என் மலர்
நீங்கள் தேடியது "புதிய பஸ் நிலைய திறப்பு விழா"
- சுவரொட்டிகள் அகற்றம் உத்தரவு
- சுவரொட்டிகள் அகற்றம் உத்தரவுசாலைகளை மேம்படுத்தவும் சுத்தம் செய்ய தீவிரம்
வேலூர்:
வேலூரில் புதிய பஸ் நிலைய திறப்பு விழா மற்றும் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வருகிற 21-ந் தேதி நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகையையொட்டி அனைத்து முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
வேலூர் மாநகர பகுதியில் சாலைகளை மேம்படுத்தவும் சுத்தமாக வைத்திருக்கவும் மேயர் சுஜாதா ஆனந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.
கமிஷனர் அசோக்குமார் மேற்பார்வையில் மாநகர பகுதியில் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வேலூர் அண்ணா சாலையில் சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவரில் இருந்த புல் புதர்களை அகற்றி விட்டு அதில் அலங்கார செடிகள் நடவு செய்யும் பணி கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது.
இதேபோல மாநகராட்சி பகுதியில் தேவையில்லாமல் இருக்கக்கூடிய சுவரொட்டிகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று காலை சத்துவாச்சாரி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை மேம்பால சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.
இதேபோல மாநகராட்சி சாலையோரங்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அகற்றப்பட்டன.
முதல்-அமைச்சர் வருகையையொட்டி வேலூர் மாநகர பகுதியை சுத்தம் செய்யும் பணி மற்றும் அழகுபடுத்தும் பணிகள் 2 கட்டமாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்னும் சில நாட்களில் இந்த பணிகள் முழுமையாக நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.






