என் மலர்
வேலூர்
- குப்பைகளை சேகரித்து தீயிட்டு கொளுத்திய போது விபரீதம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் அடுத்த புது வசூரை சேர்ந்தவர் பங்கஜவள்ளி (வயது 76). இவர் கடந்த 11-ந் தேதி வீட்டிற்கு முன்பாக இருந்த குப்பைகளை சேகரித்து தீயிட்டு கொளுத்தினார்.
அப்போது எதிர்பாராத விதமாக பங்கஜ வள்ளியின் சேலையில் தீப்பிடித்து மளமளவென உடல் முழுவதும் பரவியது. இதனை பார்த்த அவரது உறவினர்கள் பங்கஜவள்ளி மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
பின்னர் சிகிச்சைக்காக பங்கஜ வள்ளி வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பெற்று வந்த பங்கஜவள்ளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு சுற்றுச்சுவர் வேண்டும் என கேட்டுள்ளோம்
- எல்லாமே அரசியல் தாங்க என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
இதில் கலந்து கொண்ட அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:-
காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு சுற்றுச்சுவர் வேண்டும் என கேட்டுள்ளோம், நீச்சல் குளத்திற்கு அருகில் உள்ள நீர் தேக்கத் தொட்டியில் இருந்து நீர் வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளோம், அதேபோல விளையாட்டு வீரர்களுக்கு இதே மைதானத்தில் நிரந்தரமான தங்கும் விடுதி கட்டித் தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.
வேலூர் விளையாட்டு மைதானத்தை தமிழகத்தில் உள்ள ஒன் ஆப் தி பெஸ்ட் விளையாட்டு மைதானமாக மாற்றிக் காட்டுவேன் என்றார். அப்போது அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்வது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு "என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டினில் நீதி மறையட்டுமே" என்ற பாடலை பாடினார். எல்லாமே அரசியல் தாங்க என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
- போக்சோவில் டியூசன் மாஸ்டர் கைது
- ஜெயிலில் அடைப்பு
வேலூர்:
வேலூர் அடுத்த தொரப்பாடியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த மீர் பஹார் அலி (வயது 53). என்பவரிடம் மாணவி டியூஷன் படித்து வந்தார்.
இந்த நிலையில் டியூஷனுக்கு வந்த மாணவியிடம் மீர் பஹார் அலி பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இது குறித்து சிறுமி தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் வாசுகி போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து மீர் பஹார் அலியை கைது செய்து ஜெயிலில் அடைத்தார்.
- 40 போதை மாத்திரைகள் பறிமுதல்
- ஜெயிலில் அடைப்பு
அணைக்கட்டு:
பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே கையில் பையுடன் நீண்ட நேரமாக 2 பேர் நின்று கொண்டிருந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணகரன் தலைமை யிலான போலீசார் விரைந்து சென்று சந்தேகத்தின் பேரில், 2 பேரையும் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் பள்ளிகொண்டா பகுதியை சேர்ந்த சீனிவாசன் (வயது 26) மற்றும் தீபக் (34) என்பதும், இவர்கள் 2 பேரும் ஆந்திர மாநிலத்தில் கீழ் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதிக்கு ஜீப் ஓட்டும் கூலி வேலை செய்து வந்தனர். இவர்கள் திருப்பதியில் இருந்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா, போதை ஊசி மற்றும் 40 போதை மாத்திரைகள் உள்ளிட்ட வைகளை பறிமுதல் செய்தனர் . கைது செய்யப்பட்ட 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜெயிலில் அடைக்க ப்பட்டனர்.
- பிளாஸ்டிக் மறுசுழற்சி பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்
- குப்பைகள் விரைவில் வெளயேற்றப்படுவதாக கூறினார்
அணைக்கட்டு:
பள்ளிகொண்டா பேரூராட்சிகயில் உள்ள வளம் மீட்பு பூங்காவை பேரூராட்சிகளின் இயக்குனர் கிரண்குராலா நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
இங்கு இயற்கை உரம் தயாரித்தல், பிளாஸ்டிக் மறுசுழற்சி பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அப்போது பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி கூறியதாவது:-
பள்ளிகொண்டா பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது. இங்குள்ள 5240 குடியிருப்புகளும், 520 வணிக வளாகங்களில் இருந்து தினமும் சுமார் 5 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது.
இந்த குப்பைகள் தரம் பிரித்து, மறு சுழற்சி செய்யப்பட்டு, இயற்கை உரமாக மாற்றி குறைந்த விலைக்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது பூங்காவில் 3 டன் இயற்கை உரம் தயார் நிலையில் உள்ளது எனவும் மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் சிறு துகள்களாக அரைக்கப்பட்டு, தார்சாலை அமைக்கும்போது பயன்படுத்தப்படுகிறது.
இதன் மூலம் குப்பைகள் விரைவில் வெளயேற்றப்படுவதாக கூறினார்.
