என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MGR Temple"

    • தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வம் இணைந்ததை தொடர்ந்து அவருடன் இருந்து டி.ஆர்.முரளி விலகினார்.
    • எம்.ஜி.ஆர் பாடல்களை தொகுத்து அதை திருக்குறள் வடிவில் 48 நாள் மண்டல பூஜை முடிந்து வெளியிடப்பட உள்ளது.

    வேலூர் காட்பாடியை அடுத்த தொண்டான்துளசி கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வான ரகுபதி மகன் டி.ஆர்.முரளி. இவர் சில நாட்களுக்கு முன்பு வரை ஒ.பன்னீர் செல்வம் அணியில் மாவட்ட செயலாளராக இருந்தார். தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வம் இணைந்ததை தொடர்ந்து அவருடன் இருந்து டி.ஆர்.முரளி விலகினார்.

    இந்த நிலையில், கரசமங்கலம் கிராமம் ரகுபதி நகரில் சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் மும்மத அடையாளங்களுடன் ரூ.3 கோடியில் எம்.ஜி.ஆருக்கு கோவில் ஒன்றை டி.ஆர்.முரளி கட்டியுள்ளார். அதில் சுமார் 5 அடி உயரத்துக்கு 'தனிப்பிறவி' படத்தில் முருகர் வேடத்தில் வரும் எம்.ஜி.ஆர். போன்று அவருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    முன்பகுதியில் எம்.ஜி.ஆர். மூன்று மதத்தில் இருப்பது போன்று சிலை வைக்கப்பட உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

    மேலும் எம்.ஜி.ஆர் பாடல்களை தொகுத்து அதை திருக்குறள் வடிவில் 48 நாள் மண்டல பூஜை முடிந்து வெளியிடப்பட உள்ளது.

    • வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள கரசமங்கலம் ஊராட்சி ரகுபதி நகரில் ரூ.1 கோடியில் எம்.ஜி.ஆருக்கு கோவில் கட்டப்பட உள்ளது.
    • சுமார் 80 சென்ட் நிலத்தில் கட்டப்படும் இந்த கோவிலில் எம்ஜிஆருக்கு வெண்கலச் சிலை வைக்கப்பட உள்ளது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள கரசமங்கலம் ஊராட்சி ரகுபதி நகரில் ரூ.1 கோடியில் எம்.ஜி.ஆருக்கு கோவில் கட்டப்பட உள்ளது.

    இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதில் திரி சக்தி ஸ்ரீ வராக குருஜி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். சுமார் 80 சென்ட் நிலத்தில் கட்டப்படும் இந்த கோவிலில் எம்ஜிஆருக்கு வெண்கலச் சிலை வைக்கப்பட உள்ளது. மேலும் திருமணம் செய்வது உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இந்த கோவில் கட்டப்பட உள்ளது.

    இதுகுறித்து அ.தி.மு.க.பிரமுகர் டி.ஆர். முரளி கூறுகையில்:-

    எனது தந்தை ரகுபதி எம்.ஜி.ஆரால் தான் எம்.எல்.ஏ.ஆனார். எம்.ஜி.ஆரால் தான் எங்கள் குடும்பம் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.இந்த நன்றி மறக்காத வகையில் எம்.ஜி.ஆருக்கு கோவில் கட்ட முடிவு செய்துள்ளோம்.

    இதற்ககாக ரூ.1 கோடிக்கு மேல் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏழை மக்கள் திருமணம் செய்யும் வசதிகள் மற்றும் அமர்ந்து சாப்பிடும் வகையில் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. இது பொதுமக்கள் சேவைக்காக மட்டுமே செய்யப்படுகிறது என்றார்.

    ×