என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • பெண்ணை ஆபாசமாக பேசிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே வரலொட்டி பகுதியை சேர்ந்த ராமர் மனைவி கஸ்தூரி (வயது 35). ராமர் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார்.

    கஸ்தூரி தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் அவரை அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி, சோனை முத்து ஆகியோர் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி கஸ்தூரி மல்லாங்கிணறு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெண்ணிடம் 5 பவுன் நகை பறிக்கப்பட்டது.
    • ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே ஆவியூரை சேர்ந்தவர் லட்சுமி (வயது 25). இவர் அதேபகுதியில் உள்ள கருப்பணசாமி ேகாவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார்.

    அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவர் அணிந்திருந்த 5 பவுன் செயினை மர்ம நபர் பறித்து சென்றுவிட்டான்.

    இதுபற்றிய புகாரின் பேரில் ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தடைசெய்யப்பட்ட சரவெடி பறிமுதல் செய்யப்பட்டன.
    • வெம்பக்கோட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் பகுதியை சேர்ந்தவர் தங்கம் (வயது 62). இவர் தடைசெய்யப்பட்ட சரவெடிகளை 14 சாக்கு பைகள் மற்றும் 24 அட்டை பெட்டிகளில் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.

    அதனை வெம்பக்கோட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • பட்டாசு உரிமையாளர்களுடன் நீரி அமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் வருகிற 9-ந்தேதி நடக்கிறது.
    • தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க கட்டிடத்தில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும்.

    சிவகாசி

    தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கணேசன் கூறியதாவது:-

    பட்டாசு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் பசுமை பட்டாசு தயாரிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் பசுமை பட்டாசு குறித்து ஆய்வு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி கழகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நீதிமன்ற உத்தரவின்படி நீரி அமைப்பு பசுமை பட்டாசு குறித்து ஆய்வு செய்து அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு உற்பத்தி யாளர்கள் பலர் நீரியுடன் பசுமை பட்டாசு குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து பசுமை பட்டாசு தயாரிக்க தொடங்கினர்.

    தொடர்ந்து நீரி பசுமை பட்டாசு குறித்த பார்முலாவை இணைய தளத்தில் வெளியிட்டது. அந்த பார்முலாவை இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பட்டாசு தயாரித்து வருகிறார்கள். பின்னர் பட்டாசு உற்பத்தியாளர்கள் நீரி பார்முலா படி தயாரித்த பட்டாசுகளை நீரிக்கு சோதனைக்காக அனுப்பி அதற்கான சான்று மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினர் பட்டாசு தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவை பட்டாசு ஆலைகள் பின்பற்றுகிறதா? என சி.பி.ஐ. அதிகாரிகள் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் பட்டாசு ஆலையில் ஆய்வு செய்தனர்.விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1070 பட்டாசு ஆலைகள் உள்ளன.

    இந்த ஆலை உரிமையாளர்கள் பசுமை பட்டாசு தயாரிக்க இதுவரை நீரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யாமல் இருந்தால் 9-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் முகாமில் அவர்கள் நீரி யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்.

    இந்த முகாம் சிவகாசியில் உள்ள தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க கட்டிடத்தில் அன்று காலை 9.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும். இந்த முகாமிற்கு நீரி அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு 8 பேர் சிவகாசி வருகிறார்கள்.

    இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பட்டாசு ஆலை உரிமையாளர்கள் நீரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்திய அரசை கண்டித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    வத்திராயிருப்பு

    வத்திராயிருப்பில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா வங்கி கணக்கை முடக்கிய மத்திய அரசை கண்டித்து வத்திராயிருப்பு முத்தாலம்மன் திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட செயலாளர் சேக் முகமது தலைமை தாங்கினார். அப்துல் சமது முன்னிலை வகித்தார்.

    எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் அலி அகமது, எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட துணைத்தலைவர் அபுபக்கர், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் ஹக்கீம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜூ உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    ×