இதனையடுத்து கேமரா ன்பேட்டை பகுதியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.47 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் குளம் புனரமைப்பு பணி, குப்பைகளை சேகரிக்க வழங்கப்பட்டுள்ள பேட்டரி வாகனங்கள் உள்ளிட்டவை களையும் பேரூராட்சிகளின் இயக்குனர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அம்சா (பொறுப்பு), இளநிலை பொறியாளர் சந்தோஷ்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி, துணைத் தலைவர் வசிம்அக்ரம், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- வேலூர் எம்.பி.கதிர்ஆனந்த் அடிக்கல் நாட்டினார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
காட்பாடியில் கூட்டுறவு நகரமைப்பு சங்கம் சார்பில் வணிக வளாகம் கட்ட ரூ.85.59 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
வணிக வளாகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. கூட்டுறவு சங்க தலைவர் ஜெயராமன் மற்றும் செயலாளர் மனோகரன் ஆகியோர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக வேலூர் எம்.பி. கதிர்ஆனந்த் கலந்து கொண்டு அடி நாட்டினார்.
நிகழ்ச்சியில் 1-வது மண்டல தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜா, பகுதி செயலாளர்கள் வன்னிய ராஜா, பரமசிவம், கூட்டுறவு சங்க இயக்குனர்கள் கே.எஸ் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- உண்டியலை 4 கி.மீ. தூரத்தில் வீசி சென்ற கும்பல்
- எவ்வளவு பணம் இருந்தது என தெரியவில்லை
வேலூர்:
வேலூர் அடுத்த சித்தேரியில் அமிர்தி செல்லும் மெயின் ரோட்டில் புகழ்பெற்ற மகா சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவதால் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் பூஜைகள் முடிந்து கோவில் பூசாரி கோவில் நடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றார்.
இன்று காலை வழக்கம் போல் கோவிலை திறப்பதற்காக பூசாரி வந்தார். அப்போது கோவிலின் முன்பக்க இரும்பு கோட்டில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கோவில் வளாகத்திற்குள் சென்று பார்த்தார். அப்போது அங்கு வைக்கப்பட்டு இருந்த உண்டியல் காணாமல் போனது தெரியவந்தது.
இதுகுறித்து பூசாரி கோவில் தர்மகத்தா ரவிக்கு தகவல் தெரிவித்தார். கோவிலில் உண்டியல் காணாமல் போனது குறித்து அப்பகுதி மக்களிடையே தகவல் பரவியது. ஏராளமான பொதுமக்கள் கோவில் முன்பாக குவிந்தனர்.
உண்டியல் காணாமல் போனது குறித்து கோவில் தர்மகர்த்தா ரவி பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி உண்டியலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது காணாமல் போன உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிறு களம்பூர் ரெயில்வே தண்டவாளம் அருகே வீசி சென்றது தெரிந்தது.
போலீசார் உண்டியலை மீட்டு வழக்கு பதிவு செய்து கோவில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது என தெரியவில்லை. நாளை ஆடி மாதம் பிறக்க உள்ள நிலையில் அம்மன் கோவில் உண்டியல் கொள்ளைய டிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- நந்திக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் கடந்த மாதம் 25-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். வழக்கமாக நடைபெறும் பிரதோஷ வழிபாடு அன்று வரும் பக்தர்களின் கூட்டத்தை விட நேற்று அதிகமாக இருந்தது. நந்திக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பிரதோஷத்தையொட்டி கோட்டைக்குள் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் பலர் கோட்டை பூங்காவில் அமர்ந்தும் பொழுது போக்கினர். ஏராளமான பக்தர்கள் வருகையால் கோவில் வளாகம் மற்றும் கோட்டை பூங்கா பரபரப்பாக காணப்பட்டது. இதையொட்டி ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- எஸ்.பி.மணிவண்ணன் உத்தரவு
- மாவட்ட போலீஸ் நிர்வாகம் சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது
வேலூர்:
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கோட்டீஸ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, பழனி, ராமமூர்த்தி மற்றும் சப்- இன்ஸ்பெக்டர்கள், தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் என்.எஸ்.எஸ். அலுவலர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் விபத்துகளை தவிர்க்கவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பல்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்துக்கள் கேட்கப்பட்டன.
அதன்படி, வேலூரில்' உள்ள தனியார் கல்லூரிகளின் என்.எஸ்.எஸ். மற்றும் என்.சி.சி. மாணவர்களை போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபடுத்துவது குறித்தும் அவர்களுக்கு மாவட்ட போலீஸ் நிர்வாகம் சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மாவட்டத்தில் அதிகப்படியான விபத்துகள் ஏற்படும் நேரங்களை ஆய்வு செய்து அந்த நேரத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பேசும்போது, 'ஆட்டோவில் பயணித்த ஒரு மருத்துவரை பாலியல் வன்கொடுமைக்கு
ஆளாக்கி நாட்டை உலுக்கிய சம்பவம் வேலூரில் நடைபெற்றுள்ளது.
எனவே, வேலூரில் முறையான அனுமதி இல்லாத ஆட்டோக்களை கட்டுப்படுத்தும் வகையில் வட்டார போக்குவரத்து அலுவலர்களுடன் போலீஸ் துறையினரும் இணைந்து சோதனை மேற்கொள்ள வேண்டும்.
அப்போதுதான் முறைகேடாக ஆட்டோக்கள் இயக்கப்படுவது தவிர்க்கப்படும். அதேபோல், ஆட்டோ ஓட்டுநர்கள் சீருடை அணிவதை உறுதிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு உட்கோட்டத்திலும் எத்தனை ஆட்டோ நிறுத்தங்கள் உள்ளன.
அங்குள்ள ஆட்டோ ஓட்டுநர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும். மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது அதிக வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
- நகர்புற நிதி உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக தலைவர் உத்தரவு
- பாதாள சாக்கடை திட்டம், புதிய சாலைகள், சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன
வேலூர்:
வேலூர் மாநகராட்சியில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பு நிதியுடன் சுமார் ரூ.1,000 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த திட்டத்தில் பாதாள சாக்கடை திட்டம், புதிய சாலைகள், சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டம், புதிய பேருந்து நிலையம், பல் அடுக்கு வாகன நிறுத்துமிடம், குப்பைகளில் இருந்து உரம் தயாரிப்பு கூடங்கள் விரிவாக்கம், அறிவுசார் மையம், வேலூர் கோட்டை அபிவிருத்தி பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஏற்கெனவே, இந்த பணிகளை மார்ச் மாதத்துக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், வரும் டிசம்பர் மாதம் வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேலூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை தமிழ்நாடு நகர்ப்புற நிதி, உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக தலைவர் விஜயகுமார் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.
அதன்படி, புதிய பேருந்து நிலையம், விருதம்பட்டு சர்க்கார் தோப்பு பகுதியில் நடைபெற்று வரும் பாதாசாக்கடை திட்டத்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம், அரியூரில் உள்ள அறிவுசார் மையம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.
முன்னதாக வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு நகர்ப்புற நிதி, உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக தலைவர் விஜயகுமார் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டப் பணிகளை வரும் டிசம்பர் மாதத்துக்குள் விரைவாக முடிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.
அப்போது, மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி மற்றும் பொறியாளர்கள் உடனிருந்தனர்.
- பொதுமக்கள் வலியுறுத்தல்
- அடிக்கடி தீப்பொறி மற்றும் மின் கசிவு ஏற்படுகிறது
அணைக்கட்டு:
வேலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புலிமேடு ஊராட்சியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களின் வசதிக்காக ஆங்காங்கே சின்டெக்ஸ் அமைக்கப்பட்டு, குடிநீர் வழங்கப்படுகிறது. அதன்படி புலிமேடு வல்லாண்டப்பன் கோவில் செல்லும் வழியில் சின்டெக்ஸ் வைக்கப்பட்டுள்ளது.
அதன்அருகில் போர்வெல் மற்றும் சின்டெக்ஸ்க்கு நீர் ஏற்ற மின்மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளது. அந்தபகுதி மக்கள் தேவைப்படும் நேரத்தில் மட்டும், மின்மோட்டாரை பயன்படுத்தி தண்ணீர் உபயோகிக்கின்றனர்.
தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட இந்த மின் மீட்டர் பெட்டியின் கதவுகள், கடந்த சில மாதங்களாக உடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. பாதுகாப்பின்றி கிடக்கும் இந்த மின் மீட்டரில் அடிக்கடி தீப்பொறி மற்றும் மின்சார கசிவு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறும் முன்பு, அதிகாரிகள் இந்த மின் மீட்டரை மாற்றி அமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.
- பெண் வீட்டார் வழங்கினர்
- பழங்களின் விலை போன்று தக்காளி விலையேற்றதால் மாப்பிள்ளை வீட்டாருக்கு ெகாடுத்தனர்
கே.வி.குப்பம்:
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம், காமாட்சி அம்மன் பேட்டை, பினாங்கு காரர் என்பவர் வீட்டில் சமீபத்தில் திருமணம் நடை பெற்றது.
புதிதாக திருமண மான, ஓராண்டுக்கு உள்ளான, மணப்பெண்ணை தாய் வீட்டார் சீர்வரிசை வைத்து மணமகன் இல்லத்திலி ருந்து தங்கள் வீட்டிற்கு அழைத் துச் செல்வது வழக்கம்.
ஆடி மாதம் முடியும் வரை தாய் வீட் டில் வைத்திருந்து, பிறகு ஒரு நல்லநாள் பார்த்து புகுந்த வீட் டிற்கு அனுப்பி வைப்பார்கள். அதன்படி, பள்ளிகொண்டாவை சேர்ந்த பெண் வீட் டார் வருகிற 17-ந் தேதி ஆடி மாதம்பிறப்பதை முன்னிட்டு, பிறந்த வீட்டு சீர் வரிசையாக ஆப்பிள், அன்னாசிப் பழம், மாம்பழம், வாழைப்பழம் போன்றவற்றின் வரிசையில் தக்காளி பழத்தையும் மதிப்பிற் குரியதாக வைத்து பெண்ணை அழைத்துச் சென்றனர்.
உயர் ரகபழங்களுடன் சீர்வரிசை தட்டில் வைக்கப்படும் அளவிற்கு தக்காளிப்பழம் சீர்வரிசை தட்டில் இடம் பெற்றிருந்தது வியப்பாக இருந்தது.






