என் மலர்
நீங்கள் தேடியது "பைக்குகள் பறிமுதல்"
- ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்டதால் நடவடிக்கை
- சோதனை வாரம் தோறும் தொடரும் என்றனர்
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு மற்றும் பகல் நேரங்களில் வீட்டின் முன்பு, வங்கி அருகே நிறுத்தி வைக்கப்படும் பைக்குகள் அடிக்கடி திருடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வேலூர் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையிலான தனிப்பிரிவு போலீசார் நேற்று நடந்த வார சந்தையில் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் உரிய ஆவணம் இல்லாமலும், பதிவெண் இல்லாமலும் எடுத்து வரப்பட்ட சுமார் 12 பைக்குகளை போலீசார் ஒரே நாளில் பறிமுதல் செய்தனர்.
இதில், திருப்பதி, ஆந்திரா போன்ற வெளி மாநில பதிவெண்கள் கொண்ட பைக்குகளும் சிக்கியது. இதில், 3 பைக்குகளின் உரிமையாளர்கள் உரிய ஆவணம் கொடுத்து வண்டியை எடுத்து சென்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில்:-
பல்வேறு பகுதிகளில் திருடப்படும் பைக்குகள் ஒடுகத்தூர் பகுதியில் தான் உள்ளது என எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால், பொதுமக்கள் அதிகம் கூடும் வார சந்தை முழுவதும் சோதனை செய்தோம்.
இதில், 12 பைக்குகள் பறிமுதல் செய்து அதில் உரிய ஆவணம் வைத்திருந்த 3 பைக்குகள் ஒப்படைக்கப்பட்டது. இந்த சோதனை இனி வாரம் தோறும் தொடரும் என்றனர். இப்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






