என் மலர்
நீங்கள் தேடியது "Died tragically yesterday morning without effect of treatment"
- கடன் பிரச்சினையில் இருந்து வந்தார்.
- போலீஸ் விசாரணை
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 31). மோட்டார் காயில் கட்டும் வேலை செய்து வந்தார். இவருக்கு கடன் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நிலத்திற்கு அடிக்க வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை மதுவில் கலந்து குடித்துள்ளார்.
இதனால் ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு வாலாஜா அரசு மருத்துவமனையில் முதல் உதவிசிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச் சைக்காகவேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .






