கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
Published on

வத்திராயிருப்பு

வத்திராயிருப்பில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா வங்கி கணக்கை முடக்கிய மத்திய அரசை கண்டித்து வத்திராயிருப்பு முத்தாலம்மன் திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட செயலாளர் சேக் முகமது தலைமை தாங்கினார். அப்துல் சமது முன்னிலை வகித்தார்.

எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் அலி அகமது, எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட துணைத்தலைவர் அபுபக்கர், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் ஹக்கீம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜூ உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com