என் மலர்tooltip icon

    வேலூர்

    • கடன் பிரச்சினையில் இருந்து வந்தார்.
    • போலீஸ் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 31). மோட்டார் காயில் கட்டும் வேலை செய்து வந்தார். இவருக்கு கடன் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நிலத்திற்கு அடிக்க வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை மதுவில் கலந்து குடித்துள்ளார்.

    இதனால் ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு வாலாஜா அரசு மருத்துவமனையில் முதல் உதவிசிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச் சைக்காகவேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

    • ரூ.7 கோடியே 75 லட்சம் மதிப்பீ ட்டிலான பணி ஆணை
    • 369 பயனாளிகள் பயனடைந்தனர்.

    ராணிப்பேட்டை:

    தமிழக முதல் அமைச்சர் டு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலி காட்சி வாயிலாக திறந்துவைத்தார்.

    பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகள் மற்றும் சாவிகளை வழங்கினார். அதைத்தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் பயனாளிகள் தாங்களாகவே வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டிக்கொள்ள 369 பயனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வீதம் ரூ.7 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டிலான பணி ஆணை களை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

    • என் குப்பை என் பொறுப்பு” “என் நகரம் என் பெருமை”என்ற தலைப்பில் விழிப்புணர்வு
    • மக்கள் இயக்கம் போர்டில் கலெக்டர் கையெழுத்துயிட்டார்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையம் அருகில் நகரங்களின் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் பணி உறுதிமொழி ஏற்பு மற்றும் கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் இன்று தொடங்கிவைத்தார்.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.

    நகரமன்ற தலைவர் சுஜாதாவினோத், துணை தலைவர் ரமேஷ்கர்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ராணிப்பேட்டை நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் வரவேற்றார். நிகழ்ச்சியில் "என் குப்பை என் பொறுப்பு" "என் நகரம் என் பெருமை"என்ற தலைப்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி நகரங்களுக்கான மக்கள் இயக்கம் போர்டில் கலெக்டர் கையெழுத்துயிட்டார்.

    மேலும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உறுதி மொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    • சுவரொட்டிகள் அகற்றம் உத்தரவு
    • சுவரொட்டிகள் அகற்றம் உத்தரவுசாலைகளை மேம்படுத்தவும் சுத்தம் செய்ய தீவிரம்

    வேலூர்:

    வேலூரில் புதிய பஸ் நிலைய திறப்பு விழா மற்றும் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வருகிற 21-ந் தேதி நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகையையொட்டி அனைத்து முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    வேலூர் மாநகர பகுதியில் சாலைகளை மேம்படுத்தவும் சுத்தமாக வைத்திருக்கவும் மேயர் சுஜாதா ஆனந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.

    கமிஷனர் அசோக்குமார் மேற்பார்வையில் மாநகர பகுதியில் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வேலூர் அண்ணா சாலையில் சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவரில் இருந்த புல் புதர்களை அகற்றி விட்டு அதில் அலங்கார செடிகள் நடவு செய்யும் பணி கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது.

    இதேபோல மாநகராட்சி பகுதியில் தேவையில்லாமல் இருக்கக்கூடிய சுவரொட்டிகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று காலை சத்துவாச்சாரி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை மேம்பால சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.

    இதேபோல மாநகராட்சி சாலையோரங்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அகற்றப்பட்டன.

    முதல்-அமைச்சர் வருகையையொட்டி வேலூர் மாநகர பகுதியை சுத்தம் செய்யும் பணி மற்றும் அழகுபடுத்தும் பணிகள் 2 கட்டமாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

    இன்னும் சில நாட்களில் இந்த பணிகள் முழுமையாக நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பேரூராட்சி கூட்டத்தில் முடிவு
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    வேலூர்:

    பென்னாத்தூர் பேரூராட்சியில் மாதாந்திர பேரூராட்சி கூட்டம் தலைவர் பவானி சசிகுமார் தலைமையில் நேற்று நடந்தது. பேரூராட்சி துணை தலைவர் ஜீவசத்தியராஜ் முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் அர்ச்சுனன் வரவேற்றார்.

