என் மலர்
வேலூர்
வேலூர் மாநகராட்சி தேர்தலையொட்டி போலீசார் துப்பாக்கியுடன் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
வேலூர்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு வெப்கேமரா பொருத்தப்பட உள்ளது.
பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு மையங்கள் முன்பாக கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வேலூர் மாநகராட்சி பகுதியில் தேர்தலையொட்டி இன்று போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஏ.டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தி போலீசாரின் கொடி அணிவகுப்பு தொடங்கிவைத்தார்.
ஆற்காடு ரோடு, சைதாப்பேட்டை பி.டி.சி.ரோடு, ஓல்டு டவுன் வழியாக துப்பாக்கி ஏந்திய போலீசார் ஊர்வலமாக சென்றனர்.
தொடர்ந்து குடியாத்தம், பேரணாம்பட்டு, நகராட்சிகள் மற்றும் ஒடுகத்தூர், பள்ளிகொண்டா, திருவலம், பென்னாத்தூர் பேரூராட்சிகளில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்த உள்ளனர்.
மாவட்டம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி சோதனைச் சாவடிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு சோதனை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 8 ஆயிரம் மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் மது கடத்தலை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.மது கடத்தல் மற்றும் திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இதுவரை 8014 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த மதுபாட்டில்கள் போலீஸ் நிலையங்களில் தேங்கிக் கிடந்தன.இவற்றை அளிக்க அனுமதி கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் போலீசார் விண்ணப்பித்திருந்தனர்.அதற்கு மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்தது.
இதனைத் தொடர்ந்து இன்று வேலூர் அருகே உள்ள சலமநத்தம் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அருகே போலீசார் பறிமுதல் செய்து வைத்திருந்த மதுபாட்டில்களை பள்ளம் தோண்டி மூடினர்.
வேலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு தொடங்கியது.
வேலூர்:
தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்- 2 மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு இன்று முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு இன்று காலை தொடங்கியது. தமிழ்பாடத்திற்கான தேர்வுகள் இன்று நடந்தது. 9,511 மாணவர்களும், 9,403 மாணவிகள் என மொத்தம் 18,914 மாணவ மாணவிகள் திருப்புதல் தேர்வு எழுதினர்.
அதேபோல் இன்று மாலை பிளஸ்-2 மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு நடந்தது. 7,511 மாணவர்களும், 8,523 மாணவிகள் என மொத்தம் 16,043 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.
வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் தேர்வு பணிகளை வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தார்.
பள்ளித்துணை ஆய்வாளர் மணிவாசகம்,, காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கோ.சரளா உதவி தலைமையாசிரியை டி.என்.ஷோபா தொழிற்கல்வி ஆசிரியர் செ.நாஜனார்தனன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 9-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நாளை 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு 3 இடங்களில் நடக்கிறது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சி, குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சிகள், ஒடுகத்தூர், பென்னாத்தூர், பள்ளிகொண்டா, திருவலம் ஆகிய பேரூராட்சிகளுக்கு நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. 178 வார்டு கவுன்சிலர் பதவிக்கு 819 பேர் போட்டியிடுகிறார்கள்.
தேர்தலுக்காக 628 வாக்குச்சாவடிகள் தயார் செய்யப்பட்டுள்ளது. நகர்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் 3,101 வாக்குச்சாவடி அலுவலர்கள் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கு கடந்த 31-ந் தேதி முதற்கட்ட பயிற்சி நடந்தது.
இந்த நிலையில் இன்று 10- மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு நடைபெறுவதால் 2-ம் கட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நாளை நடைபெறுகிறது.
முதற்கட்ட பயிற்சி நடந்த இடங்களிலேயே 2-ம் கட்ட பயிற்சி அளிக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடி அலுவலர்கள் தபால் வாக்கு சீட்டு மூலம் தங்களது ஓட்டை செலுத்த உரிய ஆவணங்களுடன் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வருகிற 16-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தேர்தல்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை மர்மமான முறையில் இறந்தது.
வேலூர்:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ஊனை பள்ளத்தூரை சேர்ந்தவர் சுகுமார்.இவரது மனைவி கவுரி (வயது 27). தம்பதிக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
4-வதாக கர்ப்பமான கவுரியை கடந்த 5-ந் தேதி அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக சேர்த்தனர். 6-ந்தேதி கவுரிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
9-ந்தேதி காலை கவுரியின் பெண் குழந்தை திடீரென மூச்சு பேச்சு இல்லாமல் இருந்தது.
இதுகுறித்து கவுரி அங்குள்ள டாக்டர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
டாக்டர்கள் வந்து குழந்தையை பரிசோதனை செய்து பார்த்த போது குழந்தை இறந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி உதவி பேராசிரியை கல்பனா தாலுகா போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து போலீசார் கவுரியின் பெண் குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் குழந்தை மூச்சுத் திணறல் காரணமாக இருந்ததாக தெரிய வந்தது.
இதுகுறித்து தாலுகா போலீசார் மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
வேலூர்:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் ஏகாம்பரம் (வயது 37). ஏகாம்பரம் நேற்று முன்தினம் நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக வேலூருக்கு வந்துள்ளார்.
நண்பரை பார்த்துவிட்டு சொந்த ஊர் செல்வதற்காக பழைய பஸ் நிலையத்திற்கு மண்டி வீதி வழியாகச் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி ஏகாம்பரத்திடம் இருந்து ரூ 3 ஆயிரம் பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
ஏகாம்பரம் இதுகுறித்து வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மண்டித் தெருவில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
ஏகாம்பரத்திடம் வழிப்பறியில் ஈடுபட்டது கஸ்பா வசந்தபுரம் நேரு நகரை சேர்ந்த மோகன் (21), பூங்காவனத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுபாஷ் (21) என தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 2 வாலிபர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாநகராட்சியில் 354 பேர் போட்டியிடுகின்றனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 180 வார்டுகளில் 178 இடங்களுக்கு 819 பேர் போட்டியிடுகின்றனர். 2 இடங்களுக்கு போட்டியின்றி கவுன்லர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 28-ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 4-ந்தேதி நிறைவடைந்தது.
வேலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 180 வார்டு உறுப்பினர் பதவிகளில், வேலூர் மாநகராட்சி 60 வார்டுகளுக்கு 505 பேரும், குடியாத்தம் நகராட்சி 36 வார்டுகளுக்கு 234 பேரும்.
பேரணாம்பட்டு நகராட்சி 21 வார்டுகளுக்கு 105 பேரும், ஒடுகத்தூர் பேரூராட்சி 15 வார்டுகளுக்கு 72 பேரும், பள்ளிகொண்டா பேரூராட்சி 18 வார்டுகளுக்கு 79 பேரும்.
திருவலம் பேரூராட்சி 15 வார்டுகளுக்கு 63 பேரும், பென்னாத்தூர் பேரூராட்சி 14 வார்டுகளுக்கு 89 பேரும் என மொத்தம் 1,147 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
சனிக்கிழமை நடைபெற்ற வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையின் போது, வேலூர் மாநகராட்சியில் 33 மனுக்களும், குடியாத்தம் நகராட்சியில் 8, பேர்ணாம்பட்டு நகராட்சியில் 1, ஒடுகத்தூரில் 3, பென்னாத்தூரில் 1, பள்ளிகொண்டாவில் 2 மனுக்கள் என மொத்தம் 48 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
திருவலம் பேரூராட்சியில் மனு எதுவும் தள்ளுபடி செய்யப்படவில்லை. அதனடி ப்படையில், மாவட்டம் முழுவதும் 1,099 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
நேற்று மாலை வரை வேட்புமனுக்களை திரும்பப் பெற அவகாசம் அளிக்கப்பட்டு, வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது.
அப்போது, வேலூர் மாநகராட்சியில் 115 பேரும், குடியாத்தம் நகராட்சியில் 61 பேரும், பேரணாம்பட்டு நகராட்சியில் 7, ஒடுகத்தூரில் 31, பென்னாத்தூரில் 36, பள்ளிகொண்டாவில் 13, திருவலத்தில் 14 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 277 பேர் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர்.
இதைத் தொடர்ந்து, மாவட்டத்தில் மொத்தமுள்ள 180 வார்டுகளில் 178 இடங்களுக்கு 819 பேர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதில், வேலூர் மாநகராட்சி 58 வார்டுகளுக்கு 354 பேரும்.
குடியாத்தம் நகராட்சி 36 வார்டுகளுக்கு 165 பேரும், பேர்ணாம்பட்டு நகராட்சி 21 வார்டுகளுக்கு 97 பேரும், ஒடுகத்தூர் பேரூராட்சி 15 வார்டுகளுக்கு 38 பேரும், பள்ளிகொண்டா பேரூராட்சி 18 வார்டுகளுக்கு 64 பேரும்.
பென்னாத்தூர் பேரூராட்சி 15 வார்டுகளுக்கு 52 பேரும், திருவலம் பேரூராட்சி 15 வார்டுகளுக்கு 49 பேரும் போட்டியிடுகின்றனர்.
வேலூர் மாநகராட்சி 7-வது வார்டுக்கு திமுக வேட்பாளர் புஷ்பலதா வன்னியராஜா, 8-வது வார்டுக்கு திமுக வேட்பாளர் எம்.சுனில்குமார் ஆகியோர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இறுதி வேட்பாளர் பட்டியல் வந்துள்ளதால் வேட்பாளர்கள் தீவிரமாக களத்தில் இறங்கி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேலூரில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
வேலூர்:
வேலூர் தோட்டப்பாளையம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகன் அன்பழகன் (வயது 27). வெல்டிங் கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த அன்பழகன் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு கொண்டார். இதனைக்கண்ட அவரது உறவினர்கள் அன்பழகனை மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் பெண் உட்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
வேலூர்:
வாணியம்பாடி தாலுகா உதயேந்திரம் கிராமம் ஜின்னா தெருவை சேர்ந்தவர் சுவேல் (வயது 26). பேரணாம்பட்டு தாலுகா ஓங்குப்பம்ரோடு, ராசிதாபாத் பகுதியை சேர்ந்தவர் மணி (22). பேரணாம்பட்டு டி.வி.கே. நகரை சேர்ந்தவர் இம்ரான் அகமத் (22).
இவர்கள் மீது வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்ற வழக்குகள் உள்ளது. இவர்களை பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் ராஜன்பாபு கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தார்.
இதேபோல, அணைக்கட்டு தாலுகா அப்புக்கல் பகுதி, கொல்லைமேடு கிராமத்தை சேர்ந்தவர் மல்லிகா (35), வரதலாம்பட்டு பகுதி, பங்களாமேடு அல்லேரி கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தர் (22).
இவர்கள் இருவரும் சாராயம் காய்ச்சி விற்பனை செய்தது தொடர்பாக போலீசாரால் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டர்.
இதையடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை ஜெயிலில் உள்ள 5 பேரிடமும் போலீசார் வழங்கினர்.
குடியாத்தம் நகராட்சியில் 165 பேர் போட்டியிடுகின்றனர்.
குடியாத்தம்:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன.
இதில் நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு தி.மு.க., அ.தி.மு.க., பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க., பி.ஜே.பி., ம.தி.மு.க., தமிழ் மாநில காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம்லீக், புரட்சி பாரதம், புதிய நீதி கட்சி, நாம்தமிழர், கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய குடியரசு கட்சி உள்பட பல்வேறு கட்சிகளின் சார்பில் திருநங்கை ஒருவர் உள்பட வேட்பாளர்கள் 234 பேர் நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
கடந்த 5-ந் தேதி குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது இதில் உரிய ஆவணங்கள் இல்லாததால் 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
வேட்பு மனுக்கள் வாபஸ் பெறும் நாளான நேற்று 61 பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இறுதியாக குடியாத்தம் நகராட்சி 36 வார்டுகளுக்கு 165 பேர் களத்தில் உள்ளனர். இதில் ஒரு திருநங்கை ஆவார். குடியாத்தம் நகராட்சியில் தி.மு.க. கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 31 இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது.
அதன் கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 2 இடங்களில் ஏணி சின்னத்தில், 2 இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி 2 இடங்களில் கை சின்னத்தில் போட்டியிடுகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி உதயசூரியன் சின்னத்தில் ஓரிடத்திலும், ம.தி.மு.க. ஓரு இடத்தில் பம்பரம் சின்னத்தில் போட்டியிடுகிறது. அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 35 இடங்களில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுகிறது.
இதில் தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு இடத்திலும், புரட்சி பாரதம் கட்சி ஒரு இடத்திலும், புதிய நீதி கட்சி ஒரு இடத்திலும், மனிதநேய ஜனநாயக கட்சி ஒரு இடத்திலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறது. 5 வது வார்டில் சுயேச்சைக்கு ஆதரவாக அதிமுக போட்டியிடவில்லை.
குடியாத்தம் நகராட்சியில் நடைபெறவுள்ள தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி 29 இடங்களிலும், பாரதிய ஜனதா கட்சி 12 இடங்களிலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்12 இடங்களிலும், நாம் தமிழர் கட்சி 8 இடங்களிலும் போட்டியிடுகிறது.
வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்ட பின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகி சின்னங்களும் ஒதுக்கப் பட்டதால் வேட்பாளர்கள் ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளதாக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் வேலூரில் நடந்தது. இதில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது:-
மக்களுக்கான கட்சி அ.தி.மு.க. தான். நாம் கொஞ்சம் அசந்த நேரத்தில் ஆட்சியை இழந்தோம். இனி அனைத்து தேர்தலிலும் 100 சதவீத வெற்றியை பெறுவோம்.
அரசியல் வரலாற்றில் தடம்பதித்த, சாதனை படைத்த இயக்கம் அ.தி.மு.க. தான். கடந்த சட்டமன்ற தேர்தலில் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டோம். தி.மு.க. நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சியில் அமர்ந்தார்கள்.
10 மாத ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக இருந்து வருகிறது. 10 மாதத்தில் தி.மு.க.வின் சாயம் வெளுத்து விட்டது. தி.மு.க. கொடுத்த 505 வாக்குறுதிகளை அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை.
ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் ரத்து என கூறினார். ஆனால் நீட் தேர்வுக்கு மூலகாரணமாக அஸ்திவாரம் போட்டது தி.மு.க. தான். தற்போதுவரை அதை ரத்து செய்யாமல் நாடகமாடி வருகிறார்கள்.
அரசு பள்ளி மாணவர்களின் டாக்டர் கனவு பறிபோய் விடக்கூடாது என்பதற்காக அ.தி.மு.க. கொண்டு வந்த 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் தற்போது 531 பேருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்திய அரசியல் அமைப்புபடி கவர்னர் அவரது பணியை செய்கிறார். அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அவரை திரும்ப பெறச்சொல்லி பகட்டு அரசியலை தி.மு.க. செய்து வருகிறது.
பாராளுமன்றத்தில் பிரச்சினை செய்கிறார்கள். இது என்ன நியாயம். நீட்டுக்கு எதிராக சட்ட போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அதை விடுத்து தி.மு.க. விளம்பர அரசியலை செய்து வருகிறது.

தற்போது தி.மு.க. அரசு மக்களிடம் வசமாக மாட்டியுள்ளது. விடியல் தருவதாக சொன்னார்கள். தினமும் விடிகிறது. ஆனால் நல்லாட்சி விடியவில்லை.
பொங்கலுக்கு தி.மு.க. கொடுத்த பொருட்களை மக்களால் சாப்பிட முடியவில்லை. அதை மாட்டுக்கு கொண்டு போய் வைத்தால் மாடு நம்மை பார்த்து முறைக்கிறது. தேர்தல் வாக்குறுதியின் படி அவர்கள் பணமும் கொடுக்கவில்லை.
மக்கள் தற்போது கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள். அ.தி.மு.க.வின் நல்லாட்சி எப்படி மாறியது என மக்கள் தற்போது சிந்தித்து கொண்டு இருக்கிறார்கள். தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது.
அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்காக கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை எடுத்துக் கூறியும், தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை எடுத்துக் கூறியும் வாக்குகளை கேட்கவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் வேலூரில் நடந்தது. இதில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது:-
மக்களுக்கான கட்சி அ.தி.மு.க. தான். நாம் கொஞ்சம் அசந்த நேரத்தில் ஆட்சியை இழந்தோம். இனி அனைத்து தேர்தலிலும் 100 சதவீத வெற்றியை பெறுவோம்.
அரசியல் வரலாற்றில் தடம்பதித்த, சாதனை படைத்த இயக்கம் அ.தி.மு.க. தான். கடந்த சட்டமன்ற தேர்தலில் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டோம். தி.மு.க. நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சியில் அமர்ந்தார்கள்.
10 மாத ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக இருந்து வருகிறது. 10 மாதத்தில் தி.மு.க.வின் சாயம் வெளுத்து விட்டது. தி.மு.க. கொடுத்த 505 வாக்குறுதிகளை அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை.
ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் ரத்து என கூறினார். ஆனால் நீட் தேர்வுக்கு மூலகாரணமாக அஸ்திவாரம் போட்டது தி.மு.க. தான். தற்போதுவரை அதை ரத்து செய்யாமல் நாடகமாடி வருகிறார்கள்.
அரசு பள்ளி மாணவர்களின் டாக்டர் கனவு பறிபோய் விடக்கூடாது என்பதற்காக அ.தி.மு.க. கொண்டு வந்த 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் தற்போது 531 பேருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்திய அரசியல் அமைப்புபடி கவர்னர் அவரது பணியை செய்கிறார். அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அவரை திரும்ப பெறச்சொல்லி பகட்டு அரசியலை தி.மு.க. செய்து வருகிறது.
பாராளுமன்றத்தில் பிரச்சினை செய்கிறார்கள். இது என்ன நியாயம். நீட்டுக்கு எதிராக சட்ட போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அதை விடுத்து தி.மு.க. விளம்பர அரசியலை செய்து வருகிறது.
மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு பிரச்சனை உலகம் முழுவதும் பரவியது. இது தொடர்பாக அப்போது பிரதமரிடம் பேசி 24 மணி நேரத்தில் தீர்வு கண்டோம்.

தற்போது தி.மு.க. அரசு மக்களிடம் வசமாக மாட்டியுள்ளது. விடியல் தருவதாக சொன்னார்கள். தினமும் விடிகிறது. ஆனால் நல்லாட்சி விடியவில்லை.
பொங்கலுக்கு தி.மு.க. கொடுத்த பொருட்களை மக்களால் சாப்பிட முடியவில்லை. அதை மாட்டுக்கு கொண்டு போய் வைத்தால் மாடு நம்மை பார்த்து முறைக்கிறது. தேர்தல் வாக்குறுதியின் படி அவர்கள் பணமும் கொடுக்கவில்லை.
மக்கள் தற்போது கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள். அ.தி.மு.க.வின் நல்லாட்சி எப்படி மாறியது என மக்கள் தற்போது சிந்தித்து கொண்டு இருக்கிறார்கள். தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது.
அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்காக கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை எடுத்துக் கூறியும், தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை எடுத்துக் கூறியும் வாக்குகளை கேட்கவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வேலூரில் 24-வது வார்டு பாமக வேட்பாளரை தோல்வி பயம் காரணமாக தி.மு.க.வினர் போட்டியிலிருந்து விலக வேண்டும் எனவும் இல்லையெனில் தொழில் செய்ய முடியாது என மிரட்டியது கண்டிக்கத்தக்கது.
வேலூர்:
வேலூர் ரங்காபுரம் நடைபாறையை சேர்ந்தவர் பரசுராமன். இவர் வேலூர் மாநகராட்சி 24-வது வார்டில் பா.ம.க சார்பில் போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் இரவு திமுகவினர் பரசுராமனை கடத்தி சென்று வேட்புமனுவை வாபஸ் பெற வேண்டும் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பா.ம.க மாவட்ட செயலாளர் இளவழகன், மாநில துணைத்தலைவர் என். டி.சண்முகம், மாவட்ட தலைவர் வெங்கடேசன் மற்றும் பாமக வேட்பாளர்கள் 25 பேர் வேலூர் எஸ்பி ஆபீஸில் புகார் மனு அளித்தனர்.
வேலூர் மாநகராட்சி தேர்தலில் 25 பாமக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 24-வது வார்டில் போட்டியிடும் பரசுராமனை நேரில் அழைத்து வேட்பு மனுவை வாபஸ் பெற வேண்டும் எனவும், இல்லையெனில் தொழில் செய்ய முடியாது என மிரட்டியுள்ளனர்.
நீங்கள் தேர்தலில் நிற்பதால் தி.மு.க வேட்பாளராக நிற்க வேண்டும். உங்களுக்கு 2 நாட்கள் அவகாசம் கொடுக்கிறோம். அதற்குள் நல்ல முடிவை சொல்ல வேண்டும் என மிரட்டி அனுப்பியுள்ளனர்.
அதனால் பா.ம.க வேட்பாளர்களுக்கு போலீஸ் பாதுகாப்பும், மிரட்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கூறியுள்ளனர்.
இதுகுறித்து பா.ம.க. தலைவர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
வேலூரில் 24-வது வார்டு பாமக வேட்பாளரை தோல்வி பயம் காரணமாக தி.மு.க.வினர் போட்டியிலிருந்து விலக வேண்டும் எனவும் இல்லையெனில் தொழில் செய்ய முடியாது என மிரட்டியது கண்டிக்கத்தக்கது.
மக்கள் செல்வாக்கு உள்ளவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவது தான் ஜனநாயகம் செல்வாக்கு இல்லாதவர்கள் அதை வளர்த்துக் கொள்ள வேண்டும் மாறாக மிரட்ட கூடாது பா.ம.க. வேட்பாளரை மிரட்டிய தி.மு.க.வினர் மீது மாநில தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டு உள்ளார்.
இவரது பதிவுக்கு தி.மு.க மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு எம்.எல்.ஏ.வுமான நந்தகுமார் டுவிட்டரில் மறுப்பு தெரிவித்துள்ளார்.
பா.ம.க வேட்பாளரை யாரும் மிரட்டவில்லை, கடத்தவும் இல்லை.
மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுவதால் தான் வெற்றி பெற முடியாது எனவும், தி.மு.க. சார்பில் உதய சூரியன் சின்னம் ஒதுக்க வேண்டும் வேண்டும் என எங்களை நேரில் சந்தித்து கேட்டுக்கொண்டார்.
24-வது வார்டு தி.மு.க. நிர்வாகிக்கு ஒதுக்கிய காரணத்தை அவரிடம் தெரிவித்து விட்டோம்.இதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. அவரை மிரட்ட வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை.
இந்த உண்மையை விசாரிக்காமல் என்மீது பொய்யான ஆதாரமற்ற குற்றச்சாட்டை வைத்தது ஏற்புடையது அல்ல. காரணம் பா.ம.க வேட்பாளரை மிரட்டி வெற்றி பெற வேண்டிய நிலையில் திமுக எப்போதும் இருந்ததில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.






