என் மலர்
விருதுநகர்
சிவகாசி அருகே முதியவர் தவறி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
சிவகாசி சிவன்கோவில் நந்தவன தெருவை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது 62). இவர் தச்சு தொழில் செய்து வந்தார். இந்தநிலையில் கடந்த 6-ந் தேதி காமராஜர்புரம் காலனியில் உள்ள ஒரு கட்டிடத்தில் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது 10 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் முத்துராமலிங்கத்துக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி கொடுக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொரோனா தொற்று காரணமாக வேலை கிடைக்காததால் மலேசியாவில் உணவு மற்றும் மருத்துவ வசதி கிடைக்காததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு திருச்சுழி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
விருதுநகர்:
பணம் சம்பாதிப்பதற்காக வெளிநாட்டு வேலைக்கு சென்றவர்களில் பலர் அதனை சம்பாதிக்க முடியாமல் அவதிப்படுவதோடு, சில நேரங்களில் தங்கள் உயிரையும் இழந்து விடுகின்றனர்.
இது போன்று ஒரு நிலை விருதுநகர் மாவட்டம், திருச்சுழியைச் சேர்ந்த வாலிபருக்கு ஏற்பட்டுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள காரைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 37). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த ஏஜெண்டு ஒருவர் மூலம் மலேசியாவில் ஓட்டல் வேலைக்கு சென்றார்.
அவரது மனைவி கோகிலாதேவி. 2 குழந்தைகள் உள்ளனர். காரைக்குளத்தில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதையும் பாதித்தது. இதில் பலருக்கும் வேலை இழப்பு ஏற்பட்டது. கருப்பசாமிக்கும் சரியான வேலை கிடைக்காத சூழல் உருவாகி உள்ளது.
இது பற்றி அவர் தனது மனைவியிடம் போனில் தெரிவித்துள்ளார். அப்போது சரியான வேலை இல்லாததால் சாப்பிட வழியின்றி தவிப்பதாகவும், ஊருக்கு திரும்ப முடியாத நிலை உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கோகிலாதேவி, மேலூரைச் சேர்ந்த ஏஜெண்டை தொடர்பு கொண்டு தனது கணவரை இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்கும்படி கேட்டார். ஆனால் அவர் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் விருதுநகர் மாவட்ட கலெக்டரிடம், கோகிலாதேவி ஒரு மனு கொடுத்தார்.
அதில், மலேசியாவில் சாப்பாடு மற்றும் மருத்துவ உதவி கிடைக்காமல் தவிக்கும் கணவர் கருப்பசாமியை மீட்டுத்தர வேண்டும். இல்லாவிட்டால் 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இந்த சூழலில் மலேசியாவில் உடல் நலக்குறைவால் கருப்பசாமி இறந்து விட்டதாக அவருடன் வேலை பார்ப்பவர்கள், கோகிலாதேவிக்கு தகவல் கொடுத்தனர். இதனால் அவர் அதிர்ச்சியடைந்தார்.
மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த அவர் கணவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கதறி அழுதார். இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனுவும் கொடுத்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,437 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 68 ஆயிரத்து 760 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16,428 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
16,100 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 3,043 பேரின் பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. 99 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்பட வில்லை.
மாவட்டத்தில் நேற்று மேலும் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,437 ஆக உயர்ந்துள்ளது.
1,896 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. மாவட்ட சுகாதாரத்துறை தொடர்ந்து மருத்துவ பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க நடவடிக்கை எடுக்காமல் தினசரி ஆயிரக்கணக்கானோரின் மருத்துவ பரிசோதனை முடிவுகளை நிலுவையில் வைக்கும் நிலை தொடர்கிறது.
அருப்புக்கோட்டையில் கடந்த மாதம் 31-ந் தேதி சபரிமலையில் திரும்பிய ஒருவரின் பரிசோதனை முடிவுகள் நான்கு நாட்கள் கழித்து கடந்த 4-ந்தேதி தேதி தெரிவிக்கப்பட்டதால் அதற்குள் அவரது குடும்பத்தார் 7 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு விட்டது. தற்போது இந்த குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
பரிசோதனை முடிவுகள் தாமதம் செய்வதால் தான் இம்மாதிரியான நோய் பரவல் ஏற்படும் நிலை உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் தெரிவிக்க மாவட்ட சுகாதாரத்துறை கூறிய அறிவுறுத்தல் வழங்கவேண்டுமென கோரப்பட்டுள்ளது. மேலும் பரிசோதனை முகாம்கள் எந்தெந்த இடங்களில் நடத்தப்படுகின்றன என்று முன்னறிவிப்பு ஏதும் இல்லாததால் பதிவு செய்ய விரும்புபவர்கள் முகாம் நடக்கும் இடம் தெரியாமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது.
எனவே மாவட்ட சுகாதாரத்துறை மாவட்டத்தில் குறிப்பிட்ட தாலுகாக்களில் எந்தெந்த இடங்களில் பரிசோதனை முகாம்கள் நடைபெறுகின்றன என்பதை உரிய முறையில் முன்கூட்டியே அறிவிக்க ஏற்பாடு செய்ய வேண்டியதும் அவசியமாகும்.
தளவாய்புரத்தில் பத்திரகாளியம்மன் கோவில் மண்டகப்படி அருகில் அரசு புறம்போக்கு நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி போராட்டம் நடைபெற்றது.
தளவாய்புரம்:
தளவாய்புரத்தில் பத்திரகாளியம்மன் கோவில் மண்டகப்படி அருகில் அரசு புறம்போக்கு நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி நேற்று காலை தளவாய்புரத்தில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து தளவாய்புரம் மாரிமுத்து நாடார் திருமண மண்டபம் முன்பு நிர்வாக கமிட்டி ஒருங்கிணைப்பாளர் ராஜ்பாபு தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இதில் கோவில் மண்டகப்படி அருகில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்ற வாசகம் எழுதிய அட்டையை கையில் ஏந்தி இருந்தனர். ராஜபாளையம் தாசில்தார் ஸ்ரீதர், தளவாய்புரம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் ஆகியோர் நிர்வாக கமிட்டியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் ஒரு வார காலத்திற்குள் அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என உறுதி அளித்தனர். இதனையடுத்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டது. கடைகள் திறக்கப்பட்டது.
விருதுநகர் அருகே பெண் மரணமடைந்த சம்பவம் குறித்து மகளின் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள கட்டனார்பட்டியைச் சேர்ந்தவர் ராமுத்தாய் (வயது 60). இவர் கடந்த 2-ந் தேதி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
பின்னர் அவர் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார். இது தொடர்பாக சென்னையில் வசிக்கும் அவரது மகள் பாண்டீஸ்வரி (30) வச்சக்காரபட்டி போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரில், தனது தாய் இறந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கூறி உள்ளார். இதனைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சிறுதானிய உற்பத்தி சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கலெக்டர் கண்ணன் தெரிவித்தார்.
விருதுநகர்:
தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் சத்துமிகு தானியப் பயிர்களை விவசாயிகள் பயிரிடுவதன் அவசியம் குறித்து மாவட்டங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் 16 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் சத்துமிக்க தானியங்கள் திட்டத்தின் கீழ் ரூ.72 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதன் அடிப்படையில் பிரசார வாகனங்கள் மூலம் விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சோளம், கம்பு, குதிரைவாலி, கேழ்வரகு உள்ளிட்ட சிறு தானியங்கள் சாகுபடி மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
மொத்தம் 13 பிரசார வாகனங்கள் மூலம் மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களில் விவசாயிகளிடம் சிறுதானிய பயிர்களை பயிரிடுவதன் அவசியம் மற்றும் மானிய திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்படுகிறது.
சிறுதானிய உணவுகளின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை அந்தந்த வட்டத்திற்குட்பட்ட வேளாண்மை உதவி இயக்குனர்கள் மேற்கொள்வார்கள். விவசாயிகள் சிறு தானியங்கள் பயிர் சாகுபடி செய்யும் தொழில்நுட்பத்தினை நன்கு அறிந்து சிறு தானியங்களை அதிக பரப்பில் பயிரிட்டு நல்ல மகசூலை பெற வேண்டும்.
முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் பிரசார வாகனத்தை கலெக்டர் கண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் விவசாயிகளிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமசுப்பிரமணியன், வேளாண்மை இணை இயக்குனர் உத்தண்ட ராமன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்
நரிக்குடி பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக 5 கண்மாய்களில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் மழைநீர் வீணாக வெளியேறியது.
காரியாபட்டி:
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் இரவு பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
இந்த நிலையில் பலத்த மழையால் நரிக்குடி அருகே எழுவணி, ஆயகுளம், புதுக்குளம், வந்தவாசி, காரியாபட்டி அருகே தொட்டியங்குளம் ஆகிய கிராமங்களில் உள்ள கண்மாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் முழுவதும் வீணாக வெளியேறிச் சென்று விட்டது.
மேலும் இந்த தண்ணீர் முழுவதும் அருகில் உள்ள வயல் வெளிகளில் பாய்ந்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.
மழைக்காலத்திற்கு முன்பே இந்த கண்மாய்களை தூர்வாரி கரைகளை பலப்படுத்தி இருந்தால் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி இருக்காது. விவசாயிகளுக்கும் பலன் அளித்திருக்கும்.
ஆனால் இம்மாவட்டத்தில் பெரும்பாலான கண்மாய்கள் தூர்வாரப்படவில்லை. கரைகள் பலப்படுத்தப்பட வில்லை. எனவே கண்மாய்களை தூர்வாரி கரையை பலப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
அதிகாரிகளை நியமித்து மாவட்டம் முழுவதும் உள்ள கண்மாய்கள் குறித்து ஆய்வு செய்து அதனை தூர்வாரி கரையை பலப்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொங்கல் விடுமுறைக்கு பின்னர் பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்து இம்மாவட்டத்தில் உள்ள 410 பள்ளிகளிலும் 2-வது நாளாக பெற்றோர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.
விருதுநகர்:
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து முதல்-அமைச்சர் முடிவெடுத்து அறிவிப்பார் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளிலும் கடந்த 2 நாட்களாக கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த உத்தரவிட்டது. இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பெற்றோர் தெரிவித்த கருத்துக்களை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தொகுத்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 190 அரசு பள்ளிகள், 90 அரசு உதவிபெறும் பள்ளிகள், 86 மெட்ரிக் பள்ளிகள், 39 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் என ஆக மொத்தம் 410 பள்ளிகளில் கடந்த 2 நாட்களாக பெற்றோர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. பல பள்ளிகளில் பெற்றோர் கூறும் கருத்துக்கள் வீடியோ பதிவு செய்யப்பட்டது. பெரும்பாலான பெற்றோர்கள் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளிகளை திறக்கலாம் என்றும், பள்ளிகளில் மாணவர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நோய் தடுப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கிராமப் புறங்களில் உள்ள அரசு பள்ளிகளில் பெற்றோர்கள் பள்ளிகளை திறந்தால் நோய் பாதிப்பு ஏற்படும் என அச்சம் தெரிவித்தனர். அனைத்து பள்ளிகளிலும் நடத்தப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பெற்றோர்கள் தெரிவித்த கருத்துக்களை தலைமை ஆசிரியர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கும் நிலையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் இதனை தொகுத்து பள்ளி கல்வித்துறை இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 21 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 3 லட்சத்து 66 ஆயிரத்து 866 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 16 ஆயிரத்து 415 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.
16 ஆயிரத்து 88 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மேலும் 21 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 426 ஆக உயர்ந்துள்ளது. 3 ஆயிரத்து 147 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. 98 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்பட வில்லை.
மாவட்டத்தில் நேற்று 1,818 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை.
கடந்த மாதம் 31-ந்தேதி சபரிமலையில் இருந்து ஊர் திரும்பிய நபர் ஒருவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதில் அவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கடந்த 4-ந்தேதி நோய் பாதிப்பு அவருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 7 பேருக்கு நோய் பாதிப்பு உறுதியானது. இவர்கள் அனைவரும் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறையினர் இந்த குடும்பத்துடன் தொடர்புடையவர்களுக்கும் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்து வருகின்றனர். இம்மாவட்டத்தில் சுகாதாரத்துறையினர் பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் தெரிவிக்க நடவடிக்கை எடுக்காத நிலையே தொடர்கிறது.
எனவே பரிசோதனை முடிவுகளை உடனே தெரிவிக்கவும், பரிசோதனை எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். மாவட்ட நிர்வாகம் மாவட்டம் முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பொது இடங்களில் நோய் தடுப்பு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்பட உரிய கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டியதும் அவசியமாகும்.

தமிழகம் முழுவதும் பொது நூலகங்களில் செய்தி பத்திரிகை படிக்க பொது மக்களுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்:
தமிழகம் முழுவதும் நூலக ஆணைக்குழு நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் பொது நூலகங்களை மக்களின் பயன்பாட்டிற்காக செயல்படுத்தி வருகிறது.
ஆனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து பொது நூலகங்கள் முற்றிலுமாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படாமல் முடக்கப்பட்டது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் பொது நூலகங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு முழுவதுமாக அனுமதிக்கப்படாத நிலை நீடிக்கிறது.
தற்போதுள்ள நிலையில் பொது நூலகங்களில் நூலக உறுப்பினர்கள் மட்டும் இரவல் அடிப்படையில் புத்தகங்கள் படிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தினசரி பத்திரிகைகள் படிக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் போட்டித்தேர்வுக்கு படிகும் மாணவர்கள் பத்திரிகை படிக்க முடியாத நிலை உள்ளதால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.
எனவே தமிழக அரசு பொது நூலகத்தில் பத்திரிகை படிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நோய்த்தடுப்பு முறைகளை பின்பற்றி பொது நூலகங்களில் பத்திரிகை படிக்க அனுமதி அளிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்

ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது.
ராஜபாளையம்:
ராஜபாளையம், சத்திரப்பட்டி, சம்சிகபுரம், சங்கரபாண்டியபுரம், ஆகிய பகுதிகளில் நேற்று 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது.
சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். ஏற்கனவே கடந்த மாதத்தில் பெய்த மழையினால் கண்மாய்களில் தண்ணீர் நிரம்பி உள்ளன. தற்போது பெய்த மழையினால் இன்னும் நீர் நிரம்ப வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலை, அய்யனார் கோவில் ஆற்றுப்பகுதியில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அதேபோல ராஜபாளையம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து காந்தி சிலை ரவுண்டானா வரை பல்வேறு இடங்களில் வணிக வளாகங்களில் கடந்த மாதம் பெய்த மழையினால் நீரூற்று அதிகரித்து கசிவு ஏற்பட்டு நீர் வடிந்து வருகிறது.
தொழில் நிறுவனங்கள் நடத்தி வரும் உரிமையாளர்கள் தினசரி நீரை அகற்றி வருகிறார்கள்.
அதேபோல தளவாய்புரம், சேத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 6 மணிக்கு திடீரென பலத்த மழை பெய்ய தொடங்கியது.
இந்த மழை 1 மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது. தளவாய்புரம் பால் டிப்போ தெரு, செட்டியார்பட்டி அரசரடி பஸ் ஸ்டாப் ஆகிய இடங்களில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு மழை நீரும், கழிவு நீரும் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
வத்திராயிருப்பு, கான்சாபுரம், அத்திகோவில், பிளவக்கல் அணை, கிழவன் கோவில், நெடுங்குளம், மகாராஜபுரம், தம்பிபட்டி, இலந்தைகுளம், கோட்டையூர் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது.
இதனால் வத்திராயிருப்பில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. வத்திராயிருப்பில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் உள்ள ரோட்டடித்தெருவில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
வத்திராயிருப்பு பேரூராட்சி பகுதியில் பெரும்பாலான தெருக்களில் கழிவு நீர் கால்வாய்கள் தாழ்வாக இருப்பதால் மழைநீரும், கழிவுநீரும் சேர்ந்து சாலைகளில் சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
விருதுநகர்:
மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 65 ஆயிரத்து 48 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16 ஆயிரத்து 409 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்ட்டது தெரியவந்தது.
16,077 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 2,468 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்பட வில்லை. மாவட்டத்தில் நேற்று மேலும் 6 பேருக்கு கொேரானா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,415 ஆக உயர்ந்துள்ளது.
வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை. மாவட்டத்தில்1,457 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 2,400- க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படாத நிலை இருந்தது.
மாவட்டத்தில் மருத்துவ பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தாலும் மாவட்ட சுகாதாரத்துறையினர் அதற்கான நடவடிக்கை எடுக்காத நிலை நீடிக்கிறது.
தினசரி 2,500 முதல் 3,000 பேர் வரையிலான மருத்துவ பரிசோதனை முடிவுகள் நிலுவையில் இருந்து வருகிறது. மருத்துவப் பரிசோதனை முடிவுகள் தாமதப்படுத்தபடுவதால் நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் மாவட்ட நிர்வாகம் முடிவுகளை விரைவுபடுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.