என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
வேலூரில் பெண் உட்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது
வேலூர் மாவட்டத்தில் பெண் உட்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
வேலூர்:
வாணியம்பாடி தாலுகா உதயேந்திரம் கிராமம் ஜின்னா தெருவை சேர்ந்தவர் சுவேல் (வயது 26). பேரணாம்பட்டு தாலுகா ஓங்குப்பம்ரோடு, ராசிதாபாத் பகுதியை சேர்ந்தவர் மணி (22). பேரணாம்பட்டு டி.வி.கே. நகரை சேர்ந்தவர் இம்ரான் அகமத் (22).
இவர்கள் மீது வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்ற வழக்குகள் உள்ளது. இவர்களை பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் ராஜன்பாபு கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தார்.
இதேபோல, அணைக்கட்டு தாலுகா அப்புக்கல் பகுதி, கொல்லைமேடு கிராமத்தை சேர்ந்தவர் மல்லிகா (35), வரதலாம்பட்டு பகுதி, பங்களாமேடு அல்லேரி கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தர் (22).
இவர்கள் இருவரும் சாராயம் காய்ச்சி விற்பனை செய்தது தொடர்பாக போலீசாரால் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டர்.
இதையடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை ஜெயிலில் உள்ள 5 பேரிடமும் போலீசார் வழங்கினர்.
Next Story






