search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பொது நூலகங்களில் தினசரி பத்திரிகை படிக்க அனுமதி தேவை - தமிழக அரசிடம் வலியுறுத்தல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தமிழகம் முழுவதும் பொது நூலகங்களில் செய்தி பத்திரிகை படிக்க பொது மக்களுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
    விருதுநகர்:

    தமிழகம் முழுவதும் நூலக ஆணைக்குழு நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் பொது நூலகங்களை மக்களின் பயன்பாட்டிற்காக செயல்படுத்தி வருகிறது.

    ஆனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து பொது நூலகங்கள் முற்றிலுமாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படாமல் முடக்கப்பட்டது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் பொது நூலகங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு முழுவதுமாக அனுமதிக்கப்படாத நிலை நீடிக்கிறது.

    தற்போதுள்ள நிலையில் பொது நூலகங்களில் நூலக உறுப்பினர்கள் மட்டும் இரவல் அடிப்படையில் புத்தகங்கள் படிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் தினசரி பத்திரிகைகள் படிக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் போட்டித்தேர்வுக்கு படிகும் மாணவர்கள் பத்திரிகை படிக்க முடியாத நிலை உள்ளதால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

    எனவே தமிழக அரசு பொது நூலகத்தில் பத்திரிகை படிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நோய்த்தடுப்பு முறைகளை பின்பற்றி பொது நூலகங்களில் பத்திரிகை படிக்க அனுமதி அளிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்
    Next Story
    ×