search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Selling tomatoes"

    • வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது.
    • கோவக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ. 40, பச்சை மிளகாய் ரூ.50, சுரக்காய் ரூ.15க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள். இன்று வார சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.10, கத்தரிக்காய் ரூ.50, பீர்க்கங்காய் ரூ.50, பெரிய வெங்காயம் ரூ.30 , சின்ன வெங்காயம் ரூ. 50, உருளைக்கிழங்கு ரூ.40, பீட்ரூட் ரூ.40, புடலங்காய் ரூ.40, முட்டை கோஸ் ரூ.30, பீன்ஸ் ரூ.80, கேரட் ரூ.60, பாவற்காய் ரூ.60, வெண்டைக்காய் ரூ.60, இஞ்சி ரூ.150, அவரைக்காய் ரூ.80, நேரோ காய் ரூ. 40, கோவக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ. 40, பச்சை மிளகாய் ரூ.50, சுரக்காய் ரூ.15க்கும் விற்பனை செய்யப்பட்டது. இத்தகவலை வாரச்சந்தை காய்கறி வியாபாரி குமார் தெரிவித்தார்.

    • குறைந்த விலையில் விற்கப்படுகிறது
    • கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தொடங்கி வைத்தார்

    திருப்பத்தூர்:

    தக்காளி விலை கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விற்கப்படுவ தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தவிர்க்க ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது.

    அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் 5 ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது.

    திருப்பத்தூர் கற்பகம் கூட்டுறவு ரேஷன் கடையில் நேற்று குறைந்த விலையில் தக்காளி விற்பனையை திருப்பத்தூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சி.பெ. முருகேசன் தொடங்கி வைத்தார். அப்போது பொது மக்க ளுக்கு 1கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தக்காளியை வாங்கி சென்றனர். நிகழ்ச்சியில் பொது வினியோக திட்ட துணை பதிவாளர் சம்பத், கூட்டுறவு சார்பதிவாளர்கள் சதாசிவம், தர்மேந்திரன், ராமசந்திரன், முதுநிலை ஆய்வாளர் திப்புதிலீ பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதே போல் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய பகுதியில் மேலும் 4 கூட்டுறவு ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது.

    • விவசாயிகள் வலியுறுத்தல்
    • ஆட்டு கொட்டகையை உரிய பயனாளிகளுக்கு வழங்க வேண்டும்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அணைக்கட்டு தாசில்தார் கி.வேண்டா தலைமை தாங்கினார். தேர்தல் தனிப்பிரிவு தாசில்தார் திருக்குமரேசன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில்:-

    தற்போது விலையில் வின்னைத்தொட்டு இருக்கும் தக்காளி நகரப் புறத்தை தொடர்பு கிராம புரத்தில் உள்ள அணைத்து ரேஷன் கடையிலும் கொடுக்க வேண்டும். விவசாய பம்பு செட்டுக்கு பெயர் மாற்றம் செய்ய சிறப்பு முகாம் அமைக்க வேண்டும்,

    பிறப்பு இறப்பு சான்றிதழ் வந்தால் உடனடியாக பயனாளிகளிடம் கொடுக்க வேண்டும், சேர்ப்பாடி கூட்டுறவு சங்கத்தில் நடவை இயந்திரம் மற்றும் அறுவடை இயந்திரம் கொடுக்க வேண்டும், ஒடுகத்தூரில் இருந்து மேல் அரசம்பட்டு சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும். குரங்குகள் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆட்டு கொட்டகையை உரிய பயனாளிகளுக்கு வழங்க வேண்டும்.

    தற்போது வழங்கப்படும் ஆட்டுக் கொட்டகைகளை அப்பகுதியைச் சேர்ந்த அரசியல் நிர்வாகிகள் மற்றும் வார்டு உறுப்பி னர்களே எடுத்துக் கொள்வதாக கூட்டத்தில் ஆதங்கமாக பேசி விவசாயிகள் கண்ணீர் விட்டனர்.

    இது சம்பந்தமாக அணைக்கட்டு பிடிஓ நேரடியாக வந்து உரிய பதிலளிக்க வேண்டும் என விவசாயிகள் அங்கேயே அமர்ந்து கூட்டத்தை நடக்க விடாமல் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    இதனையடுத்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய பிடிஓ சாந்தி அடுத்த கூட்டத்திற்குள் உரிய பதிலளிக்கப்படும் என தெரிவித்ததனால் கூட்டம் சிறிது நேரத்திற்க்கு பின் தொடர்ந்து நடைபெற்றது.

    • தினசரி வரும் தக்காளியின் வரத்து பாதியாக குறைந்துவிட்டது
    • இல்லத்தரசிகள் கவலை

    வேலூர்:

    தமிழகத்தில் தக்காளியின் விலை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த வாரத்தில் கிலோ ரூ.130 வரை விற்கப்பட்ட தக்காளி விலை குறையும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

    ஆனால் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், தெலுங்கானா ஆகிய மாநிலங்க ளில் பரவலாக பலத்த மழை பெய்து வருவதால் தக்காளி விலை மேலும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    மழையால் பாதிக்கப்பட்டு உள்ள வடமாநிலங்களில் இருந்தும் அங்குள்ள வியாபாரிகளும் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் அதிகளவில் குவிந்து தக்காளியை கொள்முதல் செய்து வருவதால் தக்காளிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    இதனால் வேலூர் நேதாஜி மார்கெட்டுக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்ததால் விலை அதிகரிக்க தொடங்கியது. வேலூர் மார்கெட்டுக்கு தினசரி வரும் தக்காளியின் வரத்து பாதியாக குறைந்துவிட்டது.

    இதனால் சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.150 வரை விற்கப்படுகிறது.

    அதேபோல் வெளி மார்கெட்டில் உள்ள காய்கறி, மளிகை மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.150 முதல் ரூ.170 வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை உயர்வால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர்.

    சமையலுக்கு கிலோ கணக்கில் வாங்கிய தக்காளியை தற்போது ¼ கிலோ, ½ கிலோ என்ற அளவில் வாங்குகின்றனர்.

    • வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது.
    • நூல் மில்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.

    இன்று வார சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.40, கத்தரிக்காய் ரூ.60, பீர்க்கங்காய் ரூ.60. பெரிய வெங்காயம் ரூ.25, சின்ன வெங்காயம் ரூ. 80, உருளைக்கிழங்கு ரூ.30, பீட்ரூட் ரூ.60, புடலை காய் ரூ.50, முட்டை கோஸ் ரூ.30, பீன்ஸ் ரூ.100, கேரட் ரூ.50, பாவற்காய் ரூ.80, வெண்டைக்காய் ரூ.60, இஞ்சி ரூ.250, அவரைக்காய் ரூ.120, நேரோ காய் ரூ. 40, கோவக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ. 40, பச்சை மிளகாய் ரூ.60, சுரக்காய் ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டது.இத்தகவலை வாரச்சந்தை காய்கறி வியாபாரி குமார் தெரிவித்தார்.

    • வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல்படுகிறது.
    • காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல்படுகிறது. வெள்ள கோவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.

    இன்று வார சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.20, கத்தரிக்காய் ரூ.60, பீர்க்கங்காய் ரூ.80. பெரிய வெங்காயம் ரூ.20 சின்ன வெங்காயம் ரூ. 40. உருளைக்கிழங்கு ரூ.30, பீட்ரூட் ரூ.60, புடலை காய் ரூ.40, முட்டை கோஸ் ரூ.20, பீன்ஸ் ரூ.100, கேரட் ரூ.60, பாகற்காய் ரூ.80,வெண்டைக்காய் ரூ.50, இஞ்சி ரூ.200, அவரைக்காய் ரூ.120, நேரோ காய் ரூ. 40, கோவக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ. 40, பச்சை மிளகாய் ரூ.60,சுரக்காய் ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டது. இத்தகவலை வாரச்சந்தை காய்கறி வியாபாரி குமார் தெரிவித்தார்.

    ×