என் மலர்
நீங்கள் தேடியது "The report is being sent to the Office of Primary Education"
- திங்கட்கிழமை 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு.
- பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் ஆய்வு செய்தனர்.
வேலூர்:
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு வருகிற திங்கட்கிழமை மழலையர் பள்ளிகள் மற்றும் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்பு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி, தனியார் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்று முதல் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்றது.
பள்ளிகளில் வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி, கரும்பலகை சுத்தம் செய்யும் பணி, வளாக பகுதி, கூட்டு பிரார்த்தனை செய்யும் பகுதி, ஆசிரியர்கள் ஓய்வறை பகுதி, மாணவர்கள் அமரும் இருக்கை உள்ளிட்டவைகளை தண்ணீர் மூலம் சுத்தம் செய்தனர்.
கிருமி நாசினி தெளிக்கும் பணி வேலூர் மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடைபெற்றது. வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் இன்று காலை முதலே சுத்தம் செய்யும்பணி நடந்தது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து இன்று அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. இதற்கான அறிக்கை முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வருகின்றனர்.
பள்ளிகளை சுத்தப்ப டுத்தும் பணியில் அந்தந்த பள்ளி நிர்வாகத்தினர் ஈடுபட்டனர்.