    கவுன்சிலர்கள் கருணாகரன், அண்ணாதுரை, சுபாஷினிலோகநாதன், அண்ணாமலை, சுரேஷ், மாலதிராஜி, லட்சுமி, தமிழரசி, தமிழ்வாணி, ரேகா, ஈஸ்வரிகுமார், வள்ளி மற்றும் ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பொதுமக்கள் நலன் கருதி குழல் விளக்குகள் மற்றும் சி.எப்.எல் விளக்குகளை, எல்.இ.டி. பல்புகள் மாற்றி அமைத்தல், முதல்-அமைச்சரின் உத்தரவுபடி பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க, மீண்டும் மஞ்ச பைகளை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அனைத்து பகுதிகளிலும் குடிநீர் தடையின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் பேரூராட்சி பணியாளர் திருமால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திங்கட்கிழமை 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு.
    • பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் ஆய்வு செய்தனர்.

    வேலூர்:

    தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு வருகிற திங்கட்கிழமை மழலையர் பள்ளிகள் மற்றும் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்பு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி, தனியார் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்று முதல் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்றது.

    பள்ளிகளில் வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி, கரும்பலகை சுத்தம் செய்யும் பணி, வளாக பகுதி, கூட்டு பிரார்த்தனை செய்யும் பகுதி, ஆசிரியர்கள் ஓய்வறை பகுதி, மாணவர்கள் அமரும் இருக்கை உள்ளிட்டவைகளை தண்ணீர் மூலம் சுத்தம் செய்தனர்.‌

    கிருமி நாசினி தெளிக்கும் பணி வேலூர் மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடைபெற்றது. வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் இன்று காலை முதலே சுத்தம் செய்யும்பணி நடந்தது.

    வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து இன்று அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. இதற்கான அறிக்கை முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வருகின்றனர்.

    பள்ளிகளை சுத்தப்ப டுத்தும் பணியில் அந்தந்த பள்ளி நிர்வாகத்தினர் ஈடுபட்டனர்.

    • குடும்ப அட்டை விவரங்களை திருத்த வாய்ப்பு
    • கலெக்டர் தகவல்

    வேலூர்:

    பொது விநியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து மக்களுக்கும் வழங்கும் பொருட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் இன்று இரண்டாவது சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது விநியோ கத்திட்ட சிறப்பு குறைதீர் முகாம் நடந்தது.

    இம்முகாமில் குடும்ப அட் டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் குடும்ப அட்டைக்கு மனு செய்தல், கைப்பேசி எண் பதிவு செய்தல், குடும்பத் தலைவர் புகைப்படம் மாற்றம் செய்தல் ஆகியவைகள் மேற்கொள்ளப்பட்டது. 

    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார்.
    • பொதுமக்கள் கலந்துகொண்டு மனு அளித்தனர்.

    பேரணாம்பட்டு:

    பேர்ணாம்பட்டு ஸ்டார், ஃபங்ஷன் ஹாலில் மக்கள் குைற கேட்பு சிறப்பு முகாம் நடந்தது.

    இந்த சிறப்பு முகாமை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    கதிர்ஆனந்த் எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் வில்வநாதன் அமுலுவிஜயன், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் தனஞ்செயன், ஒன்றிய குழு தலைவர் ஜெ.சித்ரா ஜனர்தனன் ஒன்றியக்குழு துணைத்தலைவர் டி .லலிதாடேவிட், நகரமன்றத் தலைவர் பிரேமா, வெற்றிவேல், நகரமன்றத் துணைத்தலைவர் ஆழியார் ஜூபேர் அஹமது, தாசில்தார் வெங்கடேசன், துணை தாசில்தார்கள் இள வடிவேலு, சீனிவாசன், வருவாய் ஆய்வாளர் சரஸ்வதி, நகராட்சி பொறியாளர் கோபு, கிராம நிர்வாக அலுவலர்கள் உதயகுமார், கோபிநாத் , எம்.ஜெயக்குமார். வெங்கடேசன், மேகநாதன் சிவராமன், அருண் குமார் உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள கரசமங்கலம் ஊராட்சி ரகுபதி நகரில் ரூ.1 கோடியில் எம்.ஜி.ஆருக்கு கோவில் கட்டப்பட உள்ளது.
    • சுமார் 80 சென்ட் நிலத்தில் கட்டப்படும் இந்த கோவிலில் எம்ஜிஆருக்கு வெண்கலச் சிலை வைக்கப்பட உள்ளது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள கரசமங்கலம் ஊராட்சி ரகுபதி நகரில் ரூ.1 கோடியில் எம்.ஜி.ஆருக்கு கோவில் கட்டப்பட உள்ளது.

    இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதில் திரி சக்தி ஸ்ரீ வராக குருஜி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். சுமார் 80 சென்ட் நிலத்தில் கட்டப்படும் இந்த கோவிலில் எம்ஜிஆருக்கு வெண்கலச் சிலை வைக்கப்பட உள்ளது. மேலும் திருமணம் செய்வது உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இந்த கோவில் கட்டப்பட உள்ளது.

    இதுகுறித்து அ.தி.மு.க.பிரமுகர் டி.ஆர். முரளி கூறுகையில்:-

    எனது தந்தை ரகுபதி எம்.ஜி.ஆரால் தான் எம்.எல்.ஏ.ஆனார். எம்.ஜி.ஆரால் தான் எங்கள் குடும்பம் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.இந்த நன்றி மறக்காத வகையில் எம்.ஜி.ஆருக்கு கோவில் கட்ட முடிவு செய்துள்ளோம்.

    இதற்ககாக ரூ.1 கோடிக்கு மேல் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏழை மக்கள் திருமணம் செய்யும் வசதிகள் மற்றும் அமர்ந்து சாப்பிடும் வகையில் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. இது பொதுமக்கள் சேவைக்காக மட்டுமே செய்யப்படுகிறது என்றார்.

    • 1430 வழக்குகள் பதிவு.
    • 5422 கிலோ குட்கா பறிமுதல்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் குட்கா செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களில் கள்ளச்சாராயம், மதுவிலக்கு தொடர்பாக மொத்தம் 1430 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவற்றில் 1308 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதில் 13 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சாராய கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 39 இருசக்கர, ஒரு ஆட்டோ மற்றும் 2 நான்கு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    கஞ்சா தொடர்பாக மாவட்டத்தில் மொத்தம் 51 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவற்றில் 61 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 15 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    குட்காவை தொடர்பான வழக்கில் மொத்தம் 278 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 288 பேர் கைது செய்யப்பட்டனர் இது 7 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அவர்களிடமிருந்து சுமார் 5422 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.45,59,056.

    இது தவிர 15 ரவுடிகளையும், திருட்டு வழக்குகளில் 8 பேர், 9 பாலியல் குற்றவாளிகள் மற்றும் மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் என இதுவரை மொத்தம் 68 பேர் குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தில் குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் நபர்கள் யார் என அடையாளம் காணப்பட்டால் அவர்களின் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • முருகனின் பரோல் விடுப்பு தொடர்பாக நளினியின் தாயார் பத்மா சிறைத்துறை தலைவருக்கு மேல்முறையீட்டு மனுவை அளித்துள்ளார்.

    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் ஜெயிலில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் முருகனுக்கு 6 நாள் அவசரகால பரோல் விடுப்பு வழங்க கோரி அவரது மனைவி நளினியும், மாமியார் பத்மாவும் சிறைத் துறைக்கு மனு அளித்திருந்தனர்.

    இந்த மனுவை ஜெயில் சூப்பிரண்டு கடந்த மாதம் 28-ம் தேதி நிராகரித்திருந்தார். முருகன் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவருக்கு பரோல் விடுப்பு வழங்க முடியாது என்றும் கூறப்பட்டிருந்தது.

    இந்நிலையில் முருகனின் பரோல் விடுப்பு தொடர்பாக நளினியின் தாயார் பத்மா சிறைத்துறை தலைவருக்கு மேல்முறையீட்டு மனுவை அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    பரோலில் உள்ள எனது மகள் நளினிக்கு பல்வேறு உடல்நலக் குறைவுகள் ஏற்பட்டுள்ளது. முருகனுக்கு பல் தொடர்பாக அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட உள்ளது.

    எனக்கு வயது மூப்பு காரணமாக நளியை பராமரிக்க முடியவில்லை. முருகன் இதுவரை ஒரு நாள் கூட சிறை விடுப்பில் வந்தது இல்லை. மேலும் முருகன் மீது எந்த வழக்கும் எந்த கோர்ட்டிலும் நிலுவையில் இல்லை.

    ஆகவே சிறைக் கண்காணிப்பாளர் கடந்த மாதம் 28-ம் தேதி தனது மனுவை நிராகரித்து உத்தரவிட்டதை மறுபரிசீலனை செய்து தனது மகளின் கணவரான முருகனுக்கு 6 நாள் அவசரகால பரோல் விடுப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×