என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பென்னாத்தூர் பகுதியில் பொதுமக்களிடையே மஞ்சபை விழிப்புணர்வு
    X

    பென்னாத்தூர் பேரூராட்சி கூட்டம் தலைவர் பவானி சசிகுமார் தலைமையில் நடந்த காட்சி.

    பென்னாத்தூர் பகுதியில் பொதுமக்களிடையே மஞ்சபை விழிப்புணர்வு

    • பேரூராட்சி கூட்டத்தில் முடிவு
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    வேலூர்:

    பென்னாத்தூர் பேரூராட்சியில் மாதாந்திர பேரூராட்சி கூட்டம் தலைவர் பவானி சசிகுமார் தலைமையில் நேற்று நடந்தது. பேரூராட்சி துணை தலைவர் ஜீவசத்தியராஜ் முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் அர்ச்சுனன் வரவேற்றார்.

    கவுன்சிலர்கள் கருணாகரன், அண்ணாதுரை, சுபாஷினிலோகநாதன், அண்ணாமலை, சுரேஷ், மாலதிராஜி, லட்சுமி, தமிழரசி, தமிழ்வாணி, ரேகா, ஈஸ்வரிகுமார், வள்ளி மற்றும் ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பொதுமக்கள் நலன் கருதி குழல் விளக்குகள் மற்றும் சி.எப்.எல் விளக்குகளை, எல்.இ.டி. பல்புகள் மாற்றி அமைத்தல், முதல்-அமைச்சரின் உத்தரவுபடி பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க, மீண்டும் மஞ்ச பைகளை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அனைத்து பகுதிகளிலும் குடிநீர் தடையின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் பேரூராட்சி பணியாளர் திருமால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×