வாழும் நிலத்தில் விளையும் உணவுகளை மட்டும் உட்கொண்டால், உடல் தனக்குத் தேவையான காற்று, வெப்பம், நீர் ஆகியவற்றைச் சேகரிக்கிறது. பருவநிலைகளுக்கேற்ப இந்த ஆற்றல்களைப் பயன்படுத்துகிறது.
இப்போது, உணவுகள் எல்லாம் சத்துகளின் அடிப்படையில் உட்கொள்ளப்படுகின்றன. இது மிக மோசமான நடைமுறை. அமெரிக்காவில் வாழும் மனிதர்களுக்கான உணவும் தமிழ்நாட்டு மனிதர்களுக்கான உணவும் நிச்சயமாக வேறுவேறானவை.
இவ்வாறான நிலம் தாண்டிய உணவுகளை உட்கொள்வதால், ஆற்றல் சீர்கேடுகள் உருவாகின்றன. இப்போதைய உணவுப் பழக்கங்கள் நிலத்திற்கு ஒவ்வாதவையாக மாறியுள்ளன. இதனால், உடலின் உள் ஆற்றல்கள் மிகையாக செலவழிக்கப்படுகின்றன.
சாக்லெட், ஐஸ்க்ரீம் ஆகிய இரண்டை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டால் இவ்விரு உணவுகளுக்காகவும் உடல் வெளிப்படுத்தும் வெப்ப ஆற்றல் மிக அதிகமானது. ஒவ்வொரு முறை ஐஸ்க்ரீம் உண்ணும்போதும் அதன் மிகைக் குளிர்ச்சியைச் சமாளித்து சீரான வெப்பநிலையை உருவாக்குவதற்காக உடல் தன்னை வெப்பமாக்கிக் கொள்கிறது. இந்த வெப்பம், உடலுக்குத் தேவையற்ற கூடுதலானது மட்டுமல்ல உடலின் உள்ளுறுப்புகளின் பருவநிலையைச் சிதைப்பதுமாகும்.
இவ்வாறான திடீர் வெப்ப உருவாக்கங்களின்போது நுரையீரல் மிக அதிகமாக வெப்பமடைகிறது. ஏனெனில், உடலின் குளிர்ச்சியைப் பராமரிக்கும் பணியில் நுரையீரலுக்குத்தான் முதன்மைப் பங்கு உள்ளது. நுரையீரல்தான் உடலின் மரம். புறத்தில் உள்ள மரங்களின் மூச்சுக் காற்றை உள்வாங்கும் நுரையீரல், உடலின் அகத்தில் மரங்களின் பணியைத்தான் முதன்மையாகச் செய்கிறது.
உணவு மற்றும் பழக்கவழக்கங்களால் உடலின் வெப்பம் செயற்கையாக அதிகமாகும்போது நுரையீரல் சூடாகி, ஒட்டுமொத்த உடலின் பருவநிலையையும் மாற்றிவிடுகிறது. இதனால், கல்லீரல், கருப்பை, விந்துப் பை, சிறுநீரகம் ஆகிய உறுப்புகள் தமது இயல்பான பருவநிலையை இழக்கின்றன. இந்த நிலை நீடித்தால் உடலின் செயல்பாடுகள் முடங்கிப் போகும். மூளை நரம்புகளின் திடீர் செயலிழப்பிற்கும் கூட இவ்வாறான மிகை வெப்பம் ஒரு காரணம்.
இந்த நிலையைச் சமாளிப்பதற்காக, உடலின் செல்களில் இருக்கும் நீர்மம் உடனடியாக வெளியேற்றப்படுகிறது. இந்த நீர்மம், உடலின் கோடானு கோடி செல்களிலும் உறைந்திருப்பதுதான். வியர்வை, கோழையாக வெளியேறும் எச்சில், அதிகமான சிறுநீர் ஆகிய மூன்றும் இந்த நீர்ம வெளியேற்றத்தில் முதன்மையானவை.
சளி வெளியேற்றம், தும்மல், மூச்சிரைப்பு, மாதவிலக்குச் சீரின்மை (அடிக்கடி உதிரம் தேங்கிவிடுதல்), உடலுறவு உறுப்புகளில் சோர்வு ஆகியவை இந்த நிலையின் வெளிப்பாடுகளில் முதன்மையானவை.
மூச்சிரைப்பு, தோல் தொல்லைகள், விந்தணுக்களின் உயிர்த்தன்மைக் குறைபாடு, உடலின் உள்ளும் புறமும் உருவாகும் கட்டிகள் ஆகியவை இச்சிக்கலின் நீண்டகால விளைவுகளில் முதன்மையானவை.
இப்போதுள்ள உணவுப் பழக்கங்களின் பெரும்பாலானவை இவ்வாறான உடல் வெப்பத்தைத் தூண்டக் கூடியவைதான். பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட எல்லா உணவுகளும் உடல் வெப்பத்தைத் தூண்டுபவைதான். இதன் விளைவுகளைத்தான் இப்போதைய சமூகம் பல்வேறு நோய்களாக அனுபவிக்கிறது.
அதாவது ஒவ்வொரு நாளும் உடலுக்குள் செலுத்தப்படும் முறையற்ற உணவுகள், மருந்துகள் ஆகியவை சேர்ந்து உடலின் இயல்பான பருவநிலையை மாற்றிக்கொண்டுள்ளன.
இப்போது தேவை வாழ்வியல் கொள்கைதானே தவிர, விதவிதமான மருத்துவமுறைகள் அல்ல. ஏனெனில், வாழ்வியல் கொள்கையை இழந்ததால் உருவாகும் உடல் தொல்லை அது. உடலின் பருவநிலை இயல்பாக இருந்தால் எந்த உடல் தொல்லையும் எளிதில் விலகும்.
