என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் அளிக்கப்பட்ட காட்சி.
    X
    பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் அளிக்கப்பட்ட காட்சி.

    போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 8 ஆயிரம் மதுபாட்டில்கள் அழிப்பு

    வேலூர் மாவட்டத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 8 ஆயிரம் மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் மது கடத்தலை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.மது கடத்தல் மற்றும் திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
    இதுவரை 8014 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

    இந்த மதுபாட்டில்கள் போலீஸ் நிலையங்களில் தேங்கிக் கிடந்தன.இவற்றை அளிக்க அனுமதி கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் போலீசார் விண்ணப்பித்திருந்தனர்.அதற்கு மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்தது.

     இதனைத் தொடர்ந்து இன்று வேலூர் அருகே உள்ள சலமநத்தம் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அருகே போலீசார் பறிமுதல் செய்து வைத்திருந்த மதுபாட்டில்களை பள்ளம் தோண்டி மூடினர்.
    Next Story
    ×