என் மலர்tooltip icon

    வேலூர்

    • காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திகடன்
    • மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது

    வேலூர்:

    வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    ரத்தினகிரி பாலமுருகன் கோவில் நடை காலை 6 மணி அளவில் திறக்கப்பட்டது. வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மூலவருக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து பாலமுருகனடிமை சுவாமிகள் சிறப்பு பூஜை செய்தார்.

    அதேபோல் வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில் உள்ள சுப்பிரமணியசாமி, வேலூர்-ஆற்காடு சாலையில் உள்ள சைதாப்பேட்டை பழனி ஆண்டவர் கோவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது.

    காமராஜர் சிலை அருகேயுள்ள பேரி சுப்பிரமணியசுவாமி கோவில், பாலமதி குழந்தை வேலாயுதபாணி கோவில், காங்கேயநல்லூர் சுப்பிரமணியசுவாமி கோவில், கைலாசகிரி மலைகொசப்பேட்டை சிவசுப்பிரமணியசுவாமி கோவில், திருப்பத்தூர் முத்துக்குமாரசுவாமி கோவில், தொரப்பாடி பாலசுப்பிரமணியசுவாமி கோவில், பேர்ணாம்பட்டு சுப்பிரமணிய சுவாமி கோவில், வள்ளிமலை முருகன் கோவில், வளையாம்பட்டு பழனி யாண்டவர் கோவில், ஜலகாம்பாறை வெற்றிவேல் முருகன் கோவில், ஏலகிரி மலை பாலமுருகன் கோவில், அணைக்கட்டு மூளை கேட்டில் உள்ள வேலாடும் தணிகை மலை, ஒடுகத்தூர் தென்புதூரில் உள்ள மயில்வாகனம் முருகர் கோவில், மேட்டு இடையம்பட்டி பாலசுப்பிரமணியர் கோவில், சாத்துமதுரை முருகர் கோவில், ஆர்காட்டான் குடிசை தண்டகோடிமலை முருகன் கோவில், ரெட்டிபாளையம் முருகன் கோவில், தீர்த்தகிரி மலை முருகன் கோவில்களில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    • வருகிற 7-ந்தேதி வரை நடக்கிறது
    • இரவு நாடகம் நடைபெற உள்ளது

    வேலூர்:

    வேலூர் விருப்பாட்சி புரம் காந்திநகரில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி கருமாரியம்மனுக்கு 18-ம் ஆண்டு 3-வது வெள்ளி ஆடி திருவிழா நாளை தொடங்கி வருகிற 7-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    நாளை காலை 6 மணிக்கு வலம்புரி விநாயகருக்கு கணபதி பூஜையும், ஸ்ரீ தேவி கருமாரியம்மனுக்கு 108 பால்குட அபிஷேகமும். 108 சங்கு அபிஷேகமும் நடைபெறும். மதியம் 12 மணிக்கு கூழ் வார்த்தலும், அன்னதானமும் நடைபெறுகிறது.

    இரவு 8 மணிக்கு புஷ்ப பல்லக்கில் கருமாரியம்மன், விநாயகர், வள்ளி தெய்வானை, முருகன் வீதி உலா நடைபெறும். 5-ந்தேதி (சனிக்கிழமை)மாலை 6 மணிக்கு இன்னிசை கச்சேரியும், 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 7 மணிக்கு பரதநாட்டியமும், 7-ந் தேதி (திங்கட்கிழமை) இரவு 9 மணிக்கு நாடகமும் நடைபெற வுள்ளது.

    விழா விற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தேவி கருமாரியம்மன் விழா குழுவினர், இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    • தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் சின்ன அல்லா புரத்தை சேர்ந்தவர் முகமது (வயது30). மீன் வியாபாரம் செய்து வந்தார் . இவர் இன்று அதிகாலை பென்னாத்தூர் பகுதியில் மீன் வியாபாரத்திற்கு சென்றார்.

    அப்போது அங்குள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அந்த நேரத்தில் மதுரை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முகமது சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த காட்பாடி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முகமது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது
    • அதிகாரி விசாரணை நடத்தினார்

    வேலூர்:

    திருப்பத்தூர் மாவட்டம்,ஆம்பூர் அரசு போக்குவரத்து பணிமனை அங்குள்ள வீட்டு வசதிய வாரிய குடியிருப்பு அருகே செயல்பட்டு வருகிறது.

    இந்த பணிமனையில் இருந்து 50-க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் மற்றும் நீண்ட தூர பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இந்நிலையில் இந்த பணிமனையில் பணிபுரியும் தலைமை அதிகாரி ஒருவர் சக அதிகாரி பணி ஒதுக்கீடு செய்வதற்காக லஞ்சம் கேட்டு போனில் பேசியுள்ளார்.

    இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அந்த ஆடியோவில் பணி ஒதுக்கீடு செய்ய பணம் தருமாறு தலைமை அதிகாரி கேட்பதும் அதற்கு பணி ஒதுக்கீடு பெற்ற அதிகாரி மறுப்பு தெரிவிப்பதும் என அவர்களுக்கிடையே வாக்குவாதம் செய்தது பதிவாகி இருந்தது.

    இந்த ஆடியோ விவரம் தொடர்பாக வேலூர் போக்குவரத்து மண்டல பொதுமேலாளர் உடனடியாக விசாரணை நடத்தினார். ஆடியோவில் பேசும் தங்கராஜ் என்பது தெரியவந்தது. இதையடுத்து தங்கராஜை சஸ்பெண்டு செய்து பொது மேலாளர் இன்று உத்தரவிட்டார்.

    • விவசாயிகள் வலியுறுத்தல்
    • ஆட்டு கொட்டகையை உரிய பயனாளிகளுக்கு வழங்க வேண்டும்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அணைக்கட்டு தாசில்தார் கி.வேண்டா தலைமை தாங்கினார். தேர்தல் தனிப்பிரிவு தாசில்தார் திருக்குமரேசன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில்:-

    தற்போது விலையில் வின்னைத்தொட்டு இருக்கும் தக்காளி நகரப் புறத்தை தொடர்பு கிராம புரத்தில் உள்ள அணைத்து ரேஷன் கடையிலும் கொடுக்க வேண்டும். விவசாய பம்பு செட்டுக்கு பெயர் மாற்றம் செய்ய சிறப்பு முகாம் அமைக்க வேண்டும்,

    பிறப்பு இறப்பு சான்றிதழ் வந்தால் உடனடியாக பயனாளிகளிடம் கொடுக்க வேண்டும், சேர்ப்பாடி கூட்டுறவு சங்கத்தில் நடவை இயந்திரம் மற்றும் அறுவடை இயந்திரம் கொடுக்க வேண்டும், ஒடுகத்தூரில் இருந்து மேல் அரசம்பட்டு சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும். குரங்குகள் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆட்டு கொட்டகையை உரிய பயனாளிகளுக்கு வழங்க வேண்டும்.

    தற்போது வழங்கப்படும் ஆட்டுக் கொட்டகைகளை அப்பகுதியைச் சேர்ந்த அரசியல் நிர்வாகிகள் மற்றும் வார்டு உறுப்பி னர்களே எடுத்துக் கொள்வதாக கூட்டத்தில் ஆதங்கமாக பேசி விவசாயிகள் கண்ணீர் விட்டனர்.

    இது சம்பந்தமாக அணைக்கட்டு பிடிஓ நேரடியாக வந்து உரிய பதிலளிக்க வேண்டும் என விவசாயிகள் அங்கேயே அமர்ந்து கூட்டத்தை நடக்க விடாமல் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    இதனையடுத்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய பிடிஓ சாந்தி அடுத்த கூட்டத்திற்குள் உரிய பதிலளிக்கப்படும் என தெரிவித்ததனால் கூட்டம் சிறிது நேரத்திற்க்கு பின் தொடர்ந்து நடைபெற்றது.

    • 3 மாத பச்சிளம் குழந்தை பிரனீஷ் உடன், செல்வி தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
    • குழந்தை இறந்த தகவலை கேட்டு தாய் செல்வி கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தது.

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த ஆசனாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன் (23), இவரது மனைவி செல்வி(21). இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில் செல்வி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

    தலை பிரசவத்திற்காக அவர் ஒடுகத்தூர் அருகே உள்ள ஓ.ராஜாபாளையம் கிராமத்தில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு வந்தார். அங்கு செல்விக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    3 மாத பச்சிளம் குழந்தை பிரனீஷ் உடன், செல்வி தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். நேற்று இரவு முழுவதும் குழந்தை அருகில் தூங்கிய தாய் செல்வி, விடிந்ததும் வழக்கம்போல் வீட்டிற்கு வெளியே வேலை செய்து கொண்டு இருந்தார். குழந்தை வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்கிக்கொண்டு இருந்தது.

    திடீரென குழந்தையின் அலறல் சத்தம் கேட்டது. பதறிப்போன செல்வி வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது குழந்தையை நாகப்பாம்பு கடித்துவிட்டு படம் எடுத்து நின்றது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக குழந்தையை அவரது உறவினர்கள் மீட்டு, ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தூக்கி சென்றனர்.

    அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    குழந்தை இறந்த தகவலை கேட்டு தாய் செல்வி கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தது. பின்னர், குழந்தையின் சடலத்தை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும், இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெண்ணின் தாயார் பொள்ளாச்சி போலீஸ் நிலையத்தில் மகளை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.
    • பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெண்ணை அழைத்து செல்வதாக கூறினார்கள்.

    அணைக்கட்டு:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி நேதாஜி நகர், அசோக் தெரு சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகள் நாகஜோதி (வயது 22) இளம்பெண் வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் வணிக தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் சுரேஷ் (வயது 22) என்பவரை காதலித்து வந்தனர்.

    கடந்த 26-ந் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து பெண்ணின் தாயார் பொள்ளாச்சி போலீஸ் நிலையத்தில் மகளை காணவில்லை என புகார் அளித்துள்ளார். இதனையடுத்து விசாரணையை மேற்கொண்ட போலீசார் அவர்களை தேடி ஒடுகத்தூர் பகுதிக்கு வந்திருந்தனர். இதையடுத்து இளம் ஜோடியான நாகஜோதி மற்றும் சுரேஷ் வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

    பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெண்ணை அழைத்து செல்வதாக கூறினார்கள். சுரேஷை விட்டு நாகஜோதி பிரிய மனமில்லாமல் எனக்கு சுரேஷ் தான் வேணும் என்று போலீஸ் நிலையத்தில் கதறி அழுதார்.

    இதன் பின் பெண்ணின் உறவினர்கள் நாகஜோதி வேண்டாம் என கூறி இங்கேயை விட்டுவிட்டு பொள்ளாச்சிக்கு சென்றனர்.

    வேப்பங்குப்பம் போலீசார் இருவரிடமும் கடிதம் வாங்கிக்கொண்டு வழி அனுப்பி வைத்தனர்.

    • லாக்கை உடைத்து துணிகரம்
    • ஜெயிலில் அடைத்தனர்

    வேலூர்:

    வேலூர் தோட்டப்பா ளையத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது21). இவர் ரங்காபுரம் பகுதியில் உள்ள ஒரு கடையில் மெக்கா னிக்காக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற ஸ்ரீதர் தனது பைக்கை வழக்கம்போல், ரங்காபுரத்தில் உள்ள கடைக்கு எதிரே நிறுத்திவிட்டு சென்றார். சிறிது நேரத்திற்கு பின்னர் கடையில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை.

    அதிர்ச்சியடைந்த அவர் அங்கிரு ந்த கடை ஊழியர்களுடன் அருகிலுள்ள்ள பகுதிகளில் பைக்கை தேடினார்.

    அப்போது அடையாளம் தெரியாத 2 வாலிபர்கள் பைக்கின் லாக்கை உடைத்துவிட்டு தள்ளி சென்றதை பார்த்தனர். உடனடியாக 2 பேரையும் பிடித்து சத்துவாச்சாரி போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், வேலூர் ஓட்டேரி அடுத்த குளவிமேட்டைச் சேர்ந்த சிபிராஜ் (21) மற்றும் சத்துவாச்சாரியைச் சேர்ந்த யுவராஜ் (23) என்பதும் தெரியவந்தது.

    இதில் சிபிராஜ் மீது ஆந்திர மாநிலம் பாகாலா, காட்பாடி, சத்துவாச்சாரி உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் சைக்கிள், பைக் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. போலீசார் 2 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • இளம்பெண் எஸ்.பி. அலுவலகத்தில் புகார்
    • 50 முறைக்கு மேல் போன் செய்து கொண்டே இருக்கிறார்

    வேலூர்:

    வேலூர் எஸ் பி அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். அப்போது வேலூர் அடுத்த காட்பாடி பகுதியை சேர்ந்த 48 வயது பெண் ஒருவர் மனு அளித்தார்.

    மனுவில் அவர் கூறி இருப்பதாவது, நானும் எனது கணவரும் பீடி வேலை செய்து வருகிறோம். கடந்த வாரம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் எனது செல்போன் வீடியோ காலில் வந்தார்.

    அப்போது அவர் உடை இல்லாமல் நிர்வாணமாக தோன்றினார். மேலும் எனது உடல் உறுப்புகள் எப்படி உள்ளது என ஆபாசமான வார்த்தைகளை பேசினார்.

    ஒரு நாளைக்கு 50 முறைக்கு மேல் போன் செய்து கொண்டே இருக்கிறார்.

    எனவே வீடியோ காலில் நிர்வாணமாக வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

    நந்தினி என்ற பெண் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது, எனக்கும் சீவூரை சேர்ந்த மணி என்பவருக்கும் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    திருமணத்தின் போது எனது பெற்றோர் நகை பணம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை கொடுத்தனர். திருமணம் நடந்த ஒரே மாதத்தில் நகைகளை விற்று விட்டனர்.

    பின்னர் எனது மாமியார் சியாமளா நாத்தனார் யுவஸ்ரீ உட்பட குடும்பத்தினர் அனைவரும் கூடுதலாக வரதட்சணை வாங்கி வர வேண்டும் என எண்ணை அடித்து கொடுமைப்படுத்தி துன்புறுத்தினார்.

    மேலும் எனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு உள்ளது. கூடுதல் வரதட்சனை கேட்டு துன்புறுத்தும் கணவர் உட்பட அவரது குடும்பத்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

    • 800 கிலோ பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்ட பறக்கும் படை தாசில்தார் விநாயக மூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் திருவலம், பொன்னை ஆகிய பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது, பொன்னை குமரகுண்டா பகுதியில் சாலை ஓரமாக கேட்பாரற்று கிடந்த மூட் டைகளை சோதனை செய்தனர். அதில் 800 கிலோ ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து, ரேசன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து திருவலம் நுகர் வோர் பாதுகாப்பு கிடங் கில் ஒப்படை க்கப்பட்டது. மேலும் அரிசி கடத்தியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சக்கரத்தில் சிக்கி பரிதாபம்
    • ேபாலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அருகே உள்ள ஏரிகொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு (வயது 35). திருமணம் ஆகாத இவர் விவசாயம் செய்து வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவு 11.30 மணி அளவில் ஏரிக்கொல்லை கிராமத்திலிருந்து அணைக்கட்டு நோக்கி சக நண்பர்களுடன் வெவ்வேறு பைக்கில் சென்றனர். ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முற்பட்டுள்ளனர்.

    ஆவின் டேங்கர் லாரிக்குள் பிரபு நிலை தடுமாறி விழுந்தார். பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது சம்பந்தமாக அணைக்கட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சடலத்தை கைப்பற்றி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ேபாலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெற்றோருடன் பாச போராட்டம்
    • போலீசார் இருவரிடமும் கடிதம் வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர்

    அணைக்கட்டு:

    பொள்ளாச்சியில் காணாமல் போன இளம் பெண்ணை தேடி வந்த போலீசார். இதனை அறிந்து வேப்பங்குப்பம் போலீசின் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சமானார்கள். இன்னிலையில் காதலன் தான் வேண்டும் என்று இளம் பெண் போலீஸ் நிலையத்தில் கதறி அழுதார்.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி நேதாஜி நகர், அசோக் தெரு சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகள் நாகஜோதி (வயது 22) இளம்பெண் வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் வணிக தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் சுரேஷ் (வயது 22) என்பவரை காதலித்து வந்தனர்.

    கடந்த 26-ந் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து பெண்ணின் தாயார் பொள்ளாச்சி போலீஸ் நிலையத்தில் மகளை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.

    இதனையடுத்து விசாரணையை மேற்கொண்ட போலீசார் அவர்களை தேடி ஒடுகத்தூர் பகுதிக்கு வந்திருந்தனர். இதையடுத்து இளம் ஜோடியான நாகஜோதி மற்றும் சுரேஷ் வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

    பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெண்ணை அழைத்து செல்வதாக கூறினார்கள். சுரேஷை விட்டு நாகஜோதி பிரிய மனமில்லாமல் எனக்கு சுரேஷ் தான் வேணும் என்று போலீஸ் நிலையத்தில் கதறி அழுதார்.

    இதன் பின் பெண்ணின் உறவினர்கள் நாகஜோதி வேண்டாம் என கூறி இங்கேயை விட்டுவிட்டு பொள்ளாச்சிக்கு சென்றனர்.

    வேப்பங்குப்பம் போலீசார் இருவரிடமும் கடிதம் வாங்கிக்கொண்டு வழி அனுப்பி வைத்தனர்.

    ×