என் மலர்
வேலூர்
வேலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேலூர்:
வேலூரை அடுத்த சோழவரம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 49), விவசாயி. இவர் நேற்று முன்தினம் வீட்டின் அருகேயுள்ள அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார். தண்ணீர் மோட்டாரை இயங்கி விட்டு நிலத்துக்கு வேகமாக செல்ல முயன்றார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தார். நீச்சல் தெரியாததால் குமார் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தார்.
இதைக்கண்ட குடும்பத்தினர் உடனடியாக வேலூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் அவர்கள் கிணற்றில் இறங்கி சிறிது நேர தேடுதலுக்கு பின்னர் குமாரை பிணமாக மீட்டனர். தகவலறிந்த அரியூர் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நிவர் புயல் மற்றும் மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட சேதங்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
வேலூர்:
நிவர் புயலால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக உயிர் சேதம் மட்டுமின்றி பொருட்சேதமும் ஏற்பட்டு இருக்கிறது.
நிவர் புயல் மற்றும் மழை காரணமாக தமிழகத்தில் ஏற்பட்ட சேதங்களை கணக்கிட மத்திய உள்துறை இணைச்செயலாளர் அசுதோஷ் அக்னிகோத்ரி தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் சென்னை வந்தனர்.
இந்த குழுவில் ஐதராபாத்தில் உள்ள மத்திய வேளாண்துறை எண்ணெய் வித்துகள் வளர்ச்சி இயக்குனர் மனோகரன், மத்திய சாலை போக்குவரத்துத்துறை மண்டல அதிகாரி ரணன் ஜெய்சிங், டெல்லியில் உள்ள மத்திய நிதித்துறை இயக்குனர் பர்தெண்டு குமார், மத்திய மின்சார குழும துணை இயக்குனர் ஓ.பி.சுமன், மத்திய ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் தர்மவீர் ஜா, மத்திய மீன்வள மேம்பாட்டு ஆணையர் பால்பாண்டியன், சென்னையில் உள்ள மத்திய நீர் ஆணைய கண்காணிப்பு இயக்குனர் ஜெ.ஹர்ஷா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
மத்திய குழுவினர் நேற்று 2 குழுக்களாக பிரிந்து நேற்று ஆய்வை நடத்தினர்.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் நிவர் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினர் இன்று ஆய்வு செய்கின்றனர்.
பொதுப்பணித்துறை செயலர் மணிவாசன் தலைமையிலான மத்தியக்குழு ஆய்வு செய்து வருகிறது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் ஜெயிலில் இருக்கும் முருகன், உறவினர்களுடன் ‘வாட்ஸ் அப்’பில் பேச அனுமதிமதிக்க கோரி 14-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
வேலூர் :
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கணவன்-மனைவி இருவரும் 15 நாட்களுக்கு ஒருமுறை வாட்ஸ்-அப் வீடியோ காலில் பேசி வருகிறார்கள்.
இந்த நிலையில் முருகன் தனது உறவினர்களிடம் வீடியோ காலில் பேச அனுமதி அளிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 23-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ஜெயில் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியும் முருகன் உண்ணாவிரதத்தை கைவிடவில்லை. அவரின் உடல்நிலையை ஜெயில் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று அவர் 14-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
வேலூர் மாவட்டத்தில் நேற்றைய பரிசோதனையில் மேலும் 34 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 50 நாட்களுக்கு மேலாக தினமும் 50-க்கும் குறைவான நபர்களுக்கு தொற்று உறுதியாகி வருகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் நிலவரப்படி 19 ஆயிரத்து 521 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்றைய பரிசோதனையில் மேலும் 34 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அவர்கள் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதன்மூலம் வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 19 ஆயிரத்து 555 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 18 ஆயிரத்து 900 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா அல்லாத மாவட்டமாக வேலூரை மாற்ற பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் இருக்கும் முருகன், உறவினர்களுடன் ‘வாட்ஸ் அப்’பில் பேச அனுமதிமதிக்க கோரி 13-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன் வேலூர் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகிறார். இவர் உறவினர்களுடன் ‘வாட்ஸ் அப்’பில் பேச அனுமதிமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 23-ந்தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனால் அவரது உடல்நிலை சோர்வடைந்துள்ளது. அவருக்கு 2 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டுள்ளது. அவரை ஜெயில் அதிகாரிகள், டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.
நேற்றும் 13-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டார். உண்ணாவிரதத்தை கைவிட அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் ஒடுகத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
அணைக்கட்டு:
ஒடுகத்தூரை அடுத்த கீழ்கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோட்டீஸ்வரன். இவரின் மனைவி சங்கீதா (வயது 25). இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன்தினம் இரவு 11.45 மணியளவில் திடீரெனப் பிரசவவலி ஏற்பட்டது. அவரை, ஒடுகத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு செல்ல 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் விரைந்து வந்து கீழ்கொத்தூரில் இருந்து சங்கீதாவை ஏற்றி கொண்டு ஒடுகத்தூரை நோக்கி சென்று கொண்டிருந்தது.
ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளராக செல்வி உடன் சென்றார். சங்கீதாவுக்கு பிரசவவலி அதிகமானதால் ஒடுகத்தூர் பஸ் நிலையத்தில் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது. மருத்துவ உதவியாளர் செல்வி, சங்கீதாவுக்கு பிரசவம் பார்த்தார். நள்ளிரவு 12.50 மணியளவில் ஓடும் ஆம்புலன்சிலேயே சங்கீதாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து தாயும், சேயும் ஒடுகத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, இருவருக்கும் மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் ரூ.5 கோடியே 77 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கலெக்டர் சண்முகசுந்தரம் ரிப்பன் வெட்டி குடோனை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினார்.
வேலூர்:
தமிழகம் முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்க குடோன் கட்ட இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் ரூ.5 கோடியே 77 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் குடோன் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி முடிவடைந்தது. இந்த நிலையில் நேற்று அந்த குடோன் திறப்பு விழா நடந்தது.
கலெக்டர் சண்முகசுந்தரம் ரிப்பன் வெட்டி குடோனை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் முதன்முறையாக ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைப்பதற்கான நவீன முறையில் குடோன் கட்டப்பட்டுள்ளது. இதில் 9,320 ஓட்டுப்பதிவு எந்திரங்கள், 5,040 கட்டுப்பாட்டு கருவிகள், 4,924 யாருக்கு வாக்கு செலுத்தினோம் என்பதை கண்டறியும் கருவிகளை பாதுகாப்பாக வைக்கலாம். குடோன் முழுவதும் 16 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தீ விபத்து மற்றும் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் தானியங்கி அலாரம் ஒலிக்கும் வசதியும், லிப்ட் வசதியும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சங்கரலிங்கம், உதவி கலெக்டர் கணேஷ், உதவி செயற்பொறியாளர்கள் திரிபுரசுந்தரி, சரவணன், தேர்தல் பிரிவு தாசில்தார் ஸ்ரீராம், வேலூர் தாசில்தார் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வயது அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என கூறி காதலித்து திருமணம் செய்து ஏமாற்றிய என்ஜினீயர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் புகார் மனு அளித்தார்.
வேலூர்:
அணைக்கட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 33 வயது பெண். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
எனக்கு 2006-ம் ஆண்டு திருமணம் ஆகி விவாகரத்து ஏற்பட்டது. இதனால் நான் எனது குடும்பத்துடன் வசித்து வருகிறேன். இந்த நிலையில் பொய்கையில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சென்றபோது விரிஞ்சிபுரத்தை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரியுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் என்னிடம் உங்களுக்கு என்னை விட 3 வயது அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை. நான் உங்களை நன்றாக கவனித்துக் கொள்கிறேன் என்று கூறி திருமணம் செய்து கொள்வதாக கூறினார்.
எனவே நாங்கள் வீட்டில் தாலிகட்டி குடும்பம் நடத்தி வந்தோம். அவரது தங்கைக்கு திருமணம் ஆனபிறகு அழைத்து செல்வதாக கூறி என்னுடன் வாழ்ந்து வந்தார். இது குறித்து அவரது பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் எங்களது திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை. இந்த நிலையில் அவருக்கும், வேறு ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தேன். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அவரது திருமணத்தை தடுத்து அவர் மீதும், அவரது பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக் கொண்ட போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறினர்.
வேலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் கொண்டைக்கடலை வினியோகம் தொடங்கியது.
வேலூர்:
கொரோனா காரணமாக பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இதனால் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கும், முன்னுரிமை கார்டுதாரர்களுக்கும் மாதத்துக்கு ஒரு கிலோ வீதம் கொண்டைக்கடலை இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி ஜூலை மாதம் முதல் நவம்பர் மாதம் வரை 5 மாதங்களுக்கு வழங்க வேண்டிய 5 கிலோ கொண்டைக்கடலை டிசம்பர் மாதம் முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்காக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு தேவையான சுமார் 3 ஆயிரம் டன் கொண்டைக்கடலை கொள்முதல் செய்யப்பட்டு, நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் அரசு அறிவித்ததன் பேரில் வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு, குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம், காட்பாடி, வேலூர் ஆகிய 6 தாலுகாக்களில் உள்ள 698 ரேஷன் கடைகளில் கொண்டைக்கடலை பொதுமக்களுக்கு நேற்று வினியோகம் செய்யப்பட்டது. வேலூர் தாலுகாவில் வட்ட வழங்கல் அலுவலர் நெடுமாறன் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
6 தாலுகாக்களில் உள்ள வறுமை கோட்டிற்கு கீழ் மற்றும் முன்னுரிமை கார்டுதாரர்கள் 2 லட்சத்து 4 ஆயிரத்து 516 பேருக்கு தலா 5 கிலோ கொண்டடைக்கடலை வழங்கப்பட்டது. இவர்களுக்கு இந்த மாதம் துவரம் பருப்பு கிடையாது. இதேபோல முன்னுரிமை அல்லாத கார்டுதாரர்கள் 2 லட்சத்து 19 ஆயிரத்து 168 பேருக்கு ஒரு கிலோ துவரம் பருப்பு மட்டும் இலவசமாக வழங்கப்பட்டது. கொண்டைக்கடலை வழங்கப்படவில்லை.
