search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    பால்
    X
    பால்

    மகத்துவம் மிக்க பசும் பால்

    பசுவின் பால் உட்கொள்ளும் போது உங்கள் உடலை சூடாக்காது. எருமைப்பால் அடர்த்தியானது, உட்கொள்ளும் போது உடல் சூடாகிறது.

    பசுவும் எருமையும் மாடுகள் என்றாலும் அவை இரண்டுக்கும் இடையில் மலையளவு வித்தியாசம் உள்ளது.

    எருமை சேற்றை விரும்புகிறது. பசு தன் சாணத்தில் கூட படுப்பதில்லை. பசு தூய்மையை விரும்புகிறது.

    எருமையை 2கிமீ தூரம் கொண்டுபோய் விட்டுவிட்டால். வீடு திரும்ப முடியாமல் திணறும். சக்தி நினைவகம் பூஜ்ஜியம். நாம் ஒரு பசு மாட்டை 5 கி.மீ. தொலைவில் கொண்டுபோய் விட்டாலும், அது வீட்டிற்குத் திரும்பும். பசுவுக்கு நினைவாற்றல் சக்தி உண்டு.

    பத்து எருமை மாடுகளை கட்டி வைத்து விட்டு அதன் கன்றுகளை விட்டு சென்றால் ஒரு கன்று கூட தன் தாயை அடையாளம் கண்டு கொள்ளாது. ஆனால் பசுவின் கன்று பல மாடுகளுக்கு மத்தியிலும்  தாயை அடையாளம் காணும்.

    பாலை கறக்கும் போது எருமை தன் பால் முழுவதையும் கொடுக்கிறது. தன் கன்றுக்காக அதனால் தேக்கி வைக்க முடியாது. ஆனால் பசு தன் கன்றுக்காக சிறிது பாலை தக்க வைக்கிறது. கன்றுகுட்டி குடிக்கும் போது தான் சேமித்து வைத்த பாலை சுரக்கிறது.

    எருமையால் வெயிலையோ வெப்பத்தையோ தாங்க முடியாது. பசு கோடை வெயிலையும் தாங்கும். எருமை சோம்பேறி குணம் கொண்டது. இதன் பால் கெட்டியானது. அதனால் ஜீரணிக்க கடினமாக உள்ளது. அதன் பாலை நாம் உட்கொள்ளும்போது அதே சோம்பல் மற்றும் அஜீரணம் ஏற்படுகிறது.

    பசுவின் முதுகில் இருக்கும் “சூரியன் கேது நரம்பு” வெயில் இருக்கும் போது விழித்துக் கொள்ளும். இந்த நரம்பு பிரபஞ்சத்திலிருந்து “காஸ்மிக் சக்தியை” உறிஞ்சுகிறது. அதனால் நோய்களை நீக்கும் சக்தி பசும்பாலுக்கு உண்டு. எந்த உயிரினத்திற்கும் அத்தகைய சக்தி இல்லை.

    உண்மையில், பசுவின் பால் உட்கொள்ளும் போது உங்கள் உடலை சூடாக்காது. எருமைப்பால் அடர்த்தியானது, உட்கொள்ளும் போது உடல் சூடாகிறது, மேலும் நமது உடலிலும் சர்க்கரை அதிகரிக்கிறது சர்க்கரை நோயாளிகளுக்கு இது நல்லதல்ல.

    எருமைப்பாலில் அதிக கொழுப்பு உள்ளது, இது கொலஸ்ட்ராலுக்கும் காரணமாகும். எருமைப் பாலை அடுப்பில் வைத்து சிறிது சூடாக்கும் போது அதில் உள்ள மூன்றாவது மற்றும் நான்காவது சத்து ஆவியாகிவிடும். பசும்பாலை எத்தனை முறை காய்ச்சி குடித்தாலும் அதில் உள்ள ஊட்டச்சத்து குணங்கள் அழியாது.
    Next Story
    ×