என் மலர்
நீங்கள் தேடியது "The special feature is that the Moolavar blesses the devotees towards the west"
- ஆவணி மாதம் 3 நாட்கள் நடக்கும்
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த மீனூர் மலையில் பழமை வாய்ந்த வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது.
கோவிலில் மூலவர் மேற்கு திசை நோக்கி இருந்தவாறு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருவது சிறப்பு அம்சமாகும்.
இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் 16,17 மற்றும்18-ந் தேதி களில் மாலை வேளையில் சூரியன் அஸ்த மிக்கும் சமயத்தில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் நிகழ்கிறது.
இந்த அதிசய நிகழ்வு பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது. ஆனால் இது குறித்து அப்பகுதி பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் சரிவர தெரியவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வயதான பக்தர் கூறியதை தொடர்ந்து. அந்நாளில் அந்த மூன்று நாட்களில் சூரிய ஒளி மறையும் போது கோவிலின் உள்ளே கதிர்வீச்சுகள் பட்டு படிப்படியாக மூலவர் முழுவதும் சூரிய ஒளி பட்டு சூரிய ஒளியால் ஜொலிக்கும் என கூறினார்.
அதனை தொடர்ந்து சில ஆண்டுகளாக பக்தர்கள் அந்த குறிப்பிட்ட நாட்களில் திரண்டு வந்து சூரிய ஒளி வெங்கடேசபெருமாள் மீது படும் காட்சியை கண்டு மெய் சிலிர்த்து நின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காலமாக இருந்தது மேலும் அந்த குறிப்பிட்ட மூன்று நாட்களிலும் மழையும் மேகமூட்டமாக இருந்ததால் சூரியவெளி மூலவர் பெருமாள் மீது படும் நிகழ்வு தெரியவில்லை.
இந்த ஆண்டு சூரிய ஒளி மூலவர் மீது விழும் அதிசய நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை வந்திருந்தனர். இருப்பினும் மேகமூட்டம் மற்றும் மழை காரணமாக மூலவர் மீது சூரியஒளி விழாததால் பக்தர்கள்ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை 5.50மணியில் இருந்து 6.10 மணி வரை சூரியஒளி மூலவர் மீது விழுந்து மூலவர் சூரிய ஒளியில் ஜொலித்தார். அப்போது ஒரு சில பக்தர்களே கோவிலுக்கு வந்திருந்தனர்.
அந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கங்கள் எழுப்பினர். 6.10 மணிக்கு பின்னர் மேகமூட்டம் சூழ்ந்து சூரியன் மறைந்தது. இந்த நிகழ்வால் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.






