என் மலர்
வேலூர்
- வேலூர் முத்துரங்கம் கலைக்கல்லூரியில் நடக்கிறது
- 150-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கிறது
வேலூர்:
வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி இணைந்து கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை வருகிற 12-ந் தேதி (சனிக்கிழமை) முத்துரங்கம் அரசு கல்லூரியில் நடத்துகிறது.
இந்த முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கிறது. 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, டிப்ளமோ உள்ளிட்ட கல்வித்தகுதி உடைய வேலைதேடுபவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.
தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது. விரும்பம் உள்ள நபர்கள் www.tnprivatejobs.tn.gov.in-என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கலந்து கொள்ளலாம்.
இந்த தகவலை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
- நீண்ட நாட்களுக்கு பிறகு சரிவு
- 28 கிலோ கொண்ட பாக்ஸ் ரூ.3.100
வேலூர்:
வேலூர் நேதாஜி மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடகா, மராட்டிய மாநிலங்கள் மற்றும் ஓசூர், ராயப்பேட்டை, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்களில் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன.
கடந்த சில நாட்களாக ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை விற் பனை செய்யப்பட்டது. நாள்தோறும் தக்காளி விலை உயர்ந்து கொண்டே இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில், வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் அதன் விலை குறைய தொடங்கி யுள்ளது. மார்க்கெட்டில் இன்று கிலோ தக்காளி ரூ.60 முதல் ரூ.120 வரை விற் பனை செய்யப்பட்டது.
வேலூர் நேதாஜி மார்க்கெட்டிற்கு ஆந்திராவில் இருந்து தக்காளி லோடு வருகிறது. 28 கிலோ கொண்ட தக்காளி பாக்ஸ் ரூ.3,100க்கு விற்பனை செய்யப்பட்டது.
மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து இன்று அதிகரித் துள்ளதால், கிலோவிற்கு ரூ.20 குறைந்துள்ளது. மேலும் ஒரு பாக்ஸ் தக் காளி ரூ.2400-க்கும் விற் பனை செய்யப்படுகிறது.
மார்க்கெட்டில் முதல் ரக தக்காளி மொத்த விலை ரூ.100க்கு விற்பனை செய் யப்படுகிறது. பொடி ரக தக்காளி ரூ.60 முதல் விற் பனை செய்யப்படுகிறது.
அதேபோல் உழவர் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.90 முதல் 100-க்கு விற்பனை செய்யப்படு கிறது. வரும் நாட்களில் தக்காளி வரத்து அதிக ரிக்கும் என்பதால் தக் காளியின் விலை மேலும் குறையும் என்றனர்.
- மனைவி தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வற்புறுத்தியதால் விரக்தி
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம் லத்தேரி அடுத்த பி.என்.பாளையம், பாறையூர், இருளர் காலனியை சேர்ந்தவர் சோமநாதன். டிராக்டர் டிரைவர்.
இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் மகாலட்சுமி நங்கமங்கலத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு கணவரிடம் வற்புறுத்தினார்.
மது போதையில் இருந்த சோமநாதன் மனைவியை அவரது தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்ல மறுப்பு தெரிவித்தார். இதனால் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் விரக்தி அடைந்த சோமநாதன் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கினார். இதனைக் கண்ட சோமநாதன் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக லத்தேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சோமநாதன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து லத்தேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்
- வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஓ.ராஜாபாளைம் ராகவேந்திரா நகரை சேர்ந்த ரமேஷ் (வயது 43).
இவரது வீட்டில் நேற்று சுமார் 6 அடி நீளம் கொண்ட சாரை பாம்பு புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அலறியடித்துகொண்டு வெளியே ஓடிவந்தனர். ேமலும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில், சம்பவம் இடத்திற்கு வந்து தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு பாம்பை லாவகமாக பிடித்தனர். தொடர்ந்து பிடிபட்ட பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மீட்கப்பட்ட பாம்பை ஒடுகத்தூர் அருகே உள்ள காப்பு காட்டில் கொண்டு போய் பத்திரமாக விட்டனர்.
- ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்டதால் நடவடிக்கை
- சோதனை வாரம் தோறும் தொடரும் என்றனர்
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு மற்றும் பகல் நேரங்களில் வீட்டின் முன்பு, வங்கி அருகே நிறுத்தி வைக்கப்படும் பைக்குகள் அடிக்கடி திருடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வேலூர் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையிலான தனிப்பிரிவு போலீசார் நேற்று நடந்த வார சந்தையில் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் உரிய ஆவணம் இல்லாமலும், பதிவெண் இல்லாமலும் எடுத்து வரப்பட்ட சுமார் 12 பைக்குகளை போலீசார் ஒரே நாளில் பறிமுதல் செய்தனர்.
இதில், திருப்பதி, ஆந்திரா போன்ற வெளி மாநில பதிவெண்கள் கொண்ட பைக்குகளும் சிக்கியது. இதில், 3 பைக்குகளின் உரிமையாளர்கள் உரிய ஆவணம் கொடுத்து வண்டியை எடுத்து சென்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில்:-
பல்வேறு பகுதிகளில் திருடப்படும் பைக்குகள் ஒடுகத்தூர் பகுதியில் தான் உள்ளது என எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால், பொதுமக்கள் அதிகம் கூடும் வார சந்தை முழுவதும் சோதனை செய்தோம்.
இதில், 12 பைக்குகள் பறிமுதல் செய்து அதில் உரிய ஆவணம் வைத்திருந்த 3 பைக்குகள் ஒப்படைக்கப்பட்டது. இந்த சோதனை இனி வாரம் தோறும் தொடரும் என்றனர். இப்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
கர்நாடகா மாநிலம் தும்கூரை சேர்ந்தவர் ரவி (வயது 40). இவருக்கு மஞ்சள் காமாலையால் பாதிக்கட்டு அவதியடைந்து வந்தார். வாலாஜாவில் மஞ்சள் காமாலைக்கு மருந்து வழங்கப்படுகிறது.
இதனால் ரவி கர்நாடகாவில் இருந்து வாலாஜாவிற்கு காவேரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்தார். அப்போது வாலாஜா ரோடு ரெயில் நிலையத்தில் இறங்கினர். பின்னர் பஸ் மூலம் வாலாஜா செல்வதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அந்த வழியாக வந்த ரெயில் ரவி மீது மோதியது. இதில் உடல் சிதறி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து காட்பாடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவியின் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இது சம்பந்தமாக ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ வைரல்
- பேட்டரியையும் திருடி சென்றனர்
வேலூர்:
வேலூர் மாநகரம், காட்பாடி, சித்தூர் பஸ் நிலையம், சத்துவாச்சாரி, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், விருதம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிகின்றன.
சாலைகளை சுற்றி திரியும் மாடுகளை மர்ம கும்பல் வாகனத்தில் வந்து திருடி செல்வது தொடர்கதையாக உள்ளது. இது குறித்து போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நள்ளிரவு நேரங்களில் லோடு ஆட்டோவுடன் சுற்றி திரியும் கும்பல், ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இருக்கும் மாடுகளை திருடி சென்று வெளிச்சந்தைகளில் விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை வேலூர் சத்துவாச்சாரி சாலையில் உள்ள காகிதப்பட்டறை எல்.ஐ.சி. அலுவலகம் எதிரே சாலையில் மாடுகள் படுத்திருந்தன கொண்டிருந்தது.
இதனை ஆட்டோவில் வந்த மர்ம கும்பல்கள் நோட்டமிட்டு மாடுகளை திருடி சென்றது.
இந்த காட்சிகள் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இதேபோல் வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள சோளாபுரி அம்மன் கோவில் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் இருந்து பேட்டரியை மர்ம கும்பல் திருடி சென்றனர்.
பேட்டரி திருடி செல்லும் காட்சிகளும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- இணையதளத்தில் தவறான தகவல் பரவி வருகிறது
- கலெக்டர் தகவல்
வேலூர்:
வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது-
பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க காப்பீடு நிறுவ னங்கள் மத்திய அரசின் வேளாண் உழவர் நலத்து றையில் ஒப்புதல் பெற்றி ருக்க வேண்டும்.
மத்திய கூட்டுறவுத் துறையில் பதிவு செய்யாத கூட்டுறவு சங்கங்கள் காப்பீடு நிறுவனங்களாக செயல்பட மத்திய அரசால் ஒப்புதல் வழங்கப்படுவதில்லை. தற் போது, பாரதீய கூட்டுறவு பொதுக்காப்பீடு நிறுவனம் சார்பில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தில் செயல்பட 829 பயிர் காப் பீடு உதவியாளர் பணியிடத்துக்கு தேர்வு செய்ய உள்ளதாக அந்நிறுவனத் தின் பெயரிட்ட அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த அறிக்கையில் இப்ப ணியிடத்திற்கு விரும்புப வர்கள் ரூ.250 செலுத்தி விண்ணப்பிக்கலாம் என இணையதளத்தில் தவ றான தகவல் பரவி வரு கிறது.
இது தொடர்பாக மத்திய, மாநில அரசின் வேளாண்மை மற்றும் உழ வர் நலத்துறையின் மூலம் இத்தகவல் தவறானது என தெரிவிக்கப்பட்டிருப்ப தால் இத்தகவலை யாரும் நம்ப வேண்டாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- 8 டிரைவர்களுக்கு மெமோ
- போலீஸ் ரோந்து பணிக்காக 127 வாகனங்கள் வழங்கப்பட்டு உள்ளது
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் டி.எஸ்.பி.க்கள் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸ் ரோந்து பணிக்காக 42 நான்கு சக்கர வாகனங்களும், 44 பைக்குகள் என மொத்தம் 127 வாகனங்கள் வழங்கப்பட்டு உள்ளது.
போலீசார் பயன்படுத்தும் வாகனங்கள் சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா என மாதம் தோறும் போலீஸ் சூப்பிரண்டு வாகனங்களை ஆய்வு செய்வது வழக்கம்.
அதன்படி வேலூர் நேதாஜி மைதானத்திற்கு இன்று 86 வாகனங்கள் ஆய்வுக்காக கொண்டு வரப்படன வேலூர் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் போலீசாரின் வாகனங்களை ஆய்வு செய்தார்.
அப்போது வாகனங்களில் சரியான அளவு என்ஜின் ஆயில் மற்றும் வாகனங்கள் சரியாக பராமரிக்கப்ப டுகிறதா என ஆய்வு செய்தார். ஆய்வின்போது வாகனங்களை சரிவர பராமரிக்காத 8டிரைவர்க ளுக்கு மெமோ வழங்கினார். அதேபோல் வாகனங்களை முறையாக பராமரித்து இருந்த 4 டிரைவர்களுக்கு ரிவார்டு வழங்கினார்.
இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு கூறுகையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 127 வாகனங்களில் இன்று 86 வாகனங்கள் ஆய்வுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. மீதமுள்ள 46 வாகனங்கள் மற்றொரு நாள் ஆய்வு செய்யப்படும்.
ஒழுங்காக வாகனங்களை பராமரிக்காத டிரைவர்க ளுக்கு பழைய வாகனங்கள் வழங்கப்படும். முறையாக பராமரிப்பு செய்த டிரைவர்களுக்கு புதிய வாகனங்கள் வழங்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், டி.எஸ்.பி.க்கள் மனோகரன், திருநாவுக்கரசு, ராமமூர்த்தி மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
- கத்தியை காட்டி மிரட்டி துணிகரம்
- ஜெயிலில் அடைத்தனர்
வேலூர்:
வேலூர் பாகாயத்தை சேர்ந்தவர் மணி. இவர் நேற்று இரவு பாகாயம் பஸ் நிறுத்தம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிம றித்த மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ.500-யை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.
இது குறித்து மணி பாகாயம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக் குப்பதிவு செய்து வழிப்ப றியில் ஈடுபட்ட வேலூர் ஓல்டு டவுன் எம்ஜிஆர் நகரை சேர்ந்த பிரபல ரவுடி உதயா (எ)உதயகுமார்(40) என்பவரை கைது செய்தனர் . மேலும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- அடுக்கம்பாறை ஆஸ்பத்திரியில் தாய்ப்பால் வார விழா நடந்தது
- பச்சிளம் குழந்தைகளின் நிபுணர் பேச்சு
வேலூர்:
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் குழந்தைகள் நல பிரிவு சார்பில உலக தாய்ப்பால் வார தின விழா ஒரு வாரம் அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கல்லூரி டீன் பாப்பாத்தி தலைமை தாங்கினார்.
குழந்தைகள் நலத்துறை தலைவர் கல்பனா, உதவி குடியிருப்பு மருத்துவ அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தைகள் நலத்துறை டாக்டர் தாட்சியாயினி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சென்னை குழந்தைகள் நல மருத்துவக் கல்லூரி பேராசிரியர் மற்றும் பச்சிளம் குழந்தைகள் நிபுணர் அனிதா கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூடியதாவது:-
குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் அவசியம் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு 2 மணி நேரத்திற்கு ஒருமுறை பால் கொடுக்க வேண்டும்.
கட்டாயம் 6 மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். மாட்டு பசும்பால், பால் பவுடர், தேன், சர்க்கரை தண்ணீர், கழுதைபால் போன்றவை கொடுக்க கூடாது. தாய்மார்கள் குழந்தைக்கு பால் கொடுக்கும்போது "கங்காரு" அரவணைப்பு போன்று பால் கொடுக்க வேண்டும்.
அதிக பட்சமாக 2 ஆண்டுகள் வரை பால் கொடுக்கலாம். இதன் மூலம் குழந்தைகள் ஆரோக்கியமாக வளரும்.
இவ்வாறு அவர் கூறினார். இதில் பேராசிரியர்கள் மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
- சிறப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்
வேலூர்:
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு கூழ்வார்த்தல், பொங்கல் வைத்தல், சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
ஆடி மாதத்தின் 3-ம் வெள்ளிக்கிழமையான இன்று அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும், அலங்காரமும் நடந்தது.அம்மன் கோவில்களில் பக்தரகள் கூழ் ஊற்றி ஆடு, கோழிகளை படையளட்டு வழிபட்டனர்.
ரத்தினகிரியில் உள்ள பாலமுருகன் கோவிலில் ஆடி 3-ம் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும், அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்றது. பாலமுருகனுக்கு வண்ண மலர்களால் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேலூர் பாலாற்றங்கரை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோவிலில் அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் ஜலகண்டேஸ்வரர் கோவில், சலவன்பேட்டை ஆனை குளத்தம்மன் கோவில், வேலூர் காட்பாடி சாலையில் உள்ள விஷ்ணு துர்க்கையம்மன் கோவில், சத்துவாச்சாரி ரங்காபுரத்தில் உள்ள பூங்காவனத்தம்மன் கோவில், தோட்டப்பாளையத்தில் உள்ள படவேட்டம்மன் கோவில், சைதாப்பேட்டை மலையடிவாரத்தில் உள்ள தேவி கருமாரியம்மன், மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள கருமாரியம்மன் மற்றும் வேலூரில் உள்ள வேம்புலியம்மன், சோளாபுரி அம்மன் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
குடியாத்தம் புதுப்பேட்டை படவேட்டு எல்லையம்மன் கோவில், பிச்சனூர் காளியம்மன்பட்டி காளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோவிலில் ஆடி வெள்ளி முன்னிட்டு மூலவர் வெள்ளிக் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் ஆடி 3-ம் வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் சாமிதரிசனம் செய்வதற்கு காலையில் இருந்து கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.
கோவில் வளாகத்திலும், கோவிலுக்குச் செல்லும் சாலையிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பொங்கல் வைத்து ஆடு, கோழிகளை படையலிட்டு வழிபட்டனர்.
அதேபோல் படவேடு ரேணுகாம்பாள் கோவில், கணியம்பாடி கடம்ப வனவாசவி அம்மன், சாத்துமதுரை துர்க்கையம்மன், திருவண்ணாமலை பச்சையம்மன் கோவில் மற்றும் திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள அம்மன் கோவில்களில் இன்று பெண்கள் பொங்கலிட்டு, கூழ் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.






