என் மலர்tooltip icon

    வேலூர்

    • ஆவணி மாதம் 3 நாட்கள் நடக்கும்
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த மீனூர் மலையில் பழமை வாய்ந்த வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது.

    கோவிலில் மூலவர் மேற்கு திசை நோக்கி இருந்தவாறு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருவது சிறப்பு அம்சமாகும்.

    இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் 16,17 மற்றும்18-ந் தேதி களில் மாலை வேளையில் சூரியன் அஸ்த மிக்கும் சமயத்தில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் நிகழ்கிறது.

    இந்த அதிசய நிகழ்வு பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது. ஆனால் இது குறித்து அப்பகுதி பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் சரிவர தெரியவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வயதான பக்தர் கூறியதை தொடர்ந்து. அந்நாளில் அந்த மூன்று நாட்களில் சூரிய ஒளி மறையும் போது கோவிலின் உள்ளே கதிர்வீச்சுகள் பட்டு படிப்படியாக மூலவர் முழுவதும் சூரிய ஒளி பட்டு சூரிய ஒளியால் ஜொலிக்கும் என கூறினார்.

    அதனை தொடர்ந்து சில ஆண்டுகளாக பக்தர்கள் அந்த குறிப்பிட்ட நாட்களில் திரண்டு வந்து சூரிய ஒளி வெங்கடேசபெருமாள் மீது படும் காட்சியை கண்டு மெய் சிலிர்த்து நின்றனர்.

    கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காலமாக இருந்தது மேலும் அந்த குறிப்பிட்ட மூன்று நாட்களிலும் மழையும் மேகமூட்டமாக இருந்ததால் சூரியவெளி மூலவர் பெருமாள் மீது படும் நிகழ்வு தெரியவில்லை.

    இந்த ஆண்டு சூரிய ஒளி மூலவர் மீது விழும் அதிசய நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை வந்திருந்தனர். இருப்பினும் மேகமூட்டம் மற்றும் மழை காரணமாக மூலவர் மீது சூரியஒளி விழாததால் பக்தர்கள்ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை 5.50மணியில் இருந்து 6.10 மணி வரை சூரியஒளி மூலவர் மீது விழுந்து மூலவர் சூரிய ஒளியில் ஜொலித்தார். அப்போது ஒரு சில பக்தர்களே கோவிலுக்கு வந்திருந்தனர்.

    அந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கங்கள் எழுப்பினர். 6.10 மணிக்கு பின்னர் மேகமூட்டம் சூழ்ந்து சூரியன் மறைந்தது. இந்த நிகழ்வால் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • வரத்து குறைவால் விலை அதிகரிப்பு
    • மழை பெய்ததால் விளைச்சல் பாதிப்பு

    வேலூர்:

    வேலூர் மார்க்கெட்டிற்கு ஆந்திரா கர்நாடகா மாநிலங்களில் இருந்து தக்காளி கொண்டு வரப்படுகிறது. ஆந்திரா கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

    இதனால் அங்கு தக்காளி விலை உயர்ந்துள்ளது.மேலும் வேலூர் மாவட்டத்திற்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது.

    வேலூர் மாவட்டத்திலும் கடந்த 10 நாட்களாக, மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டு, வரத்து குறைந்த நிலையில், தக்காளி விலையும் உயா்ந்துள்ளது.

    விளைச்சல் அதிக அளவில் இருந்ததால் கடந்த மாதம் வரை ஒரு கிலோ தக்காளி ரூ.15 வரை விற்கப்பட்டது.

    பின்னா் பரவலாக மழை பெய்ததன் காரணமாக, தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்தும் குறைந்தது. இதனால் கடந்த சில நாட்களாக தக்காளி விலை உயர்ந்து வருகிறது.

    இன்று வேலூர் மார்க்கெட்டில் மொத்த விலையில் ஒரு கிலோ ரூ.40 வரை தக்காளி விற்பனை செய்யப்பட்டது. சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கிராமங்களில் இருந்து அதிக அளவு தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. சில இடங்களில் தரம்குறைந்த தக்காளி அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளது.

    • சுகாதாரத் துறையினர் கடும் எச்சரிக்கை
    • வேலூரில் அறிகுறியால் பணிகள் தீவிரம்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் நல்ல நீரில் வளரக்கூடிய ஏடீஸ் கொசு அதிகரித்துள்ளது.டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்க படுபவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

    ஜனவரி மாதம் முதல் நேற்று வரை வேலூர் மாவட்டத்தில் 51 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. இதில் 49 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த மாதத்தில் மட்டும் 7 பேருக்கு அறிகுறி கண்டறியப்பட்டது. நேற்று காகித பட்டறையில் ஒருவருக்கு டெங்கு அறிகுறி கண்டறியப்பட்டது.தொடர்ந்து அங்கு சுகாதார பணிகள் செய்யப்பட்டன. மாநகராட்சி பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத் தப்பட்டுள்ளன.

    ஒரு வார்டுக்கு 5 கொசு ஒழிப்பு பணியாளர் நியமிக்கப்பட்டு வீடு வீடாகச் சென்று கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சி முழுவதும் மொத்தம் 375 பேர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    செப்டம்பர் அக்டோபர் நவம்பர் மாதங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது‌. இதனால் பொதுமக்கள் வீடுகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீடுகளில் கொசு வராமல் தற்காத்துக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    • சில்லறை சம்பந்தமாக வாக்குவாதம்
    • போலீஸ் விசாரணை

    குடியாத்தம்:

    ஆம்பூர் அடுத்த பச்ச குப்பம் பகுதியை சேர்ந்தவர் சாந்தலிங்கம் (வயது 48) இவர் ஆம்பூர் பணிமனையில் அரசு டவுன் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த 30 -ந் தேதி குடியாத்தத்தில் இருந்து ஆம்பூருக்கு அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது.

    அப்போது பஸ்சில் பயணம் செய்த வாலிபருக்கும், கண்டக்டருக்கும் சில்லறை கொடுப்பது சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் சாந்தலிங்கத்தை சரமாரியாக தாக்கியுள்ளார்.

    இதில் அவருக்கு காயம் ஏற்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சாந்தலிங்கம் குடியாத்தம் தாலுகா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை தேடி வருகின்றனர்.

    • வார விழா புறக்கணிப்பு
    • பணிக்கொடையைக உயர்த்த வலியுறுத்தல்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் எல்ஐசி கிளை அலுவலகம் முன்பு எல்ஐசி முகவர் சங்கத்தின் சார்பில் இன்சூரன்ஸ் வார விழா புறக்கணிப்பு மற்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு குடியாத்தம் கிளை சங்க தலைவர் எம்.சுப்பிரமணி தலைமை தாங்கினார். செயலாளர் எம். குலசேகரன், பொருளாளர் ஆர்.சீனிவாசன், நிர்வாகிகள் என். விஜயகுமார், ஏ.ஜி. ராதாகிருஷ்ணன், வி.மாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.எல்ஐசி முகவர் சங்கத்தின் கோட்ட பொதுச் செயலாளர் ஜே.கே.என்.பழனி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் எல்ஐசி ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த சரவணன், பாலாஜி சம்பத், ஈஸ்வரன் ஊழியர் நலச் சங்கத்தைச் சேர்ந்த இளங்கீரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பாலிசிக்கான போனசை உயர்த்த வேண்டும், வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும், 5 வருடங்களுக்கு மேற்பட்ட பாலிசிகளை புதுப்பிக்க வேண்டும், பாலிசி மீதான ஜிஎஸ்டியை நீக்க வேண்டும், முகவர்களுக்கான பணிக்கொடையை 20 லட்சமாக உயர்த்த வேண்டும், மருத்துவக் குழு காப்பீடு முகவர்களுக்கு வழங்க வேண்டும், குழுக்காப்பீடு வயதுவரம்பு உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    • ஆபாசமாக திட்டியதால் வெறிச்செயல்
    • போலீசார் விசாரணை

    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு அருகே அரவட்லா மலை பகுதி பாஸ்மார் பெண்டா மலை கிராமத்தைச் சேர்ந்தவர்.

    வள்ளியம்மாள் கடந்த 29 ந் தேதியன்று தலையில் பாறாங்கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது சம்மந்தமாக வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், குடியாத்தம் டி.எஸ்.பி. ராமமூர்த்தி ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    திருவண்ணாமலை யிலிருந்து மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டு அதே கிராமத்திலுள்ள பாண்டு என்பவர் வீட்டையே சுற்றி சுற்றி வந்தது. இதனைத் தொடர்ந்து பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    போலீசார் சந்தேகத்தின் பேரில் சின்னையன், பாண்டு ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தியதில் வள்ளியம்மாளுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாகவும்,மேலும் சின்னையனின் அக்கா ராஜேஸ்வரி (57) என்பவருக்கு வள்ளியம்மாள் ரூ.15 ஆயிரம் வட்டிக்கு பணம் கொடுத்து உள்ளார்.

    சம்பவம் நடந்த அன்று வள்ளியம்மாள் ராஜேஸ்வரியிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு தகராறில் ஈடுபட்டார். அப்போது அங்கு இருந்த சின்னையன், பாண்டு ஆகியோர் வள்ளியம்மாளிடம் ஏன் பணம் கேட்டு சண்டை போடுகிறாய் காலையில் வந்து பேசுமாறு கூறினார்.

    இதனால் ஆத்திரமடைந்த வள்ளியம்மாள் சின்னையனை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சின்னையனும் பாண்டுவும் வள்ளியம்மாளை பின் தொடர்ந்து சென்று தாக்கினார். அப்போது வள்ளியம்மாள் தலையில் பாறாங்கல்லை போட்டு கொலை செய்தனர்.

    பின்னர் ராஜேஸ்வரியிடம் சென்று வள்ளியம்மாளை பாறாங்கல்லால் தாக்கி கொலை செய்ததை கூறியுள்ளனர். இதனையடுத்து சின்னையன், பாண்டு, ராஜேஸ்வரி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • உதவி கலெக்டர் தவறி விழுந்ததால் பரபரப்பு
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் வட கிழக்கு பருவ மழையை முன்னிட்டு வெள்ளம் போன்ற இடர்பாடுகளில் சிக்கிக்கொண்டால் அதில் இருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் என்பது குறித்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி வேலூர் கோட்டை அகழியில் இன்று காலை நடந்தது.

    இதை மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தொடங்கி வைத்தார். வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி, வேலூர் தாசில்தார் செந்தில், நகர் நல அலுவலர் முருகன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    வேலூர் தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் அப்துல் பாரி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களை எவ்வாறு மீட்க வேண்டும், முதலுதவி எவ்வாறு அளிக்க வேண்டும் என்பது குறித்து செயல் விளக்கம் அளித்தனர். இதில் வருவாய்த்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இதனை அகழி ஓரம் உள்ள படிக்கட்டு பகுதியில் வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி நின்று பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் நிலைத்தடுமாறி படிக்கட்டில் விழுந்தார்.

    அருகில் இருந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் உடனடியாக அவரை தூக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • கதிர் ஆனந்த் எம்.பி.தொடங்கி வைத்தார்
    • நாள் ஒன்றுக்கு 50 வீடுகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் ரத்தசோகை, தன்சுத்தம், குடற்புழு நீக்கம், கைகழுவுதல், குறித்து சமுதாய வளர் உறுப்பினர்கள் உதவியுடன் நாள் ஒன்றுக்கு 50 வீடுகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் இன்று முதல் நவம்பர் 30-ம் தேதி வரை விழிப்புணர்வு பிரசார வாகனம் வரவுள்ளது.

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கதிர் ஆனந்த் எம்‌.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, அமலு விஜயன் எம். எல். ஏ., வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    வேலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 1075 அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும், மக்கள் கூடும் இடங்களிலும் ரத்தசோகை, தன்சுத்தம், குடற்புழு நீக்கம், கைகழுவுதல் நோக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த விழிப்புணர்வு பிரச்சரா வாகனம் வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைந்து பஞ்சாயத்துகள் மற்றும் நகர்புற வார்டுகளில் வாகன மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.

    • பறக்கும் கேமரா மூலமும் கண்காணிப்பு
    • அரசின் வழிகாட்டுதலை கடைபிடிக்க வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இந்து அமைப்புகள், பொது மக்கள் மற்றும் தனி நபர்கள் என மொத்தம் 976 சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

    விநாயகர் ஊர்வலம்

    இதற்கு பாதுகாப்பு பணியில் மாவட்டத்தில் மொத்தம் 1500 போலீஸ் மற்றும் கூடுதலாக 261 பயிற்சி போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    நாளை விநாயகர் சிலைகள் ஊர்வலத்தின் போது அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கவும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விநாயகர் சதுர்த்தி ஊர்வல பாதையில் 3 பறக்கும் மேராக்கள் மூலம் கண்காணிக்கவும், மொபைல் கமாண்ட் கன்ட்ரோல் யூனிட் வாகனம் ஒன்றும் ஊர்வலத்தின் போது கண்காணிப்பு பணியில் புதிதாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    கேமரா மூலம் கண்காணிப்பு

    அந்த வாகனத்தில் 360 டிகிரி கோணத்தில் சுழன்று படம் பிடிக்கும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களை சிசிடிவி மேராக்கள் மற்றும் டிஜிட்டல் மேப்பிங் சிஸ்டம் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

    போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கிற்கு இடையூறு செய்பவர்கள் குறிப்பாக பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட சுமார் 62 பேரை குற்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என பிரமாண பத்திரம் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுள்ளது.

    அனைத்து அமைப்பாளர்கள் மற்றும் சிலை ஏற்பாட்டாளர்கள் அரசின் பல்வேறு வழிகாட்டுதல்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    • பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    காட்பாடி காங்கேயநல்லூர் மேலாண்ட தெரு புளியந்தோப்பு பகுதியில் படவேட்டம்மன் கோவில் உள்ளது. இதில் அம்மன் உருவப்பொறித்த கல்வெட்டு அமைத்து பொதுமக்கள் பல ஆண்டுகளாக வழிபட்டு வருகின்றனர்.

    நேற்று இரவு இந்த அம்மன் சிலை கல்வெட்டை மர்ம நபர்கள் பெயர்த்து சேதப்படுத்தியுள்ளனர்.

    இன்று காலையில் அந்த பகுதி பொதுமக்கள் வந்து பார்த்தபோது அம்மன் சிலை கல்வெட்டு கீழே சாய்ந்து கிடந்தது.

    தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அந்த பகுதியில் மதுபோதையில் கும்பல் அட்டகாசம் செய்கின்றனர். அம்மன் கல்வெட்டை சாய்த்து சேதப்படுத்திய நபர்களை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    போலீஸ் விசாரணை

    விருதம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களை சமாதானம் செய்தனர்.மேலும் அம்மன் கல்வெட்டை சேதபடுத்திய நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்தனர்.

    சிலை சேதபடுத்திய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • தற்காலிக சாலைகள் அமைக்கும் பணி தீவிரம்
    • சதுப்பேரி ஏரியில் சிலைகள் கரைக்கப்படுகிறது

    வேலூர்:

    வேலூரில் விநாயகர் சிலை ஊர்வலம் நாளை நடக்கிறது. நாளை மதியம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடங்குகிறது.

    காகிதப்பட்டறை, சைதாப்பேட்டை, மெயின் பஜார், லாங்கு பஜார், மூங்கில் மண்டி, அண்ணா கலையரங்கம் செல்கின்றன. அந்த இடத்தில் வேலூரில் இருந்து கொண்டு வரப்படும் சிலைகள் இணைகின்றன.

    பின்னர் கோட்டை சுற்றுசாலை கொணவட்டம் வழியாக சதுப்பேரி ஏரிக்கு சிலைகள் கொண்டு செல்லப்பட்டு அங்கு கரைக்கப்படுகின்றன.

    விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும் பாதைகளை மாநகராட்சி சார்பில் சீரமைத்து வருகின்றனர்.

    பாதாள சாக்கடை பணிகள் நடந்து வரும் பகுதிகளில் தற்காலிகமாக விநாயகர் சிலைகள் கொண்டு செல்லும் வகையில் சாலைகள் அமைக்கும் பணிகள் இன்று நடந்தது.

    • தண்ணீரில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை
    • 4 ஆயிரம் கன அடி நீர்வரத்து உள்ளது

    வேலூர்:

    திருப்பத்தூர், வேலூர் மாவட்டம் மற்றும் எல்லையோர ஆந்திர மாநில வனப்பகுதியில் கன மழை காரணமாக பாலாறு மற்றும் அதன் துணை ஆறுகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது.

    ஆந்திர மாநில வனப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் புல்லூர் தடுப்பணையை கடந்து வெள்ளநீர் தமிழகத்துக்கு வந்தது.

    பாலாற்றின் துணை ஆறுகளான வாணியம்பாடி அருகே மண்ணாற்றில் இருந்து 280 கன அடி, கல்லாற்றில் இருந்து 40 கன அடியும், மலட்டாற்றில் இருந்து 1,600 கன அடியும், பள்ளிகொண்டா அகரம் ஆற்றில் இருந்து 25 கன அடியும் பாலாற்றுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

    பாலாற்றின் முக்கிய துணை ஆறுகளில் ஒன்றான கவுன்டன்யா ஆற்றில் இருந்து 250 கன அடிக்கு நீர் வரத்து இருந்தது. கவுன்டன்யா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மோர்தானா அணை ஏற்கெனவே முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் கிடைக்கப்பெறும் மொத்த நீர்வரத்தும் அப்படியே ஆற்றில் உபரி நீராக வெளியேறி வருகிறது.

    வெள்ளக்கல் கானாறு, ஆணைமடுகு கானாறு, கண்டித்தோப்பு கானாறுகள் மூலம் பாலாற்றுக்கு 20 கன அடியும், பள்ளிகொண்டா ஏரி நிரம்பியுள்ளதால் அதிலிருந்து பேயாறு வழியாக பாலாற்றுக்கு 10 கன அடி நீர் வரத்தும் கிடைக்கிறது.

    இதன்மூலம் பள்ளிகொண்டா பாலாறு பாலத்தையும், வேலூர் பாலாறு பாலத்தையும் கடந்து 4,100 கன அடிக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆர்ப்பரித்துச் செல்லும் வெள்ளப்பெருக்கை பொதுமக்கள் ஏராளமானவர்கள் ரசித்துச் செல்கின்றனர்.

    பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு தொடர்பாக வேலூர் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) ராமமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''தென்மேற்கு பருவமழையின் காரணமாக வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழை மற்றும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் பெய்த கனமழையால் அம்மாநில நீர்நிலைகளில் இருந்து வெளியேறும் நீரினால் வேலூர் மாவட்டம் பாலாற்றில் தற்போது 4 ஆயிரம் கன அடிக்கு நீர்வரத்து உள்ளது.

    இந்த சூழ்நிலையில் பாலாற்றின் இரு கரையோர மக்கள் எவரும் பாலாற்றில் இறங்கி குளிப்பது, ஆற்றில் துணிகளை துவைப்பது, விடுமுறை நாட்களில் தங்களது குழந்தைகளை ஆற்றின் அருகே விளையாட அனுமதிப்பது, குறுக்குச்சாலையாக ஆற்றை கடப்பது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர்''. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×