என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சத்துவாச்சாரி ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து போலீஸ் அணிவகுப்பு நடந்த காட்சி.
    X
    சத்துவாச்சாரி ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து போலீஸ் அணிவகுப்பு நடந்த காட்சி.

    வேலூர் மாநகராட்சி தேர்தலையொட்டி போலீசார் துப்பாக்கியுடன் கொடி அணிவகுப்பு

    வேலூர் மாநகராட்சி தேர்தலையொட்டி போலீசார் துப்பாக்கியுடன் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
    வேலூர்:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு வெப்கேமரா பொருத்தப்பட உள்ளது. 

    பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு மையங்கள் முன்பாக கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வேலூர் மாநகராட்சி பகுதியில் தேர்தலையொட்டி இன்று போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஏ.டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தி போலீசாரின் கொடி அணிவகுப்பு தொடங்கிவைத்தார்.

    ஆற்காடு ரோடு, சைதாப்பேட்டை பி.டி.சி.ரோடு, ஓல்டு டவுன் வழியாக துப்பாக்கி ஏந்திய போலீசார் ஊர்வலமாக சென்றனர்.

    தொடர்ந்து குடியாத்தம், பேரணாம்பட்டு, நகராட்சிகள் மற்றும் ஒடுகத்தூர், பள்ளிகொண்டா, திருவலம், பென்னாத்தூர் பேரூராட்சிகளில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்த உள்ளனர். 

    மாவட்டம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி சோதனைச் சாவடிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு சோதனை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×