பொதுமக்கள் கூறுகையில், அரிசி கார்டு உள்ள அனைவருக்கும் ஒரே மாதிரி கொண்டைக்கடலை மற்றும் துவரம் பருப்பு வழங்க வேண்டும். இதில் மாற்றம் செய்யக்கூடாது என்றனர்.
வேலூர் ஜெயிலில் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் முருகன் மீது காவலரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வேலூர் :
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் ஜெயிலில் முருகன் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். சிறை விதிகளின்படி இருவரும் கொரோனா காரணமாக செல்போனில் வீடியோ கால் மூலம் பேசி வருகின்றனர்.
மேலும் முருகன் தனது குடும்பத்தினரிடம் பேசினார். இந்த நிலையில் தனது உறவினர்களுடன் பேச அனுமதிக்க வேண்டும் என அவர் கடந்த 23-ந் தேதியில் இருந்து தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். பழம் மற்றும் தண்ணீர் மட்டுமே சாப்பிட்டு வருகிறார். இதனால் அவர் மிகவும் சோர்வடைந்துள்ளார்.
நேற்று முன்தினம் அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. சிறை அதிகாரிகள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியும் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்துள்ளார். இதனால் முருகனின் உடல்நிலை குறித்து பரிசோதனை செய்யப்படுகிறது. அவரது ரத்த அழுத்தம், ஆக்சிஜன் அளவு ஆகியவை தொடர்ந்து பரிசோதித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சிறைத்துறை சார்பில் பாகாயம் போலீஸ் நிலையத்தில் முருகன் மீது புகார் கொடுக்கப்பட்டது. அதன்படி முருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
வேலூர் ஜெயிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகன் அவரது உறவினர்களுடன் செல்போனில் வீடியோ காலில் பேச அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது எதிர்முனையில் இருந்த அவரது உறவினர்கள் வெளிநாட்டில் உள்ள முருகனின் உறவினர் ஒருவருடன் பேச இணைப்பு கொடுத்துள்ளனர். இது சிறை விதி மீறிய செயல் ஆகும். இதைப்பார்த்த சிறைக் காவலர் அதை தடுத்தார். அப்போது முருகனுக்கும், அந்த காவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. காவலரை பணி செய்யவிடாமல் முருகன் தடுத்துள்ளார். எனவே அவர் மீது ஜெயிலர் மோகன் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுபா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வேலூர் அருகே ஒரே மாதத்தில் 17 குழந்தைகள் திருமணம் தடுத்த நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலூர்:
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் குழந்தை திருமணங்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. 18 வயது நிரம்பாத பெண்களை திருமணம் செய்து கொடுத்தால், மாவட்ட சமூகநலத்துறை, சைல்டுலைன் மூலம் அவர்களுக்கு ஏற்படும் உடல், மனதளவில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் ரகசியமாக பல பகுதிகளில் குழந்தை திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறுகிறது. சமூக நலத்துறை மற்றும் சைல்டுலைன் அதிகாரிகள், அலுவலர்களுக்கு வரும் தகவலின் அடிப்படையில் குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடந்த நவம்பர் மாதம் குழந்தை திருமணம் தொடர்பாக சைல்டுலைன் (1098) அலுவலகத்துக்கு 27 அழைப்புகள் வந்தன. அதில், 17 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. 7 பேருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது. அவர்கள் குழந்தை நலக்குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டு, தற்போது பெற்றோருடன் வசித்து வருகிறார்கள். 3 குழந்தை திருமணம் தொடர்பான முகவரி சரியாக தெரிவிக்கவில்லை. அதனால் அதனை கண்டுபிடிக்க முடியவில்லை என்று சைல்டுலைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தேவேந்திரன் கூறினார்.
காட்பாடி அருகே ரெயில் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்பாடி:
காட்பாடி ரெயில் நிலையத்திற்கும், சேவூர் ரெயில் நிலையத்திற்கும் இடையில் நேற்று சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தண்டவாளத்தை கடந்துள்ளார். அப்போது ரெயில்மோதி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காட்பாடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இறந்தவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து காட்பாடி ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.