என் மலர்
நீங்கள் தேடியது "Work Pledge Acceptance"
- என் குப்பை என் பொறுப்பு” “என் நகரம் என் பெருமை”என்ற தலைப்பில் விழிப்புணர்வு
- மக்கள் இயக்கம் போர்டில் கலெக்டர் கையெழுத்துயிட்டார்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையம் அருகில் நகரங்களின் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் பணி உறுதிமொழி ஏற்பு மற்றும் கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் இன்று தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.
நகரமன்ற தலைவர் சுஜாதாவினோத், துணை தலைவர் ரமேஷ்கர்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ராணிப்பேட்டை நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் வரவேற்றார். நிகழ்ச்சியில் "என் குப்பை என் பொறுப்பு" "என் நகரம் என் பெருமை"என்ற தலைப்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி நகரங்களுக்கான மக்கள் இயக்கம் போர்டில் கலெக்டர் கையெழுத்துயிட்டார்.
மேலும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உறுதி மொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.






