என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலையோரம் கேட்பாரற்று கிடந்த ரேசன் அரிசி
- 800 கிலோ பறிமுதல்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்ட பறக்கும் படை தாசில்தார் விநாயக மூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் திருவலம், பொன்னை ஆகிய பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, பொன்னை குமரகுண்டா பகுதியில் சாலை ஓரமாக கேட்பாரற்று கிடந்த மூட் டைகளை சோதனை செய்தனர். அதில் 800 கிலோ ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, ரேசன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து திருவலம் நுகர் வோர் பாதுகாப்பு கிடங் கில் ஒப்படை க்கப்பட்டது. மேலும் அரிசி கடத்தியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