- அகர முதல்வன்
தானியம், பருப்புகள், காய்கள், பழங்கள், முட்டை, பால், மீன், மாமிசம் என்று அனைத்தும் உள்ளடக்கிய சரிவிகித உணவே போதுமான தாய்ப்பால் சுரப்பைக் கொடுக்கிறது.
குழந்தைப் பேறு முடிந்து வீடு திரும்பிய பாலூட்டும் பெண்கள், அதன் பிறகு தேவையான ஆலோசனைகளுக்கு மருத்துவமனைக்குச் செல்ல இயலாததாலும், பெரியவர்களும் இல்லாமல் தனியாக இருப்பதாலும் சிறு சிறு விஷயங்களுக்கும் அதிக குழப்பமடைந்து இருப்பதுபோல் தெரிகிறது. தாய்ப்பாலைப் பற்றி சில அடிப்படையான உண்மைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.
1. தாயின் உணவில் குறைபாடு இருந்தால், தாய்ப்பாலின் அளவும் குறைகிறது. ஆனால் தரம் குறைவதில்லை. தாயின் உடலில் சேமிக்கப்பட்டுள்ள புரதம் மற்றும் கொழுப்பு சத்துகளைப் பொருத்தே, தாய்ப்பாலும் அமைகிறது.
2.சரியான நேர இடைவெளியைக் கடைப்பிடிக்காமல், அடிக்கடி பால் கொடுத்துக் கொண்டே இருப்பதால், பால் சுரப்பைத் தூண்டும் ஹார்மோன்களின் சமநிலை மாறுபட்டு, பால் சுரப்பு குறைகிறது என்பதை நன்றாக நினைவில் வைக்கவேண்டும்.
3. துவக்கத்தில், ஒருநாளைக்கு 8 முதல் 12 தடவைகள், அதாவது ஒன்றரை அல்லது இரண்டு மணி நேரங்களுக்கு ஒருமுறை தாய்ப்பால் புகட்டினால் போதுமானது. குழந்தை வளர, வளர நேர இடைவெளி அதிகரிப்பது இயல்பான ஒன்றுதான்.
4. தாய்ப்பாலுக்குப் பதிலாக அல்லது கூடுதலாக கொடுக்கப்படும் எந்தவிதமான செயற்கைத் தயாரிப்பு பால்பொருட்களாலும், தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதில்லை.
5. குழந்தையின் சீரான உடல்நிலை, சவுகரியமான சூழல், இதமான அரவணைப்பு, வற்புறுத்தலும் இல்லாத நிலை போன்றவையே குழந்தை போதுமான அளவு தாய்ப்பால் குடிப்பதற்கு வழிவகுக்கிறது. அவ்வாறான நிலையில் குழந்தை குடிக்கும்போது, தாய்ப்பால் சுரப்பும் நன்றாக இருக்கும்.
6. தானியம், பருப்புகள், காய்கள், பழங்கள், முட்டை, பால், மீன், மாமிசம் என்று அனைத்தும் உள்ளடக்கிய சரிவிகித உணவே போதுமான தாய்ப்பால் சுரப்பைக் கொடுக்கிறது. பூண்டு, பெருங்காயம், மருந்துப் பொடி போன்ற கூடுதல் சிறப்பு உணவுகள் வேண்டுமெனில் சேர்த்துக் கொள்ளலாம்.
7. வீட்டு வேலைகளை செய்வதால், உடலுக்கு புத்துணர்வு கிடைக்கப் பெற்று, ஹார்மோன்களின் செயல்பாடுகளும் சீராக இருக்கும். எந்த வேலையும் செய்யாமல் இருப்பதால், உடல் பருமன் ஏற்பட்டு, பல்வேறு சிக்கல்களும் வந்துவிடும். பின் மனஉளைச்சலால் தாய்ப்பால் உற்பத்தியும் பாதிக்கப்படும்.
8. போதுமான நீர்ச்சத்து உடலில் சேராமல் இருப்பதாலும், தாய்ப்பால் உற்பத்தியின் அளவு குறைகிறது. பால், மோர், பழச்சாறு, சூப், கஞ்சி என்று தாராளமாகக் குடியுங்கள்.
9. முதலில், சோறு வடித்த கஞ்சித் தண்ணீரை குடிக்கப் பழகுங்கள். நீரிழிவு இருப்பவர்கள் தவிர்த்துக் கொள்ளலாம். இதற்கு காரணம், முழுவதும் கார்போஹைடிரேட் ஆக இருக்கும். கஞ்சித் தண்ணீரை, தாயின் அன்றாட செயலுக்கான ஆற்றலை உடல் நேரடியாக எடுத்துக் கொள்வதால், பிற உணவிலுள்ள புரதமும் கொழுப்பும் சேமிக்கப்பட்டு, தாய்ப்பால் உற்பத்திக்குப் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது.
10. எந்த பிரச்சினையாக இருந்தாலும், தாய்பால் புகட்டுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னர் உடலையும், மனதையும் தளர்வாக்கி, ஆசுவாசப்படுத்திக்க கொண்டு, அமைதியான நிலையில், அரவணைப்புடன், முழு சந்தோஷத்துடன், குழந்தையின் நலனை மட்டுமே மனதில் நினைத்துபப் பாலூட்டினால், தாய், சேய் இருவரின் நலனும் நன்றாக இருக்கும்.

-முனைவர். வண்டார் குழலி ராஜசேகர்
பகவான் ரமணர் சொல்வார்; கடவுளை ஒவ்வொருவரும் அவரவர்களுடைய இதயத்தில் தேடினால், கடவுள் அருளும் அவர்களை நிச்சயம் தேடும்.
அருணாசலம் எனப்படும் திருவண்ணாமலையின் தென்புற அடிவாரத்தில் அமைந்துள்ளது, உலகப்புகழ் பெற்ற ரமணாஸ்ரமம். இது அமைதியையும் நிம்மதியையும் தேடி வருபவர்களுக்கு அவற்றை நல்கக்கூடிய ஆனந்த நிலையம்.
ரமணர் எத்தனையோ உபதேசங்களையும் அருள்மொழிகளையும் நமக்கு வழங்கி உள்ளார். அவற்றுள் முக்கியமான உபதேசம் - நான் யார்? என்னும் ஆன்ம விசாரம்.
ரமணரது அவதாரம் அருப்புக்கோட்டைக்கு அருகே உள்ள திருச்சுழியில் 1879-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29-ஆம் தேதி பின்னிரவு ஒரு மணிக்கு நிகழ்ந்தது. நடராஜப் பெருமானுக்கு உகந்த திருவாதிரை தினத்தில், வழக்கறிஞர் சுந்தரம்மய்யர்-அழகம்மையார் தம்பதிக்கு இரண்டாவது குழந்தையாக வேங்கட்ராமன் அவதரித்தார்.
திருச்சுழியிலேயே கல்வி கற்கத் தொடங்கினார். பின் திண்டுக்கல்லிலும் மதுரையிலும், படித்தார். ஆனால், படிப்பு பிரகாசிக்கவில்லை, விளையாட்டும் ரசிக்கவில்லை.
சிறுவயதில் இருந்தே அருணாசலம்.. அருணாசலம் என்கிற வார்த்தை வேங்கடராமனின் மனதில் ஏனோ ஒலித்துக் கொண்டிருந்தது. எது அருணாசலம்? இதன் பொருள் என்ன? ஏன் என் மனதில் ஒலிக்கிறது என்றெல்லாம் வேங்கடராமன் குழம்பிக் கொண்டே இருந்ததில், வருடங்கள் கரைந்தன.
அது 1895-ஆம் ஆண்டு நவம்பர் மாதம்... வேங்கடராமனுக்கு 16 வயது, வாழ்வில் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திய சம்பவம் அன்று நிகழ்ந்தது. இதுதான் அருணாசலேஸ்வரனின் உத்தரவோ?
வக்கீல் சுந்தரமய்யர் வீட்டுக்கு உறவினர் ஒருவர் வந்தார். அவரை எங்கிருந்து வருகிறீர்கள்? என்று வேகங்கடராமன் வெகு இயல்பாகக் கேட்க, அருணாசலத்தில் இருந்து வருகிறேன் என்று கூறினார். அந்த உறவினார்.
அவ்வளவுதான்.. அருணாசலம் என்ற சொல்லைக் கேட்ட மாத்திரத்தில் வேங்கடராமனின் உடலெங்கும் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது. உள்ளத்தில் இனம் புரியாத பரவசம். அருணாசலத்தின் ஏக்கமும் தாக்கமும் உள்ளத்தில் குடி இருக்க... ஒரு வருடம் உற்சாகமாய் ஓடிற்று.
1896-ல் அந்த நிகழ்வு. அப்போது மதுரையில் சித்தப்பா வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தார். வேங்கடராமன். மாடியில் இருந்தார். ஏனோ தெரியவில்லை, ஒருவித பயம் திடீரென அவரைக் கவ்விக் கொண்டது. நான் இறந்து விடுவேனோ? என்று அவருக்குத் தோன்றியது. ஆனால், தேகத்தில் எந்தப் பாதிப்பும் இல்லை, நோயும் இல்லை; நொடியும் இல்லை. நன்றாகத்தான் இருந்தார். ஆனால், இந்த உணர்வை யாரிடமும் சொல்லவில்லை. தனக்கு வந்ததைத் தானே தீர்த்துக் கொள்ள விழைந்தார்.
இந்த அனுபவம் அரை மணிக்குள் நடந்தேறி விட்டது. மரண பயம் சிட்டுப் போல பறந்தது. அவரது மனம் ஆத்ம தியானத்தில் ஆழ்ந்தது. இந்த அனுபவம் குறித்துப் பின்னாட்களில் மகரிஷியே எழுதுகிறார்.
திடீரென்று ஏற்பட்ட இந்த சம்பவம் என்னைத் தீவிர யோசனையில் ஆழ்த்தியது. சரி, சாவு நெருங்கி விட்டது. சாவு என்றால் என்ன? எது சாகிறது? இந்த உடல்தானே செத்துப் போகிறது என்று எனக்குள்ளாகவே சொல்லிக்கொண்டு பிணம் போல் விறைக்குமாறு கைகால்களை நீட்டிப்படுத்தேன். இந்த உடம்பு செத்து விட்டது என்று உள்ளுக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன். இதை மயானத்துக்குக் கொண்டு சென்று எரித்து விடுவார்கள். இது சாம்பலாய் போகும்.
ஆனால் இந்த உடம்பின் முடிவுடன் நானும் இறந்து விட்டேனா? இந்த உடல் நான்தானா? ஆனால், இந்த உடலுக்கும் அப்பால்கூட நான் என்ற சொரூபத்தின் சக்தியும் தொனியும் ஒலிக்கிறதே.... ஆகவே நான்தான் ஆத்மா.... உடலுக்குள் கட்டுப்படாத ஒரு வஸ்து என்ற முடிவுக்கு வந்தேன்-இப்படிக் குறிப்பட்டு இருக்கிறார்.
சாகப் போகிறேன் என்கிற எண்ணம் வந்த அடுத்தடுத்த நாட்களில் வேங்கடராமனின் செயல்களில் கூடுதல் மாற்றங்கள் தெரிந்தன. வீட்டில் இருக்கிற எவரையும் மனம் நினைக்கவில்லை. தோழர்களை மறந்தார். விளையாட்டும் உணவும் சுத்தமாக மறந்தே போயின. படிப்பு செல்லவே இல்லை. உற்றாரும் உறவினர்களும் வேகங்கடராமன் மீது வெறுப்பும் கோபமும் கொண்டனர்.
ஆறு வாரங்கள் சென்றன. ஆசிரியர் கொடுத்த வேலையை எழுதி முடிக்காததால் அதன் மீது வெறுப்பு வந்தது. பூர்த்தி செய்யப்படாத நோட்டை மூடினார். கண்களையும் மூடினார் தியானத்துக்கு.
இதன் பின் அண்ணனுடன் ஏற்பட்ட ஒரு வாக்குவாதம் வேங்கடராமனை வீட்டை விட்டுத் துரத்தியது. வீட்டில் கோபம் என்றால், சிலர் என்ன செய்வார்கள்.... சினிமாவுக்கு, பூங்காவுக்கு, சொந்தக்காரர் வீட்டுக்கு-இப்படித்தானே பயணிப்பார்கள்?
ஆனால், வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று வேங்கடராமன் சிந்தித்த மறுகணம் அவருக்கு அருணாசலம் நினைவு வந்தது. ஃபீஸ் கட்டுவதற்காக அண்ணன் நாகசாமி ஐந்து ரூபாய் கொடுத்திருந்தார்.
கடகடவென்று தன் பயணம் குறித்து ஒரு லெட்டார் எழுதினார். அத்துடன், அண்ணன் கொடுத்த ஐந்து ரூபாயில் இருந்து மூன்றைப் பாத்திரப்படுத்திக் கொண்டார். மீதி இரண்டு ரூபாயையும், தான் எழுதிய லெட்டரையும் வீட்டார் பார்வைபடும்படியான இடத்தில் வைத்து விட்டு, ஒரு அட்லஸைத் தன்னுடன் எடுத்துக் கொண்டு ரெயில் நிலையம் புறப்பட்டார். அன்றைக்குப் பார்த்து இவர் போக வேண்டிய ரெயில் தாமதமாக வந்தது. ரெயிலில் ஏறி அமர்ந்தார்.
1896 செப்டம்பர் முதல் தேதி திருவண்ணாமலையில் இருந்தார். அந்த புனித பூமியில் காலடி பட்டதும், அருணாசலேஸ்வரர் கோயிலை நோக்கி ஓடினார். ஆச்சரியம்-கோயிலில் அர்ச்சகர்கள் உட்பட பக்தர்கள் கூட்டமே இல்லை. வேங்கடராமன் பேரின்பம் பெற வேண்டும் என்பதற்காக இறைவனே இப்படி ஒரு சூழலை ஏற்படுத்தி இருக்கலாம்.
வெளியே வந்தார். எண்ணியது ஈடேறிப் போகும் ஆனந்தத்தில் திருவண்ணாமலை வீதிகளில் நடந்தார். ஐயன் குளத்தருகே வந்ததும், தன் கையில் இருந்த பலகாரப் பொட்டலத்தைத் தூக்கி எறிந்தார். தற்செயலாக அப்போது வேங்கடராமனுக்கு அருகில் வந்த ஒருவர், முடி எடுக்க வேண்டுமோ? என்று கேட்டார்.
எது நடக்க வேண்டுமோ, அது நன்றாகவே நடக்கிறது. குடுமி அகன்றது. அணிந்திருந்த வேட்டியை அவிழ்த்தார். ஒரு கோவணத்துக்குத் தேவையான துண்டை மட்டும் கச்சிதமாகக் கிழித்தார். எஞ்சிய துணியை ஒரு பந்தாகச் சுருட்டி, புணூலையும் மிச்சம் இருந்த ரூபாயையும் சேர்த்து குளத்தில் வீசி எறிந்தார்.
மீண்டும் அருணாசலேஸ்வரனைத் தரிசிக்க அவரது மனம் விரும்பியது. குளிப்பது தேவை இல்லை என நினைத்தார். கோயிலுக்கு நடந்தார். இறைவனே திடீரென மழையைப் பொழிவித்து வேங்கடராமனைக் குளிக்க வைத்தான்.
ஆயிரங்கால் மண்டபத்தில்தான் தவம் துவங்கியது. விஷமக்காரச் சிறுவர்களின் தொந்தரவு தாங்க முடியவில்லை. இதை அடுத்து, பாதாளலிங்கம் இருட்டு குகைக்கு மாறினார். பார்த்தாலே உள்ளுக்குள் பயத்தை வரவழைக்கக்கூடிய இடம். ஆனாலும், தவம் தொடர்ந்தது.
ஒரு சிறுவன் இங்கே அமர்ந்து தவ யோகத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறான் என்று சேஷாத்ரி சுவாமிகள் தெரிந்து கொண்டார். ஈ, எறும்பு, பூச்சிகளுக்கு இரையாக உடலின் கீழ்ப்பாகம் அரிக்கப்பட்டு, ரத்தமும் சீழும் கட்டி கட்டியாகத்தெரிந்தது. பழனிச்சாமி என்னும் ஒருவருடன் உடலை சுத்தம் செய்து, குடிக்க நீராகாரம் கொடுத்தார்.
ஆனால் வேங்கடராமனின் உள்மனம் துன்பத்தை அறியவில்லை. இந்தப் பக்குவத்தைப் பெற்ற வேங்கடராமனின் தவயோகத்தை உணர்ந்து அங்குள்ள சாதுக்கள் மரியாதை செய்தனர். இந்த இடம் பலருக்குத் தெரிந்து கூட்டம் கூட்டமாக மக்களின் வரவால், வேறு இடம் மாறுவதற்கு அவர்க்கு உதவினர்.
எங்கெங்கு போனாலும் வேங்கடராமனை தேடி வந்து பக்தர்கள் தரிசித்தனர். அழுக்கடைந்த மேனியோடு, நகங்கள் வளர்ந்த விரல்களோடு பவழக்குன்றின் கரடுமுரடான ஒரு பாறையில் படுத்திருந்த தன் மகனை தாய் அழகம்மையும் ஒரு நாள் தரிசித்துக் கண்ணீர் சிந்தனாள்.
வேங்கடராமனை வீட்டுக்கு வரவழைக்கும் முயற்சிகள் பலராலும் எடுக்கப்பட்டு, அனைத்தும் தோல்வியில் முடிந்தன. சம்ஸ்க்ருதப் பண்டிதரான கணபதி சாஸ்திரிகள் என்பவர் வேங்கடராமனின் அருளுக்குப் பாத்திரமானார். சீடரானார். இவர்தான் வேங்கடராமனுக்கு ரமண மகரிஷி என்று பெயர் சூட்டினார். அதுவரை பாலசுவாமி என்றே அழைத்து வந்தனர். விருபாட்சி குகை, கந்தாஸ்ரமம், பாலாக்கொத்து என பல இடங்களில் வாசமும் தவமும் தொடர்ந்தது. இறுதியில் அடிவாரம். அதுவே ரமணாஸ்ரம்மாக உருவானது.
தன் இறுதி மூச்சு வரை எல்லோருக்கும் பாகுபாடு இல்லாமல் தரிசினம் தந்தார். 1950-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 8.47-க்கு பத்மாசனம் இட்டவாறே அமர்ந்து மூச்சை ஒடுக்க, பரிபூரணமாய் பிரகாசித்தார்.
பகவான் இருந்த அறையின் வாயிலில் ஒரு பேரொளி தோன்றி அந்த அறையையும் சுற்றுப்புறத்தையும் வியாபித்துப் பரவி, பின் வெட்டவெளியில் - வான்வெளியில் கலந்து மெல்ல மெல்ல வடக்கு நோக்கி நகர்ந்து அருணாசலத்தின் உச்சிக்குப் பின் சென்று மறைந்தது.
பகவான்ரமணர் சொல்வார்; கடவுளை ஒவ்வொருவரும் அவரவர்களுடைய இதயத்தில் தேடினால், கடவுள் அருளும் அவர்களை நிச்சயம் தேடும்.
இந்த தேடல் எப்படி சாத்தியம்? பால் பிரண்டனுக்கு பகவான் சொன்னதே இதற்குப் பதில். தேடலுக்குத் தேவையானவற்றை ஒரு குரு தரலாம். ஆனால், இதை அவரவர் தனிப்பட்ட அனுபவத்தால்தான் உணர முடியும். இதற்கான காலம் எவ்வளவு என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாது. இது தனி மனிதர்களின் பக்குவத்தைப் பொறுத்தது. தீப்பிடிக்க வெடிமருந்துக்கு நொடி போதும். ஆனால், நிலக்கரிக்கு அதிக நேரம் தேவை.

-அனு
பச்சரிசி, மிளகு இவற்றோடு சிறிது சுண்ணாம்பை கலந்து நன்றாகமென்று சாற்றை தொண்டை முழுவதும் பரவும் படி செய்ய வேண்டும். அபார குரல்வளம் கிடைக்கும். அந்தக்கால மேடை நாடக நடிகர்கள் கைவசம் வைத்திருக்கும் மருந்து இது.
முன்பெல்லாம் எல்லா வீடுகளிலும் சுண்ணாம்பு இருக்கும். அதை மருந்துபோல் பயன்படுத்தி வந்தார்கள். குறிப்பாக வெற்றிலை பாக்கோடு சேர்த்து பயன்படுத்தினார்கள்.
சாப்பிட்டவுடன் வெற்றிலை சாப்பிடுவது ஜீரண சக்தியை அதிகரிக்கும். சுண்ணாம்பு எலும்புகளுக்கு நல்லது. கால்சியம் சத்தை தரக்கூடியது. தொண்டைக்கும் நல்லது. அது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய இயற்கைப் பொருள்.
ஒரு தேக்கரண்டி தேனில் ஊசி முனையளவு சுண்ணாம்பு கலந்து கொடுத்தால் அதைவிட பெரிய மருந்தே கிடையாது. நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். அடிக்கடி ஏதாவதொரு உடல்நலக் குறைவால் பாதிக்கப்படும் குழந்தைகள் இதை சாப்பிட்ட பின்பு சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வளரும். எலும்புகளும் உறுதியாகும்.
இது ஆண்மை விருத்திக்கு நல்லது என்று கூறப்படுகிறது. விந்தணுக்கள் குறைவாக உள்ளவர்கள் கரும்பின் சாற்றில் சிறிது சுண்ணாம்பு கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
மாணவர்களுக்கு சுண்ணாம்பால் நினைவாற்றல் பெருகும். படிக்கும் மாணவர்களுக்கு கெட்டித் தயிரில் ஒரு கோதுமையளவு சுண்ணாம்பு கலந்து கொடுத்தால் நினைவாற்றல் பெருகும். மூளையின் சக்தி அதிகரிக்கும்.. நீர் மோர், ஜூஸ், தண்ணீரிலும் கலந்து கொடுக்கலாம். நல்ல மாற்றம் தெரியும்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிக கால்சியம் தேவை. அந்த தேவையை சுண்ணாம்பு பூர்த்தி செய்யும். மாதுளம் பழம் சாற்றில், ஒரு கோதுமையளவு சுண்ணாம்பு கலந்து தினமும் குடிக்கலாம். அதன் மூலம் உடலுக்கு தேவையான சுண்ணாம்பு அதாவது கால்சியம் கிடைப்பதுடன், பிரசவமும் எளிமையாகலாம். அதுமட்டுமல்ல அந்த கால்சியம் குழந்தைக்கும் போய் சேர்ந்து மூளை வலுப்பெற்ற நிலையில் குழந்தை பிறக்கும்.
பெண்களுக்கு மாதவிடாய் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சுண்ணாம்பு நல்ல தீர்வு தரும். ரத்தக் குறைபாடு, அதிக ரத்தப்போக்கு, உடல்வலி, வயிற்று வலி, குறைந்த ரத்தப் போக்கு, உடல் உஷ்ணம், சோர்வு இவையனைத்திற்கும் சுண்ணாம்பு நல்ல தீர்வாக இருக்கும்.
கரும்பு ஜூஸ், ஆரஞ்சு பழரசம், மாதுளம் பழச்சாறு இவற்றுடன் ஒரு கோதுமையளவு சுண்ணாம்பை கலந்து குடித்து வந்தால் எல்லா பிரச்சினைகளும் தீரும். அது போன்று கீழாநெல்லிக்கீரை, வெள்ளை கீரை, கறிவேப்பிலை ரசம் ஆகியவற்றுடன் ஒரு துளி சுண்ணாம்பு கலந்து சாப்பிடவேண்டும். பற்கள், ஈறுகளில் பிரச்சினை இருந்தால் வெற்றிலை, துளசியுடன் ஒரு துளி சுண்ணாம்பு கலந்து சாப்பிடலாம்.
நல்லெண்ணெய்யில் சிறிது சுண்ணாம்பு கலந்து உடலில் பூசிவிட்டால் கொசுக்கடி, வேர்குரு தழும்புகளிலிருந்து விடுபடலாம். பல்லில் கூச்சம் உள்ளவர்கள் வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது உப்பு, சுண்ணாம்பு கலந்து கொப்பளித்து வந்தால் பல் கூச்சம் மறையும். பல்லில் ரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம் போன்றவைகளுக்கும் இது நல்ல மருந்து.
தொண்டை இனிமையாக இருக்க சுண்ணாம்பு துணைபுரிகிறது. அந்த காலத்தில் பாட்டுப்பாடும் பாகவதர்கள் வெற்றிலைப் பெட்டியை கையோடு வைத்திருப்பதற்கு இதுதான் காரணம்.
பச்சரிசி, மிளகு இவற்றோடு சிறிது சுண்ணாம்பை கலந்து நன்றாகமென்று சாற்றை தொண்டை முழுவதும் பரவும் படி செய்ய வேண்டும். அபார குரல்வளம் கிடைக்கும். அந்தக்கால மேடை நாடக நடிகர்கள் கைவசம் வைத்திருக்கும் மருந்து இது.
வெற்றிலையில், தேன் தடவி, கிராம்புடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்து மென்று சாற்றை தொண்டையில் பரவவிட்டால் தொண்டை வளமாகும். அந்தச் சாறு நுரையீரல் முழுவதும் பரவி சளி தொந்தரவை போக்கும். மேடையில் பாடுபவர்களுக்கு இது சிறந்த நிவாரணி.
குளிர்காலத்தில் தொண்டை கட்டிக்கொண்டால் முருங்கைச் சாற்றுடன் கொஞ்சம் சுண்ணாம்பை குழைத்து தொண்டையின் வெளிப்புறத்தில் பரவலாக பூசிவிட வேண்டும். தொண்டை கமறல் நீங்கிவிடும். சுண்ணாம்பை நேரிடையாக சாப்பிட முடியாது. அதைப் பதப்படுத்தி சாப்பிடும் பக்குவத்தில் கடைகளில் விற்கிறார்கள். கலர் சேர்க்காத வெள்ளை சுண்ணாம்புதான் சிறந்தது. சிப்பிசுண்ணாம்பு தான் மருத்துவ குணம் கொண்டது. இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது.

-அருளானந்தர்
இரவு நீண்ட நேரம் கண் விழித்திருந்தால் நாம் புற்று நோயைக் குணப்படுத்தும் மெலடோனின் என்ற இயற்கை மருந்தை இழந்தவர்களாக இருப்போம்.
நமது உடல் ஓர் அற்புத படைப்பு. அதில் ஆச்சரியப்படத்தக்க பல அம்சங்கள் உள்ளன!
அதில் ஒன்றுதான் நமது உடலில் நேரத்தை தானாகவே ஒழுங்கு படுத்தும் உயிரியல் நேர முறைமை (Biological Clock System)
இதனை வழி நடத்தும் ஒரு சுரப்பி நம் ஒவ்வொருவரின் தலையிலும் உள்ளது. அதுதான் பினியல் சுரப்பி! கடலை உருண்டை வடிவில் இருக்கும் இந்த பினியல் சுரப்பி பார்வை நரம்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த பினியல் சுரப்பி ஓர் அரிய பொருளை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுரக்கிறது. அதுதான் மெலடோனின்.
இந்த அதிசய அரிய பொருளின் பலன் மகத்தானது. புற்றுநோயைக் குணப்படுத்தும் இயற்கை மருந்து இந்தப் பொருளில் இருக்கிறது.
மெலடோனின் சுரக்க வேண்டும் என்றால் ஒரே ஒரு நிபந்தனை, இரவின் இருளாக இருக்க வேண்டும். இரவின் இருளில்தான் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்கும். அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பார்வை நரம்பு மூலமாக அது இரவின் இருளை அறிந்து கொள்ளும்.
ஒவ்வொரு நாளும் இரவு 10மணிக்குப் பிறகு இருளில் சுரக்கும் மெலடோனின், நமது இரத்த நாளங்களில் பாய்ந்தோடும். நமது கண்கள் வெளிச்சத்தில் பட்டுக் கொண்டிருந்தால் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்காது. பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்க ஆரம்பித்து காலை 5 மணிக்கு நிறுத்தி விடும்.
இரவு நீண்ட நேரம் கண் விழித்திருந்தால் நாம் புற்று நோயைக் குணப்படுத்தும் மெலடோனின் என்ற இயற்கை மருந்தை இழந்தவர்களாக இருப்போம்.
எனவே இரவு முன்கூட்டியே உறங்கி அதிகாலையில் எழுவது புற்று நோயைத் தடுக்கும் என்று இயற்கை மருத்துவ உலக சித்தர்கள் நூல் கூறுகிறது.
அதே போன்று அதிகாலையில் காற்று வெளி மண்டலத்தில் ஓஸோன் நிறைந்திருக்கும். ஒரு மனிதன் அதிகாலையில் எழுந்து நடமாட ஆரம்பித்தால் இந்த ஓஸோன் காற்றை அவன் சுவாசிப்பான். இது நமது உடலிலுள்ள நோய்களைக் குணப்படுத்தி நம் ஆயுளை அதிகரிக்கும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இரவு முன்கூட்டியே உறங்குவதால் மெலடோனின் கிடைக்கிறது. அதிகாலையில் எழுந்து அலுவல்களைத் துவங்குவதால் ஓஸோன் கிடைக்கிறது. நமது உடலின் ஆரோக்கியம் அனைத்தும் இவற்றில் அடங்கியிருக்கிறது. அதிகாலையின் சில மணி நேரங்கள் அந்த நாளின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கக் கூடியவையாக இருக்கின்றன.
அதிகாலையில் எழும் போது நமது மூளையும், இன்னபிற உறுப்புகளும் பூரண ஓய்வு பெற்று வேலை செய்ய தயாராக இருக்கும். அந்த நேரத்தில் செய்யும் பணிகள் அனைத்தும் திறமை மிக்கதாகவும் ஆற்றல் அழுத்தம் மிக்கதாகவும் திகழும்.

-செல்வராசு
வாழ்நாளை வீழ்நாள் ஆக்காமல், நாளும் நல்லவற்றைச் செய்துவந்தால், அது ஒருவனது வாழ்நாளில் ஏற்படும் துன்ப இடையீடுகளை அடைக்கும் கல்! என திருவிக காட்டிய வழியில் நின்று சிந்தித்தவர் தமிழண்ணல்.
தமிழ் இரண்டு கிங்சைஸ் நோட் வாங்கி வரச் சொன்னார். புக் ஸ்டோரில் நின்றேன்.
எனக்கு அருகில் ஓர் இளைஞன் திருக்குறள் புத்தகம் வாங்கினான்.
கவனித்தால்.. அவன் கோகுல், என் மாணவன். இப்போது சென்னையில் விஸ்காம் படிக்கிறான். தான் எடுத்த சில குறும்படங்கள், ஆல்பங்களை அவ்வப்போது காட்டுவான்.
‘என்ன திருக்குறள் எல்லாம் வாங்க ஆரம்பிச்சிட்ட?’ கேட்டேன்.
சிரித்தான்...
வகுப்பில் குறள் நடத்தும்போது கொட்டாவி விட்டவன்தான் கோகுல்.
‘ பஸ்ஸில் பயணம் செய்யும்போது படிக்க சார்!’ என்றான்.
ஆச்சரியமாக இருந்தது.
அவன் வயதில் பஸ் பயணங்களின்போது நான் வார இதழ்கள்தாம் படித்திருக்கிறேன்.
அவனது விஸ்காம் படிப்பு குறள் நோக்கி அவனை இந்த இளம் வயதிலேயே நகர்த்தியிருக்கிறது.
அறிவு என்பது உண்மையில் மனித இயல்பின் ஒரு பகுதி இல்லை! என்பார் மிஷல் ஃபூக்கோ.
அனுபவ மோதல்கள், போரின் விளைவுகள், வாழ்வில் எதிர்கொள்ளும் ஆபத்துகள் மற்றும் வாய்ப்புகள் ஆகியவையே அறிவை உருவாக்குகின்றன.
அறிவு உள்ளுணர்வா? எனில் அல்ல. அறிவு இயற்கையானதா? எனில் இல்லை.
அறிவு இயற்கைக்கு எதிரானது போலவே, அது ஓர் எதிர் உள்ளுணர்வு.
நமது மரபு வழிப்பட்ட உள்ளுணர்வுகளிலிருந்து தப்பித்து, விலகப் பயன்படும் எதிர் உள்ளுணர்வு!
இந்த எதிர் உள்ளுணர்வை வளர்த்துக் கொள்ளும் விழைவே, என் மாணவன் கோகுலை திருக்குறள் வாங்க உந்தியிருக்க வேண்டும்.
‘நான் மொழியில் ஆர்வமாக உள்ளேன், ஏனெனில் அது என்னை காயப்படுத்துகிறது அல்லது மயக்குகிறது!’ என்றவர் அமைப்பியல் சிந்தனையாளர்களுள் ஒருவரான ரோலண்ட் பார்த்ஸ்.
திருக்குறள் என் மொழி. அது, அவ்வப்போது என் காதலியைப்போல காயப்படுத்தியிருக்கிறது, மயக்கியும் வருகிறது. 2000 ஆண்டுகள் கழிந்தும் திருக்குறள் மீது இளைஞர்களுக்கு ஏன் ஆர்வமேற்படுகிறது?
ஏனெனில் மணக்குடவரும், பரிமேலழகரும், காலிங்கரும், மு. வ.வும் வாசித்த குறளன்று நாம் வாசிப்பது.
திருக்குறளுடைய உறுதியான அர்த்தத்தின் மீது, இன்று ஒவ்வொரு தனிப்பட்ட வாசகரின் விளக்கமும் முதன்மையைப் பெறுகிறது.
கோகுலிடம் குறளை வாங்கிப் பிரித்தேன். அது நம் கண்ணில் காட்டும் குறளே இன்றைக்கான நம் சேதி! என உள்ளுக்குள் நினைத்துக் கொண்டேன்.
அறன் வலியுறுத்தல் அதிகாரம் 38 வது குறள் கண்ணில் பட்டது.
‘வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்’
‘ஒருவன் நாள் தவறாது நல்லது (அறம்) செய்தால் அவன் பிறவி வழி அடைபடும்’ என்பதுதான் இதன் மரபு வழியான பொருள்.
‘வாழ்நாள் வழியடைக்கும் கல்’
இப்படி எழுத வள்ளுவனால்தான் முடியும். ஈராயிரம் ஆண்டுகளாக இச்சொற்றொடர் திறந்து கிடக்கிறது.
எந்த அர்த்தங்களாலும் தன்னை நிரப்பிக் கொள்ளாமல் ஒரு காலி பாத்திரம் போல் புதுவாசகனிடம் தன்னை ஒப்படைக்கிற சொற்றொடரிது.
பழைய உரையாசிரியர்களுக்கு , ‘மோட்சத்திற்கு ஏறுவதற்குத் தடையாகின்ற எமன் வருகிற வழியை அடைக்கும் கல்!’லாக இது தென்பட்டது.
‘பல்பிறப்பு, மறுபிறப்பு, வினைப்பயன் என்பனவற்றை அடியாகக் கொண்டு மீண்டும் மீண்டும் பிறவி எடுத்தலைத் தடுப்பது’ என எழுத மதநம்பிக்கையாளனா வள்ளுவன்? இருக்க முடியாது.
கு.ச.ஆனந்தன், திருவிக, தமிழண்ணல் போன்றோர் விலகி சிந்தித்தனர்.
வாழ்நாளில் தீமைவரும் வழியை அடைக்கும் கல் என இவர்கள் சிந்தித்தார்கள்.
வள்ளுவர் பிறப்பறுக்க எண்ணுபனில்லை..
இவ்வாழ்வின் மேன்மைகளைப் பாடியவன்.
வாழ்நாளை வீழ்நாள் ஆக்காமல், நாளும் நல்லவற்றைச் செய்துவந்தால், அது ஒருவனது வாழ்நாளில் ஏற்படும் துன்ப இடையீடுகளை அடைக்கும் கல்! என திருவிக காட்டிய வழியில் நின்று சிந்தித்தவர் தமிழண்ணல்.
இதைதான் வள்ளுவர் ‘நவில்தொறும் நூல் நயம்‘ என்கிறார்.
கோகுலுக்கு குறள், இப்படி மேலும் புதிய திறப்புகளை உருவாக்கக் கூடும்.
வள்ளுவன் தமிழரின் வாழ்நாள் துணை!

-கரிகாலன்
இருப்பது ஒரே வாழ்க்கை. இதைத் தேவையில்லாத விஷயங்களை ரொம்ப யோசித்து வீணடிக்காமல் ஜாலியாக இருங்கள். இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். மனது ரிலாக்ஸாக இருந்தால் முகமும் பளிச்சென இருக்கும்.
அழகு என்பது ஆரோக்கியம்தான். சோர்வாக, டல் அடிக்காமல் பளிச் என்று சுறுசுறுப்பாக இருக்கும் எல்லாமே அழகுதான். நான் பின்பற்றும் ஆரோக்கியக் குறிப்புகள்:-
1. பவுடர், க்ரீம், டை என எதையும் பயன்படுத்துவதில்லை.
2. தலைமுடிக்குத் தேங்காய் எண்ணெய். அதில் கருவேப்பிலையைக் கொதிக்க வைத்துப் பயன்படுத்தலாம். ரொம்பத் தேங்காய் எண்ணெய் தேய்த்தால் முகம் எண்ணெய் வழியும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இரவு மட்டும் தேய்க்கலாம். அவ்வப்போது கண்டிஷனர், ஷேம்பூ போட்டுக் கொள்ளலாம்.
3. உணவுப் பழக்கம் ரொம்ப முக்கியம். விரதம் இருக்கும் போது உடலில் கழிவுகள் நீங்கி detox ஆகி ஃப்ரெஷ் ஆக உணரலாம்.
4. டயட் என்ற பெயரில் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படக்கூடாது. பழங்கள், காய்கறிகள் நிறைய சாப்பிட வேண்டும். வைட்டமின்கள் தேவை. நான்வெஜ் சாப்பிடுவோர் முட்டை தவறாமல் சேர்க்கவும்.
5. வைட்டமின் ஈ, வைட்டமின் சி மிகவும் முக்கியம் தோலின் ஆரோக்கியத்துக்கு. பாதாம், வேர்க்கடலை , எலுமிச்சை, நெல்லிக்காய், ஆரஞ்சு ஆகியவற்றைத் தினம் பயன்படுத்தவும்.
6. இரும்புச் சத்துக்கு பேரீச்சை சேர்க்கவும். ஹீமோக்ளோபின் ரத்தத்தில் குறைந்தால் வெளிறி ஒளியிழந்து இருப்போம்.
7. தேவையில்லாமல் கண்ட எண்ணெயில் பொறித்த நொறுக்குத்தீனி சாப்பிட வேண்டாம். அந்த எண்ணெய்களில் ட்ரான்ஸ் கொழுப்பு அதிகம் இருக்கும். நல்ல கொழுப்புகளான வெண்ணெய், நெய், பாதாம் ஆகியவற்றைச் சேர்க்கவும். ஆரோக்யமான தோலுக்கு நல்ல கொழுப்பு மிக முக்கியம். ஒமேகா 3 கொழுப்புகள் பாதாம் போன்றவற்றில் இருக்கும்.
8. புரதம் மிக முக்கியம். வேக வைத்த, முளை கட்டிய பயிறுகள், வேர்க்கடலை முட்டை ஆகியவை சேர்க்கலாம்.
9. பளிச் தோற்றத்துக்கு நல்ல தூக்கம் மிக மிக முக்கியம். 6-8 மணி நேரத் தூக்கம் மிகவும் அவசியம்.
10 .உடற்பயிற்சி ரொம்ப முக்கியம். நல்ல ரத்த ஓட்டம் இருந்தால் பளிச்சென இருக்கலாம்.
11. இருப்பது ஒரே வாழ்க்கை. இதைத் தேவையில்லாத விஷயங்களை ரொம்ப யோசித்து வீணடிக்காமல் ஜாலியாக இருங்கள். இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். மனது ரிலாக்ஸாக இருந்தால் முகமும் பளிச்சென இருக்கும்.
-டாக்டர் ஜி ராமானுஜம்