என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் மாவட்டத்தில் 5 மாதங்களில் 68 பேர் குண்டர் சட்டத்தில் கைது
    X

    கோப்புப்படம்

    வேலூர் மாவட்டத்தில் 5 மாதங்களில் 68 பேர் குண்டர் சட்டத்தில் கைது

    • 1430 வழக்குகள் பதிவு.
    • 5422 கிலோ குட்கா பறிமுதல்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் குட்கா செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களில் கள்ளச்சாராயம், மதுவிலக்கு தொடர்பாக மொத்தம் 1430 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவற்றில் 1308 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதில் 13 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சாராய கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 39 இருசக்கர, ஒரு ஆட்டோ மற்றும் 2 நான்கு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    கஞ்சா தொடர்பாக மாவட்டத்தில் மொத்தம் 51 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவற்றில் 61 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 15 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    குட்காவை தொடர்பான வழக்கில் மொத்தம் 278 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 288 பேர் கைது செய்யப்பட்டனர் இது 7 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அவர்களிடமிருந்து சுமார் 5422 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.45,59,056.

    இது தவிர 15 ரவுடிகளையும், திருட்டு வழக்குகளில் 8 பேர், 9 பாலியல் குற்றவாளிகள் மற்றும் மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் என இதுவரை மொத்தம் 68 பேர் குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தில் குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் நபர்கள் யார் என அடையாளம் காணப்பட்டால் அவர்களின் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    Next Story
    